Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
பொன்னியின் செல்வன் – Touring Talkies https://touringtalkies.co Mon, 31 Oct 2022 04:08:09 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png பொன்னியின் செல்வன் – Touring Talkies https://touringtalkies.co 32 32 ‘பொ.செ. 1’ பூங்குழலியின் ஆசை! https://touringtalkies.co/p-s-1-poonghualis-desire/ Sun, 30 Oct 2022 04:04:00 +0000 https://touringtalkies.co/?p=26299 பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர் ஐஸ்வர்யா லட்சுமி. கேரளத்தைச் சேர்ந்த இவர், 2017ம் ஆண்டு ‘நண்டுகளூடெ நாட்டில் ஓரிடவேளா’ என்ற மலையாள  படத்தின் திரையுலகில் நுழைந்தார். ‘மாயநதி’ படம் மூலம் தமிழுக்கும் வந்த இவர் தற்போது இரு மொழிகளிலும் பல படங்களில் நடித்து வருகிறார்.  இந்நிலையில்தான் பொ.செ.1 படத்தில் ஓடக்காரப் பெண் பூங்குழலியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.  அதில் தனது முழுத் திறமையைக் காண்பித்து அசத்தினார். சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், […]

The post ‘பொ.செ. 1’ பூங்குழலியின் ஆசை! appeared first on Touring Talkies.

]]>
பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர் ஐஸ்வர்யா லட்சுமி. கேரளத்தைச் சேர்ந்த இவர், 2017ம் ஆண்டு ‘நண்டுகளூடெ நாட்டில் ஓரிடவேளா’ என்ற மலையாள  படத்தின் திரையுலகில் நுழைந்தார். ‘மாயநதி’ படம் மூலம் தமிழுக்கும் வந்த இவர் தற்போது இரு மொழிகளிலும் பல படங்களில் நடித்து வருகிறார்.

 இந்நிலையில்தான் பொ.செ.1 படத்தில் ஓடக்காரப் பெண் பூங்குழலியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.  அதில் தனது முழுத் திறமையைக் காண்பித்து அசத்தினார்.

சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், “நான் மருத்துவப் படிப்பு படித்துள்ளேன்.  மருத்துவர் ஆக வேண்டும்  என்பதுதான் என் லட்சியமாக இருந்தது. ஆனால் விபத்து போல திரையுலகத்துக்கு வந்துவிட்டேன்.  ஆனாலும் மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்கிற எண்ணம் அப்படியே இருக்கிறது.

சில ஆண்டுகள் திரையுலகில் முழுமையாக ஈடுபடுவேன். பிறகு சினிமா, மருத்துவம் இரண்டுக்கும் நேரம் ஒதுக்கி செயல்படுவேன். இதுதான் என் ஆசை!” என்கிறார்.

நல்ல ஆசைதான்!

The post ‘பொ.செ. 1’ பூங்குழலியின் ஆசை! appeared first on Touring Talkies.

]]>
காந்தாரா இயக்குநர் பார்க்க விரும்பும் தமிழ்ப்படம்! https://touringtalkies.co/kandhara-director-wants-to-see-the-tamil-film/ Sat, 29 Oct 2022 16:18:58 +0000 https://touringtalkies.co/?p=26240 ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த கன்னட படம், காந்தாரா. செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியான இப்படம், கர்நாடகாவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. வசூலில் சாதனை புரிந்தததுடன், விமர்சன ரீதியாகவும் பாராட்டு பெற்றது. ரஜினிகாந்த் உட்பட பல்வேறு திரைப்பிரபலங்களும் படத்தை பாராட்டி உள்ளனர். இந்நிலையில், காந்தாரா படத்தின் இயக்குநர் மற்றும் நடிகர் ரிஷப் ஷெட்டியிடம், “தமிழ்த் திரைப்படங்கள் பார்ப்பீர்களா.. எந்த படத்தை பார்க்க விரும்புகிறீர்கள்” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “பெரும்பாலும் அனைத்து தமிழ்ப்படங்களையும் பாப்பேன். சமீபத்தில் கமல் […]

The post காந்தாரா இயக்குநர் பார்க்க விரும்பும் தமிழ்ப்படம்! appeared first on Touring Talkies.

