Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
case – Touring Talkies https://touringtalkies.co Mon, 25 Dec 2023 13:11:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png case – Touring Talkies https://touringtalkies.co 32 32 கௌதமி  மோசடி புகார்!  6 பேர் கைது! https://touringtalkies.co/gautami-bjp-azagappan-case-update/ Fri, 22 Dec 2023 02:02:18 +0000 https://touringtalkies.co/?p=39064 நடிகை கௌதமி பாஜகவில் இணைந்து பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் தனது ரூ. 25 கோடி மதிப்பிலான சொத்துகளை பாஜகவைச் சேர்ந்த அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து அபகரித்துவிட்டதாக மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில், “நான் திரைத்துறையில் சம்பாதித்த பணத்தின் மூலம் சில இடங்களில் நிலம் வாங்கினேன். கடந்த 2004 ஆம் ஆண்டு நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது, எனது மகளின் பராமரிப்பு செலவுக்காகவும், எனது மருத்துவச் […]

The post கௌதமி  மோசடி புகார்!  6 பேர் கைது! appeared first on Touring Talkies.

]]>
நடிகை கௌதமி பாஜகவில் இணைந்து பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் தனது ரூ. 25 கோடி மதிப்பிலான சொத்துகளை பாஜகவைச் சேர்ந்த அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து அபகரித்துவிட்டதாக மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரில், “நான் திரைத்துறையில் சம்பாதித்த பணத்தின் மூலம் சில இடங்களில் நிலம் வாங்கினேன். கடந்த 2004 ஆம் ஆண்டு நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது, எனது மகளின் பராமரிப்பு செலவுக்காகவும், எனது மருத்துவச் செலவுக்காகவும் அந்த இடங்களை விற்க முடிவு செய்தேன். அதற்கு பாஜகவைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் அழகப்பன் என்பவர் உதவி செய்வதாக கூறினார். அதனால் எனது சொத்துக்களை விற்கும் உரிமையை அவருக்கு கொடுத்தேன். அதற்காக என்னிடம் பல பத்திரங்களில் கையெழுத்து வாங்கினார். ஆனால் அதன் மூலம் போலி பத்திரங்களைத் தயார் செய்து, அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் எனது சொத்துக்களை அபகரித்துவிட்டனர். இது குறித்துக் கேட்டபோது எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்” என்று குற்றம்சாட்டியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து “25 ஆண்டுகாலமாக கட்சியில் இருந்து வருகிறேன். ஆனால் எனக்கு கட்சி துணை நிற்கவில்லை. ஆனால் அழகப்பனுக்கு பாஜகவில் இருக்கும் மூத்த நிர்வாகிகள் உதவி செய்கின்றனர்” என்று குற்றம்சாட்டிய கௌதமி, பாஜகவிலிருந்து விலகுவதாகத் தெரிவித்திருந்தார். இதையடுத்து கௌதமி கொடுத்த புகாரின் அடிப்படையில் பாஜக பிரமுகர் அழகப்பன், அவரது மனைவி நாச்சல் அழகப்பன், மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, பாஸ்கர், சதீஷ்குமார் ஆகிய 6 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் பல நாட்கள் தலைமறைவாக இருந்து வந்ததால், மூன்றுக்கும் மேற்பட்ட தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வந்தனர். மேலும் அவர்களின் இடங்களிலும் போலீஸார் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்கள் மற்றும் பணத்தை மீட்டனர். பின்பு லுக்கவுட் நோட்டீஸும் வழங்கப்பட்டது.

அதன் பிறகு குற்றம்சாட்டப்பட்டவர்கள் முன் ஜாமீன் கோரிய நிலையில் அது தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீஸார், கேரளா திருச்சூருக்கு சென்று 6 பேரை கைது செய்துள்ளனர். அவர்களை சென்னைக்கு அழைத்து வரும் நடவடிக்கைகளை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். நாளை எழும்பூர் நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

The post கௌதமி  மோசடி புகார்!  6 பேர் கைது! appeared first on Touring Talkies.

