Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
vikram movie – Touring Talkies https://touringtalkies.co Fri, 11 Nov 2022 06:59:35 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png vikram movie – Touring Talkies https://touringtalkies.co 32 32 “பயப்பட வைத்த விக்ரம்”: லட்சுமி ராய் https://touringtalkies.co/fearful-vikram-lakshmi-roy/ Thu, 10 Nov 2022 06:39:12 +0000 https://touringtalkies.co/?p=26960 யுடிவி தனஞ்செயன் தயாரிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “தாண்டவம்”. இதில் விக்ரமுடன் அனுஷ்கா, லட்சுமி ராய், எமி ஜாக்சன் ஆகியோர் நடித்திருந்தனர். அந்த படப்பிடிப்பு அனுபவங்களில் ஒன்றை சமீபத்தில் பகிர்ந்துகொண்டு இருக்கிறார் லட்சுமி ராய். அவர், “அந்த படத்தின் சில காட்சிகளில் கண் தெரியாத ஒரு கதாப்பாத்திரத்தில் விக்ரம் நடித்தார்.  இதில் விக்ரம் கண் தெரியாமல் ஓடி வந்து தடுக்கி கீழே விழுவது போன்று ஒரு சீன். அதே போல […]

The post “பயப்பட வைத்த விக்ரம்”: லட்சுமி ராய் appeared first on Touring Talkies.

]]>

யுடிவி தனஞ்செயன் தயாரிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “தாண்டவம்”. இதில் விக்ரமுடன் அனுஷ்கா, லட்சுமி ராய், எமி ஜாக்சன் ஆகியோர் நடித்திருந்தனர்.

அந்த படப்பிடிப்பு அனுபவங்களில் ஒன்றை சமீபத்தில் பகிர்ந்துகொண்டு இருக்கிறார் லட்சுமி ராய்.

அவர், “அந்த படத்தின் சில காட்சிகளில் கண் தெரியாத ஒரு கதாப்பாத்திரத்தில் விக்ரம் நடித்தார்.  இதில் விக்ரம் கண் தெரியாமல் ஓடி வந்து தடுக்கி கீழே விழுவது போன்று ஒரு சீன்.

அதே போல ஓடி வந்து விழுந்தார்.  நிஜயமாகவே அடிபட்டுவிட்டது. பிறகுதான் தெரிந்தது.. உண்மையிலேயே கண்களை மூடிக்கொண்டுதான் ஓடி வந்திருக்கிறார்.  அவருடைய அந்த அர்ப்பணிப்பை நினைத்தால் இப்போதும் வியப்பாக இருக்கிறது” என்று தெரிவித்தார் லட்சுமி ராய்.

The post “பயப்பட வைத்த விக்ரம்”: லட்சுமி ராய் appeared first on Touring Talkies.

]]>
‘பொன்னியின் செல்வன்’, ‘விக்ரம்’ படங்களை ஓரங்கட்டிய ‘காந்தாரா’ படம்..! https://touringtalkies.co/ganthara-movie-that-has-sidelined-ponniyin-selvan-and-vikram/ Sun, 30 Oct 2022 18:44:39 +0000 https://touringtalkies.co/?p=26285 ‘காந்தாரா’ படத்தின் வசூல் ‘பொன்னியின் செல்வன்’, ‘விக்ரம்’ ஆகிய படங்களின் வசூலை பின்னுக்கு தள்ளியிருப்பதாக திரைத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கன்னட மொழியில் உருவான ‘காந்தாரா’ திரைப்படம் கர்நாடக மாநிலத்தில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியானது. ‘கே.ஜி.எஃப்.’ படங்களை தயாரித்த ‘ஹோம்பலே பிலிம்ஸ்’ நிறுவனம் இந்தக் ‘காந்தாரா’ படத்தை தயாரித்துள்ளது. இதனை ரிஷப் ஷெட்டி இயக்கி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து மற்ற மொழிகளில் இதனை டப்பிங் செய்து […]

The post ‘பொன்னியின் செல்வன்’, ‘விக்ரம்’ படங்களை ஓரங்கட்டிய ‘காந்தாரா’ படம்..! appeared first on Touring Talkies.

]]>
காந்தாரா’ படத்தின் வசூல் ‘பொன்னியின் செல்வன்’, ‘விக்ரம்’ ஆகிய படங்களின் வசூலை பின்னுக்கு தள்ளியிருப்பதாக திரைத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கன்னட மொழியில் உருவான ‘காந்தாரா’ திரைப்படம் கர்நாடக மாநிலத்தில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியானது. ‘கே.ஜி.எஃப்.’ படங்களை தயாரித்த ‘ஹோம்பலே பிலிம்ஸ்’ நிறுவனம் இந்தக் ‘காந்தாரா’ படத்தை தயாரித்துள்ளது. இதனை ரிஷப் ஷெட்டி இயக்கி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து மற்ற மொழிகளில் இதனை டப்பிங் செய்து வெளியிட்டார்கள். தமிழில் இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் ‘காந்தாரா’வின் தெலுங்கு டப்பிங் வெர்ஷன் பல்வேறு சாதனைகளை முறியடித்து வருகிறது. இதனால் படத்தை தயாரித்த ஹோம்பலே நிறுவனமே திகைப்பில் உள்ளது. தெலுங்கு வெர்ஷனில் மட்டும் இந்தப் படத்திற்கு 45 கோடிக்கும் அதிகமாக கலெக்சன் ஆகியுள்ளது. இது ‘பொன்னியின் செல்வன்’, ‘விக்ரம்’ படங்களின் தெலுங்கு வெர்ஷன் வசூலைவிட அதிகமாகும்.

கர்நாடகத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட படமாக ‘காந்தாரா’ மாறியுள்ளது. அந்த வகையில் ‘கே.ஜி.எஃப்.-2’ படத்தின் சாதனையும் முறியடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தீபாவளியையொட்டி ‘பிரின்ஸ்’, ‘சர்தார்’ ஆகிய படங்கள் திரைக்கு வந்தன. அந்த நேரத்தில் குறைவான திரையரங்குகளில் ‘காந்தாரா’ படம் திரையிடப்பட்டிருந்தது.பிரின்ஸ்’ படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், ‘காந்தாரா’ படத்திற்குக் கூடுதல் தியேட்டர்கள் கிடைத்துள்ளது. இதனால் காந்தாரா படம் தற்போது தமிழ்நாட்டில் 100 தியேட்டர்களுக்கும் மேல் திரையிடப்பட்டுள்ளது.

தற்போது தமிழக திரையரங்குகளில் ‘சர்தார்’, ‘பொன்னியின் செல்வன்’, ‘காந்தாரா’ ஆகிய 3 படங்கள்தான் அதிக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கின்றன.

The post ‘பொன்னியின் செல்வன்’, ‘விக்ரம்’ படங்களை ஓரங்கட்டிய ‘காந்தாரா’ படம்..! appeared first on Touring Talkies.

