Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
சிம்பு – Touring Talkies https://touringtalkies.co Thu, 10 Nov 2022 16:03:25 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png சிம்பு – Touring Talkies https://touringtalkies.co 32 32 “வெந்து தணிந்தது காடு பார்ட்-2-வுக்காகக் காத்திருக்கிறேன்” – தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு https://touringtalkies.co/i-am-waiting-for-vendu-satnuthanu-kadu-part-2-producer-udayanidhi-stalins-speech/ Thu, 10 Nov 2022 16:02:21 +0000 https://touringtalkies.co/?p=26913 Vels Film International தயாரிப்பாளர் Dr.ஐசரி K.கணேஷின் தயாரிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், A.R.ரஹ்மான் இசையில், சிலம்பரசன் TR நடித்து வெளியான “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் திரையரங்குகளில் 50 நாட்களை கடந்தும், ரசிகர்களின் வரவேற்பில் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது. இந்தப் படத்தின் 50-வது நாள் வெற்றி விழா திரை பிரபலங்கள் கலந்து கொள்ள நேற்று மாலை சென்னை சத்யம் திரையரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவினில் படக் குழுவினருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இவ்விழாவினில் […]

The post “வெந்து தணிந்தது காடு பார்ட்-2-வுக்காகக் காத்திருக்கிறேன்” – தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Touring Talkies.

]]>
Vels Film International தயாரிப்பாளர் Dr.ஐசரி K.கணேஷின் தயாரிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், A.R.ரஹ்மான் இசையில், சிலம்பரசன் TR நடித்து வெளியான “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் திரையரங்குகளில் 50 நாட்களை கடந்தும், ரசிகர்களின் வரவேற்பில் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது.

இந்தப் படத்தின் 50-வது நாள் வெற்றி விழா திரை பிரபலங்கள் கலந்து கொள்ள நேற்று மாலை சென்னை சத்யம் திரையரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவினில் படக் குழுவினருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

இவ்விழாவினில் நடிகர் சரத்குமார் பேசும்போது, “இந்த படத்தை பல சிக்கலை தாண்டி தயாரிப்பாளர் இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். ஸ்டைலிஷ் இயக்குனருடன், கடின உழைப்பாளி  சிம்பு இணைந்துள்ள இந்த படம் சிறப்பான ஒன்றாக அமைந்தது.  படத்தின் பாடல்களை தாமரை, பிருந்தா, ஏ.ஆர்.ரகுமான் சிறப்பானதாக உருவாக்கியுள்ளனர். படத்தில் பங்கேற்ற நடிகர்களும், தொழில் நுட்ப கலைஞர்களும் கடின உழைப்பை கொடுத்துள்ளனர்.  இப்படத்தின் வெற்றிக்கு அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்...” என்றார்.

நடிகை ராதிகா பேசும்போது, “இந்த படத்தில் பங்கேற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.  பல ஆண்டுகளாக வெற்றி விழா என்று ஒன்று மறைந்துபோய் இருந்தது. இந்த படத்திற்கு  அது நிகழ்ந்து இருப்பது எனக்கு மகிழ்ச்சி. இந்த படம் ஒரு பெரிய பலப்பரிட்சை தான். இந்த படம் கௌதம் மேனனின் பாணியில் இருந்து முழுவதுமாக மாறுபட்டு இருந்தது.  சிம்பு இதில் மிகச்சிறந்த நடிப்பை கொடுத்துள்ளார். இந்த படத்தை பல தடைகளை தாண்டி உருவாக்கிய தயாரிப்பாளருக்கு எனது நன்றிகள். படக்குழு அனைவருக்கும் எனது வாழ்த்துகள்…” என்றார்.

கே.எஸ்.ரவிக்குமார் பேசும்போது, வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் எப்பொழுதும் சிறப்பான படத்தை கொடுப்பதற்காக உழைக்கிறார்கள். பல திறமையாளர்களை அவர்கள் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.  இந்த திரைப்படத்தில் பல திறமைசாலிகள் இணைந்துள்ளனர்.  அவர்களது கடின உழைப்பில் இந்த படம்  சிறப்பானதாக மாறியுள்ளது. இந்த படத்தை ரெட் ஜெயண்ட் வெளியிட்டது இந்த படத்திற்கு கூடுதல் பலமாக மாறிவிட்டது. இந்த வெற்றிப்படத்தில் பங்கேற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பேசும்போது, “இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த உதயநிதி அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த படத்திற்காக பலருக்கு நன்றி கூற கடமைப்பட்டு இருக்கிறேன்.  பல மேடைகளில் அதை கூறியும் இருக்கிறேன். இந்த படத்தின் ஐம்பதாவது நாள் வெற்றிவிழாவை ரசிகர்களுடன் கொண்டாட வேண்டும் என்ற முடிவெடுத்து, அதை விழாவாக எடுத்த ஐசரி கணேஷ் அவர்களுக்கு நன்றி…” என்றார்.

தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “இந்த ‘வெந்து தணிந்தது காடு’ படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக  அமைந்ததற்கு இயக்குநர் கௌதம் மேனன், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், சிலம்பரசன், சிம்பு ரசிகர்கள்தான் காரணம். அதற்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.  படத்தை முதலில் நான்தான் பார்த்தேன், படம் பார்த்தவுடன் இந்த படம் வெற்றிப் படமாக அமையும் என்று நான் கூறினேன். சிம்பு  இப்படத்தை நீங்கள் வெளியிட வேண்டும் என கூறினார். அவர் கேட்டுக் கொண்டதால்தான் நான் இந்தப் படத்தை வெளியிட்டேன். அவர் கூறிய வார்த்தைகளின்படி படம் மிகப்ப ெரிய வெற்றியடைந்தது. படக் குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். ‘வெந்து தணிந்தது காடு’ பாகம் இரண்டிற்காக  நான் ஆவலாக  இருக்கிறேன்..” என்றார்.

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பேசும்போது, “இந்தப் படத்தில் பங்கேற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களை கௌரவிப்பதற்காகத்தான் இந்த விழா நடத்தப்படுகிறது. ரெட் ஜெயண்ட் இந்தப் படத்தை வாங்கியவுடன் இந்தப் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உருவானது. இந்த படத்தின் சிறப்பம்சமே நடிகர் சிம்புதான். இதுபோன்ற பல வெற்றிகளை நீங்கள் குவிக்க வேண்டும். இயக்குநர் கௌதம் மேனன் ஒரு வித்தியாசமான திரைப்படத்தை கொடுத்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் இந்த வருடத்தின் சிறந்த ஆல்பத்தை கொடுத்துள்ளார். எல்லோர்க்கும் எனது வாழ்த்துக்களையும். நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன்..” என்றார்.

The post “வெந்து தணிந்தது காடு பார்ட்-2-வுக்காகக் காத்திருக்கிறேன்” – தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Touring Talkies.

]]>
அஜீத் ரசிகர்களுக்கு சிம்பு அட்வைஸ் செய்தாரா? https://touringtalkies.co/does-simbu-have-any-advice-for-ajith-fans/ Wed, 09 Nov 2022 19:44:13 +0000 https://touringtalkies.co/?p=26839 ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் 50-வது நாள் விழாவில் அஜீத்தை குறி வைத்து சிம்பு பேசியிருப்பதாக தகவல்கள் பரவியுள்ளன. சிம்பு நடிப்பில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் 50-வது நாள் விழா இன்று மாலை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிம்பு பேசும்போது, “இந்தப் படத்தின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. இந்த படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. இசையமைத்த ரகுமானுக்கு நன்றி. ‘மல்லிப் பூ’ […]

The post அஜீத் ரசிகர்களுக்கு சிம்பு அட்வைஸ் செய்தாரா? appeared first on Touring Talkies.

]]>
‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் 50-வது நாள் விழாவில் அஜீத்தை குறி வைத்து சிம்பு பேசியிருப்பதாக தகவல்கள் பரவியுள்ளன.

சிம்பு நடிப்பில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய வெந்து தணிந்தது காடு’ படத்தின் 50-வது நாள் விழா இன்று மாலை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகர் சிம்பு பேசும்போது, “இந்தப் படத்தின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. இந்த படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. இசையமைத்த ரகுமானுக்கு நன்றி. மல்லிப் பூ’ பாடல் எழுதிய தாமரைக்கும் நன்றி.

இப்போது மக்களின் ரசனை மாறி உள்ளது. அவர்கள் விதம்விதமான சினிமாக்களை பார்க்கத் தொடங்கிவிட்டனர். இதை சினிமாவின் பொற்காலம் என்பேன்.

அண்மையில் வெளியான ‘விக்ரம்’, ‘பொன்னியின் செல்வன்’, ‘காந்தாரா’, தற்போது வெளியான ‘லவ் டுடே’ என அனைத்து படங்களும் வெற்றி பெற்றுள்ளன. மக்கள் வித்தியாசமான படங்களை விரும்பி பார்க்கிறார்கள்.

உங்களிடம் முக்கியமாக ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும்.. தயவு செய்து ஒவ்வொரு படத்திற்கும் அப்டேட் கேட்காதீர்கள். உங்களுக்காக.. ஒரு நல்ல படத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

நீங்கள் இப்படி அடிக்கடி அப்டேட் கேட்பதால் படத்தில் ஏதாவது தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. நல்ல படங்களை உங்களுக்கு வழங்க காத்துக் கொண்டிருக்கிறோம். என் படத்திற்கு மட்டுமல்ல; இனிமேல் எந்தப் படத்திற்கும் அப்டேட் கேட்காதீர்கள். இதை சொல்ல சொன்னது பத்து தல’ இயக்குநர்தான்.