]]>
விஷாலுக்கு ஐகோர்ட் கிடுக்குப்பிடி! https://touringtalkies.co/madras-high-court-question-actor-vishal-in-lyca-case/ Sat, 14 Oct 2023 05:50:13 +0000 https://touringtalkies.co/?p=37131 நடிகர் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்துக்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனாக பெற்றார். ஒரு கட்டத்தில் லைகா நிறுவனம் இந்த கடனை ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அந்தத் தொகை முழுவதையும் விசால், திருப்பித் தரும்வரை,  அவரது  பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென்ற ஒப்பந்தம் போட்டது. இந்நிலைில், “ஒப்பந்தத்தை மீறி, தனது   ‘வீரமே வாகை சூடும்’ என்ற […]

The post விஷாலுக்கு ஐகோர்ட் கிடுக்குப்பிடி! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்துக்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனாக பெற்றார். ஒரு கட்டத்தில் லைகா நிறுவனம் இந்த கடனை ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அந்தத் தொகை முழுவதையும் விசால், திருப்பித் தரும்வரை,  அவரது  பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென்ற ஒப்பந்தம் போட்டது.

இந்நிலைில், “ஒப்பந்தத்தை மீறி, தனது   ‘வீரமே வாகை சூடும்’ என்ற படத்தை வெளியிட முயற்சிக்கிறார்”  என்று லைகா நிறுவனம் வழக்கு தொடுத்தது.

வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ரூ.15 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

மேலும் தீர்ப்பு வரும் வரை விஷால் தயாரிக்கும் படங்களை திரையரங்கங்கள் அல்லது ஓடிடி தளத்தில் வெளியிடக் கூடாது என தடையும் விதித்தது.

இந்நிலையில்,லைகா நிறுவனம் தரப்பில், “விசால் வங்கிக் கணக்கில் பணம் இருந்தும் வேண்டுமென்றே தங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தவில்லை.   அந்தத்  தொகையில் பாதியையாவது டெபாசிட் செய்ய உத்தரவிட வேண்டும்” என்று வாதிட்டார்.

விஷால் தரப்பு வழக்கறிஞர், இதுகுறித்து பதிலளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “பணத்தை ஏன் இன்னும் திரும்ப செலுத்தாமல் இருக்கிறீர்கள்? பணத்தை செலுத்த வேண்டியது தானே?” என  விசால் தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் நவம்பர் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

The post விஷாலுக்கு ஐகோர்ட் கிடுக்குப்பிடி! appeared first on Touring Talkies.

]]>
லதா ரஜினிகாந்த் மீதான மோசடி வழக்கு: விசாரிக்க நீதிமன்றம் அனுமதி https://touringtalkies.co/latha-rajinikanth-kochadaiyaan-issue-case-update/ Thu, 12 Oct 2023 05:15:53 +0000 https://touringtalkies.co/?p=37066 கடந்த 2014 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் செளந்தர்யா இயக்கத்தில் வெளியான படம் ‘கோச்சடையான்’. இப்படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ‘மீடியா ஒன் எண்டர்டெயிண்மெண்ட்’ நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனத்தைச் சேர்ந்த முரளி என்பவர் கோச்சடையான் படத்திற்காக ‘ஆட் பீரோ’ நிறுவனத்தைச் சேர்ந்த அபிர்சந்த் நஹாவர் என்பவரிடம் ரூ.6.2 கோடி கடன் பெற்றிருந்தார். இந்தக் கடன் தொடர்பாக முரளி தாக்கல் செய்த ஆவணங்களுக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதக் கையொப்பம் செய்திருந்தார். பின்பு முரளி கடனாகப் பெற்ற […]

The post லதா ரஜினிகாந்த் மீதான மோசடி வழக்கு: விசாரிக்க நீதிமன்றம் அனுமதி appeared first on Touring Talkies.

