Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Movie Review – Touring Talkies https://touringtalkies.co Sun, 11 Dec 2022 19:09:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Movie Review – Touring Talkies https://touringtalkies.co 32 32 விட்னஸ் – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/witness-movie-review/ Sun, 11 Dec 2022 19:09:17 +0000 https://touringtalkies.co/?p=28433 ‘தி பீப்பிள் மீடியா பேக்டரி’ என்ற பேனரின் கீழ் இந்தப் படத்தைத் தயாரிப்பாளர் டி.ஜி.விஷ்வபிரசாத் தயாரித்துள்ளார். இவருடன் இணைந்து விவேக் குச்சிபோட்லா இந்தப் படத்தை இணை தயாரிப்பு செய்திருக்கிறார். ஷ்ரத்தா ஶ்ரீநாத், ரோகிணி, அழகம் பெருமாள், சண்முகராஜா, ஜி. செல்வா, சுபத்ரா ராபர்ட், இராஜீவ் ஆனந்த் மற்றும் எம்.ஏ.கே.இராம் மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர்.  இத்திரைப்படத்தை இயக்கி, ஒளிப்பதிவு செய்திருப்பவர் தீபக். திரைக்கதை எழுதியவர்கள் முத்துவேல் மற்றும் ஜே.பி.சாணக்யா. படத் தொகுப்பு செய்திருப்பவர் பிலோமின் ராஜ். இசையமைப்பு […]

The post விட்னஸ் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
தி பீப்பிள் மீடியா பேக்டரி’ என்ற பேனரின் கீழ் இந்தப் படத்தைத் தயாரிப்பாளர் டி.ஜி.விஷ்வபிரசாத் தயாரித்துள்ளார். இவருடன் இணைந்து விவேக் குச்சிபோட்லா இந்தப் படத்தை இணை தயாரிப்பு செய்திருக்கிறார்.

ஷ்ரத்தா ்ரீநாத், ரோகிணி, அழகம் பெருமாள், சண்முகராஜா, ஜி. செல்வா, சுபத்ரா ராபர்ட், இராஜீவ் ஆனந்த் மற்றும் எம்.ஏ.கே.இராம் மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர். 

இத்திரைப்படத்தை இயக்கி, ஒளிப்பதிவு செய்திருப்பவர் தீபக். திரைக்கதை எழுதியவர்கள் முத்துவேல் மற்றும் ஜே.பி.சாணக்யா. படத் தொகுப்பு செய்திருப்பவர் பிலோமின் ராஜ். இசையமைப்பு செய்திருப்பவர் இரமேஷ் தமிழ்மணி.

நாம் தினம்தோறும் கண்டும், காணாது, கடந்து போகும் சமூகத்தில் அடிமட்டத்தில் வாழும் தூய்மைப் பணியாளர்களின் வாழ்வைப் பேசுகிற படம் இது.

தூய்மைப் பணியாளர்களின் உலகத்தை மையமாகக் கொண்டிருக்கும் இந்த ‘விட்னஸ்’ திரைப்படம், பெருநகரங்கள் குறித்து நாம் இதுவரை கண்டிராத உண்மைகளையும், கண்ணுக்குப் புலப்படாத வகையில் அங்கே செயல்படும் அதிகார மையங்களையும் நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக இருக்கிறார் ரோகிணி. கணவரை இழந்த நிலையில் ஒரே மகனான பார்த்திபனை நன்றாகப் படிக்க வைத்து பெரிய அதிகாரியாக்க வேண்டும் என்று நினைத்து மகனுக்காகவே வாழ்ந்து வருகிறார் ரோகிணி.

இந்த நேரத்தில் பணக்காரர்களும், அதிகாரிகளும் வாழும் ஒரு அப்பார்மெண்டில் செப்டிக் டேங்கில் அடைப்பு ஏற்படுகிறது. ஒரு சந்தர்ப்பத்தில்  ரோகிணியின் மகனான பார்த்திபனை அந்த மலக் குழிக்குள்  இறங்கச் சொல்கிறார்கள். மறுக்கும் பார்த்திபன் வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்படுகிறான். குழிக்குள் இறங்கிய பார்த்திபன் விஷ வாயு தாக்கி இறந்துவிட ரோகிணியின் ஒட்டு மொத்தக் கனவும் உடைகிறது.

தன் மகனுக்கு வந்த நிலை வேறு எவருக்கும் வரக் கூடாது என நினைக்கும் ரோகிணி கம்யூனிஸ்ட் தோழர்களோடு நின்று தனது மகன் மரணத்திற்கு நீதி கேட்டு நீதிப் போராட்டம் நடத்துகிறார்.

பெத்தராஜூ என்ற தொழிற் சங்கத் தலைவர், அவருக்கு உறுதுணையாக வருகிறார். இன்னொருபுறம், பார்வதி என்ற இளம் கட்டடக் கலைஞர் ரோகிணியிடம் முக்கியமான சில ஆதாரங்களை ஒப்படைக்கிறாள். அந்த ஆதாரங்களைக் கொண்டு பெத்தராஜுவும், இந்திராணியும், நீதிமன்றத்தை நாடுகின்றனர்.

அதன் விளைவாக, சம்பவம் நடந்த பகுதியின் கழிவு நீர்ப் பணி ஒப்பந்ததாரருக்கு கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கான பதிலடியாக, இந்திராணியின் வாழ்விலும், பார்வதியின் வாழ்விலும், பெத்தராஜுவின் வாழ்விலும் கடுமையான பாதிப்புகள் ஏற்படுகின்றன.  அந்த வழக்கு என்ன ஆனது.. ரோகிணிக்கு நீதி கிடைத்ததா..? என்பதுதான் மீதிக் கதை.

ரோகிணியின் கேரியரில் மிக முக்கியமான படம் இது. ஒவ்வொரு காட்சியிலும் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நடை, உடை, பேச்சு என கடை நிலை தூய்மைப் பணியாளராகவே மாறி, இந்திராணி’ என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் ரோகிணி.

மகனை இழந்து கதறுவது, மகனது மரணத்துக்கு நீதி கேட்டுப் போராடுவது, தன்னை தரக்குறைவாக நடத்தும் சூப்பர்வைசரிடம் கோபத்தைக் காட்டும் போதும், சம்பளம் தர மறுப்பதையெதிர்த்து  கொந்தளிப்பதுமாய் சில காட்சிகளில் அவரின் நடிப்புதான் படத்திற்குக் கிடைத்திருக்கும் பெரும் பலம்.

அதே அடுக்கு மாடி குடியிருப்புவாசிகளில் ஒருவராக இருக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் தனக்கு நீச்சல் கற்றுக் கொடுத்த பார்த்திபனுக்கு நீதி கிடைக்க ரோகிணியுடன் இணைந்து போராடுகிறார். அந்தப் போராட்டக் களத்தில் தனது நடிப்பை கெத்தாக செய்திருக்கிறார் ஷ்ரத்தா..!

அரசு அதிகாரியாக அழகம் பெருமாள், வழக்கறிஞராக சண்முகராஜன், தொழிற் சங்கத் தலைவராக வருகிறவர்… அத்தனைப் பேரின் நடிப்பும் கச்சிதம்!

கதையின் முதன்மைப் பாத்திரத்தில் பார்த்திபனாக நடித்திருக்கும் இளைஞன் ஜி.செல்வாவின் இயல்பான நடிப்பும் ஈர்க்கிறது. நீதிமன்ற காட்சிகளில் பங்கு பெற்ற அனைவருமே எதார்த்தத்தை மீறாமல் நடித்துள்ளனர்

ரமேஷ் தமிழ்மணியின் இசையில் ‘பறவையாய் நாம் பறக்கிறோம்’ பாடல் மனதுக்கு இதமாக இருக்கிறது..! பின்னணி இசை இப்படத்திற்கு பெரியளவில் ஒத்துழைப்பை கொடுத்துள்ளது. படத்தை எழுதி இயக்கியிருக்கும் தீபக்தான் ஒளிப்பதிவும் செய்துள்ளார். தன் எழுத்தைத் தானே சரியாக காட்சிப்படுத்தியுள்ளார்.

படத்தில் ஆங்காங்கே பட்ஜெட் சிக்கனம் தெரிகிறது. இது விட்னஸுக்கு சின்ன மைனஸ்தான். என்றாலும், அதிகார வர்க்கத்தின் சமநிலை தவறினால் அவர்கள் கையில் எடுக்கும் வன்முறைகள் மிகப் பயங்கரமானதாக இருக்கும் என்பதை அழுத்தமாகப் பதிய வைத்ததில் கவனிக்க வைக்கிறார் இயக்குநர் தீபக்.

மனிதரின் மலத்தை மனிதரே அல்லும் அவலத்திற்கு அரசு தடை விதித்திருந்தாலும், இப்போதும் மலக்குழிகளில் அப்பாவி மனிதர்கள் இறக்கப்பட்டு மாண்டு போகும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இதற்கு அரசுகள்தான் முதல் காரணம் என்பதை மிக அழுத்தமாக சொல்லியிருக்கும் இயக்குநர் தீபக், அரசுகள் இதில் இரட்டை நிலையை எடுத்து நாடகமாடுவதையும் வெளிப்படையாகக் குற்றம் சாட்டியிருக்கிறார்.

நீதித் துறை மூலமாகப் போராடினால்கூட இறுதியில் வெற்றி பெறப் போவது அரசுகள்தான் என்பதை பட்டவர்த்தனமாய் உடைத்திருக்கிறார் இயக்குநர். படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காகவே தமிழ் சினிமாவில் இனி எல்லாக் காலங்களிலும் இந்தப் படம் பேசப்படும் என்பதில் சந்தேகமில்லை.

RATING : 4 / 5

The post விட்னஸ் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
நாய் சேகர் ரிட்டன்ஸ் – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/naai-sekhar-returns-movie-review/ Sun, 11 Dec 2022 18:54:10 +0000 https://touringtalkies.co/?p=28418 தமிழில் மிகப் பிரம்மாண்டமான படைப்புகளை வழங்கி வரும் லைகா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சுராஜ் இயக்கத்தில், நீண்ட இடைவேளைக்கு பிறகு ‘வைகைப் புயல்’ வடிவேலு நாயகனாக நடித்திருக்கும் படம் இது. படத்தில் வடிவேலுவுடன் ஷிவானி நாராயணன், அரவிந்த்ராஜ், ராவ் ரமேஷ். சச்சு, வேல ராமமூர்த்தி, ரெடின் கிங்ஸ்லி, காமெடி ஷிவாங்கி, இட் இஸ் பிரசாந்த், மாறன், முனீஸ்காந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர். வடிவேலுவின் புகழ் பெற்ற கதாப்பாத்திரமான நாய் சேகர் பெயரை வைத்து மீண்டும் தான் […]

The post நாய் சேகர் ரிட்டன்ஸ் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
தமிழில் மிகப் பிரம்மாண்டமான படைப்புகளை வழங்கி வரும் லைகா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சுராஜ் இயக்கத்தில், நீண்ட இடைவேளைக்கு பிறகு ‘வைகைப் புயல்’ வடிவேலு நாயகனாக நடித்திருக்கும் படம் இது.

படத்தில் வடிவேலுவுடன் ஷிவானி நாராயணன், அரவிந்த்ராஜ், ராவ் ரமேஷ். சச்சு, வேல ராமமூர்த்தி, ரெடின் கிங்ஸ்லி, காமெடி ஷிவாங்கி, இட் இஸ் பிரசாந்த், மாறன், முனீஸ்காந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

வடிவேலுவின் புகழ் பெற்ற கதாப்பாத்திரமான நாய் சேகர் பெயரை வைத்து மீண்டும் தான் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுப்பதுபோல நினைத்து இந்தத் தலைப்புடன் வந்திருக்கிறார் வடிவேலு.

திருமணமாகி பல ஆண்டுகள் ஆனாலும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்த வடிவேலுவின் பெற்றோர் பாட்டி சச்சுவுடன் பைரவர் கோவிலுக்கு வேண்டுதலுக்காக செல்கிறார்கள்.

அங்கேயிருந்த ஒரு சித்தர் ஒரு குட்டி நாயை அவர்களிடத்தில் கொடுத்து இது அதிர்ஷ்டக்கார நாய். இது யார் வீட்டில் இருக்கிறதோ அங்கே செல்வத்திற்குப் பஞ்சமிருக்காது என்று சொல்கிறார்.

சித்தர் சொன்னதுபோலவே அந்த நாய் வீ்ட்டிற்கு வந்தவுடனேயே வடிவேலுவின் அம்மா கருவுற்று வடிவேலுவைப் பெற்றெடுக்கிறாள். கூடவே அவர்களுடைய வறுமையும் ஒழிந்து பணக்காரராகிறார்கள்.

ஆனால் இதுவும் கொஞ்ச நாளைக்குத்தான். அந்த அதிர்ஷ்டக்கார நாயைக் கவனித்துக் கொள்ள ராவ் ரமேஷை நியமிக்கிறார் வேல.ராமமூர்த்தி. வந்து சேர்ந்த சில மாதங்களிலேயே அந்த நாயின் அதிர்ஷ்டத்தை அறிந்து கொண்ட ராவ் ரமேஷ். அந்த நாயை லவட்டிக் கொண்டு ஓடிப் போகிறார்.

நாய் போன வேகத்திலேயே வடிவேலுவின் வீட்டின் செல்வம் கரைகிறது. அம்மாவும், அப்பாவும் இறந்து போக.. தற்போது தனது பாட்டி சச்சுவுடன் வாழ்ந்து வருகிறார் வடிவேலு.

தன்னுடைய கூட்டாளிகளான ஷிவாங்கி மற்றும் ரெடின் கிங்ஸ்லியுடனும் வீட்டில் வளர்க்கும் நாய்களைக் கடத்தி வந்து அதன் மூலமாகக் காசு பார்க்கும் திருட்டுத் தொழிலை செய்து வருகிறார்.