எல்லா ரசிகர்களும் ஹீரோவை கொண்டாடுவார்கள். ஆனால், நான் என் ரசிகர்களை கொண்டாடுவேன். அது இனியும் தொடரும்…” என்றார்.

வலிமை’ பட சூட்டிங் சமயத்தில்தான் அஜித் ரசிகர்கள் அடிக்கடி ‘வலிமை அப்டேட்’, ‘வலிமை அப்டேட்.. என கேட்டு சமூக வலைத்தளங்களில் டிரெண்ட்டிங் செய்து கொண்டு இருந்தனர்.

இதனால், சிம்பு அஜித் ரசிகர்களை குறி வைத்துதான் இப்படி பேசினாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

The post அஜீத் ரசிகர்களுக்கு சிம்பு அட்வைஸ் செய்தாரா? appeared first on Touring Talkies.

]]>
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்! https://touringtalkies.co/if-everything-happens/ Fri, 28 Oct 2022 14:51:00 +0000 https://touringtalkies.co/?p=26131 கதையைக் கேட்டு சிலாகித்து அந்த கதையில் நடிகர்கள் நடிப்பார்கள் ஆனால் அது தோல்வி அடைவதும்,. வேண்டாம் என நிராகரித்த படங்கள் வெற்றி  பெறுவதும் திரையுலகில் சகஜம். அப்படியான ஒன்றுதான், கவுதம் மேனன் இயக்கத்தில்  சிம்பு நடித்து பெரும் வெற்றி பெற்ற, “விண்ணணைத் தாண்டி வருவாயா” திரைப்படம். முதலில் இந்த  கதையை தெலுங்கில்  எடுக்க முடிவு செய்திருந்தார்  கௌதம் மேனன். இதையடுத்து தெலுங்கு நடிகரான மகேஷ் பாபுவிடம் கதையை கூறினாராம். ஆனால்  அவர் நடிக்க மறுத்துவிட்டார். சரி, தமிழில் […]

The post நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்! appeared first on Touring Talkies.

]]>
கதையைக் கேட்டு சிலாகித்து அந்த கதையில் நடிகர்கள் நடிப்பார்கள் ஆனால் அது தோல்வி அடைவதும்,. வேண்டாம் என நிராகரித்த படங்கள் வெற்றி  பெறுவதும் திரையுலகில் சகஜம்.

அப்படியான ஒன்றுதான், கவுதம் மேனன் இயக்கத்தில்  சிம்பு நடித்து பெரும் வெற்றி பெற்ற, “விண்ணணைத் தாண்டி வருவாயா” திரைப்படம்.

முதலில் இந்த  கதையை தெலுங்கில்  எடுக்க முடிவு செய்திருந்தார்  கௌதம் மேனன். இதையடுத்து தெலுங்கு நடிகரான மகேஷ் பாபுவிடம் கதையை கூறினாராம். ஆனால்  அவர் நடிக்க மறுத்துவிட்டார்.

சரி, தமிழில் இந்த படத்தை கொண்டு வரலாம் என திட்டமிட்டு தனுஷிடம் கூறினார். படத்தின் கிளைமாக்ஸ் காட்சி  அவருக்கு உடன்பாடாக இல்லை. ஆகவே அவரும் மறுத்துவிட்டார்.

பிறகுதான் சிம்பு இந்த கதையைக் கேட்டு நடிக்க சம்மதித்தார். படமும் பெரிய அளவில் ரசிகர்களைக் கவர்ந்தது.

நடிகர்கள் ஒன்று நினைக்க.. ரசிகர்கள் வேறொன்று நினைக்கிறார்கள்!

The post நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்! appeared first on Touring Talkies.

]]>
சிம்புவை கிண்டல் செய்து சிவகார்த்திகேயன் பேசிய பழைய வீடியோ வைரலானது..! https://touringtalkies.co/an-old-video-of-sivakarthikeyan-teasing-simbu-has-gone-viral/ Sun, 23 Oct 2022 14:40:32 +0000 https://touringtalkies.co/?p=25898 தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக பிரம்மாண்டமாக உருவெடுத்திருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன், ஆரம்பத்தில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக இருந்து பின்னர் விஜய் டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக உயர்ந்து, அதன் மூலம் கிடைத்த புகழால் சினிமாவிற்குள் நுழைந்தவர். இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு மேடையில் பல்வேறு நடிகர்களைப் பற்றி மிமிக்ரி செய்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சாலமன் பாப்பையா, சிம்பு, டி.ராஜேந்தர் ஆகியோரது குரலில் சிவகார்த்திகேயன் மிமிக்ரி செய்துள்ளார். அப்போது […]

The post சிம்புவை கிண்டல் செய்து சிவகார்த்திகேயன் பேசிய பழைய வீடியோ வைரலானது..! appeared first on Touring Talkies.

