Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
TFPC – Touring Talkies https://touringtalkies.co Fri, 11 Mar 2022 11:52:35 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png TFPC – Touring Talkies https://touringtalkies.co 32 32 பெப்சி-தயாரிப்பாளர் சங்கம்-ஊதிய உயர்வு-கூட்டறிக்கை https://touringtalkies.co/fefsi-tfpc-employees-wages-jointly-statement/ Fri, 11 Mar 2022 11:51:05 +0000 https://touringtalkies.co/?p=21165 பெப்சி எனப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்திற்கும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையே தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு பற்றி பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. இதன்படி பெப்சியில் இணைந்துள்ள 23 சங்கங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான ஊதியங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த ஊதிய ஒப்பந்தம் 2025-ம் வருடம் மார்ச் 9-ம் தேதிவரையிலும் நடைமுறையில் இருக்கும். இந்த ஊதிய விகிதங்கள் பற்றி பெப்சி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை இது.

The post பெப்சி-தயாரிப்பாளர் சங்கம்-ஊதிய உயர்வு-கூட்டறிக்கை appeared first on Touring Talkies.

]]>
பெப்சி எனப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்திற்கும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையே தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு பற்றி பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது.

இதன்படி பெப்சியில் இணைந்துள்ள 23 சங்கங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான ஊதியங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த ஊதிய ஒப்பந்தம் 2025-ம் வருடம் மார்ச் 9-ம் தேதிவரையிலும் நடைமுறையில் இருக்கும்.

இந்த ஊதிய விகிதங்கள் பற்றி பெப்சி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை இது.

The post பெப்சி-தயாரிப்பாளர் சங்கம்-ஊதிய உயர்வு-கூட்டறிக்கை appeared first on Touring Talkies.

]]>
நடிகர் சிம்பு தொடர்ந்த வழக்கு – தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் https://touringtalkies.co/chennai-high-court-impose-fine-to-tamil-film-producers-council/ Wed, 09 Mar 2022 09:55:26 +0000 https://touringtalkies.co/?p=21151 ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு நடிகர் சிம்பு தாக்கல் செய்த வழக்கில் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய தாமதித்ததால், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனின் தயாரிப்பில் சிம்பு நடித்து 2016-ம் ஆண்டு வெளியான படம் ‘அன்பானவன், அடங்காதவன், அசராதவன்’. இந்தப் படத்தில் நடிக்க சிம்புக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு, 1 கோடியே 51 லட்சம் ரூபாய் […]

The post நடிகர் சிம்பு தொடர்ந்த வழக்கு – தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் appeared first on Touring Talkies.

]]>
ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு நடிகர் சிம்பு தாக்கல் செய்த வழக்கில் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய தாமதித்ததால், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனின் தயாரிப்பில் சிம்பு நடித்து 2016-ம் ஆண்டு வெளியான படம் அன்பானவன், அடங்காதவன், அசராதவன்’. இந்தப் படத்தில் நடிக்க சிம்புக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு, 1 கோடியே 51 லட்சம் ரூபாய் முன் பணமாக வழங்கப்பட்டது.

இந்தப் படத்தின் வெளியீடு சமயத்தில் இதில் சம்பள பாக்கித் தொகையான மீதமான 6 கோடியே 48 லட்சம் ரூபாயை பெற்றுத் தரக் கோரி நடிகர் சிம்பு, நடிகர் சங்கத்தில் புகார் மனு அளித்திருத்திருந்தார்.

அதேசமயம், இந்தப் படத்தால் தனக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறிய தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், அதற்கான நஷ்ட ஈட்டுத் தொகையை சிம்புவிடம் இருந்து மீ்ட்டுத் தரக் கோரி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார்.

இது தொடர்பாக சிம்பு தரப்பிலும், தயாரிப்பாளர் தரப்பிலும் பத்திரிகையாளர் சந்திப்புகள் நடத்தப்பட்டு அதில் தத்தமது தரப்பு வாதங்களை பத்திரிகையாளர்களிடத்தில் முன் வைத்திருந்தனர்.

இது தொடர்பாக இணையத் தளங்களில் எழுதப்பட்ட பல கட்டுரைகளில் தனக்கு எதிராக தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் பல்வேறு அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக கூறி, அவரிடம் 1 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் சிம்பு சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில், தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், நடிகர் விஷால் ஆகியோரை எதிர் மனுதாரராக சேர்த்திருந்தார்.

