Thursday, April 11, 2024

லியோ: விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த லோகேஷ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நாயகனாக நடிக்கும்  லியோ படத்தில், த்ரிஷா, சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தில் இடம்பெற்ற, நா ரெடி என்ற பாடல் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

சென்னை, காஷ்மீர், ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இறுதிக்கட்டமாக விஜய் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனிடையே, விஜய்யுடன் எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்த லோகேஷ் கனகராஜ், இரண்டாவது பயணத்தையும் சிறப்பாக மாற்றியதற்கு நன்றி என பதிவிட்டுள்ளார். டப்பிங், ரீ-ரெக்கார்டிங் உள்ளிட்ட படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதற்கிடையே விஜய்க்கு லோகேஷ் இன்ப அதிர்ச்சி அளித்த தகவல் கசிந்துள்ளது. அதாவது விஜய் தொடர்பான படக் காட்சிகளை இரு நாட்களுக்கு முன்பாகவே எடுத்து முடித்திருக்கிறார் லோகேஷ்.

இதனால் விஜய், “எனக்கு ரெண்டு நாள் லீவ் கொடுத்துட்டீங்க” என சந்தோஷமாக சொன்னாராம்.

- Advertisement -

Read more

Local News