Wednesday, April 10, 2024

தயாரிப்பாளரை அஸிஸ்டெண்ட் டைரக்டராக பயன்படுத்திய பாரதிராஜா !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாரதிராஜா இயக்கி பெரும் வெற்றி பெற்ற மண் வாசனை திரைப்படத்தை தயாரித்தவர், சித்ரா லட்சுமணன். இந்த பட படப்பிடிப்பின் போது நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை அவர் பகிர்ந்துகொண்டார்:

“அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது, தயாரிப்பாளராக மட்டுமின்றி, பாரதிராஜாவின் உதவி இயக்குநராகவும் பணி புரிந்தேன்.

நாங்கள் தங்கி இருந்த இடத்தில் இருந்து படப்பிடிப்பு தளத்துக்கு பாரதிராஜா, கண்ணன் ஆகியோருடன் ஒரே காரில் செல்வேன்.

ஒரு நாள் அப்படி சென்று இறங்கும்போது, அங்கே படப்பிடிப்புக்கான தயாரிப்பு பணிகள் முழுமையாக செய்யப்படவில்லை. இதைப் பார்த்து டென்சன் ஆன பாரதிராஜாக, “நீ உதவி இயக்குநர்தானே.. நான் வருவதற்குள் தகுந்த ஏற்பாடுகளை செய்ய வேண்டாமா” என சத்தம் போட்டார்.

அன்றிலிருந்து அவருடன் காரில் செல்வதை தவிர்த்தேன். அவர் வரும் முன்பாகவே – அதிகாலை நேரத்தில் படப்பிடிப்பு தளத்துக்குச் சென்று, வேலைகளை கவனிப்பேன்” என்றார் சித்ரா லட்சுமணன்.

ஒரு தயாரிப்பாளரே உதவி இயக்குநராக இருந்த சம்பவம் சுவாரஸ்யமானதுதானே!

குறிப்பிட்ட சுவாரஸ்யமான வீடியோவை முழுதும் பார்க்க…  டூரிங் டாக்கீஸ் யு டியுப் லிங்க் கீழே..

- Advertisement -

Read more

Local News