Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
shooting – Touring Talkies https://touringtalkies.co Mon, 29 Jan 2024 03:04:16 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png shooting – Touring Talkies https://touringtalkies.co 32 32  ‘தலைவர் 171’:  ஷூட்டிங் எங்கே.. ரிலீஸ் எப்போது? https://touringtalkies.co/super-star-rajinikanths-thalaivar171-where-is-the-shooting-when-is-the-release/ Mon, 29 Jan 2024 03:04:16 +0000 https://touringtalkies.co/?p=39515 ஐஸ்வர்யா இயக்கத்தில், ரஜினியின் ‘லால் சலாம்’ படம் இன்னும் சில நாட்களில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. சாகவுள்ளது.  இதற்கிடையே டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதத்திற்குள் நிறைவடையும் என தெரிகிறது.  அடுத்ததாக தலைவர் 171 படத்தில் லோகேஷ் கனகராஜூடன் இணையவுள்ளார் ரஜினிகாந்த். இது  அதிரடி ஆக்ஷன் படமாக உருவாக இருப்பதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்து உள்ளார். இந்தப் படத்தின் ஷூட்டிங் வரும் ஏப்ரல் மாதத்தில் துவங்கும் […]

The post  ‘தலைவர் 171’:  ஷூட்டிங் எங்கே.. ரிலீஸ் எப்போது? appeared first on Touring Talkies.

]]>
ஐஸ்வர்யா இயக்கத்தில், ரஜினியின் ‘லால் சலாம்’ படம் இன்னும் சில நாட்களில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. சாகவுள்ளது.  இதற்கிடையே டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதத்திற்குள் நிறைவடையும் என தெரிகிறது.  அடுத்ததாக தலைவர் 171 படத்தில் லோகேஷ் கனகராஜூடன் இணையவுள்ளார் ரஜினிகாந்த். இது  அதிரடி ஆக்ஷன் படமாக உருவாக இருப்பதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்து உள்ளார்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் வரும் ஏப்ரல் மாதத்தில் துவங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

படத்தின் முதல் ஷெட்யூல் வெளிநாட்டில் எடுக்கப்பட உள்ளதாக படக்குழு சார்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அனிருத் இசையமைக்கவுள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. படம் அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post  ‘தலைவர் 171’:  ஷூட்டிங் எங்கே.. ரிலீஸ் எப்போது? appeared first on Touring Talkies.

]]>
மணிரத்னம் – கமலின் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு ஆரம்பம் https://touringtalkies.co/kamal-haasan-maniratnam-thug-life-shooting-started/ Wed, 24 Jan 2024 02:15:01 +0000 https://touringtalkies.co/?p=39368 ‘நாயகன்’ படத்துக்கு பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் மீண்டும் இணையும் படம், ‘தக் லைஃப்’. இதில் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜு ஜார்ஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். கமலின் 234-வது படமான இதை ரெட் ஜெயன்ட் மூவிஸ், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இதன் புரமோ வீடியோ அண்மையில் வெளியாகி வரவேற்பைப் […]

The post மணிரத்னம் – கமலின் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு ஆரம்பம் appeared first on Touring Talkies.

]]>
‘நாயகன்’ படத்துக்கு பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் மீண்டும் இணையும் படம், ‘தக் லைஃப்’. இதில் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜு ஜார்ஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

கமலின் 234-வது படமான இதை ரெட் ஜெயன்ட் மூவிஸ், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இதன் புரமோ வீடியோ அண்மையில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கியது. இதற்கான அப்டேட்டை ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தனது சமூகவலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளது. விரைவில் அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழு ஒவ்வொன்றாக வெளியிடும் என்று தெரிகிறது.

இப்படத்தைத் தவிர ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ மற்றும் ‘இந்தியன் 3’, ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படம், சண்டை இயக்குநர்கள் அன்பறிவ் இயக்கத்தில் ஒரு புதிய படம் ஆகிய படங்களில் கமல்ஹாசன் கவனம் செலுத்தி வருகிறார்.

