Thursday, April 11, 2024

ஜிகர்தண்டா 2 ரிலீஸ் தேதி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் ‘ஜிகர்தண்டா’. கேங்ஸ்டர் படமாக வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ‘ஜிகர்தண்டா’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

இதில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். கார்த்திகேயன் சந்தானம் மற்றும் கதிரேசன் தயாரிக்கும் இப்படத்தின் டீசர் போன்ற ஒரு முன்னோட்டம் கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது.

இந்த நிலையில் இப்படத்தின் அப்டேட் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என அறிவித்த நிலையில் கொஞ்சம் தாமதமாகி 4.22 நிமிடத்துக்கு வெளியானது. அதில் வருகிற தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஒரு சிறிய வீடியோ மூலம் வெளியீட்டு கார்த்திக் சுப்புராஜ் தந்து ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் கரியா டாக்கீஸ் என்ற பெயர் கொண்ட திரையரங்கின் முன் கூட்டம் கூடியிருக்கும் நிலையில் திடீரென்று தீ குண்டை தூக்கி எறிகிறார் ஒருவர். இந்த காட்சி முடிந்தவுடன் தீபாவளிக்கு இதே போல் திரையரங்கில் கொண்டாடப்படும் என்பதை குறிக்கும் வகையில் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு குறிப்பிட்டுள்ளது. ஏற்கனவே தீபாவளியை முன்னிட்டு சிவகார்திகேயன் நடிப்பில் நீண்ட காலமாக உருவாக்கி வரும் அயலான் படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News