இந்த நாய் கடத்தலில் ஒரு அஸைன்மெண்ட்டாக தாஸ் என்கிற ஆனந்த்ராஜின் நாயையும் கடத்தி விடுகிறது வடிவேலு அண்ட் கோ. ஆனால் நாய் இருந்த காரில் இருந்த 10 கோடி ரூபாய் பணத்தைத் தேடி ஆனந்த்ராஜ் வடிவேலுவைத் தூக்கி வந்து விசாரிக்கிறார்.

ஆனந்த்ராஜிடமிருந்து அடி, உதைபட்டு, சிக்கிச் சின்னாபின்னமாகி தப்பித்து வரும் வடிவேலுவிடம் தங்களது டும்பத்தின் கடந்த காலத்தைப் பற்றி அவரது பாட்டி சச்சு எடுத்துக் கூறுகிறார்.

இப்போது அந்த அதிர்ஷ்டக்கார நாய் ஹைதராபாத்தில் ராவ் ரமேஷின் வீட்டில் இருப்பதையும், ராவ் ரமேஷ் அந்த நாயை வைத்திருப்பதாலேயே தற்போது மிகப் பெரிய கோடீஸ்வரனாக இருப்பதையும் அறிகிறார் வடிவேலு.

உடனேயே தங்களுக்குச் சொந்தமான அந்த அதிர்ஷ்க்கார நாயை மீட்டு வர தனது நண்பர்களுடன் ஹைதராபாத் செல்கிறார் வடிவேலு. இதே நேரம் வடிவேலுவை பழிக்குப் பழி வாங்கத் துடிக்கும் ஆனந்த்ராஜூம் வடிவேலுவைத் தேடி ஹைதராபாத்துக்கு வருகிறார். மூன்றாவதாக போலீஸ் இன்ஸ்பெக்டரான முனீஸ்காந்தும் ஒரு வழக்கில் வடிவேலுவை கைது செய்ய ஹைதராபாத்துக்கு ஓடி வருகிறார்.

ஹைதராபாத்தில் வடிவேலு அந்த அதிர்ஷ்டக்கார நாயைக் கண்டு பிடித்தாரா இல்லையா.. ஆனந்த்ராஜ் வடிவேலுவை என்ன செய்தார்.. முனீஸ்காந்த் வடிவேலுவை கைது செய்தாரா.. இல்லையா..? என்பதுதான் இந்தப் படத்தின் மீதிக் கதை.

“என்னை திரையுலகில் இருந்து ஒழித்துக் கட்ட சிலர் முயற்சிக்கிறார்கள். ஆனால் அது முடியாது.. எனக்கு எண்ட் கார்டே கிடையாது…” என்று வடிவேலு சொல்லிக் கொண்டிருப்பதெல்லாம் அவரது கண் முன்னேயே காணாமல் போய்க் கொண்டிருக்கிறது.

யாரும் அவருக்கு எதிராக சதி செய்து விரட்ட வேண்டாம். அவருக்கு அவரேதான் எதிரி. இது போன்று இன்னும் 2 படங்கள் வந்தால்போதும். வடிவேலு வீட்டிலேயே அமர்ந்துவிடுவார் என்பதுதான் உண்மை.

இந்தப் படத்தில் பழைய ‘நாய் சேகரை’ பார்க்கலாம் என்று ஆசையுடன் ஓடோடி வந்த தனது ரசிகர்களுக்கு சொல்லவொணா துயரதத்தைத் தந்துள்ளார் வடிவேலு. முதல் பாதியில் ஒரு காட்சியில்கூட சிரிப்பு வரவில்லை. இரண்டாம் பாதியில் ஆனந்த்ராஜ் புண்ணியத்தில் சில காட்சிகளில் சிரிக்க முடிந்திருக்கிறது. அவ்வளவுதான். இது போதுமா ‘வைகைப் புயல்’ வடிவேலு அவர்களே..!?

கதையும், திரைக்கதையும் காமெடிக்கேற்ற சிச்சுவேஷனை உருவாக்காததால் வடிவேலுவின் வழக்கமான புதுமையான வசனங்களும், பன்ச் வசனங்களும் இதில் இல்லை. அவருடைய டைமிங்கான டயலாக் டெலிவரி மிஸ் ஆகியிருக்கிறது. காமெடியின் 90 டிகிரிக்கும் ஒரு பாடி லாங்வேஜ் வைத்திருப்பாரே.. அதுவும் மிஸ்ஸிங். இப்படி இந்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் வடிவேலு மொத்தமாக காணாமல் போயிருக்கிறார்.

ரெடின் கிங்ஸ்லி, சிவாங்கி, முனிஷ்காந்த் மற்றும் கேபிஒய் பாலா உட்பட சிலர் அவ்வப்போது அடித்துவிடும் டைமிங்கில்தான் கொஞ்சம் உதட்டைப் பிரித்து நகைக்க முடிந்திருக்கிறது. கிங்ஸ்லி வசனம் புரியாத பாணியிலேயே எப்போதும் பேசுவார். இதிலும் அப்படியேதான் நடித்துள்ளார்.

ராவ் ரமேஷ், ஷிவாங்கி, ஷிவானி நாராயணன், ஆர்.ஜே.விக்னேஷ், சஞ்சனா சிங், என்று இருந்த நடிகர், நடிகைகள் அனைவருமே இது காமெடி படம் என்பதைக்கூட மறந்தும் ஞாபகப்படுத்தவில்லை.

ஆனால் ஆனந்த்ராஜ் மட்டும்தான் தன் நடிப்பின் மூலம் நம்மைக் கொஞ்சம் சிரிக்க வைத்திருக்கிறார். ஆனந்தராஜ் கதைக்குள் வந்த பின்புதான் சோம்பல் முறித்து எழுந்து உட்கார முடிகிறது. அவரைக் குறி பார்த்து சுடத் தெரியாமல் நிஜமாகவே ‘குறி‘யைப் பார்த்து வடிவேலு சுட்டுவிட வீல் சேரிலேயே அலையும் ஆனந்தராஜின் நிலைமையைப் பார்த்தவுடன் சிரிப்பு வருகிறது.

அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியவுடன் வடிவேலுவை போட்டுத் தள்ள நினைக்க.. அதே நேரம் அவரிடத்தில் அடியாள் வேலை பார்த்தவர்கள் எல்லாம் ஆளுக்கு ஒரு வேலையில் செட்டில் ஆகியிருப்பதும்.. அவர்கள் அத்தனை பேரையும் வேனில் அழைத்துக் கொண்டு வடிவேலுவைக் கொல்வதற்காக ஹைதராபாத் புறப்படும் காட்சிகளில் மட்டும்தான் நிறையவே சிரிக்க முடிகிறது.

கடைசியாக வடிவேலுவை யார் கொல்வது என்பதில் ராவ் ரமேஷுக்கும் ஆனந்தராஜுக்கும் போட்டி வந்து இருவரும் ‘பஞ்ச்‘ டயலாக்குகளை பேசியே மாறி மாறி அடித்துக் கொள்வது மட்டும் ருசியான காட்சி..!

விக்னேஷ் வாசுவின் ஒளிப்பதிவு பரவாயில்லைதான். சந்தோஷ் நாரயணனின் இசையில் 2 பாடல்கள் கேட்கும் ரகம். மாண்டேஜ் காட்சிகளில்கூட சிரிப்பை வரவழைக்காமல் விட்டிருக்கிறார் இயக்குநர். ‘அப்பத்தா’ பாட்டு மட்டுமே ஹிட் ஆகியிருக்கிறது. பின்னணி இசையிலும் சந்தோஷ் நாராயணன் காமெடிக்கேற்ற இசையைக் கொடுத்திருந்தாலும் நடிப்பும், வசனமும் சரியில்லை என்பதால் அதுவும் வீணாகிப் போயிருக்கிறது. 

படத்தில் கொஞ்சம் கத்திரி போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். வடிவேலுவின் வீட்டில் செய்திருக்கும் உள் அலங்காரத்திற்காக கலை இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள்.

முனீஸ்காந்த் போலீஸில் என்னவாக இருக்கிறார். அவர் எதற்காக ஓட்டை அம்பாஸிடர், வேன், பஸ், லாரி என்று கடைசியாக நடராஜா சர்வீஸில் ஹைதராபாத் நோக்கி ஓடி வர வேண்டும்.? மொக்கையான கேரக்டர் ஸ்கெட்ச்சும், திரைக்கதையும் இவருடையதுதான்.

மொத்தத்தில், வடிவேலுவின் கம்பேக்குக்காக காத்திருந்த ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சுவாரஸ்யமான திரைக்கதையையும், குபீர் சிரிப்பு வரும் வசனங்களையும், பார்த்தவுடனேயே கை தட்ட வைக்கும் அளவுக்கான நடிப்பையும் இயக்குநர் சுராஜ் இந்தப் படத்தில் கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை. 

RATING : 2.5 / 5

The post நாய் சேகர் ரிட்டன்ஸ் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
வரலாறு முக்கியம் – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/varalaaru-mukkiyam-movie-review/ Sun, 11 Dec 2022 18:43:36 +0000 https://touringtalkies.co/?p=28413 தென்னிந்தியாவின் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 91-வது படம் இது. கோவையில் பள்ளி ஆசிரியரான அப்பா கே.எஸ்.ரவிக்குமார், அம்மா சரண்யா பொன்வண்ணன் மற்றும் தங்கையுடன் வசித்து வரும் நாயகன் ஜீவா யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். லோக்கல் அரசியல் பிரமுகரான வி.டி.வி.கணேசுடன் நட்பில் இருக்கும் ஜீவா எதிர்காலத்தைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் தற்போதைக்கு சந்தோஷமாக இருந்தால் போதும் என்று ஜாலியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் இவர்கள் […]

The post வரலாறு முக்கியம் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
தென்னிந்தியாவின் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 91-வது படம் இது.

கோவையில் பள்ளி ஆசிரியரான அப்பா கே.எஸ்.ரவிக்குமார், அம்மா சரண்யா பொன்வண்ணன் மற்றும் தங்கையுடன் வசித்து வரும் நாயகன் ஜீவா யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.

லோக்கல் அரசியல் பிரமுகரான வி.டி.வி.கணேசுடன் நட்பில் இருக்கும் ஜீவா எதிர்காலத்தைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் தற்போதைக்கு சந்தோஷமாக இருந்தால் போதும் என்று ஜாலியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இந்த நேரத்தில் இவர்கள் வீடு இருக்கும் அதே தெருவில் கேரளாவில் இருந்து வரும் நாயகிகளான காஷ்மீரா, பிரக்யா ஆகியோரின் குடும்பம் குடியேறுகிறது.

பிரக்யாவைப் பார்த்தவுடன் கிறங்கிப் போகும் ஜீவா அவரை பாலோ செய்கிறார். அப்போது பிரக்யாவின் அக்காவான காஷ்மீரா அறிமுகமாக.. அவரைப் பார்த்ததும் மதிமயங்கிப் போகிறார் ஜீவா. அடைந்தால் காஷ்மீராவைத்தான் அடைவேன் என்று தன் மனதுக்குள் சபதம் எடுத்துக் கொண்டு காஷ்மீராவை சுற்றி, சுற்றி வந்து காதல் அப்ளிகேஷனை கொடுக்கிறார்.

முதலில் இதை மறுக்கும் காஷ்மீரா பின்பு வழக்கமான சினிமா காதலிகள்போல் காதலை ஏற்றுக் கொள்கிறார். ஆனால் தனது இரண்டு மகள்களையும் துபாயில் இருக்கும் தனது உறவினர் மகன்களுக்கு திருமணம் செய்து வைக்க எண்ணியிருக்கும் காஷ்மீரா, பிரக்யாவின் அப்பாவான சித்திக் இந்தக் காதலை ஏற்க மறுக்கிறார்.

பிரச்சினை பெரிதாகிறது. ஜீவாவின் வீட்டிலும் இது தெரிய வர.. கே.எஸ்.ரவிக்குமாரும் ஜீவாவைக் கண்டிக்கிறார். அதே நேரம் காஷ்மீராவை பெண் பார்க்க வந்த மாப்பிள்ளையை ஜீவா அடித்துவிட, அதே துபாய் மாப்பிள்ளையுடன் திருமணத்திற்கே தேதி குறித்து விடுகிறார் சித்திக்.

அடுத்து என்ன நடந்தது..? ஜீவா-காஷ்மீரா காதல் என்னவானது..? என்பதுதான் இந்த வரலாறு முக்கியம்’ படத்தின் திரைக்கதை.

கதையின் நாயகனான ஜீவா, சந்தோசமாக வாழும் ஜாலியான இளைஞனாக, பிரக்யா நாக்ராவை பார்த்ததும் காதல் கொண்டு, பின்பு அவரது அக்காவான காஷ்மீரா பர்தேசியை பார்த்தவுடன் அழகில் மயங்கி. காதலனாக மாறி, விடிவி கணேசுடன் சேர்ந்து வயதுக்கு மீறிய பேச்சையும், வேலையையும்  காமெடியாக செய்யும் இளைஞனாக படம் நெடுகிலும் தனது நடிப்பைக் கொட்டியிருக்கிறார் ஜீவா.

பல காட்சிகளில் ஜீவாவின் ஒன் வேர்டு டயலாக்குகளுக்கு ரசிகர்களின் சிரிப்பில் தியேட்டரே அதிர்கிறது. ஆனால் அவை அத்தனையும் இரட்டை அர்த்த ஆபாச வசனங்கள் என்பதுதான் இதிலிருக்கும் ஒரு சோகமான விஷயம்.

கூடுதலாக ஜீவா பெண் வேடமிட்டு வருவதிலும் அழகாகத் தென்படுகிறார். வயிற்றில் இருக்கும் முடியையும் நீக்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். நடிப்பென்று செய்தாலும் நூறு சதவிகிதம் முழுமையாகச் செய்ய வேண்டும் ப்ரோ.. மேலும் இதே காட்சியில் விடிவி கணேஷிடம் “கண்ணை பார்த்து மட்டும் பேசுண்ணே..” என்று சிரித்துக் கொண்டே ஜீவா சொல்லுமிடத்தில், எந்தவொரு உம்மணா மூஞ்சியும் சிரித்துவிடுவான். அப்படியொரு நடிப்பைக் காண்பித்திருக்கிறார் ஜீவா.