]]>
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த கன்னட படம், காந்தாரா. செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியான இப்படம், கர்நாடகாவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. வசூலில் சாதனை புரிந்தததுடன், விமர்சன ரீதியாகவும் பாராட்டு பெற்றது.

ரஜினிகாந்த் உட்பட பல்வேறு திரைப்பிரபலங்களும் படத்தை பாராட்டி உள்ளனர்.

இந்நிலையில், காந்தாரா படத்தின் இயக்குநர் மற்றும் நடிகர் ரிஷப் ஷெட்டியிடம், “தமிழ்த் திரைப்படங்கள் பார்ப்பீர்களா.. எந்த படத்தை பார்க்க விரும்புகிறீர்கள்” என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர், “பெரும்பாலும் அனைத்து தமிழ்ப்படங்களையும் பாப்பேன். சமீபத்தில் கமல் நடித்த விக்ரம் படத்தை ரசித்துப் பார்த்தேன். பொன்னியின் செல்வன் படத்தை பார்க்க வேண்டும் என ஆர்வமாக இருந்தேன். ஆனால் காந்தாரா படத்தின் டப்பிங் பணிகளில் மூழ்கிவிட்டதால் தவரவிட்டு விட்டேன். விரைவில் அந்தப் படத்தை பார்த்துவிடுவேன்” என்று கூறியிருக்கிறார்.

The post காந்தாரா இயக்குநர் பார்க்க விரும்பும் தமிழ்ப்படம்! appeared first on Touring Talkies.

]]>
கல்கி குடும்பத்தினருக்கு உதவுவார்களா மணிரத்னம் – சுபாஸ்கரன்? https://touringtalkies.co/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/ Sun, 09 Oct 2022 11:19:27 +0000 https://touringtalkies.co/?p=25027 பழம் பெரும் எழுத்தாளர் மறைந்த கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் தமிழ் மக்களை மிகவும் கவர்ந்த ஒன்று. இதை திரைப்படமாக எடுக்க எம்.ஜி.ஆர்., கமல் உள்ளிட்டோர் முயற்சித்து முடியாமல் போனது. இந்த நிலையில், லைகா நிறுவன தயாரிப்பில் மணிரத்தினம் இயக்கி சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானது. மக்களிடம் பேராதரவு பெற்ற இப்படம், பல நூறு கோடி வசூல் ஆனதாகவும் இன்னும் வசூல் ஆகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், “கல்கியின்  படைப்புகள் அரசுடமையாக்கப்பட்டு விட்டன. […]

The post கல்கி குடும்பத்தினருக்கு உதவுவார்களா மணிரத்னம் – சுபாஸ்கரன்? appeared first on Touring Talkies.

]]>
பழம் பெரும் எழுத்தாளர் மறைந்த கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் தமிழ் மக்களை மிகவும் கவர்ந்த ஒன்று. இதை திரைப்படமாக எடுக்க எம்.ஜி.ஆர்., கமல் உள்ளிட்டோர் முயற்சித்து முடியாமல் போனது. இந்த நிலையில், லைகா நிறுவன தயாரிப்பில் மணிரத்தினம் இயக்கி சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானது.

மக்களிடம் பேராதரவு பெற்ற இப்படம், பல நூறு கோடி வசூல் ஆனதாகவும் இன்னும் வசூல் ஆகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், “கல்கியின்  படைப்புகள் அரசுடமையாக்கப்பட்டு விட்டன. ஆகவே அவரது படைப்புகளை யாரும் எடுத்து கையாளலாம். அதே நேரம்,    பொ.செ. வை வைத்து பல நூறு கோடி சம்பாதித்த மணிரத்தினம், லைகா தயாரிப்பு நிறுவன அதிபர்  சுபாஸ்கரன் ஆகியோர் கல்கியின் குடும்பத்தினருக்கு உதவலாமே..

கல்கி குடும்பத்தினர் உதவியை எதிர்பார்க்க மாட்டார்கள்தான். ஆனால், அவர்கள் நடத்தும்  கல்கி அறக்கட்டளை மூலம் பல்வேறு நலப் பணிகளை செய்து வருகிறார்கள். அந்த அறக்கட்டளைக்கு நிதி உதவி செய்யலாமே” என பலரும் கேட்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.

என்ன சொல்லப் போகிறார்கள் இருவரும்?