]]>
தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக பிரம்மாண்டமாக உருவெடுத்திருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன், ஆரம்பத்தில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக இருந்து பின்னர் விஜய் டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக உயர்ந்து, அதன் மூலம் கிடைத்த புகழால் சினிமாவிற்குள் நுழைந்தவர்.

இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு மேடையில் பல்வேறு நடிகர்களைப் பற்றி மிமிக்ரி செய்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் சாலமன் பாப்பையா, சிம்பு, டி.ராஜேந்தர் ஆகியோரது குரலில் சிவகார்த்திகேயன் மிமிக்ரி செய்துள்ளார். அப்போது சிம்பு அரசியலுக்கு வந்த என்ன செய்வார் என்கிற கான்செப்டில் பேசிய சிவகார்த்திகேயன், “கர்ப்பிணிப் பெண்களுக்கு அரசு 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்னு சொல்லியிருக்கிறது. நான் அரசியலுக்கு வந்தால் அதை நிறைய பேரை வாங்க வைப்பேன் சார்..” என்று காமெடியாக சிம்புவின் குரலிலேயே பேசியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன் நடிகராவதற்கு முன்பாக நகைச்சுவைக்காக இப்படி பேசி இருந்தாலும், தற்போது அவர் ஒரு முன்னணி நடிகராக இருப்பதால் அவரின் இந்த பேச்சுக்கு சிம்புவின் ரசிகர்கஎிடையே பலவித எதிர்ப்புக் குரல்கள் கிளம்பியுள்ளன.

The post சிம்புவை கிண்டல் செய்து சிவகார்த்திகேயன் பேசிய பழைய வீடியோ வைரலானது..! appeared first on Touring Talkies.

]]>
சிம்புவின் ‘பத்து தல’ படத்தின் நான்கு கட்ட படப்பிடிப்பும் நிறைவு..! https://touringtalkies.co/the-shooting-of-simbus-pathu-thala-in-four-stages-has-been-completed/ Wed, 19 Oct 2022 18:05:03 +0000 https://touringtalkies.co/?p=25705 நடிகர் சிம்பு தற்போது இயக்குநர் கிருஷ்ணாவின் இயக்கத்தில் ‘பத்து தல’ படத்தில் நடித்து வருகிறார். 2017-ம் ஆண்டு கன்னடத்தில் சிவராஜ் குமார் நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஆன ‘மஃப்ட்டி’ படத்தின் ரீமேக்குதான் இந்த ‘பத்து தல’ படம். நிழல் உலக தாதாவை தேடிப் போகும் ரகசிய போலிஸ் பற்றிய கதைதான் இந்தப் படம். சிவராஜ் குமார் நடித்த படங்களில் மிக அதிக வசூலை அள்ளியதும் இந்தப் படம்தான். ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் K. […]

The post சிம்புவின் ‘பத்து தல’ படத்தின் நான்கு கட்ட படப்பிடிப்பும் நிறைவு..! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் சிம்பு தற்போது இயக்குநர் கிருஷ்ணாவின் இயக்கத்தில் ‘பத்து தல’ படத்தில் நடித்து வருகிறார். 2017-ம் ஆண்டு கன்னடத்தில் சிவராஜ் குமார் நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஆன ‘மஃப்ட்டி’ படத்தின் ரீமேக்குதான் இந்த ‘பத்து தல’ படம்.

நிழல் உலக தாதாவை தேடிப் போகும் ரகசிய போலிஸ் பற்றிய கதைதான் இந்தப் படம். சிவராஜ் குமார் நடித்த படங்களில் மிக அதிக வசூலை அள்ளியதும் இந்தப் படம்தான்.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் K. E. ஞானவேல் ராஜா தயாரித்து வரும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பிரவீன் K. L. படத் தொகுப்பு  செய்கிறார்.

இந்தப் படத்தில், சிம்புவுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.  இயக்குநர் கௌதம் மேனன், சிம்புவுக்கு வில்லனாக நடிக்கிறார்.

பத்து தல படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்திருந்த நிலையில், இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்திலும், மூன்றாம் கட்டப் படிப்பு கன்னியாகுமரியில் நடந்திருந்தது. நான்காம் கட்ட படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி பகுதியில் நடந்தது. இந்தப் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் கோவிலூரில் நடந்ததென்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த ‘பத்து தல’ படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள துங்கபத்திரை அணையில் நடந்துள்ளது. அந்தப் படப்பிடிப்பின் நடுவே ரசிகர்களுடன் சிம்பு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.