நாயகிகள் காஷ்மீராவும், பிரக்யாவும் அழகுப் பதுமைகள். இளம் பருவச் சிட்டுக்கள் என்பது முகத்திலேயே தெரிகிறது. அதேபோல் அதிகமாக படங்களில் நாம் பார்த்திராதவர்களாகவும் இருப்பதால், இவர்கள் காட்டும் நடிப்பை நம்மால் ரசிக்க முடிந்திருக்கிறது.

அக்கா காஷ்மீரா அமைதியான வழியில் நடிப்பைக் காட்ட.. தங்கையான பிரக்யாவோ ஆர்ப்பாட்டமான நடிப்பைக் கொட்டியிருக்கிறார். அதிலும் “அக்காதான் உன்னை வேணாம்ன்னு சொல்லிருச்சே.. அப்போ என்னைக் கட்டிக்கோ” என்று சொல்லி ஜீவாவை ஒட்டிக் கொள்ளும் சின்னப்புள்ளத்தனத்தை வஞ்சகமில்லாமல் நடிப்பில் காட்டியிருக்கிறார் பிரக்யா.

படத்தில் நாயகன் லெவலுக்கு அட்ராசிட்டி செய்திருக்கிறார் அரசியல் பிரமுகராக நடித்திருக்கும் வி.டி.வி.கணேஷ். எதற்கெடுத்தாலும் “டெல்லிக்குப் போகணும்..”, “பாராளுமன்றத்துல நுழையணும்” என்ற கனவையே சொல்லும் கணேஷ் செய்வதெல்லாம் மொள்ளமாரித்தனம் என்பதுதான் இவரது கேரக்டர் ஸ்கெட்ச்சில் இருக்கும் முரண்பாடு.

ஜீவாவுக்கு அரசியல் ஈடுபாடு வந்துவிட்டதோ என்னவோ.. கணேஷை வைத்து நிறையவே அரசியல் பேசியிருக்கிறார். “ஆமா.. எதுக்கெடுத்தாலும் டெல்லிக்குப் போகணும்.. டெல்லிக்குப் போகணும்ன்றீங்களே.. அங்கே போய் என்ன கிழிச்சீங்க..?” என்று அவர் கேட்கும் கேள்விக்கு பலமான கை தட்டலும் கிடைக்கிறது. அரசியல்வியாதிகள் இந்தப் படத்தைப் பார்க்காமல் இருப்பார்களாகட்டும்..!

மற்றபடி ஜீவாவுக்கு மாமா வேலை பார்ப்பதோடில்லாமல், அடுத்தவர் மனைவியுடன் சரசமாடுவது.. பாலியல் தொழில் செய்யும் பெண்களுடன் உறவாடுவது.. ஜீவாவுக்கு காண்டம் பாக்கெட்டை எடுத்துப் போகச் சொல்லி அறிவுறுத்துவது.. காட்சிக்குக் காட்சி இரட்டை அர்த்த ஆபாச வசனங்களை பேசியிருப்பது.. பாலுணர்வைத் தூண்டும் மாத்திரைகள் பற்றிய வசனங்களை பேசியிருப்பது என்று தியேட்டருக்கு வரும் இளைஞர்களை கெடுக்கும் விஷ மருந்துகளை விடிவி கணேஷ் மூலமாகப் படம் முழுவதும் தூவியிருக்கிறார் இயக்குநர்.

இதனிடையில் ஒரு கவிதைத்தனமான திரைக்கதையாக தனது முன்னாள் காதலி வீட்டிற்கு வந்தவுடன் கே.எஸ்.ரவிக்குமார் பரபரப்பாக மாறுவதும், இதனைப் பார்த்து அம்மா சரண்யாவிடம் ஜீவா கேட்கும் கேள்விகளெல்லாம், காமெடியுடன் சேர்ந்து நிஜ வாழ்க்கையை எடுத்துக் காட்டும் காட்சியாகவும் அமைந்திருக்கிறது.

ஷான் ரஹ்மானின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படியாக இருப்பது ஆச்சரியமான விஷயம். அதேபோல் பாடல் காட்சிகளின் மாண்டேஜ் ஷாட்ஸ்கள் அனைத்தும் காதல் கதைகளை சொல்கின்றன. கதைக் களத்திற்கு ஏற்றபடி பின்னணி இசையும் அமைந்திருக்கிறது. சக்தி சரவணனின் ஒளிப்பதிவு ஒரு இடத்தில்கூட தொய்வில்லாமல் படத்தினை குளுமையாக்கியிருக்கிறது.

ஆனாலும், இந்தக் கதையை தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி எப்படி தேர்வு செய்தார் என்பதுதான் ஆச்சரியமாகவுள்ளது. ஏனெனில் அவருடைய சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் இதுவரையிலும் தயாரித்திருக்கும் படங்களில் இல்லாதவகையில் இந்தப் படம்தான் இத்தனை மோசமான திரைக்கதை, வசனத்தில் உருவாகியிருக்கிறது.

படம் முழுவதும் நம்மை சிரிக்க வைத்திருந்தாலும் அத்தனையும் ஆபாசக் களஞ்சியம் என்பதுதான் கொடுமையான விஷயம். கொடூரமான விஷயமும்கூட. தேனில் சிறிதளவு விஷத்தைக் கலந்து கொடுத்த கொடுமைதான் இதில் நடத்திருக்கிறது.

ஜீவாவுக்கு சமீப வருடங்களில் வெற்றி கிடைக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் அதற்காக இந்த அளவுக்கு… இளைய சமுதாயத்தினரை கெடுக்கும் அளவுக்கா… தரம் தாழ வேண்டும்..? வெற்றி முக்கியம்தான். ஆனால் அதைவிடவும் நேர்மையான வெற்றியல்லவா முக்கியம்..!?

RATING : 2.5 / 5

The post வரலாறு முக்கியம் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
குருமூர்த்தி – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/gurumurthy-movie-review/ Sat, 10 Dec 2022 11:22:08 +0000 https://touringtalkies.co/?p=28360 நடிப்பு: நட்டி, பூனம் பாஜ்வா, ராம்கி, ரவிமரியா, மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், ஜார்ஜ் , பாய்ஸ் ராஜன், மோகன் வைத்யா, யோகிராம், சஞ்சனா சிங், அஸ்மிதா. தயாரிப்பு : பிரண்ட்ஸ் டாக்கீஸ் சார்பில் சிவசலபதி மற்றும் சாய், இசை : சத்யதேவ் உதயசங்கர், ஒளிப்பதிவு : தேவராஜ், இயக்கம் : கே.பி.தனசசேகர். கோடீஸ்வரர் ராம்கி 5 கோடி ரூபாய் பணத்துடன் காரில் புறப்படுகிறார். வழியில் கடை யொன்றில் நிறுத்தி தண்ணீர் பாட்டில் வாங்க காரிலிருந்து இறங்கி செல்கிறார். […]

The post குருமூர்த்தி – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
நடிப்பு: நட்டி, பூனம் பாஜ்வா, ராம்கி, ரவிமரியா, மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், ஜார்ஜ் , பாய்ஸ் ராஜன், மோகன் வைத்யா, யோகிராம், சஞ்சனா சிங், அஸ்மிதா.

தயாரிப்பு : பிரண்ட்ஸ் டாக்கீஸ் சார்பில் சிவசலபதி மற்றும் சாய், இசை : சத்யதேவ் உதயசங்கர், ஒளிப்பதிவு : தேவராஜ், இயக்கம் : கே.பி.தனசசேகர்.

கோடீஸ்வரர் ராம்கி 5 கோடி ரூபாய் பணத்துடன் காரில் புறப்படுகிறார். வழியில் கடை யொன்றில் நிறுத்தி தண்ணீர் பாட்டில் வாங்க காரிலிருந்து இறங்கி செல்கிறார். அப்போது காரிலிருக்கும் பணப் பெட்டியை திருடன் திருடி செல்கிறான்.

திருட்டு குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நட்டியிடம் புகார் தருகிறார் ராம்கி. பணப் பெட்டியை தேடி எஸ்டேட் முழுவதும் நட்டியும் போலீஸ் டீமும் அலைகிறது. பெட்டி ஒவ்வொருவர் கை மாறி சென்று கொண்டே இருக்கிறது. பலரும் அந்த பணத்தை ஆட்டயை போட முயல்கின்றனர். கடைசியில் பணம் ராம்கிக்கு திரும்பி வருகிறதா. இல்லையா.. என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

நீண்ட நாட்களுக்கு பிறகு ராம்கியை திரையில் பார்த்தாலும் அதே இளமை மாறாமலிருக்கிறார். ஆனால் அவருக்கு அதிகம் வேலையில்லை. பணத்தை பறி கொடுத்த பின் அவரது ஆன்மா பணப் பெட்டி எங்கெல்லாம் செல்கிறதோ அதன் பின்னாடி அலையும்போது இது பேய் கதையாக மாறுமோ என்ற சந்தேகம் எழுகிறது. நல்ல வேலையாக அப்படியெதுவும் நடக்கவில்லை.

நட்டி ஸ்டிரிக்ட்டான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். ஓவர் ஆக்டிங் செய்யாமல் நியாயமான நடிப்பை வழங்கி கதாபாத்திரத்தை கச்சிதமாக நிறைவு செய்கிறார். ரவுடிகளுடன் ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடி காட்டுகிறார்.
மனைவி பூனம் பாஜ்வாவுடன் பாடல் காட்சியொன்றில் நெருக்கமாக நடித்து கிளுகிளுப்பு ஏற்படுத்துகிறார்.

போலீஸ் ஜீப் டிரைவராக வரும் ரவி மரியா, ஹெட்கான்ஸ்டபிள் மனோபாலா காமெடி அரட்டை அடிக்கின்றனர். ரவிமரியா பாத்திரத்தில் கொஞ்சம் வில்லத்தனமும் கலந்திருப்பது சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது. சஞ்சனா சிங், அஸ்மிதா கவர்ச்சி ஊறுகாய் பரிமாறுகின்றனர்.

கொடைக்கானல் எஸ்டேட்டை வளைத்து வளைத்து படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்  தேவராஜ். சத்யதேவ் உதயசங்கரின் இசை பரவாயில்லை.

காமெடியுடன், ஒரு க்ரைம் கதையை கமர்ஷியல் மசாலா தடவி அளித்திருக்கிறார் இயக்குநர்  கே.பி.தனசசேகர்.

குரு மூர்த்தி – கமர்ஷியல்  காமெடி மசாலா

RATING : 2.5 / 5

The post குருமூர்த்தி – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
கட்டா குஸ்தி – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/guttaa-kusthi-movie-review/ Fri, 02 Dec 2022 11:58:55 +0000 https://touringtalkies.co/?p=27955 இந்தப் படத்தை நடிகர் விஷ்ணு விஷால் தனது விஷால் ஸ்டூயோஸ் நிறுவனத்தின் சார்பாகவும், தெலுங்கு நடிகரான ரவி தேஜா தனது RT TeamWorks நிறுவனத்தின் சார்பாகவும் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் நாயகனாகவும், ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் கருணாஸ், காளி வெங்கட், கஜராஜ், லிஸி ஆண்டனி, ஜா ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர். பெயர் தெரியாத ஊரில் அம்மா, அப்பா இல்லாத நிலையில் மச்சு வீட்டுடன், 20 ஏக்கர் தென்னந்தோப்புடன் கல்யாணத்துக்குத் […]

The post கட்டா குஸ்தி – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
இந்தப் படத்தை நடிகர் விஷ்ணு விஷால் தனது விஷால் ஸ்டூயோஸ் நிறுவனத்தின் சார்பாகவும், தெலுங்கு நடிகரான ரவி தேஜா தனது RT TeamWorks நிறுவனத்தின் சார்பாகவும் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் நாயகனாகவும், ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் கருணாஸ், காளி வெங்கட், கஜராஜ், லிஸி ஆண்டனி, ஜா ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

பெயர் தெரியாத ஊரில் அம்மா, அப்பா இல்லாத நிலையில் மச்சு வீட்டுடன், 20 ஏக்கர் தென்னந்தோப்புடன் கல்யாணத்துக்குத் தயாரான நிலையில் ஹாயாக, கபடி வீரராக வாழ்கிறார் விஷ்ணு விஷால்.

இவரது மாமனும், உள்ளூர் ஊராட்சி மன்றத் தலைவருமான கருணாஸ் கடைந்தெடுத்த ஆணாதிக்க சிந்தனை கொண்டவர். இவருடைய இந்த சிந்தனையை தத்தெடுத்துக் கொண்டிருக்கும் விஷ்ணு விஷால், கல்யாணத்துக்குப் பெண் தேடிக் கொண்டிருக்கிறார்.

தனக்கு மனைவியாக வரப் போகும் மனைவிக்கு முடி நீளமாக இருக்க வேண்டும். தன்னைவிட குறைந்த படிப்பே படித்திருக்க வேண்டும் என்கிற ஆசையில் பெண் தேடும் படலத்தை நடத்தி வருகிறார் விஷ்ணு. பெண்தான் அமையவில்லை.

பாலக்காடு பக்கத்தில் வசித்து வரும் நாயகியான கீர்த்தி என்னும் ஐஸ்வர்யா லட்சுமி பி.எஸ்.சி. கணிதம் படித்தவர். குஸ்தி போட்டியில் மாநில அளவில் சாம்பியன் பட்டம் பெற்றவர். இவருடைய சித்தப்பாவான முனீஸ்காந்தும், கருணாஸும் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள்.

இந்த நண்பர்கள் எதிர்பாராத சூழலில் சந்தித்துக் கொள்ள.. விஷ்ணு விஷால் முனீஸ்காந்துக்கு அறிமுகமாகிறார். அவருடைய நிபந்தனைகளைக் கேட்டாலும் குஸ்தி வீராங்கனை என்பதாலேயே இன்னும் திருமணமாகாமல் இருக்கும் தனது அண்ணன் மகளை விஷ்ணுவின் தலையில் கட்ட திட்டம் தீட்டி அதில் வெற்றியும் காண்கிறார் முனீஸ்காந்த்.