]]>
‘விக்ரம்’ படம் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஜூலை 8-ம் தேதி வெளியாகிறது https://touringtalkies.co/vikram-movie-will-release-in-disney-hotstar-on-july-8/ Wed, 29 Jun 2022 09:44:54 +0000 https://touringtalkies.co/?p=22904 இந்த ஆண்டின் பிரம்மாண்டமான ‘பிளாக் பஸ்டர்’ திரைப்படமான ‘விக்ரம்’, வரும் ஜூலை 8-ம் தேதி டிஸ்னி + ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கி, கமல்ஹாசன்-விஜய் சேதுபதி-ஃபஹத் பாசில்-சூர்யா நடித்துள்ள ‘விக்ரம்’ திரைப்படம் ஜூன் 3-ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. படத்தின் பிரம்மாண்டமான  விளம்பரங்கள், நட்சத்திர கூட்டம் என ‘விக்ரம்’ படத்தின் ஒவ்வொரு அம்சமும் திரையுலக ரசிகர்களை பலத்த எதிர்பார்ப்புகளுக்கும், மகிழ்ச்சிக்கும் உள்ளாக்கியது. முதல் டீசரில் கமல்ஹாசன் உச்சரித்த ‘ஆரம்பிக்கலாமா’ […]

The post ‘விக்ரம்’ படம் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஜூலை 8-ம் தேதி வெளியாகிறது appeared first on Touring Talkies.

]]>
இந்த ஆண்டின் பிரம்மாண்டமான பிளாக் பஸ்டர்’ திரைப்படமான விக்ரம்’, வரும் ஜூலை 8-ம் தேதி டிஸ்னி + ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.

லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கி, கமல்ஹாசன்-விஜய் சேதுபதி-ஃபஹத் பாசில்-சூர்யா நடித்துள்ள விக்ரம்’ திரைப்படம் ஜூன் 3-ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

படத்தின் பிரம்மாண்டமான  விளம்பரங்கள், நட்சத்திர கூட்டம் என ‘விக்ரம்’ படத்தின் ஒவ்வொரு அம்சமும் திரையுலக ரசிகர்களை பலத்த எதிர்பார்ப்புகளுக்கும், மகிழ்ச்சிக்கும் உள்ளாக்கியது.

முதல் டீசரில் கமல்ஹாசன் உச்சரித்த ‘ஆரம்பிக்கலாமா’ என்ற ஒற்றை வார்த்தையில் இருந்து, டிரெய்லரில் வரும் ‘பாத்துக்கலாம்’ வரையிலும் ஒவ்வொரு பஞ்ச் வசனங்களும் ரசிகர்களின் கொண்டாட்ட ஆரவாரமாக அமைந்தது.

கமல்ஹாசனின் புத்துணர்ச்சியூட்டும் தோற்றமும், அட்டகாசமான கவர்ச்சியும், ஃபஹத் ஃபாசிலின் அசத்தலான நடிப்பும், விஜய் சேதுபதியின் அதிபயங்கரமான வில்லத்தனமும், சூர்யாவின் வெறித்தன கேமியோவும் ரசிகர்களை உச்சக்கட்ட பரவசத்தில் ஆழ்த்தியது.

தவிர, இயக்குநர் தயாரிப்பாளர் லோகேஷ் கனகராஜின் LCU (லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ்) கட்டமைப்பும், ‘கைதி’ திரைப்படத்தில் இருந்து சில கதாபாத்திரங்களை வரவழைத்து, எதிர்காலத் திரைப்படங்களுக்கு அவற்றை விரிவுபடுத்தியது என இப்படம் பன்மடங்கு ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

கிரீஷ் கங்காதரனின் கண் கவர் ஒளிப்பதிவு மற்றும் அனிருத் ரவிச்சந்தரின் மனம் மயக்கும் இசையமைப்பும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டது.

‘திரைத்துறையின் உச்சபட்ச ஆக்‌ஷன் த்ரில்லர்’, ‘ஆண்டவரின் வெற்றி மேஜிக்’, ‘தென்னிந்தியாவின் பவர் ஹவுஸ்’, ‘திறமைகளின் நடிப்பு கண்காட்சி’, ‘ஹாலிவுட் தரத்தில் ஒரு தமிழ் திரைப்படம்’ என்று பல பாராட்டுக்கள் இந்த ‘விக்ரம்’ படத்திற்குக் கிடைத்துள்ளது..!

விமர்சகர்கள் மற்றும் பொது பார்வையாளர்களிடமிருந்து 100% நேர்மறையான விமர்சனங்களுடன் இத்திரைப்படம் பிளாக் பஸ்டர் ஓபனிங்கை பெற்றது. வெளியான வேகத்தில் திரையரங்குகள் திருவிழா கோலமாக மாறியது.

வெளியான மூன்று-நான்கு வாரங்களுக்குப் பிறகும் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக இப்படம் தொடர்ந்து வெற்றி நடை போடுகிறது.

‘விக்ரம்’  இந்திய திரையுலகின் பல பாக்ஸ் ஆபிஸ் பிளாக் பஸ்டர் சாதனைகளை முறியடித்துள்ளது, மேலும் தமிழ்நாட்டின் டாப் வசூல் சாதனையை இப்படம் படைத்துள்ளது, இது தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்குகளால் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கமல்ஹாசனின் திரை வாழ்வில் மிகப் பெரிய பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றிருக்கும் ‘விக்ரம்’ படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பும் மற்றும் விமர்சகர்களின் பாரட்டுக்களும் நிற்காமல் இன்றும் கன மழைபோல, பொழிந்து கொண்டே இருக்கிறது.

இந்திய அளவில் அனைத்து திரைச் சாதனைகளையும் உடைத்துள்ள, இந்த திரைப்படம் இந்திய வர்த்தக வட்டாரங்களை மட்டும் ஆச்சரியப்படுத்தவில்லை, சர்வதேச சந்தைகளையும் பிரமிக்க வைத்துள்ளது.

விக்ரம்’ திருவிழாவை திரையரங்குகளில் வெளியிடுவதற்கு முன்பே டிஸ்னி+ ஹாட் ஸ்டார்தான் முதன்முதலில் தொடங்கி வைத்தது  என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் கமல்ஹாசனின் இந்த விக்ரம் படத்தினை டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வரும் ஜூலை 8-ம் தேதி முதல் கண்டு களிக்கலாம்.

The post ‘விக்ரம்’ படம் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஜூலை 8-ம் தேதி வெளியாகிறது appeared first on Touring Talkies.