]]>
கடந்த 2014 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் செளந்தர்யா இயக்கத்தில் வெளியான படம் ‘கோச்சடையான்’. இப்படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ‘மீடியா ஒன் எண்டர்டெயிண்மெண்ட்’ நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனத்தைச் சேர்ந்த முரளி என்பவர் கோச்சடையான் படத்திற்காக ‘ஆட் பீரோ’ நிறுவனத்தைச் சேர்ந்த அபிர்சந்த் நஹாவர் என்பவரிடம் ரூ.6.2 கோடி கடன் பெற்றிருந்தார். இந்தக் கடன் தொடர்பாக முரளி தாக்கல் செய்த ஆவணங்களுக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதக் கையொப்பம் செய்திருந்தார்.

பின்பு முரளி கடனாகப் பெற்ற பணத்தைத் திருப்பித் தராததால் முரளி மற்றும் லதா ரஜினிகாந்த் மீது கடந்த 2015 ஆம் ஆண்டு பெங்களூரு மாநகர 6வது கூடுதல் முதன்மை நீதிமன்றத்தில் அபிர்சந்த் நஹாவர் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த அல்சூர் கேட் போலீஸார், லதா ரஜினிகாந்த் மீது இந்திய தண்டனை சட்டம் 196,199, 420, 463 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அந்த குற்றப்பத்திரிகையில் தன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக்கோரி லதா ரஜினிகாந்த் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், லதா ரஜினிகாந்த் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளில் 196, 199, 420 உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கப்படவில்லை எனக் கூறி அவர் மீது இருந்த 3 பிரிவுகளும் ரத்து செய்யப்பட்டன. மேலும் அவர் மீதான 463 பிரிவு குறித்து கீழமை நீதிமன்றம் விசாரிக்கலாம் என உத்தரவிட்டது. இதனையடுத்து லதா ரஜினிகாந்த் சார்பில் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மற்றும் தனக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை முழுமையாக ரத்து செய்யக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

The post லதா ரஜினிகாந்த் மீதான மோசடி வழக்கு: விசாரிக்க நீதிமன்றம் அனுமதி appeared first on Touring Talkies.

]]>
சிம்புவின் ‘கொரோனா குமார்’ விவகாரம்: 4.5 கோடியா ரூ.1 கோடியா? https://touringtalkies.co/simbus-corona-kumar-case-rs-4-5-crore-or-rs-1-crore/ Wed, 20 Sep 2023 01:41:04 +0000 https://touringtalkies.co/?p=36415 வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் கொரோனா குமார் என்ற பெயரில் படம் தயாரிக்க முடிவு செய்து, நடிகர் சிம்புவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த நிலையில், வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், ‘படத்தில் நடிப்பதற்காக சிம்புவுக்கு 9.5 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டு, 4.5 கோடி ரூபாய் முன்பணமாக கடந்த 2021-ம் ஆண்டு அளிக்கப்பட்டது; பணத்தை பெற்றுக்கொண்டு படப்பிடிப்புக்கு வராததால், ‘கொரோனா குமார்’ படத்தை முடித்து கொடுக்காமல் […]

The post சிம்புவின் ‘கொரோனா குமார்’ விவகாரம்: 4.5 கோடியா ரூ.1 கோடியா? appeared first on Touring Talkies.

