Thursday, April 11, 2024

இயக்குநர் ஆனார் கீர்த்தி சுரேஷ் சகோதரி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை மேனகா தமிழில் நிறைய படங்களில் நடித்தவர்.  இவரது மகள்தான் கீர்த்தி சுரேஷ். மேனகாவின் மகளும், கீர்த்தி சுரேஷின் சகோதரியுமான ரேவதி சுரேஷ் தற்போது இயக்குநராகி உள்ளார்.

தமிழ், மலையாள பட உலகில் பிரபல டைரக்டராக இருக்கும் பிரியதர்ஷனிடம் சில வருடங்களாக ரேவதி சுரேஷ் உதவி இயக்குனராக பணியாற்றி பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில், புதிய குறும்படம் ஒன்றை ரேவதி சுரேஷ் இயக்கி உள்ளார்.

‘தேங்க் யூ’ என்ற இந்த  படத்தின் போஸ்டரை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். மேலும் இயக்குநரான தனது  சகோதரிக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார். ரேவதி சுரேஷ் ஏற்கனவே மலையாள படம் ஒன்றை தயாரித்துள்ளார். குறும்பட டைரக்டராகி உள்ள ரேவதி சுரேஷ் விரைவில் திரைப்படம்  இயக்கவும்  தயாராகி வருகிறார்.

- Advertisement -

Read more

Local News