Thursday, April 11, 2024

  சென்னைக்கு கலைஞர் வந்தது எப்படி?: சிவாஜி உடைத்த ரகசியம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மறைந்த கலைஞரும், நடிகர் திலகமும் ஆரம்ப காலம் தொட்டே நண்பர்கள். கலைஞரின் 88வது பிறந்தாள் விழாவின் போது, நடிகர் திலகம் சுவாரஸ்யமான பல சம்பவங்களை பேசினார்.

“என் அருமை நண்பனைப் பற்றி நான் என்ன பேசுவது?  கலைஞரைப் பற்றிப் பேசினால், நானும் அதில் சேர்ந்திருப்பேனே! அப்படி என்றால் என்னை நானே புகழந்துகொள்வதாகிவிடுமே.

இருவரும் சிறுபிள்ளைகளாகத் தஞ்சை மாநகரிலே மகிழ்ச்சியாக சுற்றித் திரிந்தோமே, அதைப் பற்றிப் பேசுவதா?  தஞ்சை பெரிய கோவிலுக்குச் சென்றோமே…சாமிகும்பிட அல்ல காற்று வாங்க, அதைப் பற்றிப் பேசுவதா?

அங்கிருந்து சென்னை வர காசில்லாமல் உன் மோதிரத்தை விற்று சென்னை வந்தோமே, அதைப் பற்றிப் பேசுவதா?

திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நிதி திரட்டுவதற்காக ஊர் ஊராக, தெருத்தெருவாக நாடகம் போட்டேமே, அதைப் பற்றிப் பேசுவதா? அங்கு உணவு கிடைக்காமல் தள்ளாடினோமே அதைப்பற்றி பேசுவதா?

சினிமாவிற்கு வந்த பிறகு “பராசக்தி”யில் அவருடைய வசனத்தைப் பேசி நடித்தேனே, அதைப் பற்றி பேசுவதா?

அந்த படம் வந்த ஒரே நாளில் புகழ் வானத்திலே பறந்தேனே, அதைப் பற்றிப் பேசுவதா?

எனக்காக எழுதிய வசனத்தை

S.S. ராஜேந்திரனிடம் கொடுத்ததற்காக கோபித்துக் கொண்ட எனக்கு அரைமணியில் வசனமெழுதி அதை இரண்டே டேக்கில் பேசி உன் எழுத்து சிறப்பா?! என் வசனம் சிறப்பா?! என்ற போட்டியில் இரண்டுமே சிறப்பு என்று மக்கள் சொன்னார்களே அதைப் பற்றிப் பேசுவதா?

எதைப் பற்றியப்பா பேசுவது”….?” – இவ்வாறு நெகிழ்ந்து பேசினார் நடிகர் திலகம்.

 

- Advertisement -

Read more

Local News