Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
நடிகர் விஷால் – Touring Talkies https://touringtalkies.co Sun, 30 Oct 2022 17:34:23 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png நடிகர் விஷால் – Touring Talkies https://touringtalkies.co 32 32 “விஷாலுடன் திருமணமா..?” – “பச்சைப் பொய்” என்கிறார் நடிகை அபிநயா https://touringtalkies.co/marriage-with-vishal-great-lie-says-actress-abhinaya/ Sun, 30 Oct 2022 17:33:39 +0000 https://touringtalkies.co/?p=26268 நடிகர் விஷால் ‘நாடோடிகள்’ பட நடிகை அபிநயாவை விஷால் காதலிப்பதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் வெளியான செய்தி பொய்யானது என்று நடிகை அபிநயாவே சொல்லியிருக்கிறார். ‘நாடோடிகள்’ படம் மூலம் அறிமுகமான நடிகை அபிநயாவிற்கு காது கேட்காத மற்றும் வாய் பேசவும் முடியாத மாற்றுத் திறனாளியாவார். இவரை நடிகர் விஷால் காதலித்து வருவதாகவும் இருவரும் திருமணம் செய்ய இருப்பதாகவும் கடந்த வாரம் கிசுகிசுக்கள் ரெக்கை கட்டி பறந்தன. ஆனால் இத்தகவல் முற்றிலும் தவறு என்று […]

The post “விஷாலுடன் திருமணமா..?” – “பச்சைப் பொய்” என்கிறார் நடிகை அபிநயா appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விஷால் ‘நாடோடிகள்’ பட நடிகை அபிநயாவை விஷால் காதலிப்பதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் வெளியான செய்தி பொய்யானது என்று நடிகை அபிநயாவே சொல்லியிருக்கிறார்.

நாடோடிகள்’ படம் மூலம் அறிமுகமான நடிகை அபிநயாவிற்கு காது கேட்காத மற்றும் வாய் பேசவும் முடியாத மாற்றுத் திறனாளியாவார். இவரை நடிகர் விஷால் காதலித்து வருவதாகவும் இருவரும் திருமணம் செய்ய இருப்பதாகவும் கடந்த வாரம் கிசுகிசுக்கள் ரெக்கை கட்டி பறந்தன.

ஆனால் இத்தகவல் முற்றிலும் தவறு என்று மறுத்துள்ளார் நடிகை அபிநயா. “மார்க் ஆண்டனி’ படத்தில் விஷாலுக்கு மனைவியாக நான் நடித்துள்ளேன். சினிமாவில் கணவன் மனைவியாக நடித்ததால் உண்மையில் அப்படி ஆகிவிட முடியுமா..?” என்னும் கேள்வியையும் நடிகை அபிநயா எழுப்பி உள்ளார்.

ஆக, இந்தக் கல்யாண செய்தியும் புஸ்ஸாகிவிட்டது. அப்போ நிசமா விஷாலுக்கு எப்போதாங்க கல்யாணம்..?

The post “விஷாலுடன் திருமணமா..?” – “பச்சைப் பொய்” என்கிறார் நடிகை அபிநயா appeared first on Touring Talkies.

]]>
“நடிகர் சங்க கட்டிடம் சென்னையின் ஓர் அடையாளமாக இருக்கும்” – நடிகர் விஷால் பேச்சு..! https://touringtalkies.co/actors-association-building-will-be-a-symbol-of-chennai-actor-vishal-speech/ Sun, 08 May 2022 15:21:09 +0000 https://touringtalkies.co/?p=21895 தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 66-வது பொதுக் குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. பொதுக் குழு கூட்டம் முடிந்ததும் தலைவர் நாசர், பொது செயலாளர் விஷால் மற்றும் பொருளாளர் கார்த்தி ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்கள். சங்கத்தின் தலைவரான நடிகர் நாசர் பேசும்போது, “தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 66-வது பொதுக் குழு கூட்டம் இன்றைக்கு மிக, மிக சிறப்பாக நடைபெற்றது. சௌகார் ஜானகி அம்மாவிற்கு மரியாதை கொடுத்த நிகழ்வு உணர்வுபூர்வமாகவும் இருந்தது. இரண்டு வருடங்கள் காத்திருந்தாலும் அதைவிட […]

The post “நடிகர் சங்க கட்டிடம் சென்னையின் ஓர் அடையாளமாக இருக்கும்” – நடிகர் விஷால் பேச்சு..! appeared first on Touring Talkies.

]]>
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 66-வது பொதுக் குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.

பொதுக் குழு கூட்டம் முடிந்ததும் தலைவர் நாசர், பொது செயலாளர் விஷால் மற்றும் பொருளாளர் கார்த்தி ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்கள்.

சங்கத்தின் தலைவரான நடிகர் நாசர் பேசும்போது, “தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 66-வது பொதுக் குழு கூட்டம் இன்றைக்கு மிக, மிக சிறப்பாக நடைபெற்றது. சௌகார் ஜானகி அம்மாவிற்கு மரியாதை கொடுத்த நிகழ்வு உணர்வுபூர்வமாகவும் இருந்தது. இரண்டு வருடங்கள் காத்திருந்தாலும் அதைவிட வேகமாக செயல்படுவதற்கு இந்த பொதுக் குழு எங்களுக்கு முழு உத்வேகத்தை கொடுத்துள்ளது. இன்றுடன் பேச்சைக் குறைத்து நாளை முதல் முழு மூச்சாக செயலில் இறங்குவோம்…” என்றார்.

சங்கத்தின் செயலாளரான நடிகர் விஷால் பேசும்போது, “நடிகர் சங்க கட்டிடத்தைக் கட்டி முடிப்பதற்கான செலவுக்காக நட்சத்திர இரவு விழாவை நடத்துவதா அல்லது வங்கியில் கடன் வாங்குவதா என்று முடிவெடுக்கும் அதிகாரத்தை நாங்கள் பொதுக் குழுவில் இருந்து வாங்கியிருக்கிறோம். அதன்படி செயல்படுவோம்.

இதுவரையிலும் 70 சதவீதம் கட்டிடம் முடிக்கப்பட்டுள்ளது. உள் வடிவமைப்பையும் சேர்த்து இன்னும் 40 சதவிகித வேலை உள்ளது. இதை முடிப்பதற்கு இன்னும் 30 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இதற்கான நிதியை எப்படி திரட்டலாம் என்று ஆலோசனை செய்து வருகிறோம்.

இது ஒருபுறமிருந்தாலும், தனிப்பட்ட முறையிலும் நடிகர் நடிகைகளிடம் கேட்டு, அவர்களிடமும் நிதி திரட்ட உள்ளோம். நடிகர் சங்க கட்டிடம் என்பதால் நடிகர், நடிகைகளிடம் தனிப்பட்ட முறையில் கேட்பதற்கு நாங்கள் வெட்கப்படவில்லை.

