Thursday, April 11, 2024

“சிகரெட் பிடிங்க.. தண்ணி அடிங்க!”: மிஷ்கினின் சர்ச்சை பேச்சு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபலமான இயக்குனர்,  மிஸ்கின் திரைப்பட நடிகரும்கூட.  அஞ்சாதே, யுத்தம் செய், முகமூடி, பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ என பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி இருக்கிறார். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும், இவர் படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் ஒரு சில படங்களில் நடித்தும் இருக்கிறார்.

இந்நிலையில் டைனோசர்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் மிஷ்கின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருந்தார். அப்போது “இந்தப்பட இயக்குனர் முகத்தை பார்த்தால் சிகரெட் நிறைய பிடிப்பவர் மாதிரி இருந்தது. அப்பவே படம் ஹிட்டுன்னு எனக்கு தெரியும். நான் முதல் படம் பண்ணும் போது ஒரு நாளைக்கு 100 சிகரெட் பிடிப்பேன். அஞ்சாதே படம் பண்ணும் போதெல்லாம் 120 சிகரெட் அடித்தேன். அந்த டென்ஷன் இருந்தால் தான் அவர் இயக்குனர். இந்த படம் நிச்சயம் ஹிட்டாகும் என்று நினைக்கிறேன்.

என் தம்பி இந்த விழாவுக்கு போனி கபூர் வருவார் என்று சொன்னார். எனக்கு போனிக்கைபூர் தெரியாதுன்னு சொல்லிட்டேன். நமக்குத் தாணுன்னா தெரியும். போனி கபூர் தெரியாது. எனக்கு ஸ்ரீதேவி தெரியும். அவர் சிறந்த நடிகைகளில் ஒருவர். இந்த இடத்தில் ஸ்ரீதேவியின் ஸ்பிரிட் தான் உங்களை வாழ்த்த போகிறது. அவர்களை நான் ரொம்ப மிஸ் பண்றேன். போனிகபூர் அருகில் இருப்பதற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஒவ்வொருவராக பேசும் போது டச் அப் பாய் எல்லோரும் பேசுவாங்களா என போனி கபூர் என்னிடம் கேட்டார்.

நார்த் இந்தியாவில் ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான் தான் பேசுவாங்க போல. இங்க அப்படி இல்லை சார். தமிழ்நாட்டில் எல்லோரும் பேச வாய்ப்பு கொடுப்போம். எல்லோரும் வாழ்த்துவோம் சார். இதுதான் தமிழ்நாடு. அதேபோல் வெற்றிமாறன் கலைக்காக படம் பண்றார். அதில் கலாய்க்கிற விஷயங்களும் இருக்கிறது. இப்போ பாலா படம் பண்ணுகிறார். இந்தியாவின் மிகச்சிறந்த இயக்குனர். அவர் தண்ணி அடிக்கிறாரா என கேட்டேன். இல்லை சார் என்று சொன்னார். பாலா இன்னும் 40 வருடங்கள் படங்களை இயக்க வேண்டும். 10 மணி ஆயிடுச்சு எல்லோரும் வீட்டுக்கு போங்க தண்ணி அடிங்க, தம் அடிங்க, தூங்குங்க” என்று பேசினார்.

இப்படி இயக்குனர் மிஸ்கின் போதைப் பொருளுக்கு ஆதரவாக பேசி இருப்பதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

- Advertisement -

Read more

Local News