Thursday, April 11, 2024

சிம்புவால் காணாமல் போன இயக்குனர்கள்! பத்திரிகையாளர் தகவல்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

“சில இயக்குனர்கள் சிம்புவை வைத்து படம் எடுத்ததால் அவர்களுடைய சினிமா கேரியரே தொலைந்து விட்டது” என்று பத்திரிகையாளர் மணி, ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

ஆதிக் ரவிச்சந்திரன்: இவர் சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சிம்பு மூன்று வேடங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக ஸ்ரேயா, தமன்னா நடித்தார்கள். இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. அத்துடன் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி கிடைக்கவில்லை.

இப்படம் வெளியாகி பல மாதங்களுக்குப் பிறகு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து சிலம்பரசன், படப்பிடிப்புககு ஒத்துழைக்கவில்லை என பேட்டி அளித்தனர். மேலும் படத்தில்  அவர் அதிகமாக தலையிட்டதால் எங்களால் நாங்கள் நினைத்தபடி படத்தை கொடுக்க முடியவில்லை என்றனர்.

தரணி: இவர் இயக்கிய படங்களால் விஜய் மற்றும் விக்ரமுக்கு திருப்புமுனையாக சினிமா கேரியர் அமைந்தது. 2010 ஆம் ஆண்டு ஒஸ்தி திரைப்படம் சிம்புவை வைத்து எடுத்தார்.  இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த லாபத்தை கொடுக்கவில்லை. இந்த படத்திலும் சிம்பு தலையீட்டால் பிரச்சினைகள் ஏற்பட்டன.

எஸ்.சரவணன்: இவர் ஒளிப்பதிவாளராக கிட்டத்தட்ட 50 படங்களில் பணி புரிந்திருக்கிறார். இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் சிம்புவை வைத்து சிலம்பாட்டம் படத்தை 2008 ஆம் ஆண்டு இயக்கினார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வணிகரீதியாக வெற்றி பெற்று பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்தது. ஆனாலும் சிம்புவின் தலையீட்டால் தயாரிப்பு செலவு எகிறியது. இது இயக்குனருக்கு மைனஸ் ஆகி, அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

தருண் கோபி: அதில் விஷாலை வைத்து திமிரு என்ற படத்தை இயக்கியவர். அடுத்து சிம்புவை வைத்து காளை என்ற படத்தை எடுத்தார். ஆனால் இப்படம் படு மோசமான விமர்சனத்தை பெற்று வணிக ரீதியாக தோல்வியடைந்தது. இதற்குக் காரணமும் சிம்புவின் தலையீடுதான்.

இத்துடன் இந்த இயக்குனர் தடம் தெரியாமலேயே மாயமாக போய்விட்டார்.

துரை: இவர் சிம்புவை வைத்து 2005 ஆம் ஆண்டு தொட்டி ஜெயா என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் எதிர்பார்த்த அளவைவிட விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்று பாக்ஸ் ஆபீசிலும் வெற்றி பெற்றது. ஆனால் இவருக்கும் சிம்புவிற்கும் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட தகராறால் இனிமேல் சிம்பு நமக்கு செட்டே ஆகாது என்று ஒதுங்கி விட்டார்.

ஏ ஜே முருகன்: 2004 ஆம்  மன்மதன் திரைப்படத்தை இயக்கினார்.  இப்படத்தில் சிம்பு இரட்டை வேடங்களில் முதன் முதலாக நடித்திருக்கிறார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வெளியான நேரத்தில் 150 நாட்களுக்கு மேல் பாக்ஸ் ஆபிஸில் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. இப்படத்தின் கதையை சிம்புவிடம் சொல்லியபோது அவர் அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன், என்று பல வாக்குறுதிகளை இயக்குனரிடம் கொடுத்து இருக்கிறார். ஆனால் படம் வெளியான பொழுது இயக்குனரை கண்டு கொள்ளாமல் அவரை டீலில் விட்டு விட்டார். இதனால் சிம்பு, இவருக்கு செய்த நம்பிக்கை துரோகத்தால் எங்கே போனார் என்று தெரியாமல் மாயமாக மறைந்து விட்டார்.

- Advertisement -

Read more

Local News