]]>
வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் கொரோனா குமார் என்ற பெயரில் படம் தயாரிக்க முடிவு செய்து, நடிகர் சிம்புவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த நிலையில், வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதில், ‘படத்தில் நடிப்பதற்காக சிம்புவுக்கு 9.5 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டு, 4.5 கோடி ரூபாய் முன்பணமாக கடந்த 2021-ம் ஆண்டு அளிக்கப்பட்டது; பணத்தை பெற்றுக்கொண்டு படப்பிடிப்புக்கு வராததால், ‘கொரோனா குமார்’ படத்தை முடித்து கொடுக்காமல் மற்ற படங்களில் நடிக்க சிம்புவுக்கு தடை விதிக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு சிலம்பரசன் மற்றும் வேல்ஸ் நிறுவனம் இடையே போடப்பட்ட ஒப்பந்தம் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் ஒரு கோடி ரூபாய் மட்டுமே சிலம்பரசனுக்கு வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து, ஒப்பந்தத்தில் உள்ள படி, ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை செலுத்த சிலம்பரசனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிலம்பரசன் சார்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜரானார். அவர், ‘கொரோனா குமார் படத்துக்காக கடந்த 2021ம் ஆண்டு ஜூலை 16-ம் ஒப்பந்தம் போடப்பட்டது. அதில்,  ஓராண்டிற்குள் படம் தொடங்கவில்லை என்றால் முன் பணத்தை திரும்ப செலுத்த தேவையில்லை என குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆகவே ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டது. இந்த தகவலை மறைத்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.  சிம்பு  மீது தவறு இல்லாத நிலையில் ஒரு கோடி ரூபாயை திரும்ப செலுத்த தேவையில்லை’ என்று மனுதாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு, பதிலளிக்க வேல்ஸ் நிறுவனம் சார்பில் அவகாசம் கோரப்பட்டது. அக்டோபர் 6-ம் தேதி வரை அவகாசம் வழங்கிய நீதிபதி, ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை நடிகர் சிலம்பரசன் தாக்கல் செய்ய வேண்டுமா என்பது குறித்து அன்றைய தினம் ஆய்வு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

The post சிம்புவின் ‘கொரோனா குமார்’ விவகாரம்: 4.5 கோடியா ரூ.1 கோடியா? appeared first on Touring Talkies.

]]>
“இனி படங்களில் நடிக்கவே முடியாது!”:  ஷாலுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை! https://touringtalkies.co/mark-antony-release-issue-vishal-lyca-case-update/ Wed, 13 Sep 2023 03:24:24 +0000 https://touringtalkies.co/?p=36187 நடிகர் விஷால் நடிப்பது மட்டுமின்றி ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சார்பாக ‘கோபுரம் ஃபிலிம்ஸ்’ அன்புச்செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனாகப் பெற்றிருந்தார். பின்பு இந்த கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. இது தொடர்பாக லைகா நிறுவனம் விஷாலிடம் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டது. அந்த ஒப்பந்தத்தில் கடன்தொகையை முழுமையாகத் திருப்பிச் செலுத்தும் வரை விஷால் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமையும் லைகா […]

The post “இனி படங்களில் நடிக்கவே முடியாது!”:  ஷாலுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விஷால் நடிப்பது மட்டுமின்றி ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சார்பாக ‘கோபுரம் ஃபிலிம்ஸ்’ அன்புச்செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனாகப் பெற்றிருந்தார். பின்பு இந்த கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. இது தொடர்பாக லைகா நிறுவனம் விஷாலிடம் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டது. அந்த ஒப்பந்தத்தில் கடன்தொகையை முழுமையாகத் திருப்பிச் செலுத்தும் வரை விஷால் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமையும் லைகா நிறுவனத்திற்கு வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால் விஷால், கடன்தொகையை செலுத்தாமல் ‘வீரமே வாகை சூடும்’ படத்தை தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளில் வெளியிடும் பணிகளை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து அந்தப் படத்தை வெளியிடவும், சாட்டிலைட், ஓடிடி ஆகியவற்றின் உரிமைகளுக்குத் தடை விதிக்கக் கோரியும் உயர்நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ரூ. 21.29 கோடியில் ரூ. 15 கோடியை உயர் நீதிமன்றத்தில் விஷால் டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார் விஷால்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது, உயர்நீதிமன்றம். மேலும் தொகையை செலுத்தாவிட்டால் விஷால் பிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கும் படங்களைத் திரையரங்கம் அல்லது ஓடிடி தளத்தில் வெளியிடக்கூடாது என தடை விதிக்கப்படும் என்றும் உத்தரவு பிறப்பித்து விசாரணையை ஒத்திவைத்து.