முனீஸ்காந்தின் சதி வேலையறியாமல் வாழத் துவங்கும் விஷ்ணு அவ்வப்போது தனது மாமாவான கருணாஸின் மந்திராலோசனையைக் கேட்டு மனைவியிடம் ஆணாதிக்கத்தனமாக நடந்து கொள்கிறார். இந்த நேரத்தில் ஊராட்சி மன்றப் பணத்தில் கை வைத்ததற்காக கருணாஸ் ஜெயிலுக்குப் போகிறார்.

இவர் உள்ளே போன நேரத்தில் விஷ்ணுவின் உள்ளூர் எதிரியான பேக்டரி அதிபர் விஷ்ணுவை கொல்ல ஆட்களை அனுப்ப தனது கணவரை காப்பாற்ற சண்டையில் களம் இறங்குகிறார் குஸ்தி நாயகியான ஐஸ்வர்யா. முடிவில் கணவர் காப்பாற்றப்பட்டாலும் அவருடைய நீளமான ஒட்டு முடியின் தரிசனம் விஷ்ணுவுக்குத் தெரிந்து விடுகிறது.

உண்மை தெரிந்த விஷ்ணு அப்போதைக்கு அமைதியாகிறார். ஆனால் அதன் பின்பு ஊரிலும், வெளியிலும் மனைவிக்கு மட்டுமே தனித்து கிடைக்கும் மரியாதை அவருடைய ஈகோவைத் தூண்டிவிட மனதுக்குள் குமைந்து கொண்டிருக்கிறார்.

இந்த நேரத்தில் சிறையில் இருந்து வெளியில் வரும் மாமன் கருணாஸ் விஷயம் கேள்விப்பட்டு வீட்டுக்கு வந்து சண்டையிட இதில் ஐஸ்வர்யாவிடம் அடி வாங்கி அவமானப்படுகிறார் கருணாஸ்.

தகவல் விஷ்ணுவுக்குத் தெரிய வர.. மனைவியை பாலக்காட்டுக்கே திருப்பியனுப்புகிறார். இடையில் மாமன் கருணாஸ், விஷ்ணுவுக்கே தெரியாமல் ஐஸ்வர்யாவுக்கு டைவர்ஸ் நோட்டீஸும் அனுப்பி வைக்கிறார்.

ஆனாலும் மனைவி முன்னாள் தான் வெறும் பூஜ்யம் என்பதை சொல்லி சொல்லி ஊர்க்காரர்கள் வெறுப்பேற்ற பேசாமல் குஸ்தி மேடையில் மனைவியுடனேயே மோதி ஜெயித்தால் என்ன என்ற கிறுக்குத்தனமான ஐடியாவை உடன் இருக்கும் நபர்கள் ஊதிவிட.. பாலக்காட்டுக்கே போய் இதற்காக மோதி தேதியைக் குறித்து வாங்குகிறார்கள் விஷ்ணுவின் உறவுகள்.

இப்போது பிரிந்திருக்கும் கணவனும், மனைவியும் மோதும் குஸ்தி போட்டி என்ற விளம்பரத்துடன் பரபரப்பாகிறது குஸ்தி களம். குஸ்தி போட்டி நடந்ததா..? இல்லையா..? யார் ஜெயித்தார்கள்…? டைவர்ஸ் கேஸ் என்ன ஆனது..? என்பதுதான் இந்தப் படத்தின் மீதமான திரைக்கதை.

படத்தில் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லஷ்மி இருவரும் போட்டி போட்டி நடித்து கை தூக்கிவிட்டிருக்கிறார்கள்.

அப்பாவியான தோற்றத்தில் உள்ள விஷ்ணு விஷால் அதே மன நிலையையும் பிரதிபலித்திருக்கிறார். கருணாஸ் சொல்லும் ஆணாதிக்க சொல்லாடல்களை அப்படியே நம்பும் அவரது முகபாவனைகள்தான் தியேட்டரில் கை தட்ட வைத்திருக்கிறது. தனது மனைவி தன்னைப் பற்றி உயர்வாக நினைக்க வேண்டும் என்று நினைத்து அவர் செய்யும் சில தில்லாலங்கடி விஷயங்களில் மகளிரையே சிரிக்க வைத்திருக்கிறார் விஷ்ணு. தன் மனைவிக்குக் கிடைக்கும் பெருமையால் தான் அவமானப்படும் உணர்வையும் விஷ்ணு தனது நடிப்பில் உணர்த்தியிருக்கிறார்.

படத்தின் பிற்பாதியில் விஷ்ணுவின் ஆதிக்கம்தான். ஹரீஸ் பெராடியிடம் அவருடைய மனைவியைப் பற்றிக் கேட்டு தான்தான் அவசரப்பட்டு விட்டோமோ என்றெண்ணி வருந்தும் காட்சியிலும் அந்த டோனை தனது நடிப்பிலேயே வரழைத்திருக்கிறார். கிளைமாக்ஸ் சண்டை காட்சியில் தனது கோபம், ஆத்திரம், இயலாமை, மனைவி மீதான பாசம் என்று அனைத்தையும் காட்டி சண்டையிட்டிருக்கிறார். இதுவே சிறப்புதான்.

நாயகன் விஷ்ணுவா.. அல்லது ஐஸ்வர்யா லக்ஷ்மியா என்ற சந்தேகமே வந்துவிட்டது. குஸ்தி வீராங்கனையாக அறிமுகமாகும் காட்சியில் அச்சு அசலாக நிஜ வீராங்கனையை ஜெராக்ஸ் எடுத்ததுபோலவே இருக்கிறார். அந்த ஆக்ரோஷமும், அவர் காட்டும் உடல் மொழியும் மிரள வைக்கிறது.

திருமணமானவுடன் அனைத்தையும் தூக்கிப் போட்டுவிட்டு கணவருக்காக அமைதியாக, அடக்கமான மனைவியாக வலம் வருபவர், கணவரைக் காப்பாற்ற சேலையைத் தூக்கிக் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கும்போது சபாஷ் என்று கை தட்ட வைத்திருக்கிறார். தமிழுக்கு நல்ல ஆக்‌ஷன் ஹீரோயின் கிடைத்துவிட்டார் என்றே சொல்லலாம்.

ஆணாதிக்க மாமனான கருணாஸ் பேசும் பல வசனங்கள் அப்பாவி கணவன்மார்களை தியேட்டரில் கை தட்ட வைத்து வீட்டில் உதை வாங்க வைக்கிறது. அப்படியொரு ஆம்பள திமிரை வசனத்திலும், நடிப்பிலும் காண்பித்திருக்கிறார் கருணாஸ்.

சித்தப்பாவாக தொந்தியுடன் நடித்திருக்கும் முனீஸ்காந்த் ஆயிரம் பொய் சொல்லியும் ஒரு கல்யாணத்தை நடத்துவதில் தவறில்லை என்பதுபோல் கல்யாணத்தை செய்துவைத்துவிட்டு தவிப்பதும், அண்ணன் மகளுக்காகக் கடைசியில் இவர்களிடத்தில் கெஞ்சும்போதும் தனது தனித்துவத்தைக் காட்டியிருக்கிறார்.

மேலும் வக்கீல் நண்பனாக நடித்திருக்கும் காளி வெங்கட்டின் மேக்கப் பாக்ஸ் காமெடியும் அவ்வப்போது அடிக்கும் சிற்சில விட்டுகளும் கை தட்ட வைக்கிறது. கிங்க்ஸ்லீயின் சில காமெடி வசனங்களும் கை தட்டலுக்கு உதவியிருக்கிறது.

ரிச்சர்டு எம்.நாதனின் ஒளிப்பதிவு முதல் காட்சியில் இருந்தே படத்தை கூர்ந்து கவனிக்க வைத்திருக்கிறது. பாலக்காட்டு காட்சிகளில் கேரளத்தின் அழகையும் கொடுத்திருக்கிறது. ஐஸ்வர்யா லட்சுமியின் அழகை பாடல் காட்சிகளில் இன்னும் கூட்டியிருக்கிறார்.

ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். ஆனால் அதைவிட பின்னணி இசை அபாரம். அதிலும் அந்தக் கோவில் சண்டை காட்சியில் ஐஸ்வர்யாவின் ருத்ர தாண்டவத்திற்கு லீட் கொடுக்கும் காட்சியில் அசத்தல் பி.ஜி.எம்.மை கொடுத்து கவர்ந்திழுக்கிறார்.

சண்டைக் காட்சிகளில் அன்பறிவ் சகோதரர்கள் பிரிந்து மேய்ந்திருக்கிறார்கள். குஸ்தி சண்டையைவிடவும் அந்தக் கோவில் சண்டை காட்சிதான் சூப்பர். ஐஸ்வர்யாவுக்கு ஏற்றபடி காட்சிகளை வடிவமைத்து தந்து படத்திற்கு மிகப் பெரிய ஏற்றத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.  

படத் தொகுப்பாளரான ஜி.கே.பிரசன்னாவின் படத் தொகுப்புப் பணியில் இயக்குநரின் பங்களிப்பும் மிகச் சரியாகவே அமைந்திருக்கிறது. அதனால்தான் கச்சிதமான நறுக்கலில் படத்தின் திரைக்கதை சரியாக விறுவிறுப்பு குறையாமல் கடைசிவரையிலும் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

காட்சிக்கு காட்சி காமெடி தெறிக்க, திரையரங்கில் மக்களுக்கு நல்ல எண்டர்டெயின்மெண்டாக அமைந்திருக்கிறது இத்திரைப்படம்.

மிக பிரமாதமான வசனங்களை எழுதியிருக்கிறார் இயக்குநர். காமெடி காட்சி, சீரியஸ் காட்சி, சென்டிமெண்ட் காட்சிகள் என்று அனைத்திலும் தற்போதைய காலக்கட்டத்திற்கேற்ப ஆண், பெண்களை ஒட்டு மொத்தமாய் உரித்திருக்கிறார் இயக்குநர்.

கருணாஸ் மனைவிகளைப் பற்றிப் பேசும் காட்சியில் மனைவிகளே சிரித்துவிடுவார்கள்.  அதேபோல் காளி வெங்கட் தன் மனைவி பற்றிப் பேசிவிட்டு நொடியில் மாறும் காட்சியில் ஆண்களும் சிரிக்கத்தான் வேண்டியிருக்கிறது.

ஆண்களைப் பற்றி பெண்களும், பெண்களைப் பற்றி ஆண்களும் மாறி, மாறிப் பேசும் அந்த நகைச்சுவைக் காட்சியில் மொத்தக் குடும்பமும் ஜோராக கை தட்டி ரசிக்கின்றனர். இந்தக் காட்சி இனிமேல் சமூக வலைத்தளங்களில் வைரலானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

சவரி முடியைத் துவைக்கும் காட்சியிலும் மொத்தத் தியேட்டரும் அதிர்கிறது. அந்தக் காட்சியில் தன்னுடைய வலியை வெளிக்காட்ட முடியாமல் தவித்து ஐஸ்வர்யா தன் நடிப்பையும் தாண்டி ஒரு சோக உணர்வை நமக்குள் கடத்தியிருக்கிறார்.

“மத்த நாட்டுல எல்லாம் போட்டியில ஜெயிக்க எதிரிகளோட சண்டை போடணும். ஆனால் இந்தியால மட்டும்தான் முதல்ல நம்ம குடும்பத்தோட சண்டை போடணும்” போன்ற வசனங்கள் இந்திய விளையாட்டு வீராங்கனைகளின் யதார்த்த வாழ்க்கையை சொல்கிறது.

படத்தின் இடைவேளைக்குப் பின்னான காட்சிகளிலும் சிற்சில இடங்களிலும் இயக்குநர் தனக்குத் தோதாக திரைக்கதையை நகர்த்தியிருப்பது தெரிகிறது. உதாரணமாக  கருணாஸ் ஜெயிலுக்குப் போயிருக்கும் நேரத்தில் இங்கே ஐஸ்வர்யா பற்றிய உண்மை தெரிய வருவது.. ஐஸ்வர்யாவின் மெடல்கள் விஷ்ணுவின் வீட்டில் இருப்பது.. விஷ்ணுவுக்குத் தெரியாமல் டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்புவது.. கோச், விஷ்ணு-ஐஸ்வர்யா சந்திப்பை நடத்தவிடாமல் செய்வது.. கிளைமாக்ஸில் ஐஸ்வர்யா பற்றிய உண்மையை வெளியிடாமல் மறைப்பது.. என்று சில காட்சிகளை வழக்கான சினிமா பார்மெட்டில் கொடுத்திருந்தாலும் ரசிப்பதுபோலத்தான் வைத்திருக்கிறார் இயக்குநர்.

படத்தின் முதல் பாதியில் வெறுமனே சிரிக்க மட்டுமே வைத்து, இரண்டாம் பாதியில் சிரிப்புடன் சீரியஸாகவும் சில விஷயங்களை பேசியுள்ளது படம். தற்போதைய குடும்ப வாழ்க்கையில் பெண்ணின் முக்கியத்துவத்தை ஆண்களே ஏற்றுக் கொள்ளும் வகையில் இத்திரைப்படம் பேசியிருப்பதுதான் இந்தப் படத்தின் ஸ்பெஷலாட்டி..!

சொல்வதற்கு சிற்சில  குறைகள் இருந்தாலும், இப்போதைய காலக்கட்டத்திற்குத் தேவையான விஷயத்தை, ஏற்கத் தகுந்தவகையில் சொல்லி, அனைத்து வயதினரும் ரசிக்கும் வகையில் உருவாகியிருக்கும் படம் என்பதால் இந்தப் படத்தை வாழ்த்தி வரவேற்போம்.