அதேபோல், வங்கியிலும் கடன் வாங்க ஒப்புதல் வாங்கி விட்டோம். எல்லா வகையிலும் இத்திட்டத்திற்கு தேவையான நிதியை வசூல் செய்து எந்தளவுக்கு விரைந்து கட்டிடத்தை முடிக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் விரைந்து முடிப்போம். மேலும், இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு இந்த அணி சொன்ன வாக்குறுதிகளை நிச்சயமாக நிறைவேற்றும்.

இன்றைய பொதுக் குழு கூட்டம் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தாதாசாகேப் பால்கே விருது வாங்கியதற்காக வாழ்த்து தெரிவித்தோம். அதேபோல் , பத்ம்ரீ விருது பெற்ற சவுகார் ஜானகி அம்மாவுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. பாரதி விஷ்ணுவர்த்தன், ராதிகா சரத்குமார் ஆகியோருக்கும் கவுரவிக்கப்பட்டார்கள்.

எங்களது பணியினை நேர்மறையாக தொடங்க இருக்கிறோம். இதன் பிறகு, கட்டடம் கட்டுவதற்கு எந்த தடங்களும், தடைகளும், சச்சரவுகளும் வராது என்று நம்புகிறோம். இது சாதாரண கட்டிடமாக இருக்காது. சென்னையில் ஒரு அடையாளமாகவே இருக்கும். வெளியூரில் இருந்து சென்னைக்கு வருபவர்கள் அனைவரும் ஒரு முறையாவது நடிகர் சங்க கட்டிடத்தையும் பார்க்க வேண்டும் என்ற ஆவலோடும் வர வேண்டும். அதை மனதில் வைத்துதான் இந்தக் கட்டிடத்தைக் கட்டுகிறோம்…” என்றார்.

சங்கத்தின் பொருளாளரான நடிகர் கார்த்தி பேசும்போது, “நடிகர் சங்க கட்டிடத்தின் மூலம் ESI, காப்பீடு, ஓய்வுதியம், மருத்துவ செலவுகள், ஈமச் சடங்கு உதவி போன்ற செலவுகள் போக குறைந்தபட்சம் ஒன்றரை கோடியில் இருந்து இரண்டரை கோடி ரூபாய்வரையிலும் மீதம் இருக்கும். இந்த வருமானம் போதுமானதாக இருக்கும்…” என்றார்.

The post “நடிகர் சங்க கட்டிடம் சென்னையின் ஓர் அடையாளமாக இருக்கும்” – நடிகர் விஷால் பேச்சு..! appeared first on Touring Talkies.

]]>
“கட்டிடத்தைக் கட்டி முடிக்க இன்னும் 21 கோடி ரூபாய் தேவை” – நடிகர் விஷால் சொல்லும் கணக்கு https://touringtalkies.co/21-crore-more-needed-to-complete-the-building-says-actor-vishal/ Wed, 23 Mar 2022 07:27:54 +0000 https://touringtalkies.co/?p=21375 தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் நேற்று சென்னையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் பதவி ஏற்றுக் கொண்டனர். தற்போது 97 வயதாகும் நடிகர் சங்கத்தின் மூத்த கலைஞரான மணி அய்யர், மற்றும் 95 வயதாகும் ஊட்டி மணி இருவரும் புதிய சங்க நிர்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்கள். பதவியேற்ற பின்பு சங்கத்தின் தலைவரான நடிகர் நாசர் பேசும்போது, “இந்த வெற்றியின் மூலம் நாங்கள் எடுத்துக் கொண்ட பொறுப்பு மேலும் கூடுதலாகியுள்ளது…” என தெரிவித்தார். சங்கத்தின் […]

The post “கட்டிடத்தைக் கட்டி முடிக்க இன்னும் 21 கோடி ரூபாய் தேவை” – நடிகர் விஷால் சொல்லும் கணக்கு appeared first on Touring Talkies.

]]>
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் நேற்று சென்னையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் பதவி ஏற்றுக் கொண்டனர்.

தற்போது 97 வயதாகும் நடிகர் சங்கத்தின் மூத்த கலைஞரான மணி அய்யர், மற்றும் 95 வயதாகும் ஊட்டி மணி இருவரும் புதிய சங்க நிர்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்கள்.

பதவியேற்ற பின்பு சங்கத்தின் தலைவரான நடிகர் நாசர் பேசும்போது, “இந்த வெற்றியின் மூலம் நாங்கள் எடுத்துக் கொண்ட பொறுப்பு மேலும் கூடுதலாகியுள்ளது…” என தெரிவித்தார்.

சங்கத்தின் செயலாளரான நடிகர் விஷால் பேசும்போது, “நடிகர் சங்கத்தின் தேர்தலுக்கு ஆகும் செலவை கட்டிடத்திற்கு பயன்படுத்த நாங்கள் நினைத்தோம். அத்துடன் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் எனவும் முயற்சித்தோம். ஆனால், எதிரணியினர் இதைப் போட்டியாக பார்த்தனர்.

தேர்தல் முடிந்து 3 ஆண்டுகள் கழித்து வாக்கு எண்ணிக்கை நடைபெறுவது வேறு எந்த சங்கத்திலும் நடைபெறவில்லை. இதுதான் முதல் முறை. தற்போது நாங்கள் வெற்றி அடைந்துள்ளோம்.

திரும்பத் திரும்ப நாங்கள் சொல்வது ஒன்றுதான்.  நாடக நடிகர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காகதான் நாங்கள் எல்லோரும் போராடுகிறோம். அது நல்லபடியாக நடக்கும்.

நடிகர் சங்கத்தின் கட்டிடத்தை முழுமையாகக் கட்டி முடிக்க தற்போதைய நிலவரப்படி இன்னும் கூடுதலாக 21 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. கட்டிடம் கட்டத் தேவைப்படும் மூலப் பொருட்களின் விலை 30% உயர்ந்துள்ளது. அதற்கான நிதியைத் திரட்டும் வேலையில் இறங்க உள்ளோம். நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்டவர்கள் அனைவரையும் நேரில் சந்திப்போம். பிச்சையெடுக்கிறது என்று முடிவு செய்துவிட்டோம். முன்னாடியாவது கூச்சம் இருந்தது. இப்போது அதுவும் இல்லை.

தமிழக முதல்வரிடம் இது குறித்து கோரிக்கை வைத்துள்ளோம். இது தனி மனிதர் சம்பந்தப்பட்டது அல்ல. பல குடும்பங்கள் சம்பந்தப்பட்டது. எனவே அவர் எங்களுக்கு உதவி செய்வார் என்று நம்புகிறோம்.

இந்த நேரத்தின் இக்கட்டான காலகட்டத்தில் தேர்தலை நடத்திக் கொடுத்த ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன், உறுதுணையாக இருந்த வழக்கறிஞர் கிருஷ்ணா மற்றும் நடிகர் சங்கத்தின் ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்…” என்றார்.

