Thursday, April 11, 2024

இந்த வாரம் ஓடிடி-யில் வெளிவர இருக்கும்  படங்கள்..

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

திரையரங்குகளில் வெளியான கொஞ்ச நாட்களுக்கு பிறகு அந்தப் படத்தை ஓடிடி மூலமாக வெளியிட்டு வருகிறார்கள். அப்படி இந்த வாரம் வெளிவர இருக்கும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் பற்றி பார்க்கலாம்.

ஃபர்ஹானா: நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஜித்தன் ரமேஷ், செல்வராகவன் ஆகியோர் நடிப்பில்,மே மாதம் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது இப்படம். பல எதிர்ப்புகளையும் தாண்டி பாஸிட்டிவ் விமர்சனங்களை பெற்று வந்தது. இத்திரைப்படம் சோனி லிவ் தளத்தில் வெளியாக இருக்கிறது.

காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்:   முத்தையா இயக்கத்தில் ஆர்யா, சித்தி இத்னானி, பிரபு ஆகியோர் நடிப்பில் கடந்த மாதம் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.

டக்கர்: கார்த்திக் ஜி க்ரிஷ் இயக்கத்தில் சித்தார்த், திவ்யான்ஷா கௌஷிக், விக்னேஷ், யோகி பாபு இவர்கள் நடிப்பில் கடந்த மாதம் 9 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது. இப்படம் ரசிகர்களிடமிருந்து எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. அத்துடன் பாக்ஸ் ஆபிஸில் பெரிய ஏமாற்றமாக அமைந்தது. தற்போது இப்படம் நெட்ஃபிக்ஸ்-யில்  வெளிவர இருக்கிறது.

அடுத்ததாக திரையரங்குகளில் வெளிவரும் படங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ அதேபோல வெப் சீரிஸ்களிலும் நல்ல படங்கள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் அமேசான் பிரைமின் ஒரிஜினல் சீரியஸான “ஸ்வீட் காரம் காபி” இந்த வாரம் வெளிவர இருக்கிறது. இதில் லட்சுமி,மதுபாலா, வம்சி கிருஷ்ணா ஆகியோர் நடித்திருக்கிறார்கள், இப்படம் பேமிலி செண்டிமெண்ட் படமாக வந்திருக்கிறது, இந்த வெப் சீரிஸ் அமேசான் ஓடிடி-யில் நாளை வெளிவர இருக்கிறது.

மேலும் ஆங்கிலத்தில் 65 மூவிஸ், தி அவுட் லாஸ், கோல்ட் பிரிக் ஆகிய திரைப்படங்கள் நெட்ஃபிக்ஸ்-யில் வெளியாக இருக்கிறது.

- Advertisement -

Read more

Local News