Thursday, April 11, 2024

ஜெ.வுக்கு கோபம்… எம்.ஜி.ஆர். காரணம் : பாக்யராஜ்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

எம்.ஜி.ஆர். தன்னை கலையுலக வாரிசு என்று அறிவித்ததால் ஜெயலலிதாவுக்கு என்மேல் கோபம் என்று  பாக்யராஜ் மனம் திறந்து பேசியுள்ளார். இது தொடர்பான சமீபத்தில் பேட்டி அளித்த அவர், “ ஜெயலலிதாவை தனது அரசியல் வாரிசு என அறிவித்த எம்.ஜி.ஆர்., அதே நேரத்தில் என்னை, கலையுலக வாரிசு என அறிவித்தார்.  இதனால் ஜெயலலிதாவுக்கு என் மீது கோபம் வந்தது. எங்கே நான் அவருக்கு போட்டியாக வந்துவிடுவேனோ என்று நினைத்துவிட்டார்.

தவிர, எம்.ஜிஆர் அப்போலோ ஹாஸ்பிட்லில் இருந்தபோது ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கவில்லை.

ஆனால் நான் தினமும் அவரை சந்தித்து 2-3 மணி நேரம் பேசிவிட்டு வருவேன். மேல் சிகிச்சைக்காக  அவர் அமெரிக்காவிற்கு செல்வதற்கு முன்பு கூட ஜெயலலிதாவை யாரும் பார்க்க விடவில்லை. நான் அவரை சென்று பார்த்துவிட்டு மக்களிடம் வந்து அவர் நலமாக இருப்பதாக சொல்வேன். அதேபோல் எம்.ஜி.ஆருடன் அமெரிக்கா செல்வதற்கு அவர் முயற்சித்தும் அவரை யாரும் அனுமதிக்கவில்லை. ஆனால் நான் யாரிடமும் கேட்கவில்லை. நான் கிளம்பி அமெரிக்கா சென்றுவிட்டேன்.

இந்த மாதிரியான சம்பவங்கள் எனக்கும் ஜெயலலிதாவுக்குமான இடைவெளியை அதிகமாக்கியது. இந்த மாதிரியான காரணங்களால் நான் விலகிவிட்டேன்.

பிறகு எனது மகன் திருமணத்திற்கு பத்திரிக்கை வைக்க அனுமதி கேட்டபோது போயஸ் கார்டனுக்கு வர சொன்னார் ஜெயலலிதா. நான் சென்றபோது அவருக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் தலைமை செயலாலளரிடம் பத்திரிக்கை வாங்கிக்கொள்ளும்படி கூறினார். அவரை பார்க்கவில்லை. பத்திரிக்கை வைக்க அனுமதி கொடுத்ததால் அவருக்கு என்மேல் கோபம் இல்லை என்று தெரிந்தது.

திருமணத்திற்கு வராத அவர் குத்துவிளக்கு பார்சல் அனுப்பி வைத்து உடல்நிலை சரியில்லாததால் என்னால் வர முடியவில்லை மணமக்களுக்கு எனது வாழ்த்துக்கள் என்று கூறியிருந்தார்” என்றார் பாக்யராஜ்.

- Advertisement -

Read more

Local News