Thursday, April 11, 2024

நாக சைதன்யாவுடன் காதலா?: சோபிதா பதில்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு சினிமாவின் முன்னணி இளம் நடிகரான நாக சைதன்யாக நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதன்பிறகு இருவருமே படங்களில் பிஸியாக இருந்து வரும் நிலையில், சமந்தா தோல் பாதிப்பு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மறுபுறம் நாகசைதன்யா பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கேரக்டரில் நடித்த நடிகை சோபிதா நாக சைதன்யா இருவரும் காதலிப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் புகைப்படங்கள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் நடிகை சோபிதா, “நடிப்பில் கவனம் செலுத்தி பிஸியாக நடித்து வருகிறேன்.  நான் வெளிப்படையாக சொல்லாத ஒரு விஷயம் குறித்து வதந்திகள் பரவி வருகிறது என்றால் அதைப்பற்றி நான் விளக்கம் கொடுக்க தேவையில்லை” என்று கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News