லியோ: புதிய அப்டேட்;  அர்ஜூன் கதாபாத்திரம் என்ன?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நாயகனாக நடித்துள்ள படம், லியோ. அர்ஜூன், மன்சூர் அலிகான், திரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.

அனிருத் இசையமைத்துள்ளார். படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகிறது.

படத்தின் பல்வேறு அப்டேட்கள் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும்படுகின்றன.  சில நாட்களுக்கு முன், சஞ்சய் தத்தின் கிளிப் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றது. இதேபோல் நடிகர் அர்ஜூனின் பிறந்தநாளான நேற்று, புதிய கிளிப் வீடியோ வெளியானது.

அதில் மிரட்டலான தோற்றத்தில் அர்ஜூன் நடித்து அசத்தி உள்ளார். அது ‘டிரெண்டிங்’ ஆகி வருகிறது.

அர்ஜுன் இந்த படத்தில் கொடூர வில்லனாக நடித்திருக்கிறார். சுமார் 41 விநாடிகளுக்கு வெளியாகியுள்ள அந்த வீடியோவில் அர்ஜுன் ஏதோ ஒரு பெரிய கேங்ஸ்டர் போலவும் அவர் விக்ரம் பட ரோலக்ஸ் போல யார் கழுத்தையோ வெட்டுவது போலவும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன். அவர் பெயர் ஹரோல்டு தாஸ் என காட்டப்படுகிறது.

தற்போது இந்த கிளிப்பிங் வீடியோ வைரலாகி வருகிறது.