]]>
சூர்யாவுக்கு ரூ.14 லட்சம் மதிப்புள்ள ரோலக்ஸ் வாட்ச்சைப் பரிசளித்த கமல்ஹாசன் https://touringtalkies.co/actor-kamalhaasan-gives-a-gift-worth-of-14-lakhs-rolex-watch-to-actor-suriya/ Wed, 08 Jun 2022 11:22:59 +0000 https://touringtalkies.co/?p=22492 இயக்குநர் லோகேஷ் கனகராஜ் டைரக்‌ஷனில் கமல்ஹாசன், சூர்யா, விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் ஃபாசில் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன்-3-ம் தேதி வெளியானது. இத்திரைப்படம், கடந்த 4 நாட்களில் உலகளவில் 200 கோடி வசூலைத் தாண்டிவிட்டது. கமல்ஹாசனின் படங்களிலேயே மிக அதிக வசூலைப் பெற்ற திரைப்படம் என்ற பெருமையை இந்தப் படம் பெற்றுவிட்டது. இதனால் பெரும் மகிழ்ச்சியடைந்த நடிகர் கமல்ஹாசன் படத்தை இயக்கிய இயக்குநரான லோகேஷ் கனகராஜூக்கு லெக்சஸ் கார் ஒன்றை பரிசாக அளித்தார். மேலும் […]

The post சூர்யாவுக்கு ரூ.14 லட்சம் மதிப்புள்ள ரோலக்ஸ் வாட்ச்சைப் பரிசளித்த கமல்ஹாசன் appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் டைரக்‌ஷனில் கமல்ஹாசன், சூர்யா, விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் ஃபாசில் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன்-3-ம் தேதி வெளியானது.

இத்திரைப்படம், கடந்த 4 நாட்களில் உலகளவில் 200 கோடி வசூலைத் தாண்டிவிட்டது. கமல்ஹாசனின் படங்களிலேயே மிக அதிக வசூலைப் பெற்ற திரைப்படம் என்ற பெருமையை இந்தப் படம் பெற்றுவிட்டது.

இதனால் பெரும் மகிழ்ச்சியடைந்த நடிகர் கமல்ஹாசன் படத்தை இயக்கிய இயக்குநரான லோகேஷ் கனகராஜூக்கு லெக்சஸ் கார் ஒன்றை பரிசாக அளித்தார்.

மேலும் லோகேஷிடம் உதவி இயக்குநர்களாக இந்த விக்ரம் படத்தில் பணியாற்றிய 13 உதவி இயக்குநர்களுக்கும் 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டிவிஎஸ் அப்பாச்சி இரு சக்கர வாகனத்தைப் பரிசளித்தார்.

மேலும் இத்திரைப்படத்தின் கடைசி காட்சியில் ரோலக்ஸ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் சூர்யாவுக்கும் நேற்று தனது டிவீட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து பதிவிட்டார் கமல்ஹாசன்.

இந்த நிலையில் இன்று காலையில் நடிகர் சூர்யாவின் வீ்ட்டுக்கு நேரில் சென்ற கமல்ஹாசன் சூர்யாவுக்கு உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை பரிசளித்தார். இந்த வாட்ச்சின் மதிப்பு. 14 லட்சத்து 72 ஆயிரத்து 500 ரூபாயாகும்.

The post சூர்யாவுக்கு ரூ.14 லட்சம் மதிப்புள்ள ரோலக்ஸ் வாட்ச்சைப் பரிசளித்த கமல்ஹாசன் appeared first on Touring Talkies.

]]>
விக்ரம் – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/vikram-movie-review/ Sat, 04 Jun 2022 11:09:01 +0000 https://touringtalkies.co/?p=22439 1986-ம் ஆண்டு வெளிவந்த ‘விக்ரம்’ படத்தின் தொடர்ச்சியாகத்தான் இந்தப் படமும் உருவாக்கப்பட்டுள்ளது. போதை பொருட்களை கடத்தும் கும்பல்கள் பற்றி பல திரைப்படங்களில் நாம் பார்த்திருக்கிறோம். லோகேஷ் கனகராஜின் முந்தைய படைப்பான ‘கைதி’ படத்திலும் இதே கதைதான் அடிநாதமாக இருந்தது. இந்தப் படத்தில் இதே சப்ஜெக்ட் இருந்தாலும், கொஞ்சம் கூடுதலாக போதை பொருளை உருவாக்கும் கும்பல், அதை விற்பனை செய்யும் ஏஜெண்டுகள், தெருக்களில் விற்கும் சின்ன வகை வியாபாரிகள் என்று அனைவரைப் பற்றியும் இந்தப் படம் பேசியிருக்கிறது. ரவுடிக் […]

The post விக்ரம் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
1986-ம் ஆண்டு வெளிவந்த ‘விக்ரம்’ படத்தின் தொடர்ச்சியாகத்தான் இந்தப் படமும் உருவாக்கப்பட்டுள்ளது.

போதை பொருட்களை கடத்தும் கும்பல்கள் பற்றி பல திரைப்படங்களில் நாம் பார்த்திருக்கிறோம். லோகேஷ் கனகராஜின் முந்தைய படைப்பான கைதி’ படத்திலும் இதே கதைதான் அடிநாதமாக இருந்தது. இந்தப் படத்தில் இதே சப்ஜெக்ட் இருந்தாலும், கொஞ்சம் கூடுதலாக போதை பொருளை உருவாக்கும் கும்பல், அதை விற்பனை செய்யும் ஏஜெண்டுகள், தெருக்களில் விற்கும் சின்ன வகை வியாபாரிகள் என்று அனைவரைப் பற்றியும் இந்தப் படம் பேசியிருக்கிறது.

ரவுடிக் கும்பல் என்ற போர்வையில் ஒளிந்திருக்கும் போலீஸ், போலீஸ் போர்வையில் ஒளிந்திருக்கும் ரவுடி கும்பல் என்று இரண்டு தரப்பிலும் பூனை, எலியாக மோதிக் கொள்பவர்களைத்தான் படத்தில் போட்டு வறுத்தெடுத்திருக்கிறார்கள்.

போதை பொருள் நடமாட்டத்தை முற்றிலுமாகத் தடுக்க நினைக்கும் உண்மையான காவல் துறையினர் ஒரு பக்கம்.. அதே போலீஸில் சிலருக்கு லஞ்சம் கொடுத்து கிடைக்கும் இடைவெளியில் போதை மருந்துகளை விற்பனை செய்து வரும் ரவுடிக் கும்பல் இன்னொரு பக்கம்.. இந்த இருவருக்கும் இடையில் போதை மருந்து நடமாட்டம் பற்றி போலீஸுக்கு தகவல் கொடுக்கும் அப்பாவிகளை உள்ளடக்கிய இன்ஃபார்மர்ஸ் உலகம்.

இந்த மூன்றுவித பராக்கிரமாவாசிகளுக்கும் இடையில் நடக்கும் போதை மருந்து சாம்ராஜ்யத்தின் மீதான போர்தான் இந்தப் படத்தின் கதை.

தன் மகனை அநியாயமாகக் கொன்றவர்களை பழி வாங்கும் தந்தையாக விக்ரம் கமல் போராடுவதுதான் படத்தின் கதையோ என்று நினைத்த இடத்தில் ஒட்டு மொத்தமாக போதைப் பொருட்கள் நடமாட்டத்தை அழித்து போதை மருந்தில்லா சமூகத்தை உருவாக்க கமல் நடத்தும் யுத்தம்தான் இந்த விக்ரம்’ படத்தின் மூலக் கதை.