RATING : 4 / 5

The post கட்டா குஸ்தி – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
பவுடர் – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/powder-movie-review/ Tue, 29 Nov 2022 16:13:49 +0000 https://touringtalkies.co/?p=27803 இந்தப் படத்தில் நடிகை வித்யா பிரதீப் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். தமிழ்ச் சினிமாவின் முன்னணி பத்திரிகை தொடர்பாளரான நிகில் முருகன் இந்தப் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார். மேலும், படத்தின் இயக்குநரான விஜய்ஸ்ரீஜியும் ஒரு முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் வையாபுரி, ஆதவன், அகல்யா வெங்கடேசன், சாந்தினி தேவ், மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, சிலிம்ஸன் சிவா, விக்கி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஒரே இரவில் நடக்கும் கதை என்பதால் 6 பல்வேறு கதைகள் கொண்ட திரைக்கதைகளை […]

The post பவுடர் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
இந்தப் படத்தில் நடிகை வித்யா பிரதீப் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். தமிழ்ச் சினிமாவின் முன்னணி பத்திரிகை தொடர்பாளரான நிகில் முருகன் இந்தப் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார். மேலும், படத்தின் இயக்குநரான விஜய்ஸ்ரீஜியும் ஒரு முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் வையாபுரி, ஆதவன், அகல்யா வெங்கடேசன், சாந்தினி தேவ், மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, சிலிம்ஸன் சிவா, விக்கி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ஒரே இரவில் நடக்கும் கதை என்பதால் 6 பல்வேறு கதைகள் கொண்ட திரைக்கதைகளை ஒன்றிணைத்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.

சென்னை சிட்டி போலீஸ் கமிஷனரின் வீட்டில் ஒரு உறுப்பினர் காணாமல் போக.. சிட்டி முழுவதும் போலீஸ் அலர்ட்டாகிறது. இந்த நேரத்தில் தொகுதிக்கு நல்லது செய்யாத ஒரு எம்.எல்.ஏ.வைக் கொல்கிறது ஒரு இளைஞர் கூட்டம். தன் மகளை ஏமாற்றி வயிற்றில் பிள்ளையைக் கொடுத்துவிட்டு கைவிட்ட பெரிய இடத்து இளைஞனை அவசரப்பட்டு கொலை செய்கிறார் வையாபுரி… நாளைய தினம் திருமணமாகிச் செல்லவிருக்கும் டாக்டர் வித்யாவின் நிர்வாண வீடியோவை வெளியிடுவதாகச் சொல்லி அவரை மிரட்டுகிறான் ஒரு இளைஞன்.. கொரோனாவால் தொழில் முடங்கிப் போனதால் வருமானம் இல்லாமல் தவிக்கும் ஒப்பனைக் கலைஞன் தன் மகனின் ஸ்கூல் பீஸுக்குப் பணம் இல்லாமல் தவிக்கிறான். ஒரு அபார்ட்மெண்ட்டில் திருட வருகிறார்கள் திருடர்களான ஆதவனும், அவரது சிஷ்யனும்… அன்றைய காலையில் தனக்குப் பிறந்த குழந்தையைக்கூட பார்க்க போக முடியாமல் நைட் டூட்டி என்று மாட்டிக் கொள்ளும் இன்ஸ்பெக்டர் நிகில் முருகன்.. என்று இவர்களைச் சுற்றி ஓர் இரவில் நடக்கும் கதைதான் இந்தப் பவுடர்’ திரைப்படம்.

இந்தச் சின்னச் சின்னக் கதைகளை ஒன்றோடு ஒன்றாக இணைத்து கிளைமாக்ஸில் டிவிஸ்ட்டாக ஒரு இணைப்பினைக் கொடுத்து ‘அட’ சொல்ல வைத்திருக்கிறார் இயக்குநர் விஜய்ஸ்ரீஜி.

இன்ஸ்பெக்டர் கேரக்டரில் இப்போது இருக்கும் அதே தோற்றத்துடன் அறிமுகமாகியிருக்கிறார் புதுமுக நடிகரான நிகில் முருகன். இந்தப் படத்திற்காக ‘ராகவன் NM’ என்ற  ‘வேட்டையாடு விளையாடு’ படத்தின் கமல் கதாப்பாத்திரத்தின் பெயரை தத்தெடுத்துக் கொண்டுள்ளார் நிகில் முருகன். அந்தப் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்திற்குப் பொருந்தும் அளவுக்கான உடற்கட்டு நிகிலிடம் இல்லையென்றாலும், தனது குரல் வளத்தை மட்டுமே முன் வைத்து நடித்துள்ளார்.

விசாரணை கைதிகளிடம் தனது மிரட்டல் குரலில்  விசாரணை நடத்துவதும்.. மேலதிகாரிகளிடத்தில் கம்பும் உடையாமல், அடியும் விழும்படியாக பேசும்விதமும் ஒரு வித்தியாசமான நடிப்புப் பாவனையை உருவாக்கியிருக்கிறார் நிகில் முருகன். இதே நிகிலை வைத்துதான் அடுத்த பாகத்திற்கான லீடையும் கிளைமாக்ஸில் கொடுத்துள்னர். நிகில் தொடர்ந்து மாறுபட்ட வேடங்களில் நடித்து மேலும், தன் திறமையைக் காண்பிக்க வாழ்த்துகிறோம்.

‘பரட்டை’ என்ற கதாப்பாத்திரத்தில் பாவப்பட்ட மனுஷனாக தோன்றி தனது கேரக்டருக்குரிய நடிப்பை மிகச் சிறப்பாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் விஜய்ஸ்ரீஜி. இவருடைய மனைவி இவரை வார்த்தைகளால் புரட்டியெடுக்கும் தருணத்தில் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாத தன்மையுடன் எழுந்து வருவதும், பின்பு பணம் கிடைத்ததும் விடியற்காலையில் மனைவிக்கு போன் செய்து துணிக்கடைக்கு அழைப்பதுமாய்(பலமான கை தட்டல் கிடைத்தது இந்தக் காட்சிக்கு மட்டும்தான்) இவரது கேரக்டர் ஸ்கெட்ச் மட்டும் மிகவும் ரசனையானது. இவரது அழுத்தமான நடிப்புக்கு இவரது குரலும் ஒத்துழைத்துள்ளது.

இதுவரையிலும் வெறும் காமெடி நடிகராக மட்டுமே தன்னைக் காண்பித்திருந்த வையாபுரி, இந்தப் படத்தில் குணச்சித்திர நடிகராக புரமோஷன் வாங்கி அதிலும் பாஸ் செய்திருக்கிறார். தன் மகளுக்காக ஒரு கொலையை செய்துவிட்டு தன்னிரக்கத்தில் அவர் புலம்புவதும், அந்தக் கொலையை மறைக்கத் திடமாக அவர் செய்யும் டிரிக்கும், காவலர்களை சமாளிக்கும்விதமும் இந்தக் கேரக்டருக்கு வையாபுரி பெரும் நியாயம் செய்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். இவருடைய மகளாக நடித்திருப்பவரும் தேர்ந்த நடிப்பைக் காண்பித்திருக்கிறார்.

படத்தில் ஒரு முக்கிய கேரக்டரை ஏற்று நடித்திருக்கும் வித்யா பிரதீப் வழக்கம்போல தன் கண்களாலேயே பேசியிருக்கிறார். காதலனாக நடித்தவனை வீட்டுக்குள் சமாளிக்கும் அந்தக் காட்சிகளில் ஐயோ பாவம்  என்ற உணர்வையும், அவர் செய்யும் கொலையையும் சரிதாம்மா என்றே நம்மையும் நினைக்க வைத்துவிட்டார்.

சாந்தினி தேவ் சம்பந்தப்பட்ட காட்சிகள் சற்று அதீதமாக போய்விட்டன. இவர்களை வைத்து ஆதவனும், அவரது சிஷ்யனும் பேசும் இரட்டை அர்த்த ஆபாச வசனங்கள் படத்தின் தன்மையைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கிவிட்டன.

அதேபோல் படம் முழுவதையும் சீரியஸாகக் கொண்டு சென்று ஒரு நல்ல சஸ்பென்ஸ், திரில்லர் படமாக இருந்திருக்க வேண்டிய இந்தப் படம், இடையிடையே மொட்டை ராஜேந்திரன், சிங்கம் புலி, கான்ஸ்டபிள்களின் மொக்கை காமெடி என்று தனி டிராக்கில் சென்று இது என்ன மாதிரியான படம் என்கிற குழப்பத்தை உண்டு செய்துவிட்டது.

பல்வேறு இடங்களில் கேமிரா அடுத்தடுத்துப் பயணப்பட வேண்டியிருந்தாலும் ஒளிப்பதிவில் ஒரு துளிகூட குறையாமல் பார்த்துக் கொண்டுள்ளார் ஒளிப்பதிவாளர். வாழ்த்துகள் ஸார். இசையமைப்பாளர் லியாண்டர் லீ மார்டியின் இசையில் பின்னணி இசைதான் சிறப்பு. மேலும் ‘சாயம் போன வெண்ணிலவே’ பாடல் மெலடியாக கேட்க வைக்கிறது.

‘சூது கவ்வும்’ படத்தில் வரும் ‘காசு பணம் துட்டு மணி’ பாடல் பாணியில், படத்தின் முடிவில் வரும் ‘நோ சூடு நோ சொரணை’ பாடல் தனி ஆவர்த்தனமாக ஈர்த்து ரசிகர்களை கிளைமாக்ஸில் ஆசுவாசப்படுத்தி அனுப்பி வைக்கிறது. ஆனால், இதுவே படத்துக்கு மிகப் பெரிய பேக் டிராப்பாகவும் ஆகிவிட்டது.

படத்தின் ஒரு காட்சியில் மனிதக் கறி அடங்கிய பெட்டியில் HUMAN MEAT’ என்றே எழுதப்பட்டிருப்பது நமக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் தருகிறது. இந்த அளவுக்கு வெளிப்படையாகவா மனிதக் கறியை விற்பனை செய்வார்கள்..?

தனக்கு வாக்களித்த மக்களுக்கு நல்லது செய்யாத எம்.எல்.ஏ.வை கொலை செய்தாலும் தப்பில்லை என்பதாகக் காட்டியிருப்பதும், காதல் என்ற பெயரில் பெண்களை ஏமாற்றும் ஆண்களை கொலை செய்தாலும் தகும் என்று சொல்லியிருப்பதும் ஏற்க முடியாதது. ஆனால், இது சினிமாவாச்சே என்று நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.

ஆனால் அதே சமயம் போலீஸ் உயரதிகாரிகள் தங்களது கீழே வேலை செய்யும் அதிகாரிகளை கேவலப்படுத்தும் நோக்கில் அடிமையாய் நடத்துவதை நிறுத்த வேண்டும் என்று சொல்லியிருப்பதும், மக்களைக் காப்பாற்றுவதுதான் காவல் துறையின் வேலை. இந்த வேலைக்கு வந்துவிட்டு வேலையின் மீது அக்கறையில்லாமல் இருக்கக் கூடாது என்று இன்ஸ்பெக்டர் நிகில் முருகன், ஏட்டு சிங்கம் புலிக்கு கிளாஸ் எடுப்பதெல்லாம் பாராட்டுக்குரியது.  

படத்தின் இறுதியில், வித்யா ப்ரதீப்பின் கதையோடு சம்பந்தப்படுத்தி படத்தை முடித்தவிதத்தில் இது நல்லதொரு சஸ்பென்ஸ், த்ரில்லர் படத்திற்கான க்ளைமேக்ஸ்தான் என்பதில் சந்தேகமில்லை.

RATING : 3 / 5

The post பவுடர் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
ஏஜென்ட் கண்ணாயிரம் – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/agent-kannayieram-movie-review/ Fri, 25 Nov 2022 13:06:49 +0000 https://touringtalkies.co/?p=27577 Labyrinth film productions நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் மனோஜ் பீதா இயக்கத்தில், நடிகர் சந்தானத்தின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ள படம்தான் இந்த ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’. தெலுங்குலகின் முன்னணி இயக்குநரான அனுதீப் இயக்கத்தில், நடிகர் நவீன் பொலிஷெட்டி நடிப்பில் வெளியாகி பிளாக் பாஸ்டர் வெற்றியைப் பெற்ற ‘ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’ படத்தின் தமிழ் ரீமேக்குதான் இந்த ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படம். இறந்தவர்களின் உடலை காசியில் எரித்தால் அவர்களுக்கு அடுத்த பிறவி இருக்காது என்ற நம்பிக்கை இந்தியாவில் இந்து […]

The post ஏஜென்ட் கண்ணாயிரம் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
Labyrinth film productions நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் மனோஜ் பீதா இயக்கத்தில், நடிகர் சந்தானத்தின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ள படம்தான் இந்த ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’.

தெலுங்குலகின் முன்னணி இயக்குநரான அனுதீப் இயக்கத்தில், நடிகர் நவீன் பொலிஷெட்டி நடிப்பில் வெளியாகி பிளாக் பாஸ்டர் வெற்றியைப் பெற்ற ‘ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’ படத்தின் தமிழ் ரீமேக்குதான் இந்த ஏஜென்ட் கண்ணாயிரம்’ படம்.

இறந்தவர்களின் உடலை காசியில் எரித்தால் அவர்களுக்கு அடுத்த பிறவி இருக்காது என்ற நம்பிக்கை இந்தியாவில் இந்து மதத்தில் பரவலாக உள்ளது. இதன் அடிப்படையில் இறந்து போனவர்களின் சடலங்களை வாங்கி காசிக்குக் கொண்டு சென்று எரிக்கிறோம் என்று பொய் சொல்லி ஏமாற்றும் ஒரு கும்பல் அந்தப் பிணங்களின் கை ரேகைகளை வைத்து மக்களை ஏமாற்றி எப்படி குற்றங்கள் செய்கிறார்கள் என்பதையும் அதனை தனியார் டிடெக்டிவ் ஏஜெண்ட்டான ஹீரோ எப்படி கண்டு பிடிக்கிறார் என்பதையும் சொல்வதுதான் இந்த ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படத்தின் கதை.

கோவை அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் வசிக்கும் ஜமீன்தாரான குரு சோமசுந்தரத்திற்கும், இந்துமதிக்கும் பிறந்தவர் சந்தானம்.  ஆனால் குடும்பச் சூழல் காரணமாக இந்துமதியை ஜமீன்தார் திருமணம் செய்து கொள்ளாமல் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறார்.