சங்கத்தின் பொருளாளரான நடிகர் கார்த்தி பேசும்போது, “நாங்கள் முதல் முறையாக நிர்வாகத்திற்கு வந்து சங்கத்திற்கு செய்தப் பணிகளால் நிச்சயமாக தேர்தல் இருக்காது.. போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்படுவோம் என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால், தேர்தல் நடைபெற்று தற்போது வெற்றி அடைந்து உள்ளோம்.

தற்போதைய சூழலில் நிதி திரட்டுவது என்பது சவாலான பணியாக இருக்கிறது. நிறுத்தப்பட்ட வேலைகள் மீண்டும் தொடங்க வேண்டும். அதற்கு திட்டமிடுதல் வேண்டும். எனவே கட்டட வேலைகளை அடுத்த மூன்று மாதத்திற்குள் தொடங்க உள்ளோம். நடிகர் சங்கத்திற்கு தற்போது கடன்கள் எதுவும் கிடையாது. நிதிகள் அனைத்தும் கட்டடத்திற்குத்தான் செலவு செய்யப்பட்டுள்ளது…” என தெரிவித்தார்.

இறுதியாகப் பேசிய துணைத் தலைவரான பூச்சி முருகன் பேசும்போது, “நடிகர் சங்கத்திற்கு பையனூரில் அரசு ஏழு ஏக்கர் நிலம் வழங்கி உள்ளது. அதில் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தனி மண்டபம் கட்டி அவர்கள் தங்குவதற்கு வழிவகை செய்யப்படும்…” என தெரிவித்தார்.

தொடர்ந்து பத்திரிகையாளர்கள், சங்க நிர்வாகிகளிடம் சில கேள்விகளை எழுப்பினார்கள்.

அதில்  “எதற்கும் துணிந்தவன்’ உள்ளிட்ட சில படங்களுக்கு பிரச்னை வரும்போது நடிகர் சங்கம் சார்பில் அவர்களுக்கு உதவ  ஏதாவது திட்டம் உள்ளதா..?” என்ற கேள்விக்குப்  பதிலளித்த நடிகர் கார்த்தி, “தணிக்கை செய்யப்பட்ட ஒரு படத்திற்கு சில அமைப்புகள் மூலம் பிரச்னை வரும்போது சட்டப்படியாக நடிகர் சங்கம் உதவுவது அவசியம். எனவே, அதை நடிகர் சங்கம் செய்யும்…” என்றார்.

The post “கட்டிடத்தைக் கட்டி முடிக்க இன்னும் 21 கோடி ரூபாய் தேவை” – நடிகர் விஷால் சொல்லும் கணக்கு appeared first on Touring Talkies.

]]>
சிம்பு வழக்கில் விஷாலை விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு https://touringtalkies.co/simbu-vishal-high-court-case-news/ Thu, 10 Feb 2022 06:54:07 +0000 https://touringtalkies.co/?p=20636 நடிகர் சிம்பு தொடர்ந்த வழக்கில் எதிர் மனுதாரர் பட்டியலிலிருந்து தன்னை நீக்கக் கோரிய நடிகர் விஷாலின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் வெளியான ‘அன்பானவன், அடங்காதவன், அசராதவன்’ படத்தில் நடிக்க சிம்புக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்ட நிலையில், படம் தோல்வி அடைந்ததையடுத்து, 1 கோடியே 51 லட்ச ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டதாக சிம்பு தரப்பில், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, சிம்புவுக்கு […]

The post சிம்பு வழக்கில் விஷாலை விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு appeared first on Touring Talkies.

]]>
நடிகர் சிம்பு தொடர்ந்த வழக்கில் எதிர் மனுதாரர் பட்டியலிலிருந்து தன்னை நீக்கக் கோரிய நடிகர் விஷாலின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் வெளியான அன்பானவன், அடங்காதவன், அசராதவன்’ படத்தில் நடிக்க சிம்புக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்ட நிலையில், படம் தோல்வி அடைந்ததையடுத்து, 1 கோடியே 51 லட்ச ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டதாக சிம்பு தரப்பில், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக, சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், நடிகர் சங்கத்தில் புகார் அளித்தார். 

இந்நிலையில் தன்னை குறித்து அவதூறு செய்தி பரப்பியதாக கூறி 1 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு மைக்கேல் ராயப்பனுக்கு எதிராக நடிகர் சிம்பு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், நடிகர் விஷால் ஆகியோரை எதிர் மனுதாரராக சேர்த்திருந்தார். 

தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கங்களுக்கு தற்போது  தனி அதிகாரிகளை அரசு நியமித்துள்ளதால், இந்த வழக்கில் இருந்து தன்னை நீக்க கோரி நடிகர் விஷால் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்குகள் நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ள நடிகர் விஷாலை நீக்குவதற்கு நடிகர் சிம்பு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி, எதிர் மனுதாரர் பட்டியலில் இருந்து நீக்க கோரிய நடிகர் விஷால் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். பின், பிரதான வழக்கை அடுத்த மாதத்திற்கு தள்ளி வைத்தார்.

The post சிம்பு வழக்கில் விஷாலை விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு appeared first on Touring Talkies.

]]>
விஷால் ஸ்டிரைக் அறிவித்தது சட்ட விரோதமானது – போட்டி ஆணையம் தீர்ப்பு..! https://touringtalkies.co/vishal-strike-declared-illegal-competition-commission-verdict/ Thu, 24 Jun 2021 10:34:11 +0000 https://touringtalkies.co/?p=15737 திரையரங்குகளில் திரைப்படங்களை வெளியிடும் தொழில் நுட்பப் பணிகளைச் செய்து வரும் கியூப் உள்ளிட்ட நிறுவனங்களின் சேவைக் கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்று கோரி 2018, மார்ச் 1-ம் தேதி முதல் திரையரங்குகளில் படங்களை வெளியிடப் போவதில்லை என்று தென் மாநிலங்களை சேர்ந்த அனைத்து திரைப்பட அமைப்புகளும் முடிவு செய்து அறிவித்தன. இரண்டு முறை டிஜிட்டல் நிறுவனங்களுடன் தென்னக சினிமா அமைப்புகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, இந்த முடிவை அவர்கள் எடுத்தனர். ஆனால் மறுநாளே மார்ச் 2-ம் […]

The post விஷால் ஸ்டிரைக் அறிவித்தது சட்ட விரோதமானது – போட்டி ஆணையம் தீர்ப்பு..! appeared first on Touring Talkies.

