Wednesday, April 10, 2024

ஜவான் படத்தில் விஜய்க்கு சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில், தயாரிப்பாளும் இயக்குநருமான சித்ரா லட்சுமணன், சினிமா குறித்து பல்வேறு சுவையான தகவல்களை பகிர்ந்து வருகிறார்.

அவற்றில் சில..

@ சில யு டியுப் சேனல்களில், ‘ரஜினி சூப்பர் ஸ்டார் இல்லை’ என்று தொடர்ந்து பேசி வருகிறார்கள். அவர்களுக்கு ரஜினி மீது என்ன கோபமோ தெரியவில்லை.

ஏற்கெனவே தியாகராஜ பாகவதர், தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருந்தார் அதே போல இப்போது வசூல் சக்ரவர்த்தி.. சூப்பர் ஸ்டார் ரஜினிதான். எதிர்காலத்தில் வேறு ஒருவர் சூப்பர் ஸ்டாராக வரலாம்.

@ ஜவான் படத்தில் விஜய்  நடிப்பது உறுதியாகி உள்ளது. ஆனால் பலருக்கும் தெரியாத விசயம்.. இந்தப் படத்தில் நடிக்க விஜய் ஒரு ரூபாய்கூட சம்பளம் வாங்கவில்லை.

@ ஜெயிலர் படத்தின் வசூல், 375 கோடி ரூபாய்.. இது ஒரு சாதனை என சன் பிக்சர்ஸ் தெரிவித்து உள்ளது. ஆனால், இதே ரஜினி நடித்த 2.ஓ திரைப்படம், நான்கு நாளில் நானூறு கோடி வசூல் செய்தது. அதை அந்தப் படத்தைத் தயாரித்த லைகா தெரிவித்தது.

பிறகு ஏன், ஜெயிலர் படத்தின் 375 கோடி ரூபாய் வசூலை சாதனை என்று சன் பிக்சர்ஸ் கூறுகிறது என தெரியவில்லை.

இது போன்ற மேலும் பல சுவாரஸ்யான சினிமா செய்திகளை அறிய, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

 

 

 

- Advertisement -

Read more

Local News