Thursday, April 11, 2024

பணமே இல்லாமல் பட நிறுவனம்.. ஆனால் லட்சங்களை குவித்த படம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஒரு காலத்தில் பிரபலமாக விளங்கியது வீனஸ் திரைப்பட நிறுவனம். இயக்குனர் ஸ்ரீதர், கோவிந்தராஜ், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இணைந்து தான் இந்த நிறுவனத்தை துவக்கினர்.

ஆனால் இந்த நிறுவனத்தை ஆரம்பிக்கும் நேரத்தில் மூவரிடமும் ஒரு பைசா கூட கிடையாது. அப்போது ஸ்ரீதர் தெலுங்கில் இருந்து வரும் படங்களின் தமிழ் ரீமேக்கில் வசனகர்த்தாவாக செயல்ப்பட்டுக் கொண்டிருந்தார். அதன் மூலம் அவர் கையில் 5000 ரூபாய் இருந்தது. மீதமுள்ள பணத்தை மற்ற இருவர் பங்கு கொண்டு அளித்தனர்.

‘அமரதீபம்’ என்ற கதையை படமாக்க முடிவு செய்தனர். அதற்கு கதைப்படி இரு நாயகிகள் தேவைப்பட பத்மினி, சாவித்ரி ஆகியோரை அணுகினர். அவர்களுக்கு அட்வான்ஸ் கொடுக்கக் கூட பணம் இல்லாமல் எப்படி சந்திப்பது என்று யோசித்தனர்.

ஏற்கெனவே சிவாஜியிடம் நல்ல பழக்கம் இருந்த ஸ்ரீதருக்கு ஒரு யோசனை ஏற்பட்டது. நாயகனாக சிவாஜியை கமிட் செய்ய முடிவெடுத்த அவர், சிவாஜிக்கு கதையைச் சொன்னார். அவருக்கும் பிடித்துவிட்டது. பிறகு, அட்வான்ஸ் கொடுக்க பணம் இல்லை என்பதையும் ஸ்ரீதர் சொன்னார்.

மேலும் நீங்கள் சம்மதித்தால் நாளைக்கே பத்திரிக்கையில் விளம்பரம் கொடுத்து விடுவேன். அதை பார்த்து நிறைய வினியோகஸ்தரர்கள் பணம் கொடுக்க முன்வருவார்கள் என்று சொல்லியிருக்கிறார். அதைக் கேட்ட சிவாஜி பரவாயில்லை, நாளைக்கு விளம்பரம் கொடுத்துவிடு, நான் நடிக்கிறேன் என்றும் சொல்லியிருக்கிறார்.

அதன் பிறகே பத்மினி சாவித்ரியை சந்தித்து சிவாஜி ஓகே சொன்னதையும் தன்னிடம் அட்வான்ஸ் இல்லாததையும் கூறியிருக்கிறார். ஆனால் அதற்கு அவர்கள் இருவரும் பரவாயில்லை, மெதுவாக கொடுத்துக்கலாம் என்று சொல்லி நடிக்க முன்வந்திருக்கின்றனர்.

இதன் மூலம் ஆரம்பமானதே ‘அமரதீபம்’ திரைப்படம். படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.

இந்த சுவாரஸ்ய தகவலை tourint talkies யு டியுப் சேனலில் சித்ரா லட்சுமணன் கூறினார்.

இது போன்ற பல சுவாரஸ்யமான திரைப்பட செய்திகளை அறிய…

- Advertisement -

Read more

Local News