மேலும் இயக்குநர் கிருஷ்ணாவும், நாயகன் சிம்புவும் ஆற்றின் கரையில் பேசுவது போலவும், கௌதம் கார்த்திக்கும், சிம்புவும், இயக்குநர் கிருஷ்ணாவுடன் சேர்ந்து நடந்து வரும் புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.

இந்தப் பத்து தல’ திரைப்படம் இந்த ஆண்டு, டிசம்பர் 14-ம் தேதி வெளியாகவுள்ளது.

The post சிம்புவின் ‘பத்து தல’ படத்தின் நான்கு கட்ட படப்பிடிப்பும் நிறைவு..! appeared first on Touring Talkies.

]]>
சிம்புவுக்கு வில்லனான கவுதம் மேனன் https://touringtalkies.co/gautham-menon-to-act-as-villain-in-simbus-movie/ Mon, 22 Aug 2022 07:19:43 +0000 https://touringtalkies.co/?p=23943 ‘பத்து தல’ படத்தில் சிம்புவுக்கு வில்லனாக கவுதம் மேனன் நடிக்கவுள்ளதாக அப்படத்தின் இயக்குநரான கிருஷ்ணா தெரிவித்துள்ளார். சிம்புவை வைத்து இயக்குநர் கவுதம மேனன் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ மற்றும் ‘வெந்து தணிந்தது காடு’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இதில் ‘வெந்து தணிந்தது காடு’ படம் அடுத்த மாதம் 15-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து சிம்பு நடிக்கும் படம் பத்து தல. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் சிம்புவுடன் […]

The post சிம்புவுக்கு வில்லனான கவுதம் மேனன் appeared first on Touring Talkies.

]]>
‘பத்து தல’ படத்தில் சிம்புவுக்கு வில்லனாக கவுதம் மேனன் நடிக்கவுள்ளதாக அப்படத்தின் இயக்குநரான கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

சிம்புவை வைத்து இயக்குநர் கவுதம மேனன் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ மற்றும் ‘வெந்து தணிந்தது காடு’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இதில் ‘வெந்து தணிந்தது காடு’ படம் அடுத்த மாதம் 15-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து சிம்பு நடிக்கும் படம் பத்து தல. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் சிம்புவுடன் கவுதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இந்தப் ‘பத்து தல’ படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பதால் படத்திற்குப் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கன்னடத்தில் மெகா ஹிட்டான ‘முப்தி’ படத்தின் ரீமேக்காக இந்தப் பத்து தல படம் உருவாக்கப்படுகிறது. இருப்பினும், தமிழ் ரசிகர்களுக்கேற்ப பல மாற்றங்களை செய்திருப்பதாக இயக்குநர் கிருஷ்ணா சொல்லியுள்ளார்.

இந்நிலையில் ‘பத்து தல’ படத்தில் வில்லனாக இயக்குநர் கவுதம் மேனன் நடிக்கவுள்ளார் என்று இயக்குநர் கிருஷ்ணா அப்டேட் கொடுத்துள்ளார்.

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, ‘அச்சம் என்பது மடமையடா’, மலையாளத்தில் ஹிட்டான ‘ட்ரான்ஸ்’ உள்ளிட்ட படங்களில் கவுதம் மேனன் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.  இந்நிலையில் ‘பத்து தல’ படத்தில் கவுதம மேனன் வில்லனாக நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னை, கர்நாடகா, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தப் படம் வரும் டிசம்பர் மாதம் திரைக்கு வரவுள்ளது.

The post சிம்புவுக்கு வில்லனான கவுதம் மேனன் appeared first on Touring Talkies.

]]>
சிம்புவின் ‘பத்து தல’ கிளிம்ப்ஸ் யூ டியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது https://touringtalkies.co/pathu-thala-movie-climpse-gets-trending-in-youtube/ Sat, 05 Feb 2022 08:01:49 +0000 https://touringtalkies.co/?p=20567 சிம்பு நடித்திருக்கும் ‘பத்து தல’ படத்தின் கிளிம்ப்ஸ் தற்போது யூ டியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. சிம்புவின் பிறந்த நாளையொட்டி வெளியாகியுள்ள ‘பத்து தல’ படத்தின் கிளிம்ப்ஸ் யூ டியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. ’சில்லுனு ஒரு காதல்’ இயக்குநர் கிருஷ்ணா இயக்கும், இப்படத்தில் கெளதம் கார்த்திக், பிரியா பவானிசங்கர், மனுஷ்யபுத்திரன், டீஜே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கடந்த 2017 ஆம் ஆண்டு கன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த ’மஃப்டி’ என்ற […]

The post சிம்புவின் ‘பத்து தல’ கிளிம்ப்ஸ் யூ டியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது appeared first on Touring Talkies.