]]>
திரையரங்குகளில் திரைப்படங்களை வெளியிடும் தொழில் நுட்பப் பணிகளைச் செய்து வரும் கியூப் உள்ளிட்ட நிறுவனங்களின் சேவைக் கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்று கோரி 2018, மார்ச் 1-ம் தேதி முதல் திரையரங்குகளில் படங்களை வெளியிடப் போவதில்லை என்று தென் மாநிலங்களை சேர்ந்த அனைத்து திரைப்பட அமைப்புகளும் முடிவு செய்து அறிவித்தன.

இரண்டு முறை டிஜிட்டல் நிறுவனங்களுடன் தென்னக சினிமா அமைப்புகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, இந்த முடிவை அவர்கள் எடுத்தனர்.

ஆனால் மறுநாளே மார்ச் 2-ம் தேதியன்று மலையாளத் திரையுலகமும், கன்னடத் திரையுலகமும் இந்த ஸ்டிரைக்கில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்து ஒதுங்கிவிட்டன.

இதற்கடுத்து மீண்டும் டிஜிட்டல் நிறுவனங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையினால் தெலுங்கு திரையுலகத்தினர் மார்ச் 8-ம் தேதியன்று ஸ்டிரைக்கில் இருந்து விலகிக் கொண்டனர். ஆந்திரா, மற்றும் தெலுங்கானாவில் தியேட்டர்களில் படங்கள் வெளியாகத் தொடங்கின.

ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் விஷால் தலைவராக இருந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் “இந்த ஸ்டிரைக் தொடர்ந்து நடக்கும்” என்று அறிவித்தது.

தயாரிப்பாளர்கள் இனிமேல் வி.பி.எஃப். கட்டணத்தைக் கட்ட மாட்டோம். டிஜிட்டல் நிறுவனங்கள் எங்களிடம் கட்டணம் கேட்கக் கூடாது.

தியேட்டர்களின் டிக்கெட் கட்டணம் குறைக்கப்படுதல் வேண்டும். படத்தின் பட்ஜெட்டுக்குத் தகுந்தாற்போல் டிக்கெட் கட்டணங்களை வைக்க வேண்டும்.

சினிமா தியேட்டர் கட்டணங்களை ஆன்லைனில் பெறுவதற்கான கட்டணத்தைக் குறைக்க வேண்டும்.

தியேட்டர்களில் டிக்கெட்டுகள் விற்பனையை உடனடியாக கம்ப்யூட்டர் மயமாக்க வேண்டும்.

வெளியாகும் படங்களை அவற்றின் பட்ஜெட், தன்மை.. இவற்றிற்கேற்பத்தான் வெளியிட வேண்டும்..” என்று 5 அம்சக் கோரிக்கையை முன் வைத்து விஷால் இந்த ஸ்டிரைக்கை தொடர்ந்து நடத்தினார்.

2018, மார்ச் 16-ம் தேதியன்று சினிமா படப்பிடிப்புகளையும், சினிமா டப்பிங் மற்றும் ரீரெக்கார்டிங் பணிகளும் தமிழ்ச் சினிமாவில் நிறுத்தப்பட்டன.

கடைசியாக ஏப்ரல் 17-ம் தேதியன்று டிஜிட்டல் நிறுவனங்களுடன் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நடத்திய பேச்சுவார்த்தையில் டிஜிட்டல் நிறுவனங்கள் ஆறு மாதங்களுக்கு டிஜிட்டல் கட்டணத்தைக் குறைத்துக் கொள்வதாக அறிவித்ததையடுத்து ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது.

இந்த வேலை நிறுத்தம் சட்ட விரோதமானது என்று நிறுவனங்களுக்கு இடையேயான போட்டிகள் பற்றி விசாரிக்கும் ஆணையத்திலும் பலரும் மனு கொடுத்திருந்தனர்.

இதையடுத்து இந்த ஸ்டிரைக் பற்றி ஆணையம் தானாகவே முன் வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்தது.

இந்த விசாரணையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், மற்றும் தெலுங்கு பிலிம் சேம்பர் இரண்டும் எதிர்வாதிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தனர். விசாரணை முடிந்த நிலையில் நேற்று முன் தினம் இந்த வழக்கு மீதான தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பில், “தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தெலுங்கு பிலிம் சேம்பர் ஆகியவையால் அறிவிக்கப்பட்ட இந்த வேலை நிறுத்தமானது நிறுவனப் போட்டிகளுக்கான வறைமுறை சட்டப் பிரிவு 3-1 மற்றும் 3-3-களுக்கு எதிரானது. வேலை நிறுத்தம் செய்வதற்கான விதிமுறைகளை இந்த அமைப்புகள் மீறியுள்ளதாகவே இந்த ஆணையம் கருதுகிறது.

இதனால் சம்பந்தப்பட்ட இரண்டு சங்கத்தினரும் எதிர்காலத்தில் இது போன்ற நிறுவனப் போட்டிகளுக்கான சட்டத்தையோ, விதிமுறைகளையோ மீறாமல் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறோம்.

இந்த வேலை நிறுத்த அறிவிப்பின்போது சில திரைப்படங்களுக்கு மட்டும் அவற்றின் சிரமம் கருதி வெளியாக அனுமதியளிக்கப்பட்டு அவைகள் வெளியானதை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட இரண்டு சங்கங்களுக்கும் எந்தவொரு பண அபராதத்தையும் விதிக்காமல் தவிர்க்கிறோம். எதிர்காலத்தில் இதையே யாரும் தங்களுக்குச் சாதகமானதாக எடு்த்துக் கொள்ளக் கூடாது என்றும் எச்சரிக்கிறோம்.

வர்த்தக நிறுவனங்களுக்கு இடையேயான போட்டிகளுக்கான விதிமுறைகளையும், சட்டங்களையும் இந்த இரண்டு சங்கங்களும் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். தங்களுடைய உறுப்பினர்களுக்கும் அவர்கள் அதை தெரியப்படுத்த வேண்டும்..” என்று அந்த ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

The post விஷால் ஸ்டிரைக் அறிவித்தது சட்ட விரோதமானது – போட்டி ஆணையம் தீர்ப்பு..! appeared first on Touring Talkies.

]]>
“துப்பறிவாளன்-2′ படத்தின் கடனுக்கே விஷால் இன்னும் வட்டி கட்டவில்லை”-தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி புகார் https://touringtalkies.co/vishal-has-not-yet-paid-interest-on-the-loan-for-thupparivaalan-2-producer-rp-chowdhury-complains/ Fri, 18 Jun 2021 11:14:52 +0000 https://touringtalkies.co/?p=15604 சில நாட்களுக்கு முன்பாக நடிகர் விஷால் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான ஆர்.பி.செளத்ரி மீது திடுக்கிடும் புகார் ஒன்றை காவல் துறையில் அளித்திருந்தார். ‘இரும்புத் திரை’ படத்தின் தயாரிப்புக்காக ஆர்.பி.செளத்ரியிடம் தான் வாங்கிய கடனை அடைத்த பிறகும், உறுதி மொழிப் பத்திரங்களை ஆர்.பி.செளத்ரி திருப்பித் தரவில்லை என்று அந்தப் புகாரில் நடிகர் விஷால் கூறியிருந்தார். விஷாலின் இந்தப் புகார் எழும்பிய நேரத்தில் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி கொடைக்கானலில் ஓய்வில் இருந்ததால் “நான் சென்னை வந்த பின்பு இதற்காக […]

The post “துப்பறிவாளன்-2′ படத்தின் கடனுக்கே விஷால் இன்னும் வட்டி கட்டவில்லை”-தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி புகார் appeared first on Touring Talkies.

