Thursday, April 11, 2024

“எம்.ஜி.ஆர் பாடலை காப்பி அடித்து கமலுக்கு கொடுத்தேன்!: வெளிப்படையாக சொன்ன இளையராஜா

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கமல்ஹாசன் தயாரித்து நடித்த திரைப்படம் அபூர்வ சகோதரர்கள் 1989ம் ஆண்டு வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்றது. இப்படத்தில் கமலுடன் நாகேஷ், டெல்லி கணேஷ், கவுதமி, ஜனகராஜ், மனோரமா என பலரும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து இருந்தார். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது.
இப்படத்தில் ஒரு காட்சிக்கு இளையராஜா பல ட்யூன்களை போட்டு காட்டியும் கமலுக்கு திருப்தி இல்லை.

உங்களுக்கு என்ன மாதிரியான பாட்டுதான் வேணும்? என கமலிடம் இளையராஜா கேட்க ‘அன்பே வா’ படத்தில் இடம் பெற்ற ‘நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்’ பாடல் போல பாடல் வேண்டும் என சொல்ல, அதுபோலவே இளையராஜா போட்ட மெட்டுதான் ‘புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா’ பாடல். இதுவும் பெரிய ஹிட்.
“இப்படி எம்.ஜி.ஆர். பாடலைத்தான் மாற்றி புதிய பாடலைப்போல் கொடுத்தேன்” என்று இளையராஜாவே ஒரு மேடையில் தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News