Thursday, April 11, 2024

அரசியலுக்கு வருகிறாராம் நடிகை கீர்த்தி சுரேஷ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு நடிகர் நாக சைதன்யா, கடைசியாக நடித்த ‘தேங்க் யூ’, ‘கஸ்டடி’ படங்கள் தோல்வியைச் சந்தித்தன. இதில் ‘கஸ்டடி’ படம் மூலம் தமிழுக்கும் அவர் வந்தார். தமிழிலும் இந்தப் படம் வரவேற்பைப் பெறவில்லை.

இப்போது, சந்து மொண்டேட்டி இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதில் அனுபமா பரமேஸ்வரன் நாயகியாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இப்போது கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கிறார். பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெலுங்கு திரையுலகில் கூறப்படுகிறது.

இந்நிலையில், விழா ஒன்றில் கலந்துகொண்ட கீர்த்தி,  தனக்கு அரசியலில் விருப்பம் இருப்பதாக கூறியுள்ளார். விளையாட்டுக்காக சொன்னாரா, உண்மையாக சொன்னாரா; அப்படி வந்தால் கேரளா, தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா… எந்த மாநில அரசியலுக்குள் வருவார்.. அல்லது தேசிய கட்சியில் இணைவாரா.. என்பது தெரியவில்லை.

படத்தை கீதா ஆர்ட்ஸ் தயாரிக்கிறது. ‘கார்த்திகேயா 2’ வரவேற்பைப் பெற்றிருப்பதால், இந்தப் படத்தையும் பான் இந்தியா முறையில் வெளியிட உள்ளனர்.

- Advertisement -

Read more

Local News