பழைய ‘விக்ரம்’ படத்தில் அக்னிபுத்ரா என்ற அந்த ஏவுகணையை சலாமிய தேசத்தில் இருந்து மீட்டெடுப்பதோடு விக்ரம் என்ற அந்த தேசப்பற்று மிக்க ஏஜென்டின் கடமை முடிந்திருக்கும். இப்போது அந்த ஏஜெண்ட் என்னவானார்.. எப்படியிருக்கிறார் என்பதை வேறு ஒரு வடிவத்தில் காட்டியிருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

இன்றைக்கு அந்தப் பழைய விக்ரம்’ கருப்புப் பூனை படையில் கமெண்டராக வேலை பார்த்து ரிட்டையர்டாகியிருக்கிறார். தனது ஒரே மகனை கொலைக் களத்தில் இழந்து, தனக்கிருக்கும் பேரனை பாதுகாக்க வேண்டி அவனையும், அவனது அம்மாவையும் பொத்திப் பொத்திப் பாதுகாத்து வருகிறார். அதே சமயம் மகனின் இறப்பு தாங்காமல் அதீத குடிமகனாகவும் இருந்து வருகிறார்.

ஆனாலும் ஒரு இரவுப் பொழுதில் அவரது மகனைப் போலவே முகமறியா முகமூடிக் கும்பலால் படுகொலை செய்யப்படுகிறார். இவருக்கு முன்பாகவே ஸ்டீபன் ராஜ் என்ற போதை மருந்து கடத்தலைத் தடுக்கும் பிரிவில் அதிகாரியாக இருந்தவரும் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

உள்ளூர் போலீஸ் உயரதிகாரியான செம்பன் வினோத், இந்தத் தொடர் கொலைகளை செய்தவரைக் கண்டறிய தனியார் டிடெக்டிவ் ஏஜென்ஸியை நடத்தி வரும் பகத் பாஸிலை புக் செய்கிறார்.

பகத் பாஸிலும் களத்தில் குதித்து விசாரிக்கத் துவங்க.. இந்த விசாரணை தினம்தோறும் வேறு, வேறு வடிவம் பெற்று திசை மாறுகிறது.

போதை மருந்து கடத்தலையே முழு நேரத் தொழிலாக வைத்திருக்கும் சந்தானம் என்னும் விஜய் சேதுபதி இந்த விசாரணையின்போது குறுக்கே வர.. பகத்துக்கும், விஜய் சேதுபதிக்கும் இடையில் மோதலாகிறது.

இந்த மோதல் வெடிப்பதற்குள்ளாக விஜய் சேதுபதி மீது வேறொரு முகமூடி கூட்டத்தில் இருந்து கொலை வெறித் தாக்குதல் நடந்தேறுகிறது. இந்த முகமூடி கூட்டத்திற்கு கர்ணன்’ என்ற கமல்ஹாசன் தலைமை தாங்க.. இப்போது இந்த மோதல் மும்முனை தாக்குதலாக உருமாறுகிறது.

யார், யாரை குறி வைக்கிறார்கள்.. எதற்காகக் கொல்லத் துடிக்கிறார்கள்.. எப்படி கொலை செய்கிறார்கள் என்பதை ரத்தச் சகதியோடு சொல்லி முடித்திருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

தனது வயதுக்கேற்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார் கமல்ஹாசன். தொழில் நுட்பத்தின் உதவியுடன் துப்பாக்கிகளை கையாண்டு சண்டை காட்சிகளில் மிரட்டலாய் ஆக்கிரமித்திருக்கிறார். அன்பறிவ் இரட்டையர்களின் சண்டை இயக்கத் திறமையால் கமல்ஹாசனின் அந்த ஸ்டைல் நடிப்பும் மிளிர்கிறது.

சில சென்டிமெண்ட் காட்சிகளில் மட்டுமே பழைய கமல்ஹாசனை பார்க்க முடிந்திருக்கிறது. இண்டர்வெல் பிளாக்கில் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும்விதத்தில் மொத்த தியேட்டரையும் கவர்ந்திழுத்திருக்கிறார் கமல்.

இவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்சின்படி சமூக அக்கறையுள்ள மனிதராகவும் இதில் சித்தரிக்கப்பட்டிருக்கிறார். இதனால்தான் தன் மகனைக் கொன்றவர்களை பழி தீர்ப்பதைவிடவும் போதைப் பொருள் இல்லா சமுதாயத்தை உருவாக்குவதே என் லட்சியம் என்று சொல்லி கை தட்டலையும் பெறுகிறார்.

பகத் பாசில் அவரை எச்சரிக்கையாக இருக்கச் சொல்லுமிடத்தில், “எனக்கு உதவி செய்யரீங்கன்னு தெரிஞ்சா நீங்கதான் எச்சரிக்கையா இருக்கணும்…” என்று பதிலுக்கு சொல்லி தனது அரசியல் களத்தையும் மக்களுக்கு ஞாபகப்படுத்தியிருக்கிறார் கமல்.

பொதுவாக கமல்ஹாசனின் படங்களில் அவரே அதிகமாக டாமினேட் செய்வார். ஆனால் இந்தப் படம் முழுக்க, முழுக்க லோகேஷ் கனகராஜின் படமாக இருப்பதினால் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசிலுக்கும் சமமான இடத்தைக் கொடுத்து ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் கமல்.

கமலுக்கு அடுத்து படத்தில் அதிகம் ரகிகர்களை கவர்வது பகத் பாசில்தான். அவருடைய கண்களே தனித்துவமாக நடிக்கிறது. அந்தக் கண்களில் வாயிலாகவே படம் முழுவதும் வலம் வந்திருக்கிறார் பகத். கொஞ்சம் கொடூரமாக.. அப்பாவியாக.. காதலனாக.. நண்பனாக.. என்று அவர் வரும் காட்சிகளிலெல்லாம் அவருடைய நடிப்பை கண்களாலேயே காண்பித்திருக்கிறார் பகத் பாசில்.

வில்லன் கைகளில் காயத்ரி சிக்கியிருக்கும் செய்தியறிந்து மனைவியை தேடி சாலையில் பகத் பாசில் ஓடி வரும் காட்சியில் அவருடைய மெளனமான நடிப்பு அக்மார்க் விருதுக்கான தரம்..!

எந்த ஹீரோவாக இருந்தாலும் சரி.. எந்தக் கேரக்டரானாலும் சரி.. நடிக்கத் தயங்காத விஜய் சேதுபதிக்கு கொடூரமான போதை மருந்து கடத்தும் கும்பலின் தலைவன் வேடம்.

தன் பாடி லாங்குவேஜை வைத்துக் கொண்டும், கையை பின்னால் கட்டிக் கொண்டு அவர் நடந்து வரும் காட்சியிலும் ஒரு பக்கா திமிர் பிடித்தவனை கண் முன்னே காட்டுகிறார் விஜய் சேதுபதி. 

இவருக்கு மூன்று மனைவிகள் என்பது ரொம்பவே டூ மச்சான கேரக்டர் ஸ்கெட்ச். இதனால் கதைக்கு ஒரு பிரயோசனமும் இல்லை. கொடூரமானவன் என்பதைக் காட்டுவதற்காக இவருக்கு வைக்கப்பட்டிருக்கும் காட்சிகளில் இவரது நடிப்பு வெறித்தனம்.