]]>
சிம்பு நடித்திருக்கும் ‘பத்து தல’ படத்தின் கிளிம்ப்ஸ் தற்போது யூ டியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

சிம்புவின் பிறந்த நாளையொட்டி வெளியாகியுள்ள ‘பத்து தல’ படத்தின் கிளிம்ப்ஸ் யூ டியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

’சில்லுனு ஒரு காதல்’ இயக்குநர் கிருஷ்ணா இயக்கும், இப்படத்தில் கெளதம் கார்த்திக், பிரியா பவானிசங்கர், மனுஷ்யபுத்திரன், டீஜே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு கன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த ’மஃப்டி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்த ‘பத்து தல’ திரைப்படம்.

கருப்பு சட்டை லுங்கியில் செம்ம மிரட்டலுடன் கவனம் ஈர்க்கும் சிம்பு ஏ.ஜி.ஆர் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கிளிம்ப்ஸில் ’ஏ.ஜி.ஆர்.கிட்ட மோதாதீங்கன்னா கேக்குறீங்களாடா?’, ’செயிண்ட் ஜார்ஜ் கோட்டையே ஏ.ஜி.ஆர் கோட்டைக்குள்ள நுழைய பயப்படும்டா’ போன்ற வசனங்களும் கவனம் ஈர்க்கின்றன.

இப்படத்தின் கிளிம்ப்ஸ் இதுவரை யூடியூபில் 1 மில்லியன் பார்வைகளை நெருங்கிக் கொண்டிருப்பதோடு யூ டியூப் ட்ரெண்டிங்கிலும் முதலிடத்தில் உள்ளது.

The post சிம்புவின் ‘பத்து தல’ கிளிம்ப்ஸ் யூ டியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது appeared first on Touring Talkies.

]]>
“ஸ்டாலின் வீட்டு முன் உண்ணாவிரதம் இருப்பேன்” – டி.ராஜேந்தர் எச்சரிக்கை..! https://touringtalkies.co/i-will-fast-in-front-of-stalins-house-t-rajender-warns/ Wed, 20 Oct 2021 17:53:00 +0000 https://touringtalkies.co/?p=18932 வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் ‘மாநாடு’ படத்தை இந்தத் தீபாவளி அன்று ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்தார்கள். இந்நிலையில் திடீரென்று “தீபாவளியன்று ‘மாநாடு’ வெளிவராது. நவம்பர் 25-ம் தேதி ரிலீஸாகும்” என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கையொன்றை வெளியிட்டார். சிம்புவும் தற்போது இயக்குநர் கவுதம் மேனன் இயக்கி வரும் ‘வெந்து தணிந்தது காடு’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள மும்பை சென்றுவிட்டார் சிம்பு. இந்த நேரத்தில் டி.ராஜேந்தர் மற்றும் உஷா டி.ராஜேந்தர் இருவரும் இன்று காலை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நேரில் சென்று மனு […]

The post “ஸ்டாலின் வீட்டு முன் உண்ணாவிரதம் இருப்பேன்” – டி.ராஜேந்தர் எச்சரிக்கை..! appeared first on Touring Talkies.

]]>
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் ‘மாநாடு’ படத்தை இந்தத் தீபாவளி அன்று ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்தார்கள். இந்நிலையில் திடீரென்று “தீபாவளியன்று ‘மாநாடு’ வெளிவராது. நவம்பர் 25-ம் தேதி ரிலீஸாகும்” என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கையொன்றை வெளியிட்டார்.

சிம்புவும் தற்போது இயக்குநர் கவுதம் மேனன் இயக்கி வரும் வெந்து தணிந்தது காடு’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள மும்பை சென்றுவிட்டார் சிம்பு.

இந்த நேரத்தில் டி.ராஜேந்தர் மற்றும் உஷா டி.ராஜேந்தர் இருவரும் இன்று காலை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நேரில் சென்று மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில், “தொடர்ச்சியாக தமிழ் சினிமாவில் வெளிவரும் படங்களுக்கு ஜனநாயக முறைப்படி இல்லாமல் அமைக்கப்பட்ட தமிழ்நாடு நடப்பு விநியோகஸ்தர் சங்கம்’ என்ற பெயரில் சிலர் கட்டபஞ்சாயத்து செய்து வருகின்றனர்.

சிலம்பரசனை வைத்து ‘அன்பானவன், அசராவதவன், அடங்காதவன்’ படத்தை தயாரித்த தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு எந்தப் பணமும் கொடுக்க வேண்டியதில்லை. சிம்பு அந்தப் படத்தில் தனக்கு வர வேண்டிய சம்பளத்தைக்கூட விட்டுக் கொடுத்திருக்கிறார்.

ஆனால், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் சிம்பு நடிக்கும் எந்த படத்தையும் வெளி வரவிடாமல் ரெட்கார்டு போட்டு வருகிறார். அதற்கு தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத்தினர் மறைமுகமாக உதவி வருகிறார்கள். இதனால் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், அருள்பதி மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளான முரளி உட்பட 6 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

காவல் ஆணையர் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களிடத்தில் பேசிய டி.ராஜேந்தர், “தமிழ் சினிமாவில் சிலர் ஜனநாயகத்திற்கு எதிராக அமைக்கப்பட்ட நடப்பு விநியோகஸ்தர் சங்கம்’ என்ற பெயரில் கட்டப் பஞ்சாயத்து செய்து வருகின்றனர்.

மைக்கேல் ராயப்பனுக்கு சிம்பு பணம் கொடுக்க தேவையில்லை. மேலும் கட்டப் பஞ்சாயத்து செய்து வரும் அருள்பதி, மைக்கேல் ராயப்பனுக்கு தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் முரளி, ராதாகிருஷ்ணன், மன்னன், சந்துரு பிரகாஷ் ஜெய்ன், கதிரேசன், தினேஷ் ஆகியோர் மறைமுகமாக உதவுகின்றனர்.

இந்தியாவில் எங்கும் இல்லாத அளவிற்கு தமிழ் சினிமாவில் கட்டப் பஞ்சாயத்து நடைபெறுகிறது. இதனால் பல சினிமா கலைஞர்கள் தற்கொலை செய்யும் அளவிற்கு தள்ளப்படுகிறார்கள். இந்தக் கட்டப் பஞ்சாயத்து கும்பல் மீதும், ரெட் கார்டு போடும் கும்பல் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளோம்.

இது மாதிரியான கட்டப் பஞ்சாயத்து கும்பலை களையெடுக்க ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட விசாரணை ஆணையம் ஏன் கிடப்பில் உள்ளது..? இந்தக் கட்ட பஞ்சாயத்து கும்பல் நீதிமன்றம் மற்றும் எந்த சட்ட திட்டங்களையும் கண்டு கொள்வதில்லை.

நான், சிம்புவுக்காக மட்டும் பேசவில்லை. தமிழ் சினிமாவில் பல நடிகர்களுக்கு இந்தப் பிரச்சனை உள்ளது. இந்தப் பிரச்சினையை இத்தோடு விடப் போவதில்லை. டெல்லிவரை கொண்டு போய் சேர்க்க உள்ளேன்.

சிம்புவின் மாநாடு’ படத்தை தீபாவளியன்று வரவிடாமல் தடுத்தால், நான் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டின் முன்பு உண்ணாவிரதம் இருக்கவும் தயாராக இருக்கிறேன்…” என்று தெரிவித்தார்.

The post “ஸ்டாலின் வீட்டு முன் உண்ணாவிரதம் இருப்பேன்” – டி.ராஜேந்தர் எச்சரிக்கை..! appeared first on Touring Talkies.

]]>
‘வெந்து தணிந்தது காடு’ போஸ்டரில் கலக்கும் சிம்பு https://touringtalkies.co/simbu-47th-movie-title-vendhu-thaninthathu-kaadu-poster-released/ Fri, 06 Aug 2021 08:20:12 +0000 https://touringtalkies.co/?p=16795 நடிகர் சிம்புவின் 47-வது படத்தின் பெயர் தற்போது வெளியாகியுள்ளது. ‘வெந்து தணிந்தது காடு’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படங்கள் என்றாலே தலைப்பு மிகவும் வித்தியாசமாகத்தான் இருக்கும் என்பது தமிழ்த் திரை ரசிகர்கள் அறிந்ததுதான். இந்த நிலையில் இந்தப் புதிய  தலைப்பும் இது கெளதம் படம்தான் என்பதை சொல்ல வைத்திருக்கிறது. இந்தப் படத்தின் மூலமாக சிம்புவும் இயக்குநர் கெளதம் மேனனும் மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறார்கள். நடிகர் சிம்பு ஏற்கெனவே இயக்குநர் கெளதம் […]

The post ‘வெந்து தணிந்தது காடு’ போஸ்டரில் கலக்கும் சிம்பு appeared first on Touring Talkies.

]]>
நடிகர் சிம்புவின் 47-வது படத்தின் பெயர் தற்போது வெளியாகியுள்ளது. வெந்து தணிந்தது காடு’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படங்கள் என்றாலே தலைப்பு மிகவும் வித்தியாசமாகத்தான் இருக்கும் என்பது தமிழ்த் திரை ரசிகர்கள் அறிந்ததுதான். இந்த நிலையில் இந்தப் புதிய  தலைப்பும் இது கெளதம் படம்தான் என்பதை சொல்ல வைத்திருக்கிறது.