]]>
சில நாட்களுக்கு முன்பாக நடிகர் விஷால் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான ஆர்.பி.செளத்ரி மீது திடுக்கிடும் புகார் ஒன்றை காவல் துறையில் அளித்திருந்தார்.

‘இரும்புத் திரை’ படத்தின் தயாரிப்புக்காக ஆர்.பி.செளத்ரியிடம் தான் வாங்கிய கடனை அடைத்த பிறகும், உறுதி மொழிப் பத்திரங்களை ஆர்.பி.செளத்ரி திருப்பித் தரவில்லை என்று அந்தப் புகாரில் நடிகர் விஷால் கூறியிருந்தார்.

விஷாலின் இந்தப் புகார் எழும்பிய நேரத்தில் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி கொடைக்கானலில் ஓய்வில் இருந்ததால் “நான் சென்னை வந்த பின்பு இதற்காக விரிவாக பதில் சொல்கிறேன்” என்று சொல்லியிருந்தார்.

அதன்படி இன்றைக்கு விஷாலுடனான கடன் கொடுக்கல், வாங்கலின்போது  என்ன நடந்தது என்பது குறித்து விளக்கமான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை இதோ :

“மூன்று வருடங்களுக்கு முன்பு நடிகர்‌ விஷால்‌ இரும்புத் திரை’ படத்தினைத்‌ தயாரிக்க என்னிடம்‌ பைனான்ஸ்‌ வாங்கியிருந்தார்‌. அந்தப் படத்திற்கு நானும்‌ விநியோகஸ்தர்‌ திருப்பூர்‌ சுப்பிரமணியும்‌ சேர்ந்து பணம்‌ கொடுத்தோம்‌.

இரும்புத் திரை’ படத்தின்‌ வெளியீட்டின்போது‌ விஷால்‌ எனக்குக் கொடுக்க வேண்டிய பணத்தில்,‌ பாதி தொகையை கொடுத்துவிட்டு மீதித் தொகையை சில தவணைகளில்‌ கொடுப்பதாக கூறினார்.

நானும்‌ ஒரு தயாரிப்பாளர்‌ என்ற முறையில்‌ படம்‌ வெளியாக வேண்டுமென்று ஒப்புக் கொண்டு கிளியரன்ஸ் கொடுத்தேன்‌. இறுதியாக இருந்த பாக்கி தொகையை அவர்‌ தயாரித்து நடிக்கும்‌ சக்ரா’ திரைப்படத்தின்‌ வெளியீட்டில்‌ தருவதாக கூறியிருந்தார்‌.

‘சக்ரா’ படத்தின்‌ வெளியீட்டின்‌பொழுது எனக்குத் தர வேண்டிய பணத்தை திருப்பூர்‌ சுப்பிரமணியம்‌ சக்ரா’ படத்தின்‌ கோவை ஏரியா விநியோக உரிமையை பெற்றுள்ளதாகவும்‌ அதில்‌ வரும்‌ ஓவர் ப்ளோ பணத்தின்‌ மூலம்‌ எனக்கு வர வேண்டிய தொகையை கொடுத்துவிடுவதாக கூறினார்‌. நானும்‌ அதற்கு ஒப்புக் கொண்டேன்‌.

அதன்‌ அடிப்படையில்‌ நானும்‌ விஷாலும்‌ 20-02 -2021 அன்று விஷாலின்‌ வழக்கறிஞர்‌ மூலமாக இரும்புத் திரை’, ‘சக்ரா’ ஆகிய இரு திரைப்படங்களுக்கும் மட்டுமான வரவு செலவு கணக்கு முடிந்து விட்டதாக ஓர்‌ ஒப்பந்தம்‌ செய்து கொண்டோம்‌.

இரும்புத் திரை’ பைனான்ஸ்க்காக அந்தப் படத்தின் நெகட்டிவ்வை எனது நிறுவனத்தின்‌ பெயரிலும்‌ மேலும்,‌ சில உறுதிமொழி பத்திரங்களையும்‌ கொடுத்திருந்தார் விஷால்‌.

உறுதி மொழி பத்திரங்கள் எனது நிறுவனத்தின்‌ பெயரில்‌ இருந்த காரணத்தால்‌, திருப்பூர்‌ சுப்பிரமணியம்‌ பணத்திற்காக விஷால்‌ கொடுத்த பத்திரங்களை எங்கள்‌ இருவருக்கும்‌ பொதுவான ரெட்டை ஜடை வயசு’, ‘ஆயுத பூஜை’ படத்தின்‌ இயக்குநரான‌ சிவக்குமாரிடம்‌ கொடுத்து வைத்திருந்தேன்‌.

இந்த நிலையில்‌ திடிரென சிவக்குமார்‌  மாரடைப்பால்‌ மரணம்‌ அடைந்துவிட்டார்‌. அவர்‌ திருமணமாகாதவர்‌ என்பதால்‌ தனி நபராக ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில்‌ வாழ்ந்து வந்தார்‌. ஆகவே அவர்‌ இறந்தது, இரண்டு நாட்களுக்கு பின்புதான்‌ மற்றவர்களுக்கே தெரிய வந்தது.

அதன் பின்‌ அந்தப் பத்திரங்களை சிவக்குமார் எங்கு வைத்திருக்கிறார்‌ என்று யாருக்குமே தெரியாமல் போனது. எப்படியும்‌ கிடைத்துவிடும்‌ என்ற நம்பிக்கையில்‌ அவருக்கு தெரிந்த நபர்களிடம்‌ விசாரித்தும்‌ இன்றுவரை கிடைக்கவில்லை.

அதன் பின்னர்‌ கொரோனா காலம்‌ தொடங்கிவிட்டது, இந்நேரத்தில்‌ எனக்கும்‌ விஷாலுக்கும்‌ இடையில்‌ பணம்‌ வாங்கி, கொடுக்கும்‌ லக்ஷ்மன்‌ என்பவர்‌ மூலம்‌ அந்த பத்திரம்‌ கிடைக்காமல்‌ போன விஷயத்தை விஷாலிடம் தெரிவிக்குமாறு கூறினேன்‌.

