Thursday, April 11, 2024

“காதலை வெளிப்படுத்த பயப்பட வேண்டாம்!”: கிருத்திகா உதயநிதி அதிரடி ட்விட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் நடிகர், தயாரிப்பாளர் உதயநிதியை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் கிருத்திகா உதயநிதி. இவர் ’வணக்கம் சென்னை’ ’பேப்பர் ராக்கெட்’ உள்ளிட்ட படங்களை இயக்கி இருக்கிறார்.

இவர்களது மகன், இன்பநிதி லண்டனில் மேற்படிப்பு படித்து வருகிறார். 

அவர் ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.

 இந்த நிலையில் கிருத்திகா உதயநிதி தனது டுவிட்டர் பக்கத்தில், “காதலிக்கவோ அதை வெளிப்படுத்தவோ பயப்படக் கூடாது: இயற்கையின் மகிமையை அறியும் வழிகளில் இதுவும் ஒன்று” என்று பதிவிட்டு உள்ளார்.

தனது மகனுக்கு ஆறுதலுடன் கூடிய அறிவுரையாக இதைப் பதவிட்டுள்ளார் என்றே பலரும் கணிக்கிறார்கள்.

- Advertisement -

Read more

Local News