ஆனாலும் இந்துமதியையும், மகனையும் தன் வீட்டிலேயே வேலைக்காரி என்று பொய் சொல்லி தங்க வைத்திருக்கிறார் ஜமீன்தார். அந்த வீட்டில் இருப்பதினால் சந்தானமும், அவரது தாயும் ஜமீன்தாரின் மனைவியின் மூலமாக பல கஷ்டங்களை சந்தித்து வருகிறார்கள். ஜமீந்தாரின் முதல் மனைவியும், அவரது மகன்களும் இவர்களை அவமானப்படுத்தி கொண்டே இருக்கிறார்கள்.

சிறு வயதில் இருந்தே, துப்பறிவதில் ஆர்வம் காட்டி வரும் சந்தானம், இளம் வாலிபனான பின்பு ஒரு துப்பறியும் ஏஜென்ஸியைத் துவக்கி நடத்தி வருகிறார். இந்த நேரத்தில் சந்தானத்திற்கு அதிர்ச்சியளிக்கும் தகவலாக அவருடைய அம்மாவின் மரண செய்தி வந்து சேர்கிறது.

கோயம்புத்தூரில் உள்ள தனது சொந்த கிராமத்திற்கு புறப்படுகிறார் சந்தானம். ஊருக்குப் போவதற்குக்கூட கையில் காசு இல்லாமல், லாரியில் லிப்ட்டு கேட்டு ஒரு வழியாக ஊர் வந்து சேர்கிறார் சந்தானம்.

ஆனால், அதற்குள்ளாக அவரது தாயின் இறுதிச் சடங்கு நடைபெற்று முடிந்துவிட்டது. இதனால், கடைசியாக ஒரு முறை தாயைப் பார்க்க  முடியவில்லையே என்று பெரிதும் வருத்தப்படுகிறார் சந்தானம். 

இந்த நிலையில் சொத்துக்களை பங்கு பிரிப்பதற்காக அதே ஊரில் சில நாட்கள் இருக்க வேண்டிய கட்டாயம் சந்தானத்திற்கு ஏற்படுகிறது. அந்த நேரத்தில் அந்த ஊரில் சில மர்ம மரணங்கள் நிகழ்கின்றன. தொடர்ச்சியாக ரயில் தண்டவாளத்தின் ஓரமாக அனாதை பிணங்கள் கிடக்கின்றன. நடந்த கொலையை தற்கொலை என்று போலீஸ் சொல்கிறது.

நாயகி ரியா சுமன் ஆவணப் படம் எடுக்க சந்தானத்தின் கிராமத்திற்கு வருகிறார், அப்போது சந்தானத்துடன் நட்பு ஏற்பட, அனாதை பிணங்களின் பின்னணியை கண்டறிய சந்தானத்திற்கு உதவியாக இருக்கிறார். நடக்கும் இறப்புகளின் பின்னணி என்ன..? நடப்பவையெல்லாம், கொலைகளா..? தற்கொலைகளா..? என்று தனது டிடெக்டிவ் புத்தியைக் காட்டி கண்டறிய முயல்கிறார் சந்தானம். 

இதனால் போலீஸுக்கும் இவருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இதன் தொடர்ச்சியால் ஒரு கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் சந்தானம் பிடிக்கப்பட்டு லாக்கப்பில் வைக்கப்படுகிறார். அப்போது அந்த லாக்கப்பில் இருந்த முனீஸ்காந்தின் சோகக் கதையைக் கேட்டு சந்தானம் ஏஜெண்ட் கண்ணாயிரமாக’ மாற கதை சூடு பிடிக்கிறது.

சந்தானம் அவருக்கு உதவும் முயற்சியில் இறங்க. அதனால் திடுக் திருப்பங்கள் ஏற்படுகிறது. முனீஸ்காந்த் சொல்லும் கதை என்ன..? இறுதியில் சந்தானம் டிடெக்டிவாக தன் முயற்சியில் வெற்றி பெற்றாரா..? இல்லையா..? என்பதுதான் இந்த ஏஜென்ட் கண்ணாயிரம்’ படத்தின் திரைக்கதை.

ஒரு மெடிக்கல் மாஃபியா கும்பலைக் கண்டறியும் துப்பறிவாளனாக சந்தானம் நடித்திருக்கிறார். சந்தானம் தன்னுடைய வழக்கமான பார்முலாவை விட்டுவிட்டு, சற்று சீரிஸான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தாயை இழந்து வாடும் மகனாக, சமுதாயத்தில் அந்தஸ்து பெற துடிக்கும் இளைஞனாக சந்தானம் வரும் எமோஷனல் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது.

தாய்க்கு இறுதி சடங்குகள் செய்ய முடியாத குற்ற உணர்ச்சியில் தூக்கமின்றி வாடும் காட்சிகள், நண்பர்களுடன் ஜாலியாக இருக்கும் காட்சிகள், டிடெக்டிவாக சிலவற்றை சந்தானம் கண்டு பிடிக்கும் காட்சிகள், ஆக்ஷன் காட்சிகள் என்று தனக்கான நடிப்பில் சிறிதளவு நியாயம் செய்திருக்கிறார் சந்தானம். இருந்தாலும் சில இடங்களில் தன்னுடைய பேவரிட்டான கவுண்ட்டர் டயலாக்குகளை வீசியிருக்கிறார். அப்போதுதான் தியேட்டரில் கொஞ்சமேனும் சிரிப்பலை எழுகிறது.

சந்தானத்தின் அம்மாவாக நடித்துள்ள நடிகை இந்துமதி தான் யார் என்பதை சொல்ல முடியாமல் தவிக்கும் கட்டத்திலும், அப்பாவாக நடித்துள்ள குரு சோமசுந்தரம் இந்துமதியை தன் மனைவி என்று சொல்ல முடியாத பரிதவிப்பிலும் உண்மையாக நடித்துள்ளனர்.

கதாநாயகியான ரியா சுமன் துணை நடிகை போலத்தான் இருக்கிறார். பார்த்தவுடன் கவர்ந்திழுக்கும் அழகில்லாமல் ஏனோ, தானோவென்ற அலங்காரத்தில் இவரை நடிக்க வைத்திருக்கிறார்கள். மேலும் முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, ராமதாஸ், ஆதிரா உள்ளிட்டோரின் நடிப்பும் ஓகேதான். இதில் முனிஷ்காந்த் லாக்கப்பில் அழுது கொண்டே தனது மகளைக் காணவில்லை என்று கதறும் காட்சியில் இயக்குநரைக் காப்பாற்றியிருக்கிறார்.

தேனி ஈஸ்வர் மற்றும் சரவணனின் ஒளிப்பதிவில் குறையில்லைதான்ய. ஆனால் சில காட்சிகளில் ஒளிப்பதிவு செல்வதும், வருவதுமாக இருப்பதும், அதிகப்படியான காட்சிகளை இருட்டிலேயே எடுத்திருப்பதும் படத்தின் மிகப் பெரிய பேக் டிராப் என்றே சொல்ல வேண்டும்.

அஜய்யின் கத்திரிக்கோல் இன்னும் துல்லியமாக காட்சிகளை செதுக்கி கதையை புரியும் அளவுக்கு செய்திருக்கலாம். செய்யாதலால் படம் முடிந்து வரும்போது படத்தின் கதை என்று ரசிகர்களே கேட்கிறார்கள். யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையும் தோராயமாக போட்டதுபோல இருக்கிறது.

இயக்குநர் மனோஜ் பீதாவின் இயக்கம் நமக்குப் பெரும் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது. திரைக்கதையில் விறுவிறுப்புக்கும் பஞ்சம். சுவாரஸ்யமும் இல்லை. அடுத்த நொடி என்ன நடக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த சஸ்பென்ஸ், திரில்லர் படமாக இந்த ஏஜென்ட் கண்ணாயிரம்’ அமையவில்லை.

நடிகர்கள் தேர்வும், படத்தின் கதையோட்டமும் சரியாக இருந்தாலும் அதையும் தாண்டிய எதோ ஒன்று படத்தில் இல்லாததால் படத்தோடு நம்மால் ஒன்றிணைய முடியவில்லை. டிடெக்டிவ் படங்களுக்கு உரிய விறுவிறுப்பும், சுவாரசியமும் படத்தில் இல்லை. படத்தின் காட்சி ஓட்டத்தையும், விறுவிறுப்பையும் கூட்டியிருந்தால் இயக்குநருக்கு பாராட்டுக்கள் கிடைத்திருக்கும்.

பொதுவாக சந்தானம் படம் என்றாலே காமெடிக்கு பஞ்சம் இருக்காது. ஆனால் இதில் அதுவே இல்லை என்பதால் அவரது ரசிகர்களுக்குப் பெருத்த ஏமாற்றத்தைத் தந்துள்ளது. படத்தின் முதல் பாதியின் ஆமை வேகம் ரசிகர்களின் பொறுமையை சோதித்துவிட்டது என்றாலும் படம் இடைவேளையில் இருந்துதான் வேகம் பிடிக்கிறது. ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படிப்படியாக  இந்தக் குற்றங்களை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது இரண்டாம் பாதியில் விறுவிறுப்பாக சொல்லப்பட்டிருந்தாலும் கிளைமாக்ஸ் காட்சிகள் சற்றும் தெளிவில்லாமல் குழப்பமாய் முடிந்திருப்பது படத்தை மொத்தமாய் கவிழ்த்துவிட்டது.

ஒரு நல்ல படத்தை கையில் வைத்துக் கொண்டு, தமிழில் அதற்கான வெற்றி வாய்ப்பை மிக எளிதாகத் தவறவிட்டுவிட்டார்கள் என்றே தோன்றுகிறது.

RATING : 2 / 5

The post ஏஜென்ட் கண்ணாயிரம் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
காரி – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/kaari-movie-review/ Fri, 25 Nov 2022 12:05:00 +0000 https://touringtalkies.co/?p=27574 ‘சர்தார்’ படத்தைத் தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான எஸ்.லஷ்மண்குமார் தனது 5-வது படைப்பாக இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.  இந்தப் படத்தில் நாயகனாக சசிகுமாரும், கதாநாயகியாக மலையாள நடிகையான பார்வதி அருணும் நடித்துள்ளார். வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் ஜேடி சக்ரவர்த்தி நடித்துள்ளார். இவர்கள் தவிர முக்கிய வேடங்களில் இயக்குநர் பாலாஜி சக்திவேல், ‘ஆடுகளம்’ நரேன், ரெடின் கிங்ஸ்லி, அம்மு அபிராமி, நாகி நீடு, பிரேம், ‘பிக்பாஸ்’ புகழ் சம்யுக்தா, ராம்குமார், தேனி முருகன் மற்றும் பலர் […]

The post காரி – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
சர்தார்’ படத்தைத் தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான எஸ்.லஷ்மண்குமார் தனது 5-வது படைப்பாக இந்தப் படத்தை தயாரித்துள்ளார். 

இந்தப் படத்தில் நாயகனாக சசிகுமாரும், கதாநாயகியாக மலையாள நடிகையான பார்வதி அருணும் நடித்துள்ளார். வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் ஜேடி சக்ரவர்த்தி நடித்துள்ளார். இவர்கள் தவிர முக்கிய வேடங்களில் இயக்குநர் பாலாஜி சக்திவேல், ‘ஆடுகளம்’ நரேன், ரெடின் கிங்ஸ்லி, அம்மு அபிராமி, நாகி நீடு, பிரேம், ‘பிக்பாஸ்’ புகழ் சம்யுக்தா, ராம்குமார், தேனி முருகன் மற்றும் பலர் நடித்துள்ளார்.

இசை – டி.இமான், ஒளிப்பதிவு – கணேஷ் சந்திரா, படத் தொகுப்பு – சிவ நந்தீஸ்வரன், கலை இயக்கம் – மிலன், சண்டை இயக்கம் – அன்பறிவு, நிர்வாகத் தயாரிப்பு – கிருபாகரன் ராமசாமி, தயாரிப்பு மேற்பார்வை – A.பால் பாண்டியன், பத்திரிகை தொடர்பு – A. ஜான், எழுத்து, இயக்கம் – ஹேமந்த்.

நம்பிக்கைதான் வாழ்க்கை. உண்மையான நம்பிக்கையுடன் செயல்பட்டால் அது நிச்சயம் நடக்கும் என்கிறது இந்தப் படம். தனது கிராமத்தைக் காப்பாற்ற வேண்டி சென்னையிலிருந்து தன் சொந்த ஊருக்கு வரும் நாயகன் அதை செய்து முடித்தானா… இல்லையா என்பதுதான் இந்தப் படத்தின் கதைக் கரு.

ராமநாதபுரம் அருகேயிருக்கும் காரியூர் மற்றும் சிவனேந்தல் என்ற இரண்டு கிராமங்களுக்கும் இடையே பொதுவான கோயிலாக கருப்பன் கோயில் இருக்கிறது. பல்லாண்டு காலமாக மோதல் காரணமாக சாமி கும்பிடாமல் இருக்கும் இந்தக் கோவிலை இந்த வருடம் திருவிழா நடத்த ஏற்பாடுகள் நடக்கிறது.

ஆனால், இந்தக் கோயில் நிர்வாகத்தை யார் நடத்தி, திருவிழாவை பொறுப்பேற்று நடத்துவது யார் என்ற மோதல் இரண்டு கிராமத்தினருக்கும் இடையில் மீண்டும் மோதல் வெடிக்கிறது. கடைசியில் இரு தரப்பினருக்கும் பொதுவாக 18 வகையான ஜல்லிக்கட்டு மாடுகளை வைத்து ஜல்லிக்கட்டு நடத்தி அதில் எந்த ஊர் ஜெயிக்கிறதோ அவர்களை கருப்பன் கோவில் நிர்வாகத்தைக் கையில் எடு்த்துக் கொள்ளலாம் என்று முடிவாகிறது.

போட்டிக்கான களம் சூடு பிடிக்கத் துவங்குகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டு காளைகளை அடக்க, அதே காரியூரை பூர்விகமாக கொண்டவரான வெள்ளைச்சாமி சேர்வையைத் தேடி சென்னைக்கு வருகிறார்கள் ஊர்ப் பெரியவர்களான நாகி நீடுவும், வெள்ளைச்சாமி சேர்வையின் மைத்துனரும்.

