Thursday, April 11, 2024

விமர்சனம்: லவ்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மலையாளத்தில் 2020ஆம் ஆண்டு இயக்குனர் காலித் ரஹ்மான் இயக்கத்தில் ரஜிஷா விஜயன், ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான இத்திரைப்படம்  பெரும் வெற்றி பெற்றது.

தமிழில் ஆர்பி ஃபிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.பாலா தயாரித்து இயக்க, பரத் – வாணி போஜன்  ஜோடியாக நடித்துள்ளனர்.

விவேக் பிரசன்னா, டேனியல் அன்னி போப், ஸ்வயம் சித்தா,  ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்கள்.

காதலித்து திருமணம் செய்த மனைவி, வாணி போஜனை கொலை செய்துவிடுகிறார் பரத். அதிலிருந்து மீண்டாரா என்பதைப்போல கதை செல்கிறது. ஆனால் கிளைமாக்ஸ், யாரும் எதிர்பாராதது.

பரத் வழக்கம்போல, தனது சிறந்த நடிப்பை அளித்து இருக்கிறார். கொலை செய்துவிட்டு பதறுவது.. அந்த நேரத்தில் வீட்டுக்கு நண்பர்கள் வர ஏதேதோ செய்து சமாளிப்பது என அசத்தி இருக்கிறார்.

அவரது மனைவியாக வரும் வாணி போஜன், காட்சிகள் குறைவு என்றாலும் பாத்திரம் அறிந்து நடித்து இருக்கிறார்.

பரத் நண்பராக வரும் விவேக் பிரசன்னா, எப்போதும் போல் தனது அப்பாவி நடிப்பால் கவர்கிறார். இன்னொரு நண்பராக வரும் டேனியல் அன்னி போப், தன் மனைவிக்கு செய்யும் துரோகம்.. அதில் சிக்கிக்கொள்வது என சுவாரஸ்யப்படுத்துகிறார்.

சஸ்பென்ஸ் படத்துக்கேற்ற திகில் இசையை அளித்து இருக்கிறார். அதே போல மிரட்டும் கேமரா கோணங்களில் தனது முத்திரையை பதித்து இருக்கிறார் பி.ஜி.முத்தையா.

ஒரே வீட்டுக்குள்தான் பெரும்பாலான காட்சிகள் நடக்கின்றன. ஆனால் க்ரைம் த்ரில்லருக்கு ஏற்ப மிரட்டி இருக்கிறார் இயக்குநர் ஆர்.பி.பாலா.

 

- Advertisement -

Read more

Local News