The post மணிரத்னம் – கமலின் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு ஆரம்பம் appeared first on Touring Talkies.

]]>
அஜித் –த்ரிஷா: அசர்பைஜான் சூட்டிங் புகைப்படம் ரிலீஸ்! https://touringtalkies.co/ajith-trisha-azerbaijan-shooting-photo-release/ Sun, 31 Dec 2023 01:27:19 +0000 https://touringtalkies.co/?p=39347 நடிகர் அஜித் மற்றும் திரிஷா முன்னதாக சில படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளனர். மங்காத்தா உள்ளிட்ட படங்களில் இவர்களது கெமிஸ்ட்ரி மிகச்சிறப்பான கமெண்ட்களை பெற்றுள்ளன. இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் இருவரும் தற்போது விடாமுயற்சி படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். இந்தப் படத்தின் சூட்டிங் அசர்பைஜானில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் முதல்கட்ட சூட்டிங்கை தொடர்ந்து சில தினங்கள் படக்குழுவினர் இடைவெளி எடுத்துக் கொண்டு சென்னை திரும்பினர். இதையடுத்து அஜித், திரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் மீண்டும் அசர்பைஜான் […]

The post அஜித் –த்ரிஷா: அசர்பைஜான் சூட்டிங் புகைப்படம் ரிலீஸ்! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் அஜித் மற்றும் திரிஷா முன்னதாக சில படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளனர். மங்காத்தா உள்ளிட்ட படங்களில் இவர்களது கெமிஸ்ட்ரி மிகச்சிறப்பான கமெண்ட்களை பெற்றுள்ளன. இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் இருவரும் தற்போது விடாமுயற்சி படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். இந்தப் படத்தின் சூட்டிங் அசர்பைஜானில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் முதல்கட்ட சூட்டிங்கை தொடர்ந்து சில தினங்கள் படக்குழுவினர் இடைவெளி எடுத்துக் கொண்டு சென்னை திரும்பினர். இதையடுத்து அஜித், திரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் மீண்டும் அசர்பைஜான் புறப்பட்டு சென்றனர்.

விமானநிலையத்தில் இருந்து இவர்கள் அசர்பைஜான் புறப்பட்டு சென்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. அசர்பைஜானில் அஜித், அர்ஜூன் இணைந்த கார் சேஸிங் காட்சிகளின் சூட்டிங் படமாக்கப்பட்டன. இதன்போது நடிகை திரிஷா சென்னை திரும்பினார். டொவினோ தாமசுடன் திரிஷா இணைந்துள்ள படத்தின் சூட்டிங்கில் அவர் பங்கேற்றார். இந்த சூட்டிங்கின் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி ரசிகக்ளை உற்சாகப்படுத்தியுள்ளன. இதையடுத்து ஜனவரி முதல் வாரத்தில் மீண்டும் விடாமுயற்சி சூட்டிங்கில் திரிஷா இணையவுள்ளார்.

இதனிடையே புத்தாண்டு மற்றும் தன்னுடைய மகளின் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்காக அஜித்தும் தற்போது விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கிலிருந்து கேப் எடுத்துக் கொண்டு லண்டன் சென்றுள்ளார். அவரும் ஜனவரி முதல் வாரத்தில் மீண்டும் சூட்டிங்கில் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே அசர்பைஜான் சூட்டிங்கின்போது அஜித் மற்றும் திரிஷா இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை அதிகமாக கவர்ந்து அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் படத்திற்காக ஸ்லிம் லுக்கில் அஜித் மாறியுள்ள நிலையில் இந்த ஜோடி மிகப்பெரிய ஹிட் கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

நடிகை திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டில் பொன்னியின் செல்வன் 2 மற்றும் லியோ படங்கள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தன. இந்தப் படங்களின் வரவேற்பை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் திரிஷா கமிட்டாகி வருகிறார். தற்போது அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்துவரும் திரிஷா, அடுத்ததாக டொவினோ தாமசுடன் இணைந்து படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக பாலிவுட்டிலும் சல்மான் கான் -விஷ்ணு வர்தன் கூட்டணியில் உருவாகவுள்ள படத்திலும் கமிட்டாகியுள்ளார். தன்னுடைய ரீ என்ட்ரியை மிகவும் சிறப்பாக அமைத்துள்ளார் திரிஷா.