இந்த நிலையில்‌ விஷால்‌ கடந்த 07-05-2021-ல்‌ காவல் துறையில்‌ என்னிடம்‌ கொடுத்த உறுதிமொழி பத்திரங்கள்‌ திரும்ப கிடைக்கவில்லை. என்றும்‌, அதை வேறு யாரிடமும்‌ இருக்கிறதா என்பதை கண்டு பிடித்துத் தாருங்கள்‌ என்றும்‌ புகார்‌ ஒன்றை கொடுத்துள்ளார்‌.

அவர்‌ கொடுத்த புகார்‌ மிகவும்‌ சரியானதென்றே நானும்‌ கருதுகிறேன்., ஏனெனில்‌, அந்தப் பத்திரங்கள் வேறு யாருடைய கைகளிலாவது சிக்கியிருக்குமோ என்ற பயத்தில்‌ அந்தப் புகாரை விஷால் கொடுத்துள்ளார்‌.

ஆனால்,‌ இது குறித்து அவர்‌ என்னிடமும்‌ கலந்து பேசி நாங்கள்‌ இருவரும்‌ சேர்ந்து புகார்‌ அளித்திருந்தால்‌ தெளிவாக இருந்திருக்கும்‌.

ஏனெனில்‌ 2020 ஜனவரியில்‌ அவர்‌ தயாரித்து இயக்கும்‌ துப்பறிவாளன்‌-2’ திரைப்படத்தின்‌ சாட்டிலைட் டிஜிட்டல் உரிமையின்‌ மீது என்னிடம்‌ பைனான்ஸ்‌ வாங்கியுள்ளார்‌. இந்த பைனான்ஸ்‌ வாங்கிய தேதியில்‌ இருந்து இன்றுவரை வட்டியும்‌, அசலும்‌ நிலுவையில்‌ உள்ளன.

இந்த நிலையில்‌ இரும்புத் திரை’ படத்தின்‌ உறுதிமொழி பத்திரங்களை வைத்து நான்‌ மோசடி செய்ய முயற்சிப்பதாக விஷால்‌ புகார்‌ செய்துள்ளார்‌ என்ற செய்திகள்‌ ஊடகங்களில்‌ மூலம்‌ வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த செய்திகள்‌ எனக்கு மிகுந்த மன வேதனை அளிக்கின்றன. 4 மொழிகளில்‌, 92 திரைப்படங்கள்‌, 40 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில்‌ இப்படி ஒரு அவதூறு‌ புகாரை நான்‌ சந்திப்பது இதுவே முதல்‌ முறையாகும்‌.

இப்போதும் என்னுடைய பணம்‌ பிறரிடம்‌ இருந்து பாக்கியாக வர வேண்டியதே தவிர, மற்ற எவருடைய பணமும்‌ என்னிடம்‌ இல்லை என்பது தென்னிந்திய திரை உலகத்திற்கே தெரியும்.

என்னுடைய இந்த அறிக்கையின்‌ தாமதத்திற்கு காரணம்‌ இந்தச் சம்பவம்‌ நடக்கும்‌ சமயத்தில்‌ நான்‌ வெளியூரில்‌ இருந்த காரணத்தினால்தான்..‌ சென்னைக்கு திரும்பிய பிறகு என்னுடைய தன்னிலை விளக்கத்தை தங்களுடன்‌ பகிர்ந்து கொள்கிறேன்‌.

மேலும் ஒரு அறிவிப்பு : சிவகுமார் அவர்களிடம் இருந்த உறுதிமொழி பாத்திரங்கள் அவரைச் சார்ந்த நபர்கள் இடமோ அல்லது வேறு யாரிடமும் இருந்தால் அதை என்னிடமோ, விஷாலிடமோ அல்லது காவல்துறையிடமோ ஒப்படைக்கவும்.

மீறி அதை வைத்து இருப்பவர்களோ அல்லது பயன்படுத்த முயற்சி செய்வதோ தெரிய வந்தால் அவர்கள் மீது மிக கடுமையான கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை ஊடகங்கள் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்…”

இவ்வாறு தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

The post “துப்பறிவாளன்-2′ படத்தின் கடனுக்கே விஷால் இன்னும் வட்டி கட்டவில்லை”-தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி புகார் appeared first on Touring Talkies.

]]>
“துப்பறிவாளன்-2 படத்தை நானே இயக்குவேன்..” – நடிகர் விஷால் உறுதி..! https://touringtalkies.co/i-will-direct-the-film-thupparivaalan-2-actor-vishal-confirmed/ Thu, 17 Jun 2021 09:01:51 +0000 https://touringtalkies.co/?p=15593 இயக்குநர் மிஷ்கின் ஒரு நாளைக்கு ஒரு காட்சியை மட்டுமே படமாக்கிக் கொண்டிருந்ததால்தான் தனக்கும், அவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு எழுந்ததாகச் சொல்லியிருக்கிறார் நடிகர் விஷால். நடிகர் விஷாலின் நடிப்பில் இயக்குநர் மிஷ்கினின் இயக்கத்தில் ‘துப்பறிவாளன்’ என்ற திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து ‘துப்பறிவாளன்-2’ படத்தை மிஷ்கினும், விஷாலும் இணைந்து துவக்கினார்கள். இந்தப் படத்தின் கதைப்படி படம் முழுவதும் லண்டனில்தான் நடைபெற்றாக வேண்டும். இதனால் லண்டனிலேயே இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அந்தச் […]

The post “துப்பறிவாளன்-2 படத்தை நானே இயக்குவேன்..” – நடிகர் விஷால் உறுதி..! appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் மிஷ்கின் ஒரு நாளைக்கு ஒரு காட்சியை மட்டுமே படமாக்கிக் கொண்டிருந்ததால்தான் தனக்கும், அவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு எழுந்ததாகச் சொல்லியிருக்கிறார் நடிகர் விஷால்.

நடிகர் விஷாலின் நடிப்பில் இயக்குநர் மிஷ்கினின் இயக்கத்தில் ‘துப்பறிவாளன்’ என்ற திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து ‘துப்பறிவாளன்-2’ படத்தை மிஷ்கினும், விஷாலும் இணைந்து துவக்கினார்கள்.

இந்தப் படத்தின் கதைப்படி படம் முழுவதும் லண்டனில்தான் நடைபெற்றாக வேண்டும். இதனால் லண்டனிலேயே இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அந்தச் சமயத்தில் படப்பிடிப்பினை எப்படி நடத்துவது என்பது தொடர்பாக விஷாலுக்கும், மிஷ்கினுக்கும் இடையில் கருத்து வேறுபாடு எழுந்தது.

இதையொட்டி எழுந்த சர்ச்சையினால் மிஷ்கின் “இந்தப் படத்தை நான் இயக்க மாட்டேன்” என்று சொல்லிவிட.. விஷால் நானே இந்தப் படத்தை இயக்குவேன் என்றும் சொல்லியிருந்தார்.

