Friday, April 12, 2024

ஜெய் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பிரேக்கிங் நியூஸ்’ விரைவில் வெளியாகவுள்ளது

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் ஜெய் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் ’பிரேக்கிங் நியூஸ்.’

நாகர்கோவிலைச் சார்ந்த தயாரிப்பாளர் திருக்கடல் உதயம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் ஜெய்க்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகையான பானுஸ்ரீ நடிக்கிறார். நடிகை பானுஸ்ரீ தெலுங்கு மொழி திரைப்படங்களில் குறுகிய காலத்தில் மிகவும் பிரபலமானவர். தெலுங்கு பிக்பாஸ் சீசன்-2’-வில் அதிகப் புகழ் பெற்றவர் இவர்தான்.

மகதீரா’, ‘சுறா’ ஆகிய படங்களில் நடித்த நடிகர் தேவ் கில், ‘வேதாளம்’ படத்தில் நடித்த ராகுல் தேவ் ஆகியோர் வில்லன் வேடங்களில் நடிக்கிறார்கள்.

ஜானி லால் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி படத் தொகுப்பை கையாள்கிறார். உலக அளவில் 450 CG தொழில் நுட்ப வல்லுநரான வி.தினேஷ்குமாரின் மேற்பார்வையில் VFX பணிகளை செய்து வருகிறார்கள். அறிமுக இயக்குநரான ஆண்ட்ரூ பாண்டியன் படத்திற்கு  கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

விஷுவல் புரொமோக்கள் மற்றும் பாடல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், விரைவில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.

இயக்குநர் ஆண்ட்ரு பாண்டியன் படம் குறித்து பேசும்போது, “படத்தின் படப்பிடிப்பை முழுதாக முடித்துவிட்டோம். போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் தற்போது முடியும் தருவாயில் உள்ளது.

நடிகர் ஜெய்யுடன் இப்படத்தில் பணிபுரிந்த அனுபவம் எனக்கு மிகவும் அற்புதமாக இருந்தது. அவரது ஒத்துழைப்பும் படத்தின் மீதான அவரது ஈடுபாடும் அபாரமானதாக இருந்தது. படத்தின் துவக்க நாள் முதலாக, படத்தின் மீது பெரும் ஈடுபாட்டுடன், மிக கடினமான கதாப்பாத்திரத்தை முழுதாக உள்வாங்கி,  தனது மிகச் சிறந்த நடிப்பை முழு மூச்சுடன் வழங்கினார்.

படத்தின் புட்டேஜ்களை எடிட் செய்தபோது நடிகர் ஜெய்யின் நடிப்பை கண்டு பிரமித்து போனேன். இப்படம் அவரை தமிழ் சினிமாவில் மிகப் பெரிய நட்சத்திர அந்தஸ்திற்கு அழைத்து செல்லும்.

இத்திரைப்படம் பெரும் உற்சாகத்தையும் அதே நேரம் படத்தை தரமான படைப்பாக ரசிகர்களுக்கு அளிக்க வேண்டுமென்கிற பொறுப்புணர்வையும் அளித்துள்ளது.

இப்படத்தின் பெரும் பகுதி கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் கொண்டதாக  உள்ளது.  அதற்காக கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் செய்யும் 450 பணியாளர்கள் பணி புரிந்து வருகிறார்கள்…” என்றார்.

- Advertisement -

Read more

Local News