போலீஸ்காரரை கொலை செய்துவிட்டு சட்டை இல்லாமல் அவர் தெருவில் நடந்து வரும் அந்த அலட்சிய நடிப்பு விஜய் சேதுபதியின் தேர்வு மிகச் சரியானது என்பதையே காட்டுகிறது. போதை மருந்து உட்கொண்ட பின்பு அவர் சண்டை காட்சிகளில் இறங்கி அடிப்பதெல்லாம் அனிருத்தின் இசைக்கு நன்கு தீனி போட்டிருக்கிறது.

காயத்ரிக்கு சிறிய வேடம்தான் என்றாலும் பகத் பாசிலின் மனைவியான ஒரே காரணத்துக்காக அப்பாவியாக உயிரைவிடுகிறார். இதேபோல் கமல்ஹாசனின் மருமகளை பாதுகாத்து வரும் அந்த முன்னாள் கருப்புப் பூனை படையின் வீராங்கனையும் தன் பங்குக்கு சிறப்பான சண்டை காட்சியில் உயிரைக் கொடு்த்து நடித்து உயிரை விட்டிருக்கிறார்.

படத்தில் ஏகப்பட்ட கதாப்பாத்திரங்கள். இத்தனை பேரையும் வைத்து ஒரு படத்தை எடுத்து முடிப்பதிருப்பதே பெரிய சாதனைதான்.

நரேன் கமல்ஹாசனுக்கு நண்பராக அவருடைய டீமில் ஒருவராக நம்பிக்கைக்குரியவராக நடித்திருக்கிறார்.  குமரவேலும் கமலுக்கு நண்பராக வந்து அந்த ஒரே காரணத்துக்காகவே உயிரைவிட்டு அச்சச்சோ என்ற பாவத்தைச் சம்பாதிக்கிறார்.

கமல், ஃபகத், விஜய் சேதுபதி மூன்று பேரும் ஒரே ஃபிரேமில் வரும் காட்சி படத்தின் வெற்றிக்கு முன் கூட்டியே கிடைத்திருக்கும் வெற்றியாகக்கூட நாம் எடுத்துக் கொள்ளலாம்.

கஞ்சா அடித்து சக்தியை பெற்று திடீர் வீரனாகும் விஜய் சேதுபதி கமலை வெளுத்து வாங்க, மூர்ச்சையாகி போகும் கமல்.. அந்த நேரத்தில் தனது பேரன் அழும் சத்தத்தால் கூடுதல் சக்தியைப் பெற்று எழுந்து வந்து விஜய் சேதுபதியை துவம்சம் செய்யும் காட்சியில் தியேட்டரே அதிர்கிறது.

காளிதாஸ், சந்தானபாரதி இருவரும் சொல்லித் தந்த மீட்டருக்குள் நடித்திருக்கிறார்கள்.

லோகேஷ் கனகராஜ் படம் என்றாலே எல்லாமே இரவில்தான் நடக்கும் என்பது அனைவரும் ஒப்புக் கொள்ளும் ஒரு விஷயம். இந்தப் படத்திலும் அதே கதிதான்.

படத்தில் பெரும்பாலான காட்சிகளை இரவிலேயே படமாக்கியிருக்கிறார். அதனாலேயே ஒளிப்பதிவின் வித்தையைக் காட்ட முடியாமல் போய்விட்டதுபோலும்.  ஆனாலும் காட்சிக்கு, காட்சி ஆட்களும், கார்களும் வரிசையாக வந்து கொண்டேயிருக்க.. அனைத்தையும் பிரேமுக்குள் கொண்டு வந்து நம்மையும் ரசிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

அனிருத்தின் இசையில் பாடல்கள் ஏற்கனவே வெளிவந்து ஹிட்டடித்துவிட்டன. மூன்று முக்கிய நடிகர்களுக்குமான தீம் மியூஸிக்கை அதகளப்படுத்தியிருக்கிறார் அனிருத். கிளைமாக்ஸ் காட்சியிலும், சண்டை காட்சிகளிலும் தனது வித்தையை குறையில்லாமல் காண்பித்திருக்கிறார் அனிருத்.

படத் தொகுப்பு, சவுண்ட் மிக்ஸிங், ஒலி, ஒளி வடிவமைப்பு என்று தொழில் நுட்பத்தில் இந்தப் படம் மிக சரியானதை மட்டுமே செய்திருக்கிறது.

பொதுவாக ரஜினி படம், கமல் படம் என்றால் அது அவர்களை மட்டுமே குறிக்கும். அவர்களது ரசிகர்கள் மட்டுமே படை திரண்டு ஓடி வருவார்கள். ஆனால் இந்த முறை அதிசயத்திலும், அதிசயமாக லோகேஷ் கனகராஜூக்காக தியேட்டர்களில் கூட்டம் அலை மோதுகிறது. அவர்களின் அந்த எதிர்பார்ப்பை முழுவதுமாக பூர்த்தி செய்திருக்கிறார் லோகேஷ்.

இதற்குக் காரணம் கமல் படங்களில் எப்போதும் இருக்கும் குறியீடுகள் இதில் இல்லாமலும் லோகேஷ் கனகராஜின் குறியீடுகள் நிறையவே இருப்பதும்தான்.

இரவுக் காட்சிகள், பிரியாணி, ஜெயில், துப்பாக்கிகள் என்று தனது செட்டப்புகளை இந்தப் படத்திலும் தொடர வைத்திருக்கிறார் இயக்குநர் லோகேஷ்.

ஆனால் லாஜிக் கிலோ என்ன விலை என்ற கணக்கிலும், நம்ப முடியாத சம்பவங்களினாலும் திரைக்கதையை உருவாக்கி அதை ஒரு மேஜிக் போல செய்து ரசிகர்களை மெய்மறக்கச் செய்திருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

நாட்டில் போலீஸே இல்லை என்பதை போலவும், காலிபர் துப்பாக்கிகளை வைத்துச் சராமரியாக சுட்டுக் கொன்றும், போலீஸும், மீடியாவும் துளிகூட கவலைப்படாமல் வராமல் இருப்பதும் இது எந்த நாட்டில் நடந்த கதை என்று நம்மை யோசிக்க வைக்கிறது.

அதிலும் பீரங்கியை வைத்தெல்லாம் கமல் தாக்குதல் கொடுப்பது ரொம்பவே டூ மச்சான திiரைக்கதையாகும். கூடுதலாக சில காட்சிகளை ஏன் வைத்திருக்கிறார்கள் என்பதே தெரியாத குழப்ப நிலையும் படத்தில் உண்டு. விக்ரம் கமல்ஹாசனுக்கும், கர்ணன் கமல்ஹாசனுக்கும் இடையிலான உறவு முறையையும் குழப்பத்தில் விட்டு வைத்திருக்கிறார்கள். படத்தில் பாதி வசனங்கள் சாதாரண ரசிகனால் எளிதில் புரிந்து கொள்ள முடியாத தன்மையில் இருப்பது நமது துரதிருஷ்டம்தான்.