அடுத்த விசாரணையில் லைகா நிறுவனம் சார்பில் நடிகர் விஷால் இன்னும் ரூ. 15 கோடியை நீதிமன்றத்துக்கு செலுத்தவில்லை என்றும், நீதிமன்றத்துக்கு தவறான தகவலை தந்துவருவதாகவும் குறிப்பிட்டு அவர் நடிப்பில் உருவாகி வருகிற 15ஆம் தேதி வெளியாகவுள்ள ‘மார்க்ஆண்டனி’ படத்துக்கு தடைவிதிக்க வேண்டுமென வாதிடப்பட்டது. பின்பு இந்த வழக்கு தொடர்பாக இன்று (12.09.2023) விஷாலை நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. மேலும் மார்க் ஆண்டனி படத்தை வெளியிடவும் தடை விதித்து, விசாரணையை தள்ளி வைக்கப்பட்டது.

நீதிபதியை உத்தரவின்படி இன்று விசாரணைக்கு நேரில் ஆஜரானார் விஷால். கடந்த 2021 ஜனவரி 1ஆம் தேதி முதல் இந்தாண்டு செப்டம்பர் வரையிலான விஷாலின் 4 வங்கி கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய விஷாலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அவருடைய குடும்ப உறவினர்களின் அசையும் சொத்துக்கள் அசையா சொத்துக்கள் உள்ளிட்ட விவரங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. விஷாலிடம், வங்கி கணக்கில் முரண் இருந்தால் எதிர்காலத்தில் படம் எதுவும் நடிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதி எச்சரித்துள்ளார். மேலும் மார்க் ஆண்டனி படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.

The post “இனி படங்களில் நடிக்கவே முடியாது!”:  ஷாலுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை! appeared first on Touring Talkies.

]]>
சட்டத்தையே மாற்றவைத்த மோகன்லால்! நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு! https://touringtalkies.co/mohanlal-to-appear-before-court-to-face-trial-in-ivory-possession-case/ Sun, 20 Aug 2023 23:19:50 +0000 https://touringtalkies.co/?p=35503 நடிகர் மோகன்லாலுக்குச் சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர், 2012-ம் ஆண்டு சோதனை நடத்தினர். அப்போது எர்ணாகுளத்தில் உள்ள அவர் வீட்டில் இருந்து 4 யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டன. அதை வருமான வரித்துறையினர், வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக மோகன்லால்,அவருக்கு யானை தந்தங்கள்கொடுத்த திருச்சூரைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், அப்போதைய கேரள வனத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணனை மோகன்லால் சந்தித்தார். இதைத் தொடர்ந்து சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு அவரிடம் […]

The post சட்டத்தையே மாற்றவைத்த மோகன்லால்! நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் மோகன்லாலுக்குச் சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர், 2012-ம் ஆண்டு சோதனை நடத்தினர். அப்போது எர்ணாகுளத்தில் உள்ள அவர் வீட்டில் இருந்து 4 யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டன. அதை வருமான வரித்துறையினர், வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

இதுதொடர்பாக மோகன்லால்,அவருக்கு யானை தந்தங்கள்கொடுத்த திருச்சூரைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், அப்போதைய கேரள வனத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணனை மோகன்லால் சந்தித்தார். இதைத் தொடர்ந்து சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு அவரிடம் மீண்டும் தந்தங்கள் ஒப்படைக்கப்பட்டன. இதனால் வனத்துறை வழக்கை ரத்து செய்தது.

‘மோகன்லால், தனது செல்வாக்கை வைத்து சட்டத்தைத் திருத்தவைத்து தப்பிவிட்டார்’ என அப்போது பல பத்திரிகைகள் எழுதின.

மேலும், மோகன்லால் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டதையும் தந்தம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டதையும் எதிர்த்து பவுலோஸ் என்பவர் பெரும்பாவூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கில் மோகன்லால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. யானை தந்தம் வைத்திருப்பதற்கான முறையான அனுமதி தன்னிடம் இருக்கிறது என்றும் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றத்தில் மோகன்லால் மனுதாக்கல் செய்தார். விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கின் இறுதி அறிக்கையை பெரும்பாவூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மோகன்லால் உட்பட 4 பேர் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்த பெரும்பாவூர் நீதிமன்றம் நவ.3-ம் தேதி அனைவரும் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

The post சட்டத்தையே மாற்றவைத்த மோகன்லால்! நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு! appeared first on Touring Talkies.