The post கல்கி குடும்பத்தினருக்கு உதவுவார்களா மணிரத்னம் – சுபாஸ்கரன்? appeared first on Touring Talkies.

]]>
‘பொன்னியின் செல்வன்’ படத்துக்கு இளையராஜா இசை! https://touringtalkies.co/ponnis-selvan-ilayaraja-music/ Sun, 09 Oct 2022 10:38:07 +0000 https://touringtalkies.co/?p=25013 ”என்னது.. மணிரத்தினம் இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில், ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கும் நிலையில், இளையராஜாவின் இசையில் பொ.செ.வா?” என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். உண்மைதான். ‘பொன்னியின் செல்வன்’ கதையை திரைப்படமாக்குவதாய் மணிரத்னம் அறிவித்த நிலையில், ‘பொன்னியின் செல்வன்’ வெப் தொடராகவும் தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு ‘சிரஞ்சீவியின் பொன்னியின் செல்வன்’ என்று பெயர் வைத்தனர். அஜய் பிரதீப் ஒளிப்பதிவு மற்றும் திரைக்கதை வசனம் எழுதி இயக்கம் செய்வதாகவுமும், இளையராஜா இசையமைக்க போவதாகவும் […]

The post ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்கு இளையராஜா இசை! appeared first on Touring Talkies.

]]>
”என்னது.. மணிரத்தினம் இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில், ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கும் நிலையில், இளையராஜாவின் இசையில் பொ.செ.வா?” என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். உண்மைதான்.

பொன்னியின் செல்வன்’ கதையை திரைப்படமாக்குவதாய் மணிரத்னம் அறிவித்த நிலையில், ‘பொன்னியின் செல்வன்’ வெப் தொடராகவும் தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு ‘சிரஞ்சீவியின் பொன்னியின் செல்வன்’ என்று பெயர் வைத்தனர். அஜய் பிரதீப் ஒளிப்பதிவு மற்றும் திரைக்கதை வசனம் எழுதி இயக்கம் செய்வதாகவுமும், இளையராஜா இசையமைக்க போவதாகவும் அறிவிப்பு வெளியானது.

அஜய் பிரதீப், “1979-களில் இருந்து, கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை படமாக்கும் முயற்சிகள் நடக்காமல் போனதால் பொன்னியின் செல்வன் தொடருக்கு சிரஞ்சீவி என்ற பெயரையும் இணைத்துள்ளேன். திரைக்கதை, வசனம், ஓவியங்கள், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என முழு உருவாக்கத்தை பார்த்த இளையராஜா உடனடியாக இசையமைக்க சம்மதித்தார். இந்த வெப் தொடர் 4 மாதங்கள் ஒளிபரப்பாகும். வெப் தொடருக்கு சாபுசிரில் கலை இயக்குனராகவும் ஆண்டனி எடிட்டராகவும் பணியாற்ற உள்ளனர். நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. ஆகஸ்டு மாதம் படப்பிடிப்பு தொடங்கி அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகும். எட்டர் நிட்டி மோஷன் கிராப்ட் மற்றும் எட்டர் நிட்டி ஸ்டார் தயாரிக்கும் இந்த தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகிறது” என்றார்.

ஆனால் அதற்கான பணிகள் இன்னும் முடியவில்லை. திரைப்படமாக பொ.செ.வாக பார்த்துவிட்டோம். வெப்சீரியலாக வந்தாலும் ரசிக்கத்தானே செய்வோம்… வரட்டும்.

The post ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்கு இளையராஜா இசை! appeared first on Touring Talkies.

]]>
“பொ.செ. கல்கி, ஒரு களவாணி”: சொன்னவர் யார் தெரியுமா? https://touringtalkies.co/author-kalki-was-a-thieft-do-you-know-who-said-it/ Thu, 06 Oct 2022 12:41:00 +0000 https://touringtalkies.co/?p=24931 ”பொன்னியின் செல்வன்”  உள்ளிட்ட நாவல்கள், மற்றும் ஏராளமான சிறுகதைகள் எழுதியவர் கல்கி. தமிழின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் என போற்றப்படுபவர். ஆனால் அவர் உச்சத்தல்   இருந்த காலத்திலேயே அவரை கடுமையாக விமர்சித்தவர் ஒருவர் உண்டு. அவரும் மிகச்சிறந்த எழுத்தாளர்தான். அவர்.. புதுமைப்பித்தன். கல்கியைப் பற்றி “கல்கி, பிற மொழி கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பை படிக்கிறார். அதனை அப்படியே தமிழிலுக்கு ஏற்ற மாதிரி எழுதி தனது பெயரை போட்டுக்கொள்கிறார். ஊரையும் பேரையும் மாற்றி ‘தன் பெயரில்’ சொந்தமாக்கிக் கொள்ளும் […]