நிச்சயமாக படத்தில் 25 நிமிடக் காட்சிகளை நீக்கிவிடலாம். நீக்கினாலும் படத்தின் தன்மை கெடாது. அதோடு படமும் இப்போது இருப்பதைவிடவும் கிரிப்பாக இருந்திருக்கும். இவ்ளோ நீளத்தை முன் கூட்டியே ஊகிக்க முடிந்த கிளைமாக்ஸூக்காக வைத்திருக்கக் கூடாது. எதிர்பார்ப்பே இல்லாமல் போய்விடும். போய்விட்டது.

ஆனால் படத்தின் மையக் கதை, இயக்குநர் வைத்துள்ள ட்விஸ்ட்டுகள், ஹாலிவுட் படங்களுக்கு இணையான தரத்தில் மேக்கிங் என்று இந்தப் படம் சுட்டிக் காட்டும் பிளஸ் பாயிண்ட்டுகள் இந்தப் படத்தை கமல் ரசிகர்கள் தங்களின் காலரை தூக்கிவிட்டுப் பெருமை கொள்ள வைத்திருக்கிறது.

விக்ரம்’ முதல் படத்தில் இடம் பெற்ற டைட்டில் பாடலான “நான் வெற்றி பெற்றவன்; இமயம் தொட்டுவிட்டவன” என்று ஒலிக்கும் வரிகள் இந்த 2022 படத்திற்கும் பொருத்தமாகத்தான் அமைந்துள்ளது.

அடுத்து விக்ரம்-3’, ‘கைதி-2’ என்று லோகேஷிடம் ரசிகர்கள் அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பும் சாத்தியக் கூறுகளையும் இந்தப் படம் தந்திருக்கிறது.

ஒரு கை குழந்தையைக் காப்பாற்றத்தான் படத்தில் ரொம்பவே மெனக்கெட்டுள்ளார் கமல். அந்த குழந்தை யார் என்பது அடுத்த பாகத்தில் தெரிய வரலாம்.

படத்தின் முடிவில் இந்த போதை மருந்து கடத்தல் சாம்ராஜ்யத்தின் ஏகபோக சக்கரவர்த்தியாக சூர்யாவை காண்பித்திருக்கிறார்கள். இவருக்கும், கமலுக்குமான மோதல்கள் அடுத்த பாகத்தில் வெளிவரும் போலத் தெரிகிறது.

ஏன் அத்தனை பெரிய போதை மருந்து சாம்ராஜ்யத்தின் தலைவனாக சூர்யாவைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பதையும் நாம் அடுத்த பாகத்தில்தான் தெரிந்து கொள்ள வேண்டும் போலிருக்கிறது.

 காத்திருப்போம்…!

RATING : 3.5 / 5

The post விக்ரம் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
‘விக்ரம்’ படத்தை இணையத்தளங்களில் வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்தது https://touringtalkies.co/the-high-court-has-banned-the-release-of-vikram-on-websites/ Fri, 27 May 2022 09:48:20 +0000 https://touringtalkies.co/?p=22310 நடிகர் கமல்ஹாசன் தயாரித்து, நடித்திருக்கும் ‘விக்ரம்’ படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக படத் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. நேற்று இந்த வழக்கு நீதிபதி சி. சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், “எங்களது ‘விக்ரம்’ படம் மிகப் பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் சட்ட விரோதமாக இணையத்தில் வெளியானால் எங்களுக்கு […]

The post ‘விக்ரம்’ படத்தை இணையத்தளங்களில் வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்தது appeared first on Touring Talkies.

]]>
நடிகர் கமல்ஹாசன் தயாரித்து, நடித்திருக்கும் விக்ரம்’ படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக படத் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

நேற்று இந்த வழக்கு நீதிபதி சி. சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், “எங்களது விக்ரம்’ படம் மிகப் பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் சட்ட விரோதமாக இணையத்தில் வெளியானால் எங்களுக்கு மிகப் பெரும் அளவுக்கு பொருளாதார நஷ்டம் ஏற்படும்” என்று கூறப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விக்ரம்’ படத்தை சட்ட விரோதமாக இணையத்தில் வெளியிடுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டார். இது தொடர்பாக அனைத்து இணைய வசதிகளைத் தரும் டெலிகாம் நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளார்.

விக்ரம்’ படம் அடுத்த வார வெள்ளியன்று வெளியாகவுள்ள நிலையில், விரைவில் படத்திற்கான முன் பதிவு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி ‘விக்ரம்’ படத்தின் முதல் நாளின், முதல் காட்சிக்கு அதிக டிமாண்ட் ஏற்பட்டுள்ளதாக திரையரங்க உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

The post ‘விக்ரம்’ படத்தை இணையத்தளங்களில் வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்தது appeared first on Touring Talkies.

]]>
‘விக்ரம்’ படம் வெளியீட்டுக்கு முன்பேயே லாபத்தை ஈட்டிவிட்டதாம்..! https://touringtalkies.co/vikram-has-made-a-profit-even-before-its-release/ Thu, 26 May 2022 09:45:56 +0000 https://touringtalkies.co/?p=22295 நடிகர் கமல்ஹாசன் தயாரித்து, நடித்திருக்கும் ‘விக்ரம்’ படம் ரிலீஸுக்கு முன்பே 172 கோடி அளவுக்கு வியாபாரம் ஆகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ‘விக்ரம்’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் 35 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாம். கேரள உரிமையை ஷிபு தமீம் 5.50 கோடிக்கும், தெலுங்கு உரிமையை நடிகர் நிதின் 5.50 கோடிக்கும், கர்நாடக உரிமையை கற்பக விநாயகா ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் 4.25 கோடிக்கும் கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தவிர, ஸ்டார் […]

The post ‘விக்ரம்’ படம் வெளியீட்டுக்கு முன்பேயே லாபத்தை ஈட்டிவிட்டதாம்..! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் கமல்ஹாசன் தயாரித்து, நடித்திருக்கும் ‘விக்ரம்’ படம் ரிலீஸுக்கு முன்பே 172 கோடி அளவுக்கு வியாபாரம் ஆகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

‘விக்ரம்’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் 35 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாம்.

கேரள உரிமையை ஷிபு தமீம் 5.50 கோடிக்கும், தெலுங்கு உரிமையை நடிகர் நிதின் 5.50 கோடிக்கும், கர்நாடக உரிமையை கற்பக விநாயகா ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் 4.25 கோடிக்கும் கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தவிர, ஸ்டார் நெட்வொர்க் நிறுவனம் அனைத்து மொழிகளுக்கான தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமையை 93 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளது.

ஏற்கனவே படத்தின் பாடல் உரிமம் 4.25 கோடிக்கும், வெளிநாட்டு உரிமை 25 கோடிக்கும் விற்பனையாகியுள்ளது.

