Wednesday, April 10, 2024

“கிண்டல் செய்கிறார்கள் என நினைத்தேன்!” – ஸ்ரீகாந்த் தேவா  

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கணேஷ் பாபு கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கி தயாரித்த ‘கருவறை’ குறும்படத்துக்காக இசையமைத்த ஸ்ரீகாந்த் தேவாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து ஸ்ரீகாந்த் தேவா , “  ‘எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படத்துக்கு எனக்கு ஸ்டேஜ் விருது கிடைத்தது. ‘ஈ’ படத்தில் இன்டர்நேஷனல் விருது கிடைத்தது. ஆனாலும், இந்த தேசிய விருது எனக்கு இப்போது கிடைத்திருக்கிறது என்பதே அது தனி மகிழ்ச்சிதான்.

இந்த விருது அறிவிக்கப்பட்டது எனக்குத் தெரியாது. நான் அன்று குடும்பத்துடன் ரெஸ்டாரண்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது வந்த தொலைபேசி அழைப்பில் நண்பர் ஒருவர், தொடர் வார்த்தைகளுடன்… வாழ்த்துக்கள் அண்ணே என்றார்.

சரியாக டவர் இல்லாததால் என்னால் அதனை கேட்க முடியவில்லை. எதற்கு என்று கேட்பதற்குள் வைத்து விட்டார். நெட்வொர்க் கிடைக்கவில்லை. அடுத்த வந்த அழைப்பிலும் அதேபோல் எனக்கு வாழ்த்து சொல்கிறார்கள். எதோ மகிழ்ச்சியான விஷயம் என்று மட்டும் நினைத்தேன். உடனே நான் பாதியில் சாப்பிட்ட கையோட ரெஸ்டாரண்டின் வெளியே வந்து விட்டேன்.

அடுத்தடுத்து வந்த அழைப்புகளில் சிறந்த இசைக்காக தேசிய விருது என்பதை நண்பர் மூலம் தெரிந்து கொண்டேன். ஆனால், என்ன படத்திற்காக என்றால், அவரால் சொல்ல முடியவில்லை. கிண்டல் செய்கிறார்கள் என நினைத்தேன்.

அப்போது தான் தம்பி ஒருவர் என்னை தொலைபேசியில் அழைத்து அண்ணன் ‘கருவறை’ படத்துக்காக உங்களுக்கு தேசிய விருது என்றார்.  அது 2021-ம் ஆண்டில் பண்ணிய படம் என்பது ஞாபகத்துக்கு வர `கடவுளே’ என்று அவரை நினைத்துக்கொண்டேன்” என்றார் ஸ்ரீகாந்த் தேவா.

 

 

- Advertisement -

Read more

Local News