Thursday, April 11, 2024

பார்த்திபனின், ’52 ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு..’: யாருடைய கதை?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வித்தியாசமான முயற்சிகளை தொடர்ந்து எடுத்து அனைவரையும் கவர்ந்து வரும், பார்த்திபன்  கடந்த ஆண்டு, ‘இரவின் நிழல்’ திரைப்படத்தை அளித்தார். ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், சினிமா ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக அமைந்தது.  வசூல் ரீதியாக வெற்றி பெற்றதோடு, பல்வேறு விருதுகளையும் வென்றது.

தற்போது பார்த்திபன் தனது அடுத்த படத்தின் பெயர், , ’52 ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு’ என அறிவித்து உள்ளார்.

வழக்கம்போலவே அவரது இந்த புதிய படமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக, புதிய படத்திற்கான தலைப்பை யூகியுங்கள் என தனது சமூகவலைதள பக்கத்தில் சில நாட்களுக்கு முன் பதிவிட்டு இருந்தார். அதில் ஒரு புத்தகத்தின் பக்கம் இருந்தது.

அது, , ‘ஜனனி’ என்ற தலைப்பிலான சிறுகதைத் தொகுப்பு. அது, மறைந்த எழுத்தாளரான, லா.ச.ராமாமிருதம் எழுதிய சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு.

ஆகவே லா.ச.ரா.வின் கதை ஒன்றை பார்த்திபன் படமாக்குகிறாரா அல்லது படத்தின் காட்சி ஒன்றில் இந்த புத்தகம் இடம் பெறுகிறதா என்கிற ஆர்வம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

- Advertisement -

Read more

Local News