Thursday, April 11, 2024

விஜய் சிகரெட் பிடித்தது தப்பில்லை!:  நடிகர் சத்யராஜ் கருத்து

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நடிகர்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் இது குறித்து கருத்து தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் சத்யராஜும் தனது கருத்தைத் தெரிவித்து உள்ளார். அவர், “மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக நடிகர் விஜய் செய்தது மிகவும் நல்ல விஷயம். ஆனால் அரசியலுக்கு வருவது பற்றி அவரே வெளிப்படையாக சொல்லவில்லை. இந்த நிலையில் அது குறித்து பேசுவது நன்றாக இருக்காது” என்று தெரிவித்து உள்ளார்.

மேலும், ‘லியோ’ பட போஸ்டரின் விஜய் புகைபிடிப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றது குறித்து, “நடிகர்கள் தாங்கள் ஏற்று நடிக்கும் பாத்திரத்துக்கு ஏற்ப சில விஷயங்களை செய்துதான் ஆகவேண்டியுள்ளது. நான் இப்போது வில்லனாக நடித்திருக்கும் ஒரு படத்தில் கூட புகைப்பிடிக்கும் காட்சியில் நடிக்க வேண்டியிருந்தது. ’மக்கள் என் பக்கம்’ என்ற படத்தில் நான் ஒரு கடத்தல்காரராக நடித்திருப்பேன். நடிப்பு வேறு தனிப்பட்ட வாழ்க்கை வேறு” என்றார்.

- Advertisement -

Read more

Local News