Wednesday, April 10, 2024

மீண்டும் சில்க் ஸ்மிதா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

90-களில் திரை உலகை கலக்கிய பிரபலம், அவர் ஒரு பாட்டுக்கு ஆடினாலே  படம் சூப்பர் ஹிட்.. அவர் தான் சில்க் சுமிதா.  அவர், மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும் திரை உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து இன்றைய இளைஞர்கள் மனதிலும் இடம்பிடித்தவர்.

சில்க் சுமிதா இப்போது இல்லையே என்று எண்ணிய அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் விதமாக விஷால் நடித்துள்ள ‘மார்க் ஆண்டனி’ படத்தில் அவர் தோன்றிய காட்சி வியப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

முதலில் டிரைலரை பார்த்த பலரும் ஏதோ கிராபிக்சில் சில்க் சுமிதாவின் உருவத்தை கொண்டுவந்துள்ளனர் என்றுதான் எண்ணினர். ஆனால் அதன்பிறகுதான் தெரிந்தது அவர் அச்சு அசலாக சில்க்கின் தோற்றத்தில் உள்ள இன்ஸ்டாகிராம் மாடல் என்பது.  அவரது பெயர் விஷ்ணுபிரியா காந்தி. இன்ஸ்டாகிராமில் கலக்கிய அவர் முதன்முறையாக மார்க் ஆண்டனி படத்தில் நடித்துள்ளதோடு சில்க்கின் முக பாவனைகள் அனைத்தையும் கண்முன் கொண்டுவந்திருப்பது சற்று ஆச்சரியமானதுதான்.

- Advertisement -

Read more

Local News