சென்னையில் ஒரு சமூகப் போராளியாக, ஜீவகாருண்ய சங்கத்தின் முக்கியத் தளகர்த்தராகத் திகழும் ஆடுகளம் நரேனைத் தேடுகிறார்கள். இவர்கள் வந்த நேரம் நரேனின் மகனான சேது என்ற சசிகுமாருக்கும், அவருக்கும் இடையில் பிரச்சினை எழுந்து, தாங்க முடியாத மன வலியால் உயிரை விட்டுவிடுகிறார் நரேன். தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சினைகளினால் சசிகுமார் தனது சொந்த ஊருக்கு வருகிறார்.

இங்கே வந்து பார்த்தால் ஜல்லிக்கட்டில் ஜெயிக்க வேண்டும்.. கருப்பன் கோவில் திருவிழாவை நடத்த வேண்டும். மாநில அரசு அந்த ஊரை குப்பைக் கூளமாக்க நினைத்திருக்கும் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று பல்வேறு வேலைகள் நாயகனுக்காக வரிசையாகக் காத்திருக்கின்றன.

இறுதியில் கோயில் நிர்வாகத்தை யார் கைப்பற்றியது..? சேது ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டு காளையை அடக்கினாரா..? என்ற கேள்விகளுக்கு பதில் சொல்வதுதான் இந்தக் ‘காரி’ படம்.

சசிகுமாரின் உடன் பிறந்த திறமையான மதுரைக்கார தமிழும், அந்த எளிமையான நடிப்பும் இந்தப் படத்திற்குப் போதுமானதாக இருந்தாலும், நடிப்புக்குப் போதாமையாகத்தான் இருக்கிறது.

சமூகப் போராளியான நரேனின் ஆர்ப்பாட்ட அட்டகாசத்தைத் தாங்க முடியாமல் தவிக்கும் மகனாக பொங்கியெழுகிறார். நண்பனுக்காக உதவி செய்வது முக்கியமா… அல்லது முதலாளிக்கு விசுவாசமாக இருப்பது முக்கியமா என்று அப்பாவிடம் வாதிடுகிறார். நாயகியைப் பார்த்தவுடன் லவ்வாகி காதலை அரும்பாகி, மொட்டாகி, பூவாகி, துளிர்விட வைக்கிறார்.

பக்கத்து ஊர்க்காரர்களையும், அரசையும் வித்தியாசமான முறையில் ஏமாற்றி அந்தத் திட்டங்களைத் தடுத்து நிறுத்தி ஜல்லிக்கட்டிலும் ஜெயித்துக் காட்டுகிறார். இப்படி ஒரு ஹீரோ என்னென்ன செய்வாரோ அனைத்தையும் செய்துவிட்டார் சசிகுமார். ஆனால் நடிப்பென்று பார்த்தால் வழமையானதுதான். வேறொன்றும் சொல்வதற்கில்லை.

படத்திலேயே நடித்திருக்கிறார்கள் என்று வெளிப்படையாகப் பாராட்ட வேண்டுமென்றால் அது நாயகி, நாயகியின் அப்பாவாக நடித்திருக்கும் பாலாஜி சக்திவேல் மற்றும் ஆடுகளம் நரேன் மூவரின் நடிப்புதான்..! சிம்ப்ளி சூப்பர்ப்..!

மகளின் கல்யாணத்திற்காக மாட்டை விற்கப் போகுமிடத்தில் பாலாஜி சக்திவேல் காட்டும் நடிப்பு அசர வைக்கிறது. அவருடைய உடல் மொழியே பேசியிருக்கிறது. விற்றுவிட்டு வீட்டுக்கு வந்து மகளை சமாதானம் செய்ய முடியாமல் அவர் தவிக்கும்  தவிப்பு இன்னும் ஒரு படி மேலே கொண்டு போயுள்ளது அவரது கேரக்டர் ஸ்கெட்ச்சை.!

ஆடுகளம் நரேன் சுற்றுச் சூழல் போராளியாக.. சமூகப் போராளியாக தானே முன்னின்று போராடும் காட்சிகளில் தனித் திறமையைக் காட்டியிருக்கிறார். ஆனால் அவரது மேக்கப்புதான் உறுத்தலாக இருக்கிறது. அதேபோல் மகன் ரேஸ் பந்தயத்தில் தோல்வியடைந்த பின்பு அவர் காட்டும் ஆக்ரோஷம் அசத்தல்..!

நாயகியோ அறிமுகப் படம் என்பதால் அடக்கி வாசிக்காமல் எரிமலையாய் வெடித்திருக்கிறார். சின்னச் சின்ன எக்ஸ்பிரஷன்களைக் காட்டி ரசிகர்களைக் குளிர வைத்த கையோடு மாடு விற்பனையானது தெரிந்து கதறி, அழுது, கூப்பாடு போடும் காட்சியில் தனது நடிப்புத் திறனையும் வெளிக்காட்டியிருக்கிறார். நல்வரவுதான்..!

‘காரி’ என்ற அந்தக் காளையைக் காண்பித்திருக்கும்விதமே சூப்பர். அம்மு அபிராமி, ரெடின் கிங்ஸ்லி இருவரும் ஏதோ ஒப்புக்கு சப்பாணி போல நடித்துள்ளனர். வில்லனான ஜே.டி.சக்கரவர்த்தி தனது வில்லனத்தனத்தை மொத்தமாய் காண்பித்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவில் கிளைமாக்ஸ் ஜல்லிக்கட்டு காட்சிகள் மிக அழகாய் படமாகியிருக்கிறது. புழுதி பறக்கும் ஆடுகளம்… சீறிப் பாயும் காளைகள், தூக்கி வீசப்படும் வீரர்கள்… என்று அது காட்டும் விஸ்தாரமான காட்சிகள் சற்றுப் பிரமிப்பைத் தருகின்றன. மேலும் அடிக்கடி காண்பிக்கப்படும் அந்தக் கிராமத்தின் ஏரியல் ஷாட்டுகள் அங்கேயே நம்மைத் தூக்கிச் செல்கின்றன. 

டி.இமானின் பின்னணி இசை ஜல்லிக்கட்டு போட்டிக்கு போர்க்களக் காட்சிக்கான விவரணையைக் கொடுத்திருக்கிறது. பாடல்கள் கேட்கும் ரகமாக இல்லையென்றாலும் நமது காதுகளை அலற வைக்கவில்லை.

மெது, மெதுவாக நகர்ந்து கடைசியில் பேரலையாக வந்து மோதும் இந்தப் படத்தின் திரைக்கதை, இடையிடையே பல இடங்களை நோக்கி இலக்கில்லாமல் அலை பாய்ந்திருப்பதுதான் படத்தின் மிகப் பெரிய குறைபாடு.

மொத்தத்தில் இந்தக் ‘காரி’ படம், கிளைமாக்ஸில் காட்டிய வேகத்தை படத்தின் துவக்கம் முதலே காட்டியிருந்தால் இதைவிடவும் அதிகமான பாராட்டுக்களும், பெருமையும் இந்தப் படத்திற்குக் கொடுத்திருக்கும்.

இருந்தாலும் படத்தில் நாகி நீடு முன் வைக்கும் “எந்தவொரு நல்ல நோக்கத்தோடு வைக்கப்படும் நம்பிக்கையும் வீண் போகாது…” என்ற கருத்துக்காகவே இந்தப் படம் பாராட்டுக்குரிய திரைப்படமாகிறது..!

RATING : 3.5 / 5

The post காரி – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
பட்டத்து அரசன் – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/pattaththu-arasan-movie-review/ Fri, 25 Nov 2022 11:00:38 +0000 https://touringtalkies.co/?p=27571 கபடி விளையாட்டை மையமாக வைத்து பல படங்கள் வந்துவிட்டன. ஆனால், லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் இந்த ‘பட்டத்து அரசன்’ படம், அதே கபடி விளையாட்டில் நாம் இதுவரை அறிந்திருக்காத ஒரு முகத்தைக் காட்டுகிறது. இயக்குநர் ஏ.சற்குணம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் அதர்வா நாயகனாக நடிக்க, நாயகியாக ஆஷிகா ரங்கநாத் நடித்திருக்கிறார். ராஜ்கிரண் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் ராதிகா சரத்குமார், செந்தி, மீனாள், ஜானகி, சிந்து, […]

The post பட்டத்து அரசன் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
கபடி விளையாட்டை மையமாக வைத்து பல படங்கள் வந்துவிட்டன. ஆனால், லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் இந்த ‘பட்டத்து அரசன்’ படம், அதே கபடி விளையாட்டில் நாம் இதுவரை அறிந்திருக்காத ஒரு முகத்தைக் காட்டுகிறது.

இயக்குநர் ஏ.சற்குணம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் அதர்வா நாயகனாக நடிக்க, நாயகியாக ஆஷிகா ரங்கநாத் நடித்திருக்கிறார். ராஜ்கிரண் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இவர்களுடன் ராதிகா சரத்குமார், செந்தி, மீனாள், ஜானகி, சிந்து, ஜெயப்பிரகாஷ், ஆர்.கே.சுரேஷ், துரை சுதாகர், சிங்கம் புலி, ராஜ் அய்யப்பா, பால சரவணன், ஜி.எம்.குமார், கன்னட நடிகர் காளே, தெலுங்கு நடிகர் சதுரு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ‘உஸ்தாத் ஹோட்டல்’ புகழ் லோகநாதன் சீனிவாஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இராமநாதபுரம் ஜில்லாவில் இருக்கும் காளையார்கோவில் கிராமத்தில் உயிருடன் இருக்கும் போதே சிலை வைத்து கொண்டாடும் அளவுக்கு மிகப் பெரிய கபடி வீரரான ராஜ்கிரண், மகன்கள், மகள், பேரன்கள், பேத்திகள் என்று கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறார்.

அவருடைய மற்றொரு மனைவியின் பேரனான அதர்வாவும், அவரது அம்மா ராதிகாவும் அதே ஊரில் தனியாக வசித்து வருகிறார்கள். சொத்துப் பிரச்சினையால் ராதிகாவையும், அதர்வாவையும் ராஜ்கிரணும் அவரது குடும்பத்தாரும் ஒதுக்கி வைத்துள்ளனர். தனது தாய் ராதிகாவின் எதிர்ப்பையும் மீறி அதர்வா மட்டும் எப்படியாவது தாத்தா குடும்பத்துடன் சேர்ந்துவிட வேண்டும் பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகிறார்.

இதற்கிடையே ராஜ்கிரணின் மற்றொரு பேரனும், ராஜ்கிரணின் பால்ய காலத்து தோழனும், தற்போதைய பஞ்சாயத்துத் தலைவருமான ரவி காளேவின் மகனும் ஒன்றாக அதே ஊரின் கபடி டீமில் இடம் பெற்று விளையாடி வருகிறார்கள். ராஜ்கிரணின் பேரன் மட்டும் தமிழக கபடி டீமிற்கு தேர்வாகிவிட்டதை தெரிந்து கொண்ட காளேவின் மகன் தந்திரமாக சிலவைகளை செய்து ராஜ்கிரணின் பேரனை சிக்கலுக்கு உள்ளாக்குகிறான்.

இப்போது ஊரே கொண்டாடிய ராஜ்கிரணின் குடும்பம் ஊருக்கு துரோகம் செய்துவிட்டதாக பழி சுமத்தி அவரது குடும்பத்தில் இருப்பவர்கள் யாரும் ஊருக்கான கபடி அணியில் விளையாட கூடாது என்று தடையும் விதிக்கிறார்கள்.

இப்போது கபடி விளையாடவே தெரியாத அதர்வா தன் தாத்தா குடும்பத்தின் மீது விழுந்த பழியை போக்க களத்தில் இறங்குகிறார். கபடி விளையாட்டில் தன் ஊர் அணியை தன் குடும்ப அணி வெல்லும் என்று சவால்விட்டு பிரிந்த, குடும்பத்தை ஒன்று சேர்த்து ஊர் அணிக்கு எதிராக கபடி விளையாடத் தயாராகிறார் அதர்வா.

அந்தச் சவாலில் ராஜ்கிரணின் குடும்பம் வெற்றி பெற்றதா..? இல்லையா? என்பதை விறுவிறுப்பான கபடி விளையாட்டோடு, குடும்ப செண்டிமெண்டையும் சேர்த்து சொல்லியிருக்கிறார்கள்.

கபடி வீரராக நடித்திருக்கும் அதர்வா விளையாட்டு வீரருக்கான வேடத்தில் வழக்கம்போல கச்சிதமாக பொருந்துகிறார். கபடி களத்தில் காளையாக பாய்ந்திருக்கிறார். சண்டைக் காட்சிகளில் அதிரடி காட்டுகிறார். காதல் காட்சிகளில் ரசிக்கும்படி அளவாக நடித்தும், குடும்ப செண்டிமெண்ட் காட்சிகளில் அனைவரையும் கவரவும் வைக்கிறார். 

அதர்வாவுக்கு தாத்தாவாக, கதையின் உண்மையான நாயகனாக பொத்தாரி’ என்ற கபடி வீரரின் வேடத்தில் நடித்திருக்கும் ராஜ்கிரண், மூன்றுவிதமான கெட்டப்புகளில் தனது வித்தியாசத்தை நடிப்பினை வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். 70 வயதில் ஒருவரால் கபடி விளையாட முடியுமா என்ற கேள்விக்குத் திரையில் கபடி விளையாடியே காண்பித்திருக்கிறார் ராஜ்கிரண்.

நாயகியாக நடித்திருக்கும் புதுமுகம் ஆஷிகா ரங்கநாத்திற்கு குடும்ப பாங்கான முகம். கபடி வீராங்கனையாக நடித்திருப்பவர் காதல் காட்சிகளிலும், கபடி போட்டியிலும் அளவான நடிப்பு மூலம் ஜொலித்திருக்கிறார். நாயகி தொடை தெரியும் அளவுக்கு உடையணிந்திருப்பது சற்குணத்தின் இயக்கத்தில் இதுதான் முதல் படமாகும்.

