Wednesday, April 10, 2024

ஹன்சிகாவின் ‘கார்டியன்’மிரட்டும் டீசர்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

 

சபரி மற்றும் குருசரவணன் இயக்கத்தில்  ஹன்சிகா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கார்டியன்’. இப்படத்தில் ஹன்சிகா பேயாக நடித்துள்ளார். சுரேஷ் மேனன், ஸ்ரீமன், மொட்டை ராஜேந்திரன், பிரதீப் ராயன், டைகர் கார்டன் தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

படத்தின் டீசரில் இந்த கொடூர ஆத்மா பல பேரோட உயிர எடுக்க காத்துட்டு இருக்கு’ என மொட்டை ராஜேந்தின் குரலில் ஒலிக்கும் வசனத்துடன் டீசர் தொடங்குகிறது. பேயாக சில காட்சிகளில் ஹன்சிகா.

குறிப்பாக ‘நீ கோயில்ல இருந்தாலே கொன்னு பொதச்சுடுவேன். இது என் இடம்’ என அவர் பேசும் இடமும், அதைத் தொடர்ந்து அவரின் ஆக்சனும் இன்னும் மெனக்கெடலை கோருகிறது. ‘அரண்மனை’க்கு பிறகு நடிகை ஹன்சிகா இந்தப்படத்தில் பேயாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News