Thursday, April 11, 2024

சிவாஜிக்கு பாதிச் சம்பளம் தான் சிவாஜிக்கு கொடுத்தேன்!: சித்ரா லட்சுமணன்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மறைந்த நடிகர் சிவாஜிக்கும் தனக்குமான உறவு குறித்து நடிகர் சித்ரா லட்சுமணன் தெரிவித்து உள்ளார்.

“அப்போது தஞ்சை நகரில் சாந்தி – கமலா என இரு திரையரங்குகளை கட்டினார் சிவாஜி.

சாந்தி தியேட்டரில் நான் தயாரித்து சிவாஜி கணேசன் நடித்த வாழ்க்கை திரைப்படம்தான் முதலாவதாகத் திரையிடப்பட்டது. கமலா தியேட்டரில் பிரபு நடித்த நியாயம் திரையிடப்பட்டது.

வாழ்க்கை படத்துக்கு சிவாஜிகணேசன் பாதிச் சம்பளம்தான் வாங்கியிருந்தார். மீதி சம்பளம் வாங்கவில்லை. மீதமுள்ள சம்பளத்தை எப்போது வந்து கொடுக்கலாம் என்று அவருக்கு நான் போன் செய்தேன்,

“அதெல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். உனக்கு திருச்சிக்கு பிளைட் டிக்கெட் போட்டாச்சு.  அங்கிருந்து தஞ்சாவூர் போகனும். முதலில் நீ தியேட்டர் திறப்பு விழாவுக்கு வரும் வேலையைப் பாரு. மற்றதை அப்புறம் பார்த்து கொள்ளலாம்!” என்று சிவாஜி சொல்லிவிட்டார்.

படம் ரிலீஸ் ஆகி 15 நாட்களுக்கு பிறகே, சென்னை வந்து சிவாஜியை சந்தித்து மீதமுள்ள சம்பளப் பணத்தைத் கொடுத்தேன்” என்றார் சித்ரா லட்சுமணன்.

 

- Advertisement -

Read more

Local News