The post அஜித் –த்ரிஷா: அசர்பைஜான் சூட்டிங் புகைப்படம் ரிலீஸ்! appeared first on Touring Talkies.

]]>
துப்பாக்கி சூடு: விஜய் பட வில்லனை தேடும் போலீஸ்! https://touringtalkies.co/shooting-police-looking-for-vijay-movie-villain/ Thu, 07 Dec 2023 03:57:11 +0000 https://touringtalkies.co/?p=38600 விஜய் நடித்த பத்ரி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பூபிந்தர் சிங். இந்தியில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும்  பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். இவர்.   உத்தர பிரதேசம் பிஜ்னோர் பகுதியில் குடியிருக்கிறார். இவருக்கும் அருகில் இருக்கும் குர்தீப் சிங் என்பவருக்கும் மரம் தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது. குர்தீப் சிங்கின் தோட்டம் பூபிந்தர் சிங் இல்லத்திற்கு அருகில் இருப்பதால், தோட்டத்தில் இருக்கும் யூகலிப்டஸ் மரம் வெட்டுவது தொடர்பாக பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. பிரச்சனை முற்றிய நிலையில் […]

The post துப்பாக்கி சூடு: விஜய் பட வில்லனை தேடும் போலீஸ்! appeared first on Touring Talkies.

]]>
விஜய் நடித்த பத்ரி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பூபிந்தர் சிங். இந்தியில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும்  பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். இவர்.

 

உத்தர பிரதேசம் பிஜ்னோர் பகுதியில் குடியிருக்கிறார். இவருக்கும் அருகில் இருக்கும் குர்தீப் சிங் என்பவருக்கும் மரம் தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது. குர்தீப் சிங்கின் தோட்டம் பூபிந்தர் சிங் இல்லத்திற்கு அருகில் இருப்பதால், தோட்டத்தில் இருக்கும் யூகலிப்டஸ் மரம் வெட்டுவது தொடர்பாக பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. பிரச்சனை முற்றிய நிலையில்  பூபிந்தர் சிங் மற்றும் அவரது உதவியாளர்களும் உரிமம் பெற்ற ரிவால்வர் மற்றும் சட்டவிரோத துப்பாக்கியுடன் குர்தீப் சிங்கின் குடும்பத்தினரை சுட்டுள்ளனர்.

 

அதில் குர்தீப் சிங் மகன் கோவிந்த் (23) உயிரிழந்தார். மேலும் குர்தீப் சிங், அவரது மனைவி மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் உயிருக்கு ஆபத்தான முறையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து துப்பாக்கி சூடு சம்பவத்தை அறிந்த டிஐஜி, பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து தகவல்களை பெற்று பூபிந்தர் சிங் மற்றும் அவரது உதவியாளர்கள் 4 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்தார். மற்றவர்களை தேடிவருவதாக கூறியுள்ளனர்.

The post துப்பாக்கி சூடு: விஜய் பட வில்லனை தேடும் போலீஸ்! appeared first on Touring Talkies.

]]>
பிரபல மலையாள நடிகர் ஆசிப் அலிக்கு படப்பிடிப்பில் விபத்து.! https://touringtalkies.co/famous-malayalam-actor-asif-ali-had-an-accident-while-shooting/ Sat, 25 Nov 2023 03:18:35 +0000 https://touringtalkies.co/?p=38245 பிரபல மலையாள நடிகர் ஆசிப் அலி. மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர், இப்போது ரோஹித் வி.எஸ் இயக்கும் ‘டிட்கி டக்கா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் வாமிகா கபி, ஹரிஸ்ரீ அசோகன், லுக்மேன், சஞ்சனா நடராஜ், சந்தோஷ் பிரதாப் உட்பட பலர் நடிக்கின்றனர். ஆக்‌ஷன் படமான இதன் சண்டைக் காட்சி கடந்த வியாழக்கிழமை கொச்சியில் படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக ஆசிப் அலியின் முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் […]

The post பிரபல மலையாள நடிகர் ஆசிப் அலிக்கு படப்பிடிப்பில் விபத்து.! appeared first on Touring Talkies.