The post “பொ.செ. கல்கி, ஒரு களவாணி”: சொன்னவர் யார் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
”பொன்னியின் செல்வன்”  உள்ளிட்ட நாவல்கள், மற்றும் ஏராளமான சிறுகதைகள் எழுதியவர் கல்கி.

தமிழின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் என போற்றப்படுபவர்.

ஆனால் அவர் உச்சத்தல்   இருந்த காலத்திலேயே அவரை கடுமையாக விமர்சித்தவர் ஒருவர் உண்டு. அவரும் மிகச்சிறந்த எழுத்தாளர்தான். அவர்.. புதுமைப்பித்தன். கல்கியைப் பற்றி

“கல்கி, பிற மொழி கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பை படிக்கிறார். அதனை அப்படியே தமிழிலுக்கு ஏற்ற மாதிரி எழுதி தனது பெயரை போட்டுக்கொள்கிறார்.

ஊரையும் பேரையும் மாற்றி ‘தன் பெயரில்’ சொந்தமாக்கிக் கொள்ளும் ‘குல்மால்’ வேலையைத்தான் அவர் செய்கிறார். இது பெரும் மோசடி.

ஆசிரியர் செய்துள்ள இலக்கிய சேவையை, பல்லாயிரக்கணக்கான வாசகர்களும், கல்வியறிவிற் சிறந்த பெரியோர்களும், பாராட்டி வருகிறார்களாமே;

அவற்றின் வண்ட வாளம் வருமாறு:

.

கல்கி பெயரில் வெளியான ‘சாரதையின் தந்திரம்’ என்ற தொகுப்பில்  பிரசுரமாகியுள்ள கதைகளில், பெரும்பாலானவை  இங்கிலீஷில் ‘கிளிம்ஸஸ் பிரம் இந்தியன் லைப்’ (இந்திய வாழ்க்கை சித்திரங்கள்) என்ற புஸ்தகத்திலிருந்து திருடப்பட்டவை.

‘புது ஓவர்ஸீர்’ என்ற கதை பிரேமசந்த் எழுதின ’ஸால்ட் இன்ஸ்பெக்டர்’ என்பது.

‘காங்கிரஸ் ஸ்பெஷலில் கோர சம்பவம்’ என்பது அமெரிக்காவில் ஹாஸ்ய சக்கரவர்த்தி என்று சொல்லப்பட்ட மார்க் ட்வெய்ன் எழுதிய ‘கானிபலிஸம் இன் ஏ கார்’ (ரயில் வண்டியில் நரமாம்ச பட்சணி) என்ற கதையின் திருட்டு நகல்.

இவை தவிர, இவரது ‘ஏட்டிக்குப் போட்டி’யில் பெரும்பாலான கதைகள், ஜெரோம் கே-ஜெரோம் எழுதிய ‘திரீ மென் இன் எ போட்’ என்ற புஸ்தகத்திலிருந்து வந்த ‘களவாணி இலக்கியம்.’

.

திருட்டுத் தொழில் சாதாரணம்; போலி கவுரவத்துக்காக அதைச் செய்ய ஒரு மனிதன் துணியும்போது, அதைப் பாராட்டும் சமுதாயத்தைப் பற்றித்தான் வருந்த வேண்டியிருக்கிறது” என்கிறார் புதுமைப்பித்தன்.

(”களவாணி – இலக்கியம்” என்று   தலைப்பிட்டு   ரசமட்டம்   என்கிற   பெயரில்   1944  ஆகஸ்ட்  1,   அன்று    புதுமைப்பித்தன்   எழுதிய   கட்டுரை)

The post “பொ.செ. கல்கி, ஒரு களவாணி”: சொன்னவர் யார் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>