இதையெல்லாம் சேர்த்தால் 172 கோடி ரூபாய் அளவுக்கு ரிலீஸுக்கு முன்பே இந்த ‘விக்ரம்’ படம் வியாபாரம் ஆகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த விக்ரம் படத்தின் மொத்தத் தயாரிப்பு செலவு கமல்ஹாசனின் சம்பளம் இல்லாமல் 75 கோடி என்கிறது சினிமா வட்டாரம். இதன் மூலமாக 100 கோடி அளவுக்கு இப்போதே விக்ரம் படம் லாபத்தை அள்ளிவிட்டதாகவே திரையுலகத்தினர் சொல்கிறார்கள்.

The post ‘விக்ரம்’ படம் வெளியீட்டுக்கு முன்பேயே லாபத்தை ஈட்டிவிட்டதாம்..! appeared first on Touring Talkies.

]]>
“இந்தியன்-2 நிச்சயமாக உருவாகி வெளியாகும்” – கமல்ஹாசன் வாக்குறுதி..! https://touringtalkies.co/indian-2-will-definitely-be-released-kamal-haasan-promises/ Thu, 26 May 2022 06:18:46 +0000 https://touringtalkies.co/?p=22262 நேற்று சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய கமல் ‘இந்தியன்-2’ படம் நிச்சயம் வரும் எனக் கூறியிருப்பது கமல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் மற்றும் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ளது ‘விக்ரம்’ திரைப்படம். இந்தப் படம் வரும் ஜூன் 3-ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இதையொட்டி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னையில் ஹயாத் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் நடிகர் […]

The post “இந்தியன்-2 நிச்சயமாக உருவாகி வெளியாகும்” – கமல்ஹாசன் வாக்குறுதி..! appeared first on Touring Talkies.

]]>
நேற்று சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய கமல் ‘இந்தியன்-2’ படம் நிச்சயம் வரும் எனக் கூறியிருப்பது கமல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் மற்றும் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ளது ‘விக்ரம்’ திரைப்படம்.

இந்தப் படம் வரும் ஜூன் 3-ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இதையொட்டி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னையில் ஹயாத் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், “1986-ம் ஆண்டு வெளியான ‘விக்ரம்’ படத்தின் தொடர்ச்சியாக, அதன் 2-ம் பாகம் போலவே இந்த விக்ரம் படம் உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் விக்ரம்’ படத்தின் 3-ம் பாகமும் வெளியாகும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

அதேபோல் “இந்தியன்-2’ படத்தை மீண்டும் தொடர்வதற்கான பேச்சு வார்த்தைகள் போய்க் கொண்டிருக்கிறது. விரைவில் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பும் தொடங்கும்” எனவும் கமல்ஹாசன் கூறினார்.

The post “இந்தியன்-2 நிச்சயமாக உருவாகி வெளியாகும்” – கமல்ஹாசன் வாக்குறுதி..! appeared first on Touring Talkies.

]]>
“ரஜினியும், நானும் நல்ல நட்பில்தான் இருக்கிறோம். ரசிகர்கள்தான் அடித்துக் கொள்கிறார்கள்” – நடிகர் கமல்ஹாசன் பேச்சு https://touringtalkies.co/rajini-and-i-are-good-friends-the-fans-beat-us-actor-kamal-haasan-speaks/ Mon, 16 May 2022 08:06:50 +0000 https://touringtalkies.co/?p=22080 இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘விக்ரம்’. இந்தப் படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா மற்றும் பலர் நடித்துள்ளனர். கிரிஸ் கங்காதரனின் ஒளிப்பதிவில், அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் டிரெயிலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிலம்பரசன், கமல்ஹாசன், அக்ஷரா ஹாசன், விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், […]

The post “ரஜினியும், நானும் நல்ல நட்பில்தான் இருக்கிறோம். ரசிகர்கள்தான் அடித்துக் கொள்கிறார்கள்” – நடிகர் கமல்ஹாசன் பேச்சு appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘விக்ரம்’.

இந்தப் படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா மற்றும் பலர் நடித்துள்ளனர். கிரிஸ் கங்காதரனின் ஒளிப்பதிவில், அனிருத் இசையமைத்திருக்கிறார்.

இந்தப் படத்தின் டிரெயிலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகர் சிலம்பரசன், கமல்ஹாசன், அக்ஷரா ஹாசன், விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், பார்த்திபன், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், நரேன், காளிதாஸ் ஜெயராம், நடிகைகள் ராதிகா, லிஸி மற்றும் திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய கமல்ஹாசன், “உயிரே உறவே வணக்கம். தமிழ்நாட்டை பொருத்தவரை சினிமாவும், அரசியலும் ஒட்டிப் பிறந்தவை. அதைத்தான் நானும் செய்கிறேன். நான் முழுமையான அரசியல்வாதியும் இல்லை; நடிகனும் இல்லை.

நான் முதன்முதலில் அரசியலுக்கு போகிறேன் என்று சொன்னபோது சிம்புவின் அப்பா டி.ஆர். என்னை தேடி வந்து என்னை கட்டி பிடித்து கேவி, கேவி அழுதார். ‘எப்படி சார் நீங்கள் இதை செய்யலாம்?’ என்று கேட்டார்.

என் தகுதிக்கு மீறிய புகழை மக்களான நீங்கள் கொடுத்து இருக்கிறீர்கள். அதை நான் திருப்பிக் கொடுக்க வேண்டும். நான் பணத்துக்காக நடிக்க வந்திருந்தால் இது நடந்திருக்காது.

நான் சிறு வயதில் சிவாஜி, எம்.ஜி.ஆர். அலுவலகத்திற்கெல்லாம் சென்று வெளியில் நின்றிருக்கிறேன். அப்படி இருந்தவனுக்கு நீங்கள் என்ன இடம் கொடுத்தாலும் அது பெரியதுதான். ஐந்து வயதில் வந்தவனை இன்னும் நீங்கள் தோளில் இருந்து இறக்கவில்லை.

எங்கள் திறமைகள் பளிச்சிட திரையரங்குகள் முதல் சாளரம். சாட்டிலைட் வந்தபோது சினிமா கெட்டு விடும் என்று எதிர்த்தபோது எதிர் குரல் கொடுத்தவன் நான். ஓடிடியை முன்பே கணித்தவன் நான். இவை எல்லாம் வருவதால் திரையரங்குகளில் கூட்டம் குறையாது. இதற்கு உதாரணம் காலண்டரில் வெங்கடாசலபதி படம் போடுவதால் திருப்பதியில் கூட்டம் குறையாது.

இந்த ஒலி, கரவொலி எல்லாம் கேட்பதற்கு என் தாய், தந்தை இல்லை. சந்திரஹாசனாவது இருந்திருக்கலாம். சாருஹாசன் எங்கோ இருந்து 92 வயதில் கேட்டுக் கொண்டிருப்பார்.

இயக்குநர் ரஞ்சித் உங்கள் எதிர்ப்பார்ப்புக்கான விதையை தூவி விட்டுச் சென்றிருக்கிறார். நிச்சயம் அது நடக்கும். இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் வெளியிடுவது பற்றிப் பலரும் கேட்டார்கள்.