]]>
ரஜினி பட தயாரிப்பாளருக்கு சிறை தண்டனை! https://touringtalkies.co/rajini-kochadaiyaan-movie-case/ Fri, 11 Aug 2023 01:43:43 +0000 https://touringtalkies.co/?p=35205 கடந்த 2014 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் சவுந்தர்யா இயக்கத்தில் வெளியான படம் ‘கோச்சடையான்’. இப்படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ‘மீடியா ஒன் எண்டர்டெயிண்மெண்ட்’ நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனத்தை சேர்ந்த முரளி என்பவர் கோச்சடையான் படத்திற்காக ‘ஆட் பீரோ’ நிறுவனத்தைச் சேர்ந்த அபிர்சந்த் நஹாவர் என்பவரிடம் ரூ.6.2 கோடி கடன் பெற்றிருந்தார். லதா ரஜினிகாந்த் உத்தரவாதக் கையொப்பம் செய்திருந்தார். ஒரு கட்டத்தில் முரளி மனோகர், அபிர்சந்த் நஹாருக்கு கடனை திருப்பித் தருவதாக கூறி, ரூ.5 […]

The post ரஜினி பட தயாரிப்பாளருக்கு சிறை தண்டனை! appeared first on Touring Talkies.

]]>
கடந்த 2014 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் சவுந்தர்யா இயக்கத்தில் வெளியான படம் ‘கோச்சடையான்’. இப்படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ‘மீடியா ஒன் எண்டர்டெயிண்மெண்ட்’ நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனத்தை சேர்ந்த முரளி என்பவர் கோச்சடையான் படத்திற்காக ‘ஆட் பீரோ’ நிறுவனத்தைச் சேர்ந்த அபிர்சந்த் நஹாவர் என்பவரிடம் ரூ.6.2 கோடி கடன் பெற்றிருந்தார். லதா ரஜினிகாந்த் உத்தரவாதக் கையொப்பம் செய்திருந்தார்.

ஒரு கட்டத்தில் முரளி மனோகர், அபிர்சந்த் நஹாருக்கு கடனை திருப்பித் தருவதாக கூறி, ரூ.5 கோடிக்கான காசோலை கொடுத்தார். அது பணமின்றி திரும்பியது.

இதையடுத்து அவர் மீது அபிர்சந்த் நஹாவர் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார். இதில், முரளி மனோகருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், வட்டியுடன் சேர்த்து 7 கோடியே 70 லட்சம் தரவும்  நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து முரளி மனோகர் சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.தஸ்னீம், முரளிமனோகரின் மேல் முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து அவருக்கு வழங்கப்பட்ட 6 மாத சிறைத்தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தார். மேலும் அபிர்சந்த் நஹாருக்கு வழங்க வேண்டிய ரூ.7.70 கோடியை வழங்கவும் முரளி மனோகருக்கு உத்தரவிட்டுள்ளார்.

The post ரஜினி பட தயாரிப்பாளருக்கு சிறை தண்டனை! appeared first on Touring Talkies.

]]>
விஜய் மன்ற நிர்வாகி ‘அந்த’ வழக்கில் கைது! ரசிகர்கள் அதிர்ச்சி! https://touringtalkies.co/vijay-mandra-administrator-arrested-in-adultery-case/ Mon, 24 Jul 2023 02:22:24 +0000 https://touringtalkies.co/?p=34670 விஜய் மக்கள் இயக்க நிர்வாகி விபச்சார விடுதி நடத்தி வந்த தகவல் இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. திருச்சி வயலூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்.   கருமண்டபம் ர் பகுதியில் சைன் என்ற பெயரில் ஸ்பா நடத்தி வருகிறார். இங்கு விபசாரம் நடப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து சோதனை நடந்தது. அங்கு  லட்சுமி தேவி என்பவரும் மேலும் இரண்டு பெண்களும் இருந்தனர். விசாரணையில், உரிமை எதுவும் பெறாமல் பல ஆண்டுகளாக இதை நடத்தி வருவதும் அந்த  இரண்டு […]

The post விஜய் மன்ற நிர்வாகி ‘அந்த’ வழக்கில் கைது! ரசிகர்கள் அதிர்ச்சி! appeared first on Touring Talkies.