இந்தப் படத்தின் மூலமாக சிம்புவும் இயக்குநர் கெளதம் மேனனும் மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறார்கள். நடிகர் சிம்பு ஏற்கெனவே இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

அந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இவர்களது கூட்டணி எப்போது இணையும் என சிம்பு ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், சுமார் ஐந்து வருடங்களுக்கு பின்னர் மீண்டும், இருவரும் இந்தப் படத்தில்தான் இணைந்துள்ளனர்.

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

சற்று முன்னர் வெளியான இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே சிம்பு ரசிகர்களை இன்ப அதிர்ச்சியாக்கியிருக்கிறது.

சிம்பு மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் அழுக்கு சட்டை, கைலி கட்டியபடி கையில் ஒரு சொரட்டு கோல் வைத்துள்ளார். மேலும் அவர் நிற்கும் இடத்தில் நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது.

இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இதுவரை கெளதம் மேனன் இயக்கிய படங்களில் இருந்து இந்த கதை மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்பதை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலமாகத் தெரிகிறது.

தற்போது இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

The post ‘வெந்து தணிந்தது காடு’ போஸ்டரில் கலக்கும் சிம்பு appeared first on Touring Talkies.

]]>
நடிகர் சிம்பு நடிக்கும் படத்தின் படப்பிடிப்புக்குத் தடை..! https://touringtalkies.co/actor-simbus-film-shooting-was-banned/ Mon, 02 Aug 2021 07:02:48 +0000 https://touringtalkies.co/?p=16672 இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கவிருக்கும் ‘நதிகளில் நீராடும் சூரியன்’ படத்தின் படப்பிடிப்புக்கு பெப்சி அமைப்பு தடை விதித்துள்ளது. நடிகர் சிம்பு தற்போதுதான் ‘மாநாடு’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் முடிவதற்குள்ளாக அடுத்து தான் கவுதம் மேனன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவிருப்பதாக அறிவித்திருந்தார். இந்தப் படத்தை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் மே 5-ம் தேதியன்று துவங்குவதாக இருந்தது. ஆனால் அதற்குள்ளாக அந்தப் படத்தின் […]

The post நடிகர் சிம்பு நடிக்கும் படத்தின் படப்பிடிப்புக்குத் தடை..! appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கவிருக்கும் ‘நதிகளில் நீராடும் சூரியன்’ படத்தின் படப்பிடிப்புக்கு பெப்சி அமைப்பு தடை விதித்துள்ளது.

நடிகர் சிம்பு தற்போதுதான் ‘மாநாடு’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் முடிவதற்குள்ளாக அடுத்து தான் கவுதம் மேனன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவிருப்பதாக அறிவித்திருந்தார். இந்தப் படத்தை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் மே 5-ம் தேதியன்று துவங்குவதாக இருந்தது. ஆனால் அதற்குள்ளாக அந்தப் படத்தின் படப்பிடிப்பில் பெப்சி ஊழியர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று பெப்சி அமைப்பு, அந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு கடிதம் எழுதியுள்ளதாம்.

நடிகர் சிம்பு ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்திற்கான நஷ்ட ஈட்டுத் தொகையை அதன் தயாரிப்பாளரான மைக்கேல் ராயப்பனுக்கு இன்னமும் கொடுக்காததால் அந்தத் தொகையைக் கொடுத்த பின்புதான் சிம்பு அடுத்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாம்.

இதையொட்டி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் பெப்சி அமைப்புக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையிலேயே சிம்புவின் இந்தப் புதிய படத்தின் படப்பிடிப்புக்கு பெப்சி தடை விதித்திருப்பதாகத் தெரிகிறது.

மாநாடு’ படத்தின் ரிலீஸ் சமயத்தில் மைக்கேல் ராயப்பனுக்குரிய நஷ்ட ஈட்டுத் தொகையை தான் தந்துவிடுவதாக சிம்பு ஏற்கெனவே கூறியிருந்தாராம். ஆனால் அதற்கான பேச்சு ஏதும் இப்போது இல்லாததால்தான் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர் கவுன்சிலில் மீண்டும் புகார் கொடுத்து சிம்புவின் புதிய படத்தை முடக்கியிருப்பதாக தயாரிப்பாளர் கவுன்சில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து இரு தரப்பினருக்குமிடையே பேச்சு வார்த்தை இன்று நடக்கவிருப்பதாகவும் தகவல் வந்துள்ளது.

The post நடிகர் சிம்பு நடிக்கும் படத்தின் படப்பிடிப்புக்குத் தடை..! appeared first on Touring Talkies.

]]>