Thursday, April 11, 2024

‘ஆதிபுருஷ்’ வசூல் இவ்வளவா…??

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி உள்ளது ‘ஆதிபுருஷ்’ . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர்.

இந்த படம் ஆரம்பத்தில் இருந்தெ விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. ஆதிபுருஷ் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இது தமிழ்நாடு மற்றும் ஆந்திராவின் பல்வேறு இடங்களில் அதிகாலை காட்சிகளையும் திரையிடப்பட்டது. தமிழகத்தில் எதிர்பார்த்த வரவேற்பு இல்லாவிட்டாலும் ஆந்திர மக்கள் படத்தைக் கொண்டாடி வருகின்றனர். நேற்று காலை முதல் திரையரங்குகளில் பட்டாசு வெடித்தும், பால்குடம் ஏற்றியும் கொண்டாடி வருகின்றனர்.

நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் ‘ஆதிபுருஷ்’ படம் மாபெரும் வசூல் சாதனை படைத்தது. அதாவது இதுவரை இந்தியாவில் அதிக வசூல் செய்த படங்களில் ‘ஆதிபுருஷ்’ நான்காவது இடத்தில் உள்ளது.

சாட்டிலைட், டிஜிட்டல், மியூசிக் மற்றும் இதர உரிமைகள் மூலம் படம் ரூ.247 கோடி வசூலித்ததாக பாலிவுட் ஹங்காமா தெரிவித்திருந்தது.

- Advertisement -

Read more

Local News