]]>
விஜய் மக்கள் இயக்க நிர்வாகி விபச்சார விடுதி நடத்தி வந்த தகவல் இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

திருச்சி வயலூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்.   கருமண்டபம் ர் பகுதியில் சைன் என்ற பெயரில் ஸ்பா நடத்தி வருகிறார். இங்கு விபசாரம் நடப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து சோதனை நடந்தது.

அங்கு  லட்சுமி தேவி என்பவரும் மேலும் இரண்டு பெண்களும் இருந்தனர்.

விசாரணையில், உரிமை எதுவும் பெறாமல் பல ஆண்டுகளாக இதை நடத்தி வருவதும் அந்த  இரண்டு பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும்  தெரியவந்தது. இதையடுத்து அந்த இரண்டு பெண்களை மீட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தார்கள்.

மேலும் மேலாளர் லட்சுமி தேவியையும், உரிமையாளர் செந்திலையும் கைது செய்தனர்.

செந்தில் திருச்சியில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளராக இருக்கிறார்.  சமீபத்தில் சென்னையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற மாணவ மாணவிகளுக்கு விருது வழங்க விழாவிலும் கலந்து கொண்டு இருக்கிறார்.

இந்த தகவல் சமூகவலைதளத்தில் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

The post விஜய் மன்ற நிர்வாகி ‘அந்த’ வழக்கில் கைது! ரசிகர்கள் அதிர்ச்சி! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் மீதுதாக்குதல்:  பா.ஜ.க. பிரமுகர் கைது https://touringtalkies.co/actor-vengatesh-case-bjp-member-arrest/ Sat, 22 Jul 2023 23:52:10 +0000 https://touringtalkies.co/?p=34625 சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமாகி, திரையுலகிலும் ‘கருப்பசாமி குத்தகைதாரர்’, ‘வெடிகுண்டு முருகேசன்’, ‘சீடன்’ போன்ற படங்களில் நடித்தவர் வெங்கடேஷ் ஆறுமுகம். ரைஸ் அட்வர்டைசிங் என்ற விளம்பர நிறுவனத்தையும் நடத்தி வந்தார். இதனிடையே இவருக்கும், இவரது மனைவி பானுமதிக்கும் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இருப்பினும் ஒரே வீட்டில் இருவரும் வாழ்ந்து வருவதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், மர்ம நபர்களால் வெங்கடேஷ் கடுமையாக தாக்கப்பட்டார். காவல்துறை விசாரணையில், இறங்கியது. இதைத் […]

The post நடிகர் மீதுதாக்குதல்:  பா.ஜ.க. பிரமுகர் கைது appeared first on Touring Talkies.

]]>
சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமாகி, திரையுலகிலும் ‘கருப்பசாமி குத்தகைதாரர்’, ‘வெடிகுண்டு முருகேசன்’, ‘சீடன்’ போன்ற படங்களில் நடித்தவர் வெங்கடேஷ் ஆறுமுகம். ரைஸ் அட்வர்டைசிங் என்ற விளம்பர நிறுவனத்தையும் நடத்தி வந்தார். இதனிடையே இவருக்கும், இவரது மனைவி பானுமதிக்கும் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இருப்பினும் ஒரே வீட்டில் இருவரும் வாழ்ந்து வருவதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில், மர்ம நபர்களால் வெங்கடேஷ் கடுமையாக தாக்கப்பட்டார். காவல்துறை விசாரணையில், இறங்கியது.

இதைத் தொடர்ந்து  பானுமதி, ராஜ்குமார், மோகன், வைரமுத்து, ஆனந்தராஜ், மலைசாமி ஆகிய ஆறு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த டிரைவர் துளசி மற்றும் பா.ஜ.க. பிரமுகர் தமிழ்சங்கு ஆகிய 2 பேரையும் தற்போது போலீசார் கைது செய்துள்ளனர்.