இந்த வழக்கில் பதில் விளக்கம் அளிக்கும்படி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், மற்றும் நடிகர் விஷால் இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த நோட்டீஸை அனுப்பி 1,080 நாட்கள் ஆகியும், இன்றுவரையிலும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தனது தரப்பிலான எழுத்துப்பூர்வமான பதில் விளக்கத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை.

இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து விளக்கக் கடிதம் தாக்கல் செய்யவில்லை என்பதை அறிந்த நீதிபதி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

இந்த அபராதத் தொகையை வரும் மார்ச்  31-ம் தேதிக்குள் சென்னை உயர்நீதி மன்றப் பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையையும் வரும் ஏப்ரல் 1-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post நடிகர் சிம்பு தொடர்ந்த வழக்கு – தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் appeared first on Touring Talkies.

]]>
“தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி பற்றி முதல்வரிடம் புகார்”-தயாரிப்பாளர் சிங்காரவேலன் அறிவிப்பு https://touringtalkies.co/producers-union-president-complains-to-chief-minister-about-murali-producer-singaravelan-announcement/ Tue, 03 Aug 2021 06:09:08 +0000 https://touringtalkies.co/?p=16714 தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரான முரளி ராமசாமி மீது கடுமையான புகார்களை எழுப்பியிருக்கிறார் விநியோகஸ்தர் சிங்காரவேலன். நடந்து முடிந்த சங்கத் தேர்தலில் முரளியும், சிங்காரவேலனும் எதிரெதிர் அணிகளில் போட்டியிட்டார்கள். மேலும் தற்போது சிங்காரவேலன் டி.ராஜேந்தர் கெளரவத் தலைவராக இருக்கும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பொறுப்பில் இருக்கிறார். இதனால் தயாரிப்பாளர்களின் பிரச்சினைகள் பற்றி அவ்வப்போது தனது கருத்துக்களை சிங்காரவேலன் வெளியிடுவது வழக்கம். அதேபோல்தான் ஒரு ஆடியோ பதிவை நேற்றைக்கு வெளியிட்டுள்ளார். ஆனால், அது அளவு கடந்த அர்ச்சனையாகிவிட்டதுதான் அனைவருக்கும் […]

The post “தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி பற்றி முதல்வரிடம் புகார்”-தயாரிப்பாளர் சிங்காரவேலன் அறிவிப்பு appeared first on Touring Talkies.

]]>
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரான முரளி ராமசாமி மீது கடுமையான புகார்களை எழுப்பியிருக்கிறார் விநியோகஸ்தர் சிங்காரவேலன்.

நடந்து முடிந்த சங்கத் தேர்தலில் முரளியும், சிங்காரவேலனும் எதிரெதிர் அணிகளில் போட்டியிட்டார்கள். மேலும் தற்போது சிங்காரவேலன் டி.ராஜேந்தர் கெளரவத் தலைவராக இருக்கும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பொறுப்பில் இருக்கிறார்.

இதனால் தயாரிப்பாளர்களின் பிரச்சினைகள் பற்றி அவ்வப்போது தனது கருத்துக்களை சிங்காரவேலன் வெளியிடுவது வழக்கம். அதேபோல்தான் ஒரு ஆடியோ பதிவை நேற்றைக்கு வெளியிட்டுள்ளார். ஆனால், அது அளவு கடந்த அர்ச்சனையாகிவிட்டதுதான் அனைவருக்கும் அதிர்ச்சியளித்த செய்தி.

முரளி திமுகவைச் சேர்ந்தவர் என்பதால் முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கமானவர் என்று சொல்லிக் கொண்டு திரையுலகத்தில் பலரையும் மிரட்டி வருவதாகப் புகார் கூறியுள்ளார் சிங்காரவேலன்.

அவர் மேலும் கூறும்போது, “தன்னைத் தவிர வேறு யாரும் முதல்வருடன் நேரடியாக பேச முடியாது. நான் மட்டுமே பேசி வருகிறேன். எனவே இந்தத் திரையுலகத்துக்கே நான்தான் அத்தாரிட்டி என்பதைபோல முரளியின் செயல்பாடுகள் உள்ளன.

‘பெப்சி’யின் தலைவர் செல்வமணியைