Thursday, April 11, 2024

25 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ‘வேட்டையாடு விளையாடு’ !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2006-ஆம் ஆண்டு கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான படம் ‘வேட்டையாடு விளையாடு’. கமல்ஹாசன் ஹீரோவாக நடித்த இப்படத்தில் ஜோதிகா, கமலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்ற இப்படம் கமலின் திரைவாழ்விலும் ஒரு முக்கிய படமாக அமைந்தது. இப்படத்துக்காக தமிழக அரசின் சிறந்த நடிகர் விருது கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இப்படத்தின் பாடல்களும் பெரும் ஹிட்டடித்தன. தமிழ் சினிமாவின் மிக முக்கிய க்ரைம் த்ரில்லர் படங்களில் ஒன்றாக இப்படம் இன்றுவரை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இப்படம் ரீமாஸ்டர் செய்யப்பட்டு கடந்த ஜூன் 23-ம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.

புதிய திரைப்படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டபோதும் அந்தப் படங்களைத் தாண்டிய வரவேற்பு ‘வேட்டையாடு விளையாடு’ படத்துக்கு கிடைத்து வருகிறது. ‘4k print’-ல் 7.1 ஆடியோவுடன் மெருகேற்றப்பட்ட காட்சி அனுபவத்தை ரசிகர்கள் வார விடுமுறை நாட்களில் கொண்டாடி வருகின்றனர். 24 நாட்களை கடந்தும் படம் இன்றும் 10-க்கும் மேற்பட்ட திரைகளில் திரையிடப்பட்டுள்ளது. மொத்தமாக படம் ரூ.1 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News