Wednesday, April 10, 2024

பிரபல நடிகருக்கு வக்கீல் நோட்டீஸ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல நடிகர்மாரிமுத்து, சமீபத்தில் டி.வி. விவாத நிகழ்வு ஒன்றில் ஜோதிடம் என்பது பொய் என பேசினார். அதற்கான வாதங்களையும் வைத்தார்.

“நடப்பதை முன்பே சொல்வதானால், கொரோனா வந்ததை ஏன் சொல்லவில்லை.. தவிர மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆகமாட்டார் என்று ஜோதிடர்கள் சொன்னார்கள்.. ஆனால் அவர் ஆகிவிட்டாரே”என்றும் கேள்வி எழுப்பினார்.

இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டது.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சேத்தூர் கிராமத்தில் வசித்து வரும் பாரம்பரிய வள்ளுவர் குல ஜோதிட சங்க மாவட்ட ஒருகிணைப்பாளர் பழ. ஆறுமுகம் என்பவர் மாரிமுத்துவிற்கு வக்கீல் நோட்டீஸை அனுப்பி உள்ளார்.

“ஜி தமிழ் தொலைகாட்சியில் ’தமிழா தமிழா’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் மாரிமுத்து ஜோதிடம் குறித்து அவதூறாக பேசியுள்ளார். ஜோதிடம் என்பது இந்து மக்களின் நம்பிக்கைகளில் ஒன்றாக உள்ளது. ஜோதிட தொழிலை குறித்து அவதூறு பரப்ப வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் பேசியுள்ளார். கருத்து உரிமை என்ற பெயரில் சபை நாகரீகம் மீறி ஜோதிடர்களை ஒருமையில் பேசியுள்ளார்.

மாரி முத்து, ஜோதிடத்தை பற்றி பொய்யான குற்றச்சாட்டுகளை ஆதாரம் இன்றி பேசியதால் மனம் புண்பட்டுள்ளது. ஜோதிடர்கள் மற்றும் ஜோதிடத்தின் மேல் உள்ள நம்பிக்கை நீர்த்துபோகும் அளவிற்கு அவர் பேசியுள்ளார்.

இவரது பேச்சால் பல்லாயிரக்கணக்கான வள்ளுவ குல மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அவர் பேசியது குறித்து தகுந்த விளக்கத்தை அவர் அளிக்க வேண்டும். அப்படி விளக்கம் அளிக்கவில்லை என்றால் அவர் மீது வழக்கு தொடருவோம்” என்று அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News