ராஜ்கிரணின் மூத்த மகனாக நடித்திருக்கும் ஜெயப்பிரகாஷ், அதர்வாவிடம் தனது கோபத்தை வெளிப்படுத்தும் காட்சிகளிலும், மகனை இழந்த ஆற்றாமையில் தவிக்கும் காட்சிகளிலும், இறுதியில் நிலைமை புரிந்து அதர்வாவுடன் இணைந்து கபடியில் மல்லுக்கட்டும் காட்சியிலும் குறையில்லாமல் நடித்திருக்கிறார்.

ராஜ்கிரணின் இளைய மகனான துரை சுதாகரும் தன் பங்குக்கு உரிய நடிப்பினை காண்பித்திருக்கிறார். சிங்கம் புலி வீட்டு மாப்பிள்ளையாக வலம் வந்தாலும் கிடைக்கும் சில இடங்களில் நம்மை சிரிக்க வைத்திருக்கிறார்.

ராஜ்கிரணின் மற்றொரு பேரனாக நடித்திருக்கும் ராஜ் ஐயப்பன் நடிப்பிலும், கபடி விளையாட்டிலும் சரி பாராட்டும்படி நடித்திருக்கிறார். ராதிகா தன் பங்குக்குத் தனது தனித் திறமையை பதிவு செய்துள்ளார். மேலும் ஆர்.கே.சுரேஷ், ரவி காளே, பால சரவணன் என்று பலரும் தங்களது கேரக்டருக்கேற்ற நடிப்பைக் காண்பித்து முடித்திருக்கிறார்கள்.

தொழில் நுட்பத்தில் லோகநாதன் ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றபடி பயணித்துள்ளது. விளையாட்டு போட்டிகளை விறுவிறுப்பாக காட்டுவது மட்டுமல்ல.. பல்வேறு வயதுகளில் இருக்கும் தாத்தா, மகன், பேரன் என்று மூன்று தலைமுறையினர் கொண்ட ஒரு குடும்ப அணி கபடி விளையாடுவதை மிக நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார்.

படத்தின் துவக்கத்தில் கேமிரா அந்த வெற்றிலை கொடி தோட்டத்திற்குள் நுழைந்து பயணிக்கும் காட்சியை இதுவரையிலும் தமிழ்த் திரை ரசிகர்கள் கண்டதில்லை. அவ்வளவு அழகுடன் அதைப் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

பொதுவாக சற்குணத்தின் படமென்றால் ஜிப்ரானின் இசையில் பாடல்கள் சிறப்பாகத்தான் இருக்கும். இந்தப் படத்திலும் அதுவே நடந்திருக்கிறது. பாடல்கள் திரும்ப திரும்ப கேட்கும்படி இருப்பதோடு, முணுமுணுக்கவும் வைக்கிறது. இன்னொரு பக்கம் பின்னணி இசை படத்தை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்தி செல்ல உதவியிருக்கிறது.

கபடி விளையாட்டை மையமாக வைத்து இந்தக் கதை எழுதப்பட்டிருந்தாலும், குடும்ப செண்டிமெண்டோடு திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் சற்குணம், அதை முழுமையான பொழுதுபோக்கு படமாகவும் கொடுத்திருக்கிறார்.

அதிகப்படியான பெரிய நட்சத்திரங்களை வைத்துக் கொண்டு இப்படி ஒரு கிராமத்து, குடும்பக் கதையை சொல்வதே மிகப் பெரிய சவால் என்றாலும், அந்த சவாலை சாமர்த்தியமாக சமாளித்திருக்கும் இயக்குநர் சற்குணம், காதல், ஆக்‌ஷன், காமெடி, குடும்ப செண்டிமெண்ட் என்று அனைத்தையும் கலந்து அளவாகவே கொடுத்திருக்கிறார்.

ஒட்டு மொத்தமாய் இன்றைய இளைஞர்களுக்கான படமாக மட்டுமின்றி, குடும்பத்தோடு பார்க்கக் கூடிய ‘பாசமலர்’ டைப் படமாகவும் இந்தப் ‘பட்டத்து அரசன்’ அமைந்துள்ளது.

RATING : 3.5 / 5

The post பட்டத்து அரசன் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
நான் மிருகமாய் மாற – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/naan-mirugamaai-maara-movie-review/ Tue, 22 Nov 2022 18:34:39 +0000 https://touringtalkies.co/?p=27465 ஒரு சாதாரண மனிதன் சந்தர்ப்ப சூழ்நிலையால் எவ்வாறு மிருகமாக மாறுகிறான் என்பதுதான் இந்தப் படத்தின் கதை. சினிமாவில் சவுண்டு இன்ஜினியராகப் பணியாற்றி வருகிறார் ‘பூமிநாதன்’ என்ற சசிகுமார். இவரது தம்பியைக் கூலிப்படை ஒன்று கொலை செய்கிறது. அவர்களுக்குத் சட்டப்படி தண்டனை வாங்கித் தருவது நீதிமன்ற வழக்கப்படி முடியாது என்பதை உணரும் சசிகுமார், சட்டத்தின் வழியை நாடாமல், வன்முறையைக் கையில் எடுத்து அவர்களைப் பழி வாங்குகிறார். இவர் செய்த பதிலடியால் சசிகுமாருக்கும் அவரது குடும்பத்திற்கும் தொடர் ஆபத்துகள் ஏற்படுகின்றன. […]

The post நான் மிருகமாய் மாற – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
ஒரு சாதாரண மனிதன் சந்தர்ப்ப சூழ்நிலையால் எவ்வாறு மிருகமாக மாறுகிறான் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

சினிமாவில் சவுண்டு இன்ஜினியராகப் பணியாற்றி வருகிறார் பூமிநாதன்’ என்ற சசிகுமார். இவரது தம்பியைக் கூலிப்படை ஒன்று கொலை செய்கிறது. அவர்களுக்குத் சட்டப்படி தண்டனை வாங்கித் தருவது நீதிமன்ற வழக்கப்படி முடியாது என்பதை உணரும் சசிகுமார், சட்டத்தின் வழியை நாடாமல், வன்முறையைக் கையில் எடுத்து அவர்களைப் பழி வாங்குகிறார்.

இவர் செய்த பதிலடியால் சசிகுமாருக்கும் அவரது குடும்பத்திற்கும் தொடர் ஆபத்துகள் ஏற்படுகின்றன. யாரும் பார்க்கவில்லை என்று நினைத்து செய்த படுகொலைகளுக்கு சாட்சிகள் இருப்பதாகச் சொல்லும் புதிய வில்லன், சசிகுமாருக்கு புதிய அஸைண்மெண்ட்டை கொடுக்கிறான். அவன் சொன்னதை செய்யவில்லையென்றால் சசிகுமாரின் குடும்பத்தையே கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறான்.  

செய்வதறியாமல் தவிக்கும் சசிகுமார் வில்லனுக்கும், தன் குடும்பத்துக்கும் நடுவில் மாட்டிக் கொள்கிறார். இனி அவர் என்ன செய்கிறார்..? தன் குடும்பத்தைக் காப்பாற்றினாரா..? இல்லையா..? என்பதை ரத்தம் தெறிக்கத் தெறிக்கச் சொல்கிறது இந்த ‘நான் மிருகமாய் மாற’ படம்.

சமீபத்தில் வந்த தமிழ்ப் படங்களில் இந்த அளவுக்கு ரத்தம் சிதறியது இந்தப் படத்தில்தான் இருக்கும். சசிகுமாரின் முதல் படமான சுப்ரமணியபுர’த்தில் நடந்த ரத்தச் சிதறல்களையும் இந்தப் படம் தாண்டிவிட்டது.

அழுகை, கோபம், இயலாமை, சோகம், பதற்றம் என்ற பல்வேறு உணர்ச்சிகளையும் உள்ளடக்கிய நடிப்பைத் தன்னால் முடிந்த அளவு காண்பித்திருக்கிறார் சசிகுமார். சசிகுமாரை மிக அதிகக் காட்சிகளில் அழுக வைத்திருப்பதும் இந்தப் படம்தான். சிரிப்பே இல்லாமல் சசிகுமார் தனது சோக முகத்தை வைத்தே கடைசிவரையிலும் படுகொலைகளைச் செய்கிறார்.

சசிகுமார் மட்டுமல்ல.. அவருடன் நடித்திருக்கும் அனைவருமே தங்களது சோகத்தை காட்சிக்குக் காட்சி வெளிப்படுத்தி நம்மையும் கதற வைக்கிறார்கள். ஹரிபிரியாவின் ஸ்கிரீன் பிரசன்ஸ் சில நிமிடங்களுக்கு பார்வையாளர்களுக்கு இளைப்பாற்றலை தந்தாலும் 90 சதவிகிதம் அழுவாச்சி காவியமாக இந்தப் படம் மாறியிருக்கிறது.

அடிக்கடி, ‘டேய் உன்ன வெட்டிக் கொன்றுவேன்டா’ என்று பலரிடமும் கத்துகிறார் சசிகுமார். இந்த வசனத்தையாவது காட்சிக்குக் காட்சி மாற்றியிருந்தால் கேட்பதற்காகவாவது நன்றாக இருந்திருக்கும்.

இடைவேளைக்கு முன்புதான் விக்ராந்த் கதைக்குள்ளேயே வருகிறார். இவரது வருகை படத்தின் திரைக்கதையில் வேகத்தையும், திருப்பத்தையும் கொடுக்கும் என்று எதிர்பார்த்தால் அதுவும் இல்லை. போதாக்குறைக்கு இவருக்குக் கொடுக்கப்பட்டுள்ள பின்னணிக் குரலிலும் மிடுக்கும், தைரியமும்  இல்லாமல் போக.. சுமாராகிப் போனது இவரது கேரக்டர்.

நேரடியாகக் களத்தில் இறங்கி அடித்து ஆடியிருக்க வேண்டிய விக்ராந்தை, சும்மா நிக்க வைத்து.. நடக்க வைத்து.. போனிலேயே பேச வைத்து கதையை முடித்திருக்கிறார்கள். இன்னொரு வில்லனாக வரும் அப்பானி சரத் முதல் பாதியில் சிறிது வில்லத்தனத்தை செய்திருக்கிறார். ஆனால் பின் பாதியில் இவரும் காணாமல் போய்விட்டார்.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் இரவிலேயே படமாக்கப்பட்டுள்ளதால், ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜியின் திறமைக்கு நல்ல வேலை கொடுத்துள்ளார் இயக்குநர். அந்த வகையில் நமது கண்களுக்கு ஈறு விளைவிக்காமல் சமர்த்தாக இருக்கிறது ஒளிப்பதிவு. இது போன்ற திரில்லர் படங்களுக்கு மிகப் பெரிய துணையே பின்னணி இசைதான். இந்தப் படத்தில் ஜிப்ரான் இதை முழுமையாகச் செய்யாததால் அதுவும் வீணாகிவிட்டது.

படத்தின் துவக்கத்தில் சில நிமிடங்கள்வரையிலும் பரபரப்பாக ஓடிய திரைக்கதை பின்பு கொஞ்சம், கொஞ்சமாக அமுங்கிவிட்டது. ரத்தச் சகதியை இன்னும் கொஞ்சம் கத்திரி போட்டிருந்தால் நம் மனசுக்கு ஆறுதலாக இருந்திருக்கும். சவுண்டு இன்ஜினியர் என்ற கேரக்டர் ஸ்கெட்ச் கொண்ட கதையிலேயே சவுண்ட் டிஸைனிங் சுமார் என்றால் எப்படிங்கோ..? சிலர் பேசும்போது டப்பிங்கில் சின்க் ஆகாமல் போகிறது. தேவையற்ற நேரங்களில், தேவையற்ற ஒலி ஊடுறுவியிருக்கிறது. டெக்னிக்கல் சைடில் கொஞ்சம் ஏமாற்றம்தான்.

தம்பிக்காக 6 கொலைகளை செய்யத் துணியும் சசிகுமாருக்கு அந்தத் தம்பியுடனான நட்பும், பாசமும், அன்பும் எப்படியிருந்தது என்பதைக் காட்ட ஒரு காட்சியும் இல்லாததால் சசிகுமாரின் சோகத்தில் ரசிகர்களாலும் பங்கெடுத்துக் கொள்ள முடியவில்லை. இதனாலேயே ஏதோ கத்தியை எடுத்தார். வீராவேசமாக எதிரிகளின் கோட்டைக்குள் நுழைந்து வெட்டு, குத்து என்று அத்தனை பேரையும் சம்ஹாரம் செய்துவிட்டு சத்தமில்லாமல் வீட்டுக்கு வந்து குளியலைப் போட்டுவிட்டு அமர்வதையெல்லாம் நாம் சாதாரணமாகவே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

சசிகுமார் ஒலிப்பதிவு பொறியாளர் என்பதால் வில்லன் பேசும் ஆடியோவை வைத்து அவன் இருக்கும் ஏரியாவையும், சுற்றுச் சூழலையும் கண்டறியுவிதம் சிறப்பாகத்தான் உள்ளது என்றாலும் இதுவும் கொலை செய்யவே உதவுகிறது என்பதால் இதுக்குத்தான் அதுவா என்று நமக்கு அயர்ச்சிதான் ஏற்படுகிறது.

விக்ராந்த், சசிகுமாருக்குத் தரும் கொலை அசைண்மெண்ட்டை ஏற்று மருத்துவமனையில் மதுசூதனனை கொலை செய்ய முயற்சிக்கும் அத்தருணம் சற்று படபடப்பையும், பரபரப்பையும் நமக்குக் கொடுத்திருக்கிறது. ஆனால், படம் முழுவதும் இந்த உணர்வைக் கொண்டு வந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்குமே..!?

அதீத வன்முறை.. ரத்தச் சிதறல்.. பழி வாங்கும் உணர்வு, தேடுதல் வேட்டை.. என்று பயங்கர பரபரப்புக்கு தேவையான அத்தனையையும் வைத்துக் கொண்டு இதை குடும்ப சென்டிமெண்ட்டுக்குள் அடக்கப் பார்த்த இயக்குநர், கடைசியாக தோல்வியைத்தான் தழுவியுள்ளார்.

இது வன்முறையின் உச்சக்கட்டமாக மட்டுமே காட்சியளிக்கிறது..!!!

RATING :  2 / 5

The post நான் மிருகமாய் மாற – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>