]]>
பிரபல மலையாள நடிகர் ஆசிப் அலி. மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர், இப்போது ரோஹித் வி.எஸ் இயக்கும் ‘டிட்கி டக்கா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் வாமிகா கபி, ஹரிஸ்ரீ அசோகன், லுக்மேன், சஞ்சனா நடராஜ், சந்தோஷ் பிரதாப் உட்பட பலர் நடிக்கின்றனர். ஆக்‌ஷன் படமான இதன் சண்டைக் காட்சி கடந்த வியாழக்கிழமை கொச்சியில் படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக ஆசிப் அலியின் முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவர்கள் சில வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post பிரபல மலையாள நடிகர் ஆசிப் அலிக்கு படப்பிடிப்பில் விபத்து.! appeared first on Touring Talkies.

]]>
தொடங்கியது சிரஞ்சீவி நடிக்கும் ‘மெகா156’ படப்பிடிப்பு..! https://touringtalkies.co/the-shooting-of-chiranjeevis-mega-156-has-started/ Fri, 24 Nov 2023 01:34:15 +0000 https://touringtalkies.co/?p=38217 முன்னணி தயாரிப்பு நிறுவனமான UV கிரியேஷன்ஸின் கீழ் பிம்பிசாரா புகழ் இயக்குநர் வசிஷ்டாவுடன் மெகாஸ்டார் சிரஞ்சீவி இணையும் மெகா ஃபேன்டஸி சாகச திரைப்படம் ’மெகா156’ திரைப்படம், தசரா விழாவன்று பெரும் கொண்டாட்டமாக துவங்கியது. இந்நிலையில் நேன்று, இந்த பிரம்மாண்டமான திரைப்படத்தின் படப்பிடிப்பை, படக்குழுவினர் தொடங்கியுள்ளனர். படப்பிடிப்பில் கிளாப் போர்டை டைரக்டர் மாருதி அவர்கள் அடித்து துவக்கி வைக்க, படக்குழுவினர் படத்தின் 9 வது காட்சியை படமாக்கினர். புகைப்படத்தின் பின்னணியில் அடர்ந்த காட்டை நாம் காணலாம். மேலும் படப்பிடிப்பின் […]

The post தொடங்கியது சிரஞ்சீவி நடிக்கும் ‘மெகா156’ படப்பிடிப்பு..! appeared first on Touring Talkies.

]]>
முன்னணி தயாரிப்பு நிறுவனமான UV கிரியேஷன்ஸின் கீழ் பிம்பிசாரா புகழ் இயக்குநர் வசிஷ்டாவுடன் மெகாஸ்டார் சிரஞ்சீவி இணையும் மெகா ஃபேன்டஸி சாகச திரைப்படம் ’மெகா156’ திரைப்படம், தசரா விழாவன்று பெரும் கொண்டாட்டமாக துவங்கியது. இந்நிலையில் நேன்று, இந்த பிரம்மாண்டமான திரைப்படத்தின் படப்பிடிப்பை, படக்குழுவினர் தொடங்கியுள்ளனர்.

படப்பிடிப்பில் கிளாப் போர்டை டைரக்டர் மாருதி அவர்கள் அடித்து துவக்கி வைக்க, படக்குழுவினர் படத்தின் 9 வது காட்சியை படமாக்கினர். புகைப்படத்தின் பின்னணியில் அடர்ந்த காட்டை நாம் காணலாம். மேலும் படப்பிடிப்பின் முதல் ஷெட்யூலில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி இணைந்துள்ளார்.