இதற்குப் பிறகு விஷால் ‘எனிமி’ படத்தில் நடித்து முடித்துவிட்டார். தற்போது அவர் நடிக்கும் அவருடைய 31-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மிஷ்கினுடனான மோதல் பற்றி நடிகர் விஷால் கூறுகையில், “மிகுந்த பொருட்செலவில், நிறைய கடன் வாங்கித்தான் அந்தப் படத்தைத் துவக்கினேன். அது மிஷ்கினுக்கும் தெரியும். இருந்தும் லண்டனில் ஷூட்டிங் நடந்தபோது ஒரு நாளைக்கு ஒரு காட்சியை மட்டுமே மிஷ்கின் படமாக்கினார். இதனால் எனக்கு நிறைய பொருட் செலவு ஆனது. இது பற்றிக் கேட்கப் போய்தான் பிரச்சினை துவங்கியது.

இப்போது நானே அந்தப் படத்தை இயக்கப் போகிறேன். இசை இளையராஜாதான். அதில் எந்த மாற்றமும் இல்லை. இந்தப் படம் 2022-ம் ஆண்டு துவங்கி, அந்த ஆண்டே வெளியாகும்..” என்று சொல்லியிருக்கிறார்.

The post “துப்பறிவாளன்-2 படத்தை நானே இயக்குவேன்..” – நடிகர் விஷால் உறுதி..! appeared first on Touring Talkies.

]]>
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி மீது நடிகர் விஷால் காவல்துறையில் பரபரப்பு புகார்..! https://touringtalkies.co/actor-vishal-lodged-a-complaint-producer-r-b-chowdry-to-police/ Wed, 09 Jun 2021 13:09:46 +0000 https://touringtalkies.co/?p=15458 தமிழ்த் திரையுலகத்தின் மிக மூத்த தயாரிப்பாளரான சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி மீது, நடிகர் விஷால் காவல்துறையில் புகார் கொடுத்திருப்பது தமிழ்த் திரையுலகத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான ஆர்.பி.செளத்ரி தமிழ்த் திரையுலகத்தில் மிக நேர்மையான தயாரிப்பாளர் என்று பெயர் எடுத்தவர். இதுவரையிலும் 97 திரைப்படங்களைத் தயாரித்திருக்கிறார். 100-க்கும் மேற்பட்ட கலைஞர்களையும், படைப்பாளிகளையும் உருவாக்கி அவர்களுக்கு வாழ்க்கையளித்திருக்கிறார். அவர் மீது காவல் துறையில் புகாரா என்று திகைத்துப் போய் இருக்கிறது திரையுலகம். நடிகர் விஷால் […]

The post சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி மீது நடிகர் விஷால் காவல்துறையில் பரபரப்பு புகார்..! appeared first on Touring Talkies.

]]>
தமிழ்த் திரையுலகத்தின் மிக மூத்த தயாரிப்பாளரான சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி மீது, நடிகர் விஷால் காவல்துறையில் புகார் கொடுத்திருப்பது தமிழ்த் திரையுலகத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான ஆர்.பி.செளத்ரி தமிழ்த் திரையுலகத்தில் மிக நேர்மையான தயாரிப்பாளர் என்று பெயர் எடுத்தவர். இதுவரையிலும் 97 திரைப்படங்களைத் தயாரித்திருக்கிறார்.

100-க்கும் மேற்பட்ட கலைஞர்களையும், படைப்பாளிகளையும் உருவாக்கி அவர்களுக்கு வாழ்க்கையளித்திருக்கிறார். அவர் மீது காவல் துறையில் புகாரா என்று திகைத்துப் போய் இருக்கிறது திரையுலகம்.

நடிகர் விஷால் இரும்புத் திரை’ படத்தின் தயாரிப்பின்போது ஆர்.பி.சவுத்ரியிடம் பல லட்சம் ரூபாய்களை கடனாகப் பெற்றிருக்கிறார். இந்தக் கடன் பரிவர்த்தினையின்போது முன் தேதியிட்ட காசோலைகள் மற்றும் கையெழுத்திட்ட வெற்றுப் பத்திரங்களை ஆர்.பி.செளத்ரியிடம் ஒப்படைத்திருக்கிறார் நடிகர் விஷால்.

தற்போது அந்தக் கடன் தொகையை முழுவதுமாக விஷால் கட்டி முடித்துவிட்டாராம். இது நடந்து பல மாதங்களாகியும் விஷால் கையெழுத்திட்டுக் கொடுத்த முன் தேதியிட்ட காசோலைகள் மற்றும் வெற்றுப் பத்திரங்களை ஆர்.பி.செளத்ரி இப்போதுவரையிலும் திருப்பித் தரவில்லையாம்.

இதற்காகத்தான் ஆர்.பி.செளத்ரி மீது விஷால் தி.நகர் குற்றப் பிரிவு காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளாராம்.

ஆர்.பி.செளத்ரி தரப்பில் விசாரித்தபோது, “ஆர்.பி.செளத்ரியின் அலுவலகத்தில் மேலாளராகப் பணியாற்றியவர் சமீபத்தில் இறந்துவிட்டார். அவர்தான் கடனாளிகள் கொடுத்திருந்த பத்திரங்களைப் பாதுகாப்பாக வைத்திருந்தவர். அவரே இறந்துவிட்டதால் தற்போது விஷால் கொடுத்த பத்திரங்கள் எங்கேயிருக்கிறது என்பது தெரியாமல் சவுத்ரியின் அலுவலகத்தில் இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் உண்மை. அதற்குள்ளாக விஷால் அவசரப்பட்டு போலீஸில் புகார் கொடுத்துவிட்டார்…” என்கிறார்கள்.

“திரையுலகம் ஒரே குடும்பம் என்கிறார்கள். வங்கியைவிடவும் கேட்டவுடன் எந்த நேரமாக இருந்தாலும் உடனடியாக கடன் கொடுக்கவும் இங்கே ஆட்கள் இருக்கிறார்கள்.

திரையுலகத்தினருக்காக பலவித சங்கங்களும் இருக்கும்போது சங்கம் மூலமாகக்கூட பேசி முடிக்க வேண்டிய விஷயத்தை இப்படி காவல்துறைக்குக் கொண்டு போய் பிரச்சினையை பெரிதுபடுத்தியிருப்பது தேவைதானா.. முக்கியமான இரண்டு சங்கங்களான தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர்கள் சங்கம் இரண்டுக்கும் தலைவராக இருந்த விஷாலுக்கு இதுகூடவா தெரியாது.. எதற்கும் கொஞ்சம் பொறுமை வேண்டும்..” என்று திரையுலகத்தினர் பலரும் பேசி வருகிறார்கள்.

The post சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி மீது நடிகர் விஷால் காவல்துறையில் பரபரப்பு புகார்..! appeared first on Touring Talkies.

