Wednesday, April 10, 2024

கண் கலங்கிய பத்திரிகையாளர்! என்ன செய்தார் ஏ.வி.எம்.?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

 

இந்திய திரையுலக வரலாற்றில் மிக முக்கிய பங்கு வகிப்பது ஏவி.எம். திரைப்பட தயாரிப்பு நிறுவனம். இதைத் துவங்கியவர் ஏ.வி.மெய்யப்ப செட்டியார்.

இவரது வாழ்க்கை வரலாறு தொடராக வார இதழ் ஒன்றின் நிர்வாகம் விரும்பியது. மெய்யப்பட செட்டியாரும் ஒப்புக்கொண்டார். அவர் தனது வாழ்க்கை அனுபவங்களைச் சொல்லச் சொல்ல.. அந்த வார இதழின் செய்தியாளர் பால்யூ, எழுதுவார்.

பிறகு இந்தத் தொடரை புத்தகமாக வெளியிட திட்டமிட்டார்கள். அப்போது மெய்யப்ப செட்டியார், ‘என் வாழ்க்கையை தொகுத்து எழுதிய செய்தியாளர் பால்யூவின் பெயர் புத்தகத்தில் குறிப்பிடப்பட வேண்டும்’ என்றார்.

அதற்கு பால்யூ, ‘நீங்கள் சொன்னதைத்தான் நான் எழுதினேன்.. எனது பெயர் வேண்டாம்’ என மறுத்தார்.

ஆனால் மெய்யப்ப செட்டியார், ‘என் வாழ்க்கைதான்.. நான்தான் சொன்னேன். ஆனால் அதை அழகாக தொகுத்து எழுதியது நீங்கள். ஆகவே உங்களது பங்களிப்பை புத்தகத்தில் அங்கீகரிப்பதுதான் முறை’  என்றார்.

அதே போல புத்தகத்தில் குறிப்பிடத்தகுந்த விதத்தில் பல்யூவின் பெயர் வெளியானது.

திரையுலகில் கோஸ்ட் ரைட்டர் என்கிற பெயர் சகஜமாக புழங்கும். அதவது யாரோ ஒரு திறமையாளர் எழுத, வேறு ஒருவர் தனது பெயரில் அதை வெளியிடுவார்.

இப்படிப்பட்ட சூழலில், எழுதியவருக்கு உரிய அங்கீகாரம் தர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த மெய்யப்ப செட்டியார் எவ்வளவு உயர்ந்தவர்!

ஆகவேதான், ஏவிஎம் செயலைக்கண்டு கண்கலங்கிவிட்டார் பத்திரிகையாளர் பால்யூ.

இது போல பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய  சினிமா செய்திகளை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை க்ளிக் செய்யுங்கள்..

 

- Advertisement -

Read more

Local News