Wednesday, April 10, 2024

ரயிலை தவறவிட்டு சினிமாவைப் பிடித்த ஜெய்சங்கர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் ஜெய்சங்கர் 1965-ல் இரவும் பகலும் படத்தில் அறிமுகமாகி 1990-கள் வரை முன்னூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்.   எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி என மூவரும் கோலோச்சிக்கொண்டு இருந்த தமிழ்த் திரையுலகில், தனக்கென தனி பாணியை உருவாக்கிக் கொண்டவர். தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் அழைக்கப்பட்டவர்.

இவர் குறித்து பலரும் அறியாத தகவல் ஒன்றை இவரது மகன் சஞ்சய் சங்கர், டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் பகிர்ந்துகொண்டார்:

“என் அப்பா சட்டம் பயின்றவர். அதற்கேற்ப மத்திய அரசின் உயர் பதவி டில்லியில் அவருக்குக் கிடைத்தது.  ஆனாலும் நடிப்பின் மீது அவருக்கு ஈடுபாடு உண்டு. துக்ளக் சோ நடத்திய நாடங்களில் அப்பா நடித்து உள்ளார்.

டில்லி வேலைக்காக டிரெய்ன் டிக்கெட் எல்லாம் புக் செய்து, வீட்டில் இருந்து பெட்டிப் படுக்கையோடு கிளம்பத் தயாரானார் என் அப்பா.

அந்த நேரத்தில் ஒரு போன்.

இரவும் பகலும் என்ற படத்தில் நடிக்க வாாய்ப்பு இருக்கிறது வர முடியுமா..  என்பதுதான் போனில் வந்த செய்தி.

அந்தக் காலத்தில்.. ஏன் இப்போதுமே மத்திய அரசு பதவி என்றால் தனி மரியாதைதான். ஆனாலும் அப்பா, அந்த பணியை நிராகரித்து, சினிமாவில் நடித்தார்..” என்றார் சஞ்சய் சங்கர்.

குறிப்பிட்ட சுவாரஸ்யமான வீடியோவை முழுதும் பார்க்க…  டூரிங் டாக்கீஸ் யு டியுப் லிங்க் கீழே..

- Advertisement -

Read more

Local News