]]>
“சினிமாவில் முன்னணி நடிகைகளுக்கு தொல்லை” – நடிகர் விஷாலைக் கண்டித்த நடிகை காயத்ரி ரகுராம் https://touringtalkies.co/gayatri-raghuram-slams-actor-vishal-for-harassing-leading-actresses-in-cinema/ Mon, 31 May 2021 07:37:02 +0000 https://touringtalkies.co/?p=15342 சென்னையில் உள்ள பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், ஒரு மாணவியை சினிமாவுக்கு அழைத்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். “ஆசிரியர் ராஜகோபாலன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குஷ்பு உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் வற்புறுத்தினர். நடிகர் விஷாலும் இதனை கண்டித்திருக்கிறார். அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘’பி.எஸ்.பி.பி. பள்ளி ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தலை குனிய வைப்பது மட்டுமன்றி அந்த […]

The post “சினிமாவில் முன்னணி நடிகைகளுக்கு தொல்லை” – நடிகர் விஷாலைக் கண்டித்த நடிகை காயத்ரி ரகுராம் appeared first on Touring Talkies.

]]>
சென்னையில் உள்ள பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், ஒரு மாணவியை சினிமாவுக்கு அழைத்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

“ஆசிரியர் ராஜகோபாலன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குஷ்பு உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் வற்புறுத்தினர். நடிகர் விஷாலும் இதனை கண்டித்திருக்கிறார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘’பி.எஸ்.பி.பி. பள்ளி ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தலை குனிய வைப்பது மட்டுமன்றி அந்த பள்ளியை மூட வேண்டும் என்பதையும் உணர வைக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவர்கள், பெற்றோர்களிடம் யாரும் ஒருமுறைகூட மன்னிப்பு கேட்கவில்லை. இந்த குற்றத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்…” என்றார்.

விஷாலுக்கு இந்த அறிக்கைக்கு பதிலடி கொடுத்து நடிகை காயத்ரி ரகுராம் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு செய்தியை வெளியிட்டார்.

அந்தச் செய்தியில், ”முதலில் சினிமா துறையில் நடக்கும் பாலியல் தொல்லைகளையும் பாலியல் ரீதியாக துன்புறுத்துபவர்களையும் கண்டியுங்கள். சினிமாவில் புதிதாக வரும் பெண்களுக்கு என்ன நடக்கிறது என்று பாருங்கள். முன்னணி நடிகைகளுக்கும் தொல்லைகள் கொடுக்கப்படுவதை பாருங்கள். உங்களாலும் பாதிக்கப்பட்டு உள்ளனர். சினிமா துறையில் உதவி தேவைப்படும் பெண்களுக்காக உங்கள் வீரத்தை காட்டி இருக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

காயத்ரி ரகுராமின் இந்தத் திடீர் தாக்குதல் தமிழ்த் திரைப்பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post “சினிமாவில் முன்னணி நடிகைகளுக்கு தொல்லை” – நடிகர் விஷாலைக் கண்டித்த நடிகை காயத்ரி ரகுராம் appeared first on Touring Talkies.

]]>
விஷாலுடன் ஜோடி சேர்கிறார் டிம்பிள் ஹயாதி..! https://touringtalkies.co/actress-dimple-hayathi-acting-with-actor-vishal-in-his-31st-movie/ Sat, 08 May 2021 11:07:59 +0000 https://touringtalkies.co/?p=14981 நடிகர் விஷால் நடிக்கும் 31-வது திரைப்படம் பூஜையுடன் துவங்கியிருக்கிறது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான து.பா.சரவணன் இயக்குகிறார். ‘எது தேவையோ அதுவே தர்மம்’ என்ற குறும்படத்தை இயக்கி திரையுலகத்தில் பலரது பாராட்டுக்களையும் பெற்றவர் இயக்குநர் து.பா.சரவணன். இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாதி என்ற நடிகை நடிக்கிறார். இவர் ஏற்கெனவே தெலுங்கில் ‘கல்ப்’, ‘யுரேகா’, ‘அபினேத்ரி-2’, ‘கட்டால கொண்டா கணேஷ்’, ‘கிலாடி’, ‘ஆர்.ஆர்.ஆர்.’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழிலும் தேவி-2 படத்தில் நடித்த அனுபவம் […]

The post விஷாலுடன் ஜோடி சேர்கிறார் டிம்பிள் ஹயாதி..! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விஷால் நடிக்கும் 31-வது திரைப்படம் பூஜையுடன் துவங்கியிருக்கிறது.

இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான து.பா.சரவணன் இயக்குகிறார்.

‘எது தேவையோ அதுவே தர்மம்’ என்ற குறும்படத்தை இயக்கி திரையுலகத்தில் பலரது பாராட்டுக்களையும் பெற்றவர் இயக்குநர் து.பா.சரவணன்.

இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாதி என்ற நடிகை நடிக்கிறார். இவர் ஏற்கெனவே தெலுங்கில் ‘கல்ப்’, ‘யுரேகா’, ‘அபினேத்ரி-2’, ‘கட்டால கொண்டா கணேஷ்’, ‘கிலாடி’, ‘ஆர்.ஆர்.ஆர்.’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழிலும் தேவி-2 படத்தில் நடித்த அனுபவம் கொண்டவர்.

படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். என்.பி.ஶ்ரீகாந்த் படத் தொகுப்பு செய்கிறார். S.S.மூர்த்தி கலை இயக்கம் செய்ய, வாசுகி பாஸ்கர் உடை வடிவமைப்பு செய்கிறார்.

அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும்   சாமானியன் ஒருவனின் கதைதான் இத்திரைப்படம். அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையில கிராமத்துக் கதையுடன், ஆக்சனுக்கு முக்கியத்துவம் கொடுத்து இத்திரைப்படம் உருவாகவிருக்கிறது.

தற்போது ‘எனிமி’ படத்தில் நடித்து முடித்திருக்கும் விஷால் அடுத்து ‘துப்பறிவாளன்-2’ படத்தை முடித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இயக்குநர் மிஷ்கினுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்தப் படத்தை விஷாலே இயக்குவதாக இருந்தது. ஆனால், இப்போதுவரையில் அந்தப் படம் தொடர்பான எந்த முன்னேற்றமும் இல்லை.

இதற்கிடையில் விஷால் தன்னுடைய இந்தப் படத்தை மின்னல் வேகத்தில் தொடங்கியிருக்கிறார். எனவே ‘துப்பறிவாளன்-2’-வை இப்போதைக்கு விஷால் தொட மாட்டார் என்றே தெரிகிறது.

சமீபத்தில் இந்தப் படத்தின் பூஜை நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விஷால், நடிகை டிம்பிள் ஹயாதி, இயக்குநர் சரவணன் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

The post விஷாலுடன் ஜோடி சேர்கிறார் டிம்பிள் ஹயாதி..! appeared first on Touring Talkies.

]]>