அறிவிப்பு போஸ்டரே பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது. பின்னர், இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெளியிடப்பட்ட மற்ற இரண்டு போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில்  எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விக்ரம், வம்சி மற்றும் பிரமோத் ஆகியோர் இணைந்து பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்திற்கு  எம்எம் கீரவாணி இசையமைக்க, சோட்டா கே நாயுடு ஒளிப்பதிவு செய்கிறார்.

சாய் மாதவ் புர்ரா வசனங்களில்  கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் மற்றும் சந்தோஷ் காமிரெட்டி எடிட்டர்களாக பணியாற்றவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post தொடங்கியது சிரஞ்சீவி நடிக்கும் ‘மெகா156’ படப்பிடிப்பு..! appeared first on Touring Talkies.

]]>
ஒரே இடத்தில் “இந்தியன் 2”, “தலைவர்170”, படப்பிடிப்பு ! https://touringtalkies.co/indian-2-leader170-shooting-at-one-place/ Fri, 24 Nov 2023 01:07:45 +0000 https://touringtalkies.co/?p=38178   லைகா புரொடக்சன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படமும், லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் தலைவர் 170 படமும் சென்னையில் ஒரே அரங்கில் அருகருகே நடைபெற, அங்கு பல வருடங்களுக்குப் பிறகு ஒஇடத்தில் படப்பிடிப்பில் சந்தித்து மாபெரும் இரு துருவங்கள் தங்கள் அன்பைப் பரிமாறிக் கொண்டனர் . கமல்ஹாசனின் நடிப்பில், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், உலகெங்கும் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் “இந்தியன் 2” லைகா புரொடக்சன்ஸ் சுபாஸ்கரன் […]

The post ஒரே இடத்தில் “இந்தியன் 2”, “தலைவர்170”, படப்பிடிப்பு ! appeared first on Touring Talkies.

]]>
 

லைகா புரொடக்சன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படமும், லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் தலைவர் 170 படமும் சென்னையில் ஒரே அரங்கில் அருகருகே நடைபெற, அங்கு பல வருடங்களுக்குப் பிறகு ஒஇடத்தில் படப்பிடிப்பில் சந்தித்து மாபெரும் இரு துருவங்கள் தங்கள் அன்பைப் பரிமாறிக் கொண்டனர் .

கமல்ஹாசனின் நடிப்பில், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், உலகெங்கும் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் “இந்தியன் 2” லைகா புரொடக்சன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகிவருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டூடியோ அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அருகில் இருக்கும் மற்றொரு அரங்கில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் த செ ஞானவேல் இயக்கத்தில் உருவாகும், தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பும் அங்குத் நடைபெறுகிறது.


கமல்ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பு நடப்பதை அறிந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு கமலை சந்திக்க வருவதாகத் தெரிவித்துள்ளார். இதனையறிந்த  கமல் “என் நண்பனைச் சந்திக்க நானே வருகிறேன்” என காலை 8 மணிக்கே உடனடியாக தலைவர் 170 ஷீட்டிங் ஸ்பாட்டிற்கு விசிட் அடித்து, ரஜினிக்கு சர்ப்ரைஸ் தந்துள்ளார். கமல்ஹாசனைக் கண்ட  ரஜினி மகிழ்ச்சியில், அவரை கட்டித்தழுவிக் கொண்டார். இருவரும் தங்கள் அன்பைப் பரிமாறிக்கொண்டனர்.

இந்தியத் திரையுலகின் மாபெரும் உச்ச நட்சத்திரங்களின் இந்த நட்பும், அவர்களுக்கிடையேயான அன்பும், படப்பிடிப்பில் இருந்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக பாபா, பஞ்சதந்திரம் படங்கள் இதே இடத்தில் ஷீட்டிங் நடைபெற்ற போது, இருவரும் சந்தித்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இருவரும் ஒரே படப்பிடிப்பு தளத்தில். சந்தித்துள்ளனர்.

The post ஒரே இடத்தில் “இந்தியன் 2”, “தலைவர்170”, படப்பிடிப்பு ! appeared first on Touring Talkies.

