Thursday, April 11, 2024

எம்ஜிஆர் படத்தில் நடித்த ரஜினி! எந்த படம் தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் திரை உலகில் பழம்பெரும் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் எம்ஜிஆர். ஆனால், இவர் நடிப்பதாக கூறி அறிவிப்பு அறிவித்து கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவராமல் போனது.

அப்படி ஒரு படம்தான் தாய் வீடு.  1968 ஆம் ஆண்டு தேவர் பிலிம்ஸின் காதல் வாகனம் என்ற படத்தில் எம் ஜி ஆர் நடித்திருந்தார். இதனை அடுத்து அவர் தாய் வீடு என்ற படத்தில் நடிப்பதாக கூறியிருந்தார். அது மட்டும் இல்லாமல் தேவர் பிலிம்ஸின் முதல் வண்ண திரைப்படம் இதுதான் என்று அறிவித்தார். எம் ஜி ஆர்.

இந்த தகவல் பத்திரிகையில் எல்லாம் வெளியாகியிருந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் கதாநாயகி குறித்து தேர்வு செய்திருந்தார்கள். இந்த படம் இருண்ட காடுகளில் மத்தியில் எடுக்கப்படுவதாகவும், இந்த படத்தில் எம்ஜிஆர் இரட்டை வேடத்தில் நடிக்க போவதாகவும் எல்லாம் தகவல் வெளியாகி இருந்தது.

ஆனால், காதல் வாகனம் படத்திற்கு பிறகு தாய்வீடு படம் எடுக்கப்படவில்லை. எம்ஜிஆர் கைவிடப்பட்ட படங்களில் தாய் வீடும் ஒன்றாகவே நின்று விட்டது. அதற்கு பதில் அவர் அக்கா தங்கை என்ற படத்தை ஜெய்சங்கர் கே ஆர் விஜயா வைத்து தேவர் எடுத்தார்.

பிறகு அவருடைய மருமகன் தியாகராஜன் தான் படங்களை இயக்க ஆரம்பித்து இருந்தார். அப்படித்தான் ரஜினி தேவர் கம்பெனி பேனரில் நடித்த முதல் படம் தான் தாய் மீது சத்தியம். பின் எம்ஜிஆர் கைவிட்ட தாய்வீடு படத்தை ரஜினியை வைத்து இயக்க முடிவு செய்தார்கள். பின் வெற்றிகரமாக எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் தாய் வீடு படமும் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. மேலும், எம்ஜிஆர் நடிக்க இருந்த தாய்வீடு படத்தின் கதைக்கும், ரஜினி நடித்த தாய்வீடு படத்தின் கதைக்கும் சம்பந்தமே இல்லை. இரண்டு படங்களின் கதைக்களம் வேறு. அதோடு படத்தின் கதாபாத்திரங்களும் வேறு.

- Advertisement -

Read more

Local News