Wednesday, April 10, 2024

விமர்சனம்: மத்தகம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அதர்வா, ஜெய்பீம் மணிகண்டன் நிகிலா விமல் நடித்து டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் இன்று (ஆகஸ்ட் 18 ஆம் தேதி)  வெளிவர உள்ள வெப் தொடர் மத்தகம்.

மத்தகம் என்றால் யானையின் நெற்றிப் பகுதி என்று அர்த்தம்.பிரசாத் முருகேசன் இயக்க,  ஸ்க்ரீன் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இரவு நேர ரோந்து பணியில் இருக்கும் காவலர்கள் ஒரு லோக்கல் தாதாவை கைது செய்கிறார்கள். தாதா படாளாம் சேகர் என்ற தாதாவிற்காக வேலை செய்வதாக சொல்கிறான். காவல் துறையின் ஆவணங்களின் படி படாளாம் சேகர் இறந்து விட்டதாக இருக்கிறது.

இந்த நிலையில், தாதா சேகர் திரைமறைவில் இருந்துகொண்டு  பிறந்தநாள் விழாவிற்கு ஏற்பாடு செய்கிறான்.

படாளத்தை பின் தொடர்ந்து தாதாக்களை கண்டு பிடித்து அழிக்க முயற்சிசெய்கிறார் காவல் துறை அதிகாரி அஸ்வத்.

மத்தகம் இது வரை அதிகம் சொல்லாத கேங்ஸ்டர் திரில்லர் வகையை சேர்ந்தது. தொடர் தொடங்கி முதல் எபிசோட்டின் முதல் காட்சியிலிருந்து பரபரப்பாக நகர தொடங்கி விடுகிறது. கதை ஒரு நேர்கோட்டில் பயணித்தாலும் எங்கேயும் சுவாரசியம் குறையவில்லை.ஒவ்வொரு காட்சியையும் மிகவும் நேர்த்தியாக உருவாக்கியுள்ளார் டைரக்டர். தேவையில்லாத ஒரு காட்சியோ, கேரக்டரோ இல்லை. ஒடிடி யில் மட்டுமே தொடராக ரசிக்கும் படியான திரைக்கதையை விரிவாக தந்துள்ளார் இயக்குநர்.

ஒரு நேர்மையான காவல் அதிகாரியாகயும், ஒரு சரராசரி குடும்ப தலைவனாகவும் சிறந்த நடிப்பை தந்துள்ளார் அதர்வா. நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பின் நன்றாக நடிக்க கிடைத்த வாய்ப்பை சரியாக பயன் படுத்தியுள்ளார். நிகிலா அன்புக்கு ஏங்கும் ஒரு மனைவியாக உள்வாங்கி உணர்வுகளை தந்துள்ளார். தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக மாறிவருகிறார் மணிகண்டன்.அறிவை பயன்படுத்தி தாதா வேலையை செய்யும் மாறுபட்ட படாளம் சேகர் காதாபாத்திரத்திற்கு உயிர் தந்துள்ளார் மணிகண்டன்.

மூணார் ரமேஷ், தில்னாஷ் இராணி, கெளதம் மேனன் உடப்பட அனைவரும் சரியான நடிப்பை தந்துளார்கள். எட்வின் சாகோவின் ஒளிப்பதிவு தொடரை சில படிகள் மேலே உயர்த்த உதவி உள்ளது.சிறந்த ஓ டி டி தொடர் படங்களின் வரிசையில் மத்தகம் தொடருக்கு முக்கிய இடம் உள்ளது. அதிகம் ரத்தம் சிந்ததாத இந்த கேங்ஸ்டர் திரில்லர் கதையை குடும்பத்துடன் ரசிக்கலாம்.

- Advertisement -

Read more

Local News