ஸ்டாலின் அரசியலில் அந்தப் பக்கம் நிற்கிறார். நான் இந்த பக்கம் நிற்கிறேன். நடுவில் ட்ராபிக் செல்கிறது. அரசியல் வேறு நட்பு வேறு. முதல்வருக்கும் எனக்குமான நட்பு. கலைஞரிடம் ஆரம்பித்த உறவு, அவரது பேரன் உதயநிதி வரை தொடர்கிறது.

எனக்கு திரையுலகத்தில் போட்டியாளர் ரஜினி. ஆனால் இன்றுவரையிலும் நாங்கள் நண்பர்கள். இளம் வயதில் நாங்கள் ஏதும் எதிராக பேசி இருக்கலாம். ஆனால், எங்கள் நட்பு எப்படி இருக்க வேண்டும். எப்படி பயணப்பட வேண்டும் என்பதை 25 வயதில் முடிவு செய்தவர்கள் நாங்கள். இப்போதுவரையிலும் நானும், ரஜினியும் நல்ல நட்போடுதான் இருக்கிறோம், நீங்கள் ரசிகர்கள்தான் அடித்துக் கொள்கிறீர்கள்.

என் காரை தொட்டுப் பார்த்த ரசிகராக இருந்த லோகேஷ் என்னை இயக்கி இருப்பது எனக்குத்தான் பெருமை. இந்த வெற்றி கூட்டணி தொடரும். விஜய்சேதுபதி நான் 22 வயதில் வேலை செய்ததுபோல அவர் இப்போது 44 வயதில் செய்து கொண்டிருக்கிறார். நான் அந்த வயதில் ஒரு வருடத்தில் எத்தனை படங்கள் நடித்தேனோ, அது போல விஜய் சேதுபதியும் இப்போது ஓடிக் கொண்டிருக்கிறார்.

இந்தப் படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் அபாயகரமானதாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும். அதற்கு காரணம் அன்பறிவு. அனிருத் இசையில் ‘பத்தல பத்தல’ வெற்றி இதுபோல் எனக்கு இதுவரையிலும் கிடைத்ததில்லை. மூன்று மொழிகளிலும் நானே இந்தப் பாடலை பாடி இருக்கிறேன்.

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு என் படத்தின் விழா நடைபெறுகிறது. இதற்கு காரணம் நான் மட்டும் அல்ல; நீங்களும்தான். இன்னும் பல வேலைகள் உள்ளன. சினிமாவும் அரசியலும் ஒட்டி பிறந்ததே.

நான் முழு நேர நடிகன் கிடையாது. சில நேரம் நடிக்காமல் இருந்ததால் பல இன்னல்களை சந்தித்துள்ளேன். விழுந்தாலும் எழுந்துவிடுவார் என்று கூறுவார்கள். எழுப்பிவிட்டது நீங்கள்தான்..! இந்த அரசியல் களத்தில் மாற்றத்தை நாம் இணைந்து ஏற்படுத்த வேண்டும்.

நான் political cultrist என்று என்னை குறிப்பிட்டு கொள்வேன். மொழி போராட்டங்கள் சுதந்திர காலத்தில் இருந்தே இந்தியாவில் நடந்து வருகிறது. இந்தியாவின் அழகே பன்முகம்தான்.

அப்படியென்றால், “இந்தி ஒழிக என்று சொல்கிறீர்களா..?” என்று கேட்காதீர்கள். நான் இந்தியும், தமிழும் சுமாராகத்தான் பேசுவேன். எந்த மொழியையும் “ஒழிக” என்று சொல்ல மாட்டேன். ஆனால், “தமிழ் வாழ்க” என்று சொல்வது என் கடமை.

இதற்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை. அது நுண்ணுர்வு சம்பந்தப்பட்டது. இது அனைவருக்கும் இருக்க வேண்டும். அனைத்து மொழிகளும் கற்று கொள்ள வேண்டும். ஆனால், நம் தாய் மொழியை விட்டு கொடுக்கக் கூடாது.

இந்த படம் வெல்லும் என அனைவரும் நம்பிக்கையாக சொல்வதற்கு காரணம், இதில் வலுவான அணி அமைந்திருக்கிறது. படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்துக் கொடுத்த தம்பி சூர்யாவுக்கு நன்றி..” என்று படக் குழுவில் அனைவரையும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார் நடிகர் கமல்ஹாசன்.

The post “ரஜினியும், நானும் நல்ல நட்பில்தான் இருக்கிறோம். ரசிகர்கள்தான் அடித்துக் கொள்கிறார்கள்” – நடிகர் கமல்ஹாசன் பேச்சு appeared first on Touring Talkies.

]]>
கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்திற்குக் கிடைத்த ஜாக்பாட்..! https://touringtalkies.co/jackpot-price-gets-kamalhaasans-vikram-movie/ Fri, 06 May 2022 08:56:01 +0000 https://touringtalkies.co/?p=21862 நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பாக தயாரித்துள்ள புதிய படம் ‘விக்ரம்’. இந்தப் படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க, லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார். ‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ ஆகிய படங்களை இயக்கிய இளம் இயக்குநரான லோகேஷ் கனகராஜூடன் கமல்ஹாசன் கூட்டணி சேர்கிறார் என்ற உடனேயே இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலேயே அதிகமாக இருந்தது. அதன் பின்னர் படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோரும் […]

The post கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்திற்குக் கிடைத்த ஜாக்பாட்..! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பாக தயாரித்துள்ள புதிய படம் ‘விக்ரம்’.

இந்தப் படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க, லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார்.

‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ ஆகிய படங்களை இயக்கிய இளம் இயக்குநரான லோகேஷ் கனகராஜூடன் கமல்ஹாசன் கூட்டணி சேர்கிறார் என்ற உடனேயே இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலேயே அதிகமாக இருந்தது. அதன் பின்னர் படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோரும் இணைந்தவுடன் படம் பற்றிய எதிர்பார்ப்பு மேலும் கூடுதலானது.

படம் முழுவதும் முடிவடைந்துவிட்டது. வரும் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் ஓடிடி விற்பனையில் மிகப் பெரிய தொகைக்கு இந்த விக்ரம் படம் விற்பனையாகியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விக்ரம்’ படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமை 125 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனம் இந்தப் படத்தை வாங்கியுள்ளது.

படம் வெளியான நான்கு வாரங்களுக்குப் பிறகு படத்தை ஓடிடியில் வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளுக்கும் சேர்த்துதான் இந்த விலையாம்.

இந்த விக்ரம்’ படம் 100 கோடி முதலீட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்போது கூடுதலாக 25 கோடி ரூபாயும் தியேட்டர் வெளியீட்டுக்கு முன்பேயே கிடைத்துவிட்டதால், இனி வரப் போகும் தியேட்டர் வசூல் இந்தப் படத்திற்கான கூடுதல் லாபமாகத்தான் இருக்கப் போகிறது.

The post கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்திற்குக் கிடைத்த ஜாக்பாட்..! appeared first on Touring Talkies.

]]>