Thursday, April 11, 2024

பொங்கல்:  இந்தியன் 2- வுடன் மோதத் தயாராகும் இரு படங்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சற்றும் எதிர்பாராத வகையில் வரும் பொங்கலுக்கு மூன்று பெரிய தலைகளின் படங்கள் நேருக்கு நேராக மோதிக் கொள்கின்றன.இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்ட விடுதலை படத்தின் முதல் பாகம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவரவேற்பை பெற்றது. இதனால் இரண்டாம் பாகத்தை, பொங்கல் பண்டிகைக்கு பெரிய தலைகள் ரிலீஸ் ஆகும் படங்களோடு நேருக்கு நேராக மோதிக்கொள்ள போகிறது.

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கண்டம் விட்டு கண்டம் தாண்டி ஆப்பிரிக்கா, தைவான் போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்டு கொண்டிருக்கும் இந்தியன் 2 வரும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய பட குழு திட்டமிட்டுள்ளது. அதேபோல் 10 மொழிகளில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் கங்குவா படமும் பொங்கலுக்கு தான் ரிலீஸ் ஆகிறது.

பிரம்மாண்டமாக 3டி எஃபெக்டில் உருவாகி வரும் கங்குவா படத்தின் மூலம் இன்னொரு உலகத்தையே சிறுத்தை சிவா ரசிகர்களுக்கு காட்டப் போகிறார். இவ்வாறு கமலஹாசனின் இந்தியன் 2 மற்றும் சூர்யாவின் கங்குவா போன்ற இரண்டு பவர்ஃபுல்லான படங்களுடன் சூரியின் விடுதலை 2 படமும் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டு இருக்கின்றனர்.

- Advertisement -

Read more

Local News