Thursday, April 11, 2024

விமர்சனம்: எல்.ஜி.எம்.

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கிரிக்கெட் வீரர் தோனி தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகியிருக்கும் படம் “எல்.ஜி.எம்” (Lets Get Married) இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா , யோகி பாபு, ஆர்ஜே விஜய், இயக்குநர் வெங்கட்பிரபு உள்ளிட்ட பலரும் நடித்து உள்ளனர். படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல் இசையமைத்தும் உள்ளா ரமேஷ் தமிழ்மணி.

இரண்டு வருட டேட்டிங்கிற்கு பிறகு ஹரிஷ் கல்யாணும், இவானாவும் திருமணம் செய்துக் கொள்ள தீர்மானிக்கிறார்கள்.  அம்மா நதியா   சம்மதிக்கிறார். ஆனால் திருமண சம்பந்தம் பேச போன இடத்தில், ஒரு விவகாரம் வெடிக்கிறது. கல்யாணத்திற்கு பிறகு மாமியாருடன் வாழ முடியுமா  என்று கேள்வி எழுப்புகிறார் இவானா.

சிக்கல் என இவானா தெரிவிக்கிறார். இதனால் திருமண பேச்சு நின்று போகிறது. ஆனாலும் ஹரிஷ் கல்யாணை மறக்க முடியாமல், நதியாவை பற்றி புரிந்து கொள்ள ஒரு ட்ரிப் ஒன்றை இவானா பிளான் செய்கிறார்.

இந்த ட்ரிப் ஒர்க் சுபத்தில் முடிந்ததா.. மாமியார் நதியாவுடன் மருமகள் இவனா பாசத்துடன் பழகினாரா என்பதே கதை.

ஹரிஷ் கல்யாண், இவானா ஜோடி பாத்திரம் அடிந்து நடித்துள்ளது. ஹரீஷ்,தனத தாயிடம் பாசம் காட்டுவது, அவரதை தனித்து விட மனமில்லாமல் காதலை மறுப்பது என சிறப்பாக நடித்து உள்ளார்.  இவானா, அதிரடி நிபந்தனைகளை விதித்து, ரசிகர்களை கவர்கிறார்.

ஹீரோவின் அம்மா என்றாலும் அதே இளமையுடன் வருகிறார் நதியா. இயல்பாக நடித்தும் இருக்கிறார்.

முதல் பாதி ரசிக்க வைத்த அளவுக்கு இரண்டாம் பாதி ஈர்க்கவில்லை.

ஆனாலம் காலம் காலமாக இருக்கும் மாமியார் மருமகள் பிரச்சினைக்கு ஒரு தீர்வைச் சொல்லி இருக்கிறது திரைப்படம்.

- Advertisement -

Read more

Local News