Friday, April 12, 2024

நடிகர் பிரகாஷ்ராஜ், ஆதி நடிக்கும் ‘கிளாப்’ படத்தில் இணைந்தார்…!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் பிரித்வி ஆதித்யா எழுதி இயக்கும் ‘கிளாப்’ படம்,  பன்மொழி திரைப்படமாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது.

Big Print Pictures நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் I.B.கார்த்திகேயன் இப்படத்தைத் தயாரிக்கிறார். P.பிரபா, ப்ரேம், மனோஜ் & ஹர்ஷா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தில் ஆதி, ஆகான்ஷா சிங் மற்றும் க்ரிஷா க்ரூப் மூவரும் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மேலும், மைம் கோபி, முனீஷ்காந்த் மற்றும் பல பிரபலமானவர்கள் குறிப்பிடத்தகுந்த பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தில் முக்கிய அம்சமாக இசைஞானி இளையராஜாவின் இசை படத்திற்கு மிகப் பெரும் தூணாக அமைந்துள்ளது.

இப்போது இந்தப் படத்தில் ஒரு புதிய வரவாக மூத்த நடிகரான  பிரகாஷ் ராஜ் இணைந்திருக்கிறார். இதனால் படக் குழுவில் அனைவரும் பெரும் உற்சாகத்துடன்,  மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

இயக்குநர் பிரித்வி ஆதித்யா இது குறித்து பேசும்போது, “சினிமாவில் பலருக்கு முன்னுதாரணமாக, மிகச் சிறந்த நடிகராக திகழும் பிரகாஷ் ராஜ் போன்ற நடிகரோடு பணிபுரிவது வளரும் இயக்குநர்கள் அனைவருக்குமே ஒரு பெரும் கனவு.

நடிக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே மிகச் சிறந்த நடிகராக தன்னை அவர் வடிவமைத்து கொண்ட விதமும், அவர் தேர்ந்தெடுத்து நடித்த பாத்திரங்களில் வெளிப்படுத்திய நடிப்பும்,  இந்திய சினிமாவில் பன்மொழிகளிலும் அவர் பணியாற்றிய விதமும், அனைவரையும் ஆச்சர்யப்படுத்தும் பெரும் பயணம். 

ஒரு நடிகராக மற்றுமின்றி இயக்குநராக, தயாரிப்பாளராக, தரமான படைப்புகளை தந்து, இன்று இந்திய சினிமாவில் மிக முக்கிய ஆளுமையாக வளர்ந்து நிற்கிறார். 

நடிகர் பிரகாஷ் ராஜ் நடிக்கிறார் என்கிறபோதே இந்திய மொழிகள் பலவற்றிலும் எதிர்பார்ப்புமிக்க படமாக மாறிவிடும் அளவுக்கு இந்தியாவில் அனைத்து மொழி ரசிகர்களையும் ஈர்த்துள்ளார் அவர். 

இந்தப் பொது முடக்க காலத்திற்கு பிறகு எங்கள் படமான கிளாப்’ படத்தின் படப்பிடிப்பில் அவர் இணைவது பெரும் மகிழ்ச்சி. எப்போதும் முழு ஆர்வத்துடன், படப்பிடிப்பில் உள்ள அனைவரிடமும்   எளிமையாக பழகி, நேர்மறைத் தன்மையோடு பெரும் உற்சாகத்தை பரப்புகிறார்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது கிளாப்’ படத்தின் படப்பிடிப்பு துவக்கப்பட்டுள்ளது. படத்தை வரும் 2021-ம் ஆண்டின் ஆரம்பத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்…” என்றார்.

- Advertisement -

Read more

Local News