Wednesday, April 10, 2024

அதிதி ராவ் பிறந்தநாள்:  ட்விட்டரில் கவிதை வெளியிட்ட சித்தார்த்.!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் ‘மகா சமுத்திரம்’ என்ற படத்தில் சேர்ந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலந்ததாக கூறப்படுகிறது.  இதையடுத்து இருவரும் ஒன்றாக சினிமா நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இருந்தாலும் தங்கள் காதலைப் பற்றி இருவரும் வெளிப்படையாக  இன்னும் அறிவிக்கவில்லை.

இந்நிலையில் நடிகை அதிதி ராவ் ஹைதாரிக்கு நேற்று முன் தினம் பிறந்த நாள் கொண்டாடினார். அவருக்குத் திரையுலகினர், ரசிகர்கள் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். நடிகர் சித்தார்த்தும், ஆங்கில கவிதை ஒன்றை எழுதி தனது சமூக வலை தளப்பக்கத்தில் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார். அதில் அவர் அதிதியை ‘பார்ட்னர்’ என்று கூறியிருந்தார். இதற்குப் பதிலளித்த அதிதி ராவ், ‘நீங்கள் கவிஞர் என்பது தெரியாது. திறமையான உங்களைப் பற்றி நான் தெரிந்திருக்க வேண்டும்’ என்று கமென்ட்டில் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு  தற்போது வைரலாகி  வருகிறது

- Advertisement -

Read more

Local News