The post நடிகர் மீதுதாக்குதல்:  பா.ஜ.க. பிரமுகர் கைது appeared first on Touring Talkies.

]]>
ஆதிபுருஷ்’ படத்துக்கு தடை விதித்தால் நல்லது!: உயர் நீதிமன்றம் https://touringtalkies.co/adipurush-case-update/ Wed, 28 Jun 2023 03:59:24 +0000 https://touringtalkies.co/?p=33858 ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி உள்ள படம் ‘ஆதிபுருஷ்’ . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். கடந்த 16-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்திற்கு சிலர் ஆதரவும் பலர் கடும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ‘ஆதிபுருஷ்’படத்திற்கு எதிரான வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி, “ராமாயணம் நமக்கு ஒரு முன்னுதாரணம். மக்கள் வீட்டை விட்டு வெளியேறும் […]

The post ஆதிபுருஷ்’ படத்துக்கு தடை விதித்தால் நல்லது!: உயர் நீதிமன்றம் appeared first on Touring Talkies.

]]>
ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி உள்ள படம் ‘ஆதிபுருஷ்’ . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். கடந்த 16-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

இப்படத்திற்கு சிலர் ஆதரவும் பலர் கடும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ‘ஆதிபுருஷ்’படத்திற்கு எதிரான வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி, “ராமாயணம் நமக்கு ஒரு முன்னுதாரணம். மக்கள் வீட்டை விட்டு வெளியேறும் முன்பு ராமாயணத்தை தான் படிக்கிறார்கள். படம் பார்த்துவிட்டு மக்கள் சட்ட ஒழுங்கை சீர்குலைக்காமல் இருந்தது ஆச்சர்யம். அனுமனும் சீதையும் முக்கியமில்லாதவர்களாக காட்சிப்படுத்தப்பட்டு உள்ளனர். இதுமாதிரியான விஷயங்கள் ஆரம்பத்திலேயே அகற்றப்பட்டிருக்க வேண்டும். சில காட்சிகள் 18 வயதிற்கு மேற்பட்டோர் பார்ப்பவையாக இருக்கிறது. இது போன்ற படங்களை பார்ப்பது மிகவும் கடினம். படத்தை முறையாக சென்சார் செய்ய தணிக்கை வாரியம் ஏன் தவறியது? சொலிசிடர் ஜெனரல் சர்ச்சைக்குரிய வசனங்கள் நீக்கப்பட்டதாகக் கூறுகிறார். ஆனால், காட்சிகளை என்ன செய்வது? இது தொடர்பாக தணிக்கை வாரியத்திடம் கேள்வி கேளுங்கள். பின்னர் நாங்கள் செய்ய வேண்டியதைச் செய்கிறோம். ஒருவேளை இந்தப் படம் தடை செய்யப்பட்டால் மக்களுக்கு கொஞ்சம் ஆறுதல் கிடைக்கும் என நம்புகிறோம்

படத்தில் பல சர்ச்சைகளை வைத்துக் கொண்டு பொறுப்புத் துறப்பு பதிவிட்டிருந்தோம் என்று படக்குழு தரப்பு வாதிடுவது விநோதமாக இருக்கிறது. நீங்கள் ராமர், சீதை, அனுமன், ராவணன் எல்லோரையும் திரையில் காட்டிவிட்டு இது ராமாயணம் அல்ல என்று பொறுப்புத் துறப்பு வாசகம் போடுவீர்கள்… அதை நாட்டு மக்களும் இளைஞர்களும் நம்புவார்கள். அவர்கள் மூளையற்றவர்கள் என்று நினைக்கிறீர்களா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பியது. மேலும், விசாரணையின்போது தயாரிப்பாளர், இயக்குனர், மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் ஏன் ஆஜராகவில்லை” என்று கேட்ட நீதிமன்றம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அது தொடர்பாக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

The post ஆதிபுருஷ்’ படத்துக்கு தடை விதித்தால் நல்லது!: உயர் நீதிமன்றம் appeared first on Touring Talkies.

]]>