Thursday, April 11, 2024

பாரதிராஜாவை பிளாக்மெயில் செய்த அசோசியேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தினாறு வயதினிலே திரைப்படம்தான் பாரதிராஜாவின் முதல் படம் என்பது அனைவருக்கும் தெரியும்.

அதற்கு முன், எஸ்.ஆர் புட்டனா இயக்கிய
இருளும், ஒளியும் என்கிற திரைப்படத்தில் உதவி இயக்குனராக சேர்ந்தார்.

ஆனால் அங்கு ஏற்கனவே இருந்த உதவி இயக்குனர்கள் பாரதிராஜாவை எந்த வேலையும் செய்ய விடவில்லை. ஒருமுறை அவுட்டோர் படப்பிடிப்பிற்கு கிளம்பும்போது பாரதிராஜாவிடம் வந்த அசோசியோட் இயக்குனர் 25 ரூபாய் கொடுத்தால்தான் படப்பிடிப்பிற்கு அழைத்து செல்வேன் என கூறியுள்ளார்.

உடனே பாரதிராஜா,  அவ்வளவு ரூபாய் இல்லை என கூறியுள்ளார். இதனால் பாரதிராஜாவை விட்டு சென்றுவிட்டார்  அசோசியேட் இயக்குனர்.

பிறகு இயக்குனர் “என்னையா அவுட்டோர் ஷூட்டுக்கெல்லாம் வரமாட்டியா” என பாரதிராஜாவை சத்தம் போட்டுள்ளார்.

அப்போதுதான் பாரதிராஜா அசோசியேட் காசு கேட்ட விவரத்தை கூறியுள்ளார். உடனே ஆத்திரான இயக்குனர் அசோசியேட்டை அடித்து துவைத்துவிட்டார்.

அதன் பிறகு படப்பிடிப்பு குழுவே பாரதிராஜாவிடம் சற்று அடக்க ஒடுக்கமாகவே இருந்துள்ளனர். இந்த நிகழ்வை தனது பேட்டியில் அவர் பகிர்ந்திருந்தார்

- Advertisement -

Read more

Local News