Wednesday, April 10, 2024

இன்னொரு சூப்பர் ஸ்டார், பராக், பராத்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் மோகன் கடந்த 80 களில் பல வெள்ளிவிழா திரைப்படங்கள் கொடுத்த நிலையில் மீண்டும் ’ஹரா’ என்ற திரைப்படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆகிறார்.

இந்த படத்தில் மோகனுடன் குஷ்பூ, யோகி பாபு, மனோபாலா, மொட்ட ராஜேந்திரன், உள்பட பலர் நடிக்கின்றனர். விஜய் ஸ்ரீ இந்த படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் ஏற்கனவே நடிகர் சாருஹாசன் நடிக்கவுள்ளார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.

கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன் ஏற்கனவே விஜய் ஸ்ரீ இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ’தாதா 87’ என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

’ஹரா’ படத்தின் படப்பிடிப்பின்போது அவர் மோகன் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இவருக்கு படக்குழுவினர், ஏஜிங் சூப்பர் ஸ்டார் என பட்டம் கொடுத்துள்ளனர். ஏற்கெனவே, சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த விவாதம் நடந்து வருகையில், இன்னொரு சூப்பர் ஸ்டார் என்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி  இருக்கிறது.

- Advertisement -

Read more

Local News