Thursday, April 11, 2024

டிடி ரிட்டர்ன்: ஒவ்வொரு பேயும் ஒவ்வொரு மாதிரி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஆர் கே என்டர்டெயின்மென்ட் ரமேஷ் குமார் தயாரிப்பில், பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் திரைப்படம் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’.

சுரபி, மொட்டை ராஜேந்திரன், பெப்சி விஜயன், முனீஷ் காந்த், உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஆஃப்ரோ இசையமைக்க, தீபக் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  படத்தொகுப்பை ஸ்ரீகாந்தும், கலை இயக்கத்தை மோகனும் கையாண்டுள்ளனர்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சந்தானம், “ ‘தில்லுக்கு துட்டு’ முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் பெரும் வெற்றியைப் பெற்றன. நான் அடுத்து நான் நடித்த சில படங்கள் சந்தானம் படம் போல இல்லையே என்று சொன்னார்கள். இந்த  ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ முழுக்க முழுக்க சந்தானம் படமாக இருக்கும்.  இதில் வரும் ஒவ்வொரு பேயும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்,  குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் பார்த்து ரசிப்பார்கள்” என்றார்.

 

 

- Advertisement -

Read more

Local News