Thursday, April 11, 2024

புற்றுநோய் பாதிப்பா?:  சிரஞ்சீவி அளித்த விளக்க அறிக்கை

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் வீடியோ வெளியானது. இதை தவறாக புரிந்து கொண்ட பலர், அவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக நினைத்துவிட்டனர்.

தவிர, கடந்த இரு நாள்களாக தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி புற்றுநோய் பாதிப்பிலிருந்து குணமாகி திரும்பியிருப்பதாக தெலுங்கு ஊடங்களில் தொடர்ந்து தகவல்கள் வெளியாகின.

இந்த விவகாரம் தொடர்பாக நீண்ட விளக்கத்தை நடிகர் சிரஞ்சீவி அளித்துள்ளார்.

“புற்றுநோய் மையத்தின் திறப்பு விழாவின் போது புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நான் பேசியிருந்தேன். தொடர் மருத்துவ பரிசோதனைகள் மூலம் புற்று நோய் பாதிப்பை தடுக்கலாம் என கூறியிருந்தேன். அப்போது நான் எச்சரிக்கையாக இருக்க பெங்குடல் ஸ்கோப் பரிசோதனை செய்தேன் எனவும், புற்றுநோய் அல்லாத பாலிப்கள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டது எனவும் கூறினேன்.

மிக முக்கியமாக நான் மட்டும் அந்த பரிசோதனை செய்யவில்லை என்றால், புற்றுநோயாளியாக ஆகியிருப்பேன் என்று கூறினேன். இதனால் அனைவரும் புற்றுநோய் பாதிப்பை தடுக்க முன்னெச்சரிக்கையாக பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும் என்றேன்.

ஆனால் எனது இந்த பேச்சை சரியாக புரிந்துகொள்ளாமல் சில ஊடகங்கள் எனக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்ததாகவும், சிகிச்சை மூலம் குணமாகியதாகவும் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டனர். இது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

என் நலம் விரும்பிகள் பலரும் எனது உடல் ஆரோக்கியம் குறித்து மெசேஜ் அனுப்பியுள்ளனர். இந்த நேரத்தில் அனைவருக்கும் இதை தெளிவுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன்.

அதேபோல் அடிப்படையான விஷயம் என்னவென்று தெரியாமல் தவறாக எழுதும் பத்திரிகையாளர்களும் இதை தெரிவித்து கொள்கிறேன். ஏனென்றால் இந்த விஷயத்தால் பலரும் அச்சமடைந்திருப்பதோடு, புண்பட்டுள்ளனர்” என்று சிரஞ்சீவி  குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News