]]>
ஷூட்டிங்கில் நடந்த அந்த சம்பவம்!: சொல்கிறார் குமாரி சச்சு! https://touringtalkies.co/kadhalikka-neramillai-interesting-things-that-happened-during-the-shooting-kumari-sachu/ Sun, 01 Oct 2023 04:07:33 +0000 https://touringtalkies.co/?p=36790 sதமிழ் ரசிகர்கள் மறக்கமுடியாத படங்களில் ஒன்று ஸ்ரீதர் இயக்கத்தில் உருவான காதலிக்க நேரமில்லை. ரவிச்சந்திரன், காஞ்சனா இருவருக்கும் இதுதான் முதல் படம். நாகேஷுடன் சச்சு நடித்த காட்சிகள் கூடுதலாக ரசிக்க வைத்தன. இந்த படத்தின் படப்பிடிப்பு அனுபவங்களை, டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் பகிர்ந்துள்ளார் நடிகை சச்சு. அவரது சுவாரஸ்யமான பேட்டையை முழுதும் பார்க்க, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

The post ஷூட்டிங்கில் நடந்த அந்த சம்பவம்!: சொல்கிறார் குமாரி சச்சு! appeared first on Touring Talkies.

]]>
sதமிழ் ரசிகர்கள் மறக்கமுடியாத படங்களில் ஒன்று ஸ்ரீதர் இயக்கத்தில் உருவான காதலிக்க நேரமில்லை.

ரவிச்சந்திரன், காஞ்சனா இருவருக்கும் இதுதான் முதல் படம். நாகேஷுடன் சச்சு நடித்த காட்சிகள் கூடுதலாக ரசிக்க வைத்தன.

இந்த படத்தின் படப்பிடிப்பு அனுபவங்களை, டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் பகிர்ந்துள்ளார் நடிகை சச்சு.

அவரது சுவாரஸ்யமான பேட்டையை முழுதும் பார்க்க, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

The post ஷூட்டிங்கில் நடந்த அந்த சம்பவம்!: சொல்கிறார் குமாரி சச்சு! appeared first on Touring Talkies.

]]>
தலைவர் 170:  ரஜினி பட ஷூட்டிங் எங்கே தெரியுமா? https://touringtalkies.co/thalaivar-170-when-is-rajini-shooting/ Wed, 27 Sep 2023 03:30:07 +0000 https://touringtalkies.co/?p=36654 ஜெயிலர் படத்தை அடுத்து ஞானவேல் இயக்கத்தில்இ தலைவர் 170 படத்தில்  நடிக்கிறார்   ரஜினிகாந்த். அந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் தான் இசை அமைக்கிறார். ஏற்கெனவே  சூர்யாவை வைத்து ஜெய்பீம் படத்தை இயக்கியவர் ஞானவேல். அது சீரியஸான படம். ஆகவே ரஜினி ரசிகர்கள்,  “ரஜினி மாஸ் ஹீரோ. அவருக்கு ஏற்ற அதிரடியான காட்சிகளை இவர் வைப்பாரா” என்று சந்தேகப்பட்டனர். இந்த நிலையில், ஜெய்பீம் படத்திலேயே சூர்யாவை வைத்து மாஸான சண்டை காட்சியை படமாக்கியிருக்கிறார் ஞானவேல். ஆனால் […]

The post தலைவர் 170:  ரஜினி பட ஷூட்டிங் எங்கே தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
ஜெயிலர் படத்தை அடுத்து ஞானவேல் இயக்கத்தில்இ தலைவர் 170 படத்தில்  நடிக்கிறார்   ரஜினிகாந்த். அந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் தான் இசை அமைக்கிறார்.

ஏற்கெனவே  சூர்யாவை வைத்து ஜெய்பீம் படத்தை இயக்கியவர் ஞானவேல். அது சீரியஸான படம்.

ஆகவே ரஜினி ரசிகர்கள்,  “ரஜினி மாஸ் ஹீரோ. அவருக்கு ஏற்ற அதிரடியான காட்சிகளை இவர் வைப்பாரா” என்று சந்தேகப்பட்டனர்.

இந்த நிலையில், ஜெய்பீம் படத்திலேயே சூர்யாவை வைத்து மாஸான சண்டை காட்சியை படமாக்கியிருக்கிறார் ஞானவேல். ஆனால் அந்த காட்சியை நீக்கிவிட்டார்கள்.

அந்த நீக்கப்பட்ட காட்சியை பார்த்தவர்கள் பிரமித்து போயிருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. ஆகவே  ஞானவேலால் மாஸ் காட்சிகளை இயக்க முடியும் என்பது இதன் மூலம் தெரிந்துவிட்டது.

இந்த நிலையில், படத்தின் ஷூட்டிங் திருவனந்த புரத்தில் நடக்க இருப்பதாக தகவல் பரவியது.

இது குறித்து டூரிங்  டாக்கீஸ் யு டியுப் சேனலில், நேயர் ஒருவர் கேட்டார். இதற்கு சித்ரா லட்சுமணன் பதில் அளித்துள்ளார். இவர், நடிகர், இயக்குநர்,  தயாரிப்பாளர், பத்திரிகையாளர் என பன்முகம் கொண்டவர் என்பதால் ஆதாரபூர்வமான தகவல்களை தெரிவித்து வருகிறார்.

தலைவர் 170 குறித்து அவர் கூறியது என்ன.. அறிய தெரிந்துகொள்ள கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

The post தலைவர் 170:  ரஜினி பட ஷூட்டிங் எங்கே தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
அஜித் – விஜய் படப்பிடிப்புகள் எப்போது தெரியுமா? https://touringtalkies.co/ajith-vidamuyarchi-and-vijay-68-movie-start-october/ Wed, 27 Sep 2023 03:16:08 +0000 https://touringtalkies.co/?p=36642 இந்த ஆண்டு ஆரம்பத்தில் விஜய் ‘வாரிசு’, அஜித் ‘துணிவு’ என இருவர் படங்களும் ஒரே நாளில் வெளியாகின. விஜய், அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘லியோ’ படத்தை முடித்து அடுத்த படத்துக்கு தயாராகிவிட்டார். லியோ அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஆனால் அஜித்தை பொறுத்தவரை அடுத்த படத்துக்கான நகர்வு தள்ளிப்போய்க்கொண்ட இருக்கிறது. இந்நிலையில் தனது பைக் டூர் பயணத்தை முடித்து வந்த அஜித் தற்போது ‘விடாமுயற்சி’ படத்துக்கு தயாராகியுள்ளார். தற்போது இருவரின் படங்களும் அக்டோபர் மாதம் […]

The post அஜித் – விஜய் படப்பிடிப்புகள் எப்போது தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
இந்த ஆண்டு ஆரம்பத்தில் விஜய் ‘வாரிசு’, அஜித் ‘துணிவு’ என இருவர் படங்களும் ஒரே நாளில் வெளியாகின.

விஜய், அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘லியோ’ படத்தை முடித்து அடுத்த படத்துக்கு தயாராகிவிட்டார். லியோ அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ஆனால் அஜித்தை பொறுத்தவரை அடுத்த படத்துக்கான நகர்வு தள்ளிப்போய்க்கொண்ட இருக்கிறது.

இந்நிலையில் தனது பைக் டூர் பயணத்தை முடித்து வந்த அஜித் தற்போது ‘விடாமுயற்சி’ படத்துக்கு தயாராகியுள்ளார். தற்போது இருவரின் படங்களும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் முதல் வாரம் தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு துபாயில் அக்டோபர் 4-ம் தேதி தொடங்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

இரண்டு படங்களின் படப்பிடிப்புகளுமே ஒரே நேரத்தில் துவங்க உள்ளதால், பட ரிலீஸும் ஒரே நேரத்தில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

 

The post அஜித் – விஜய் படப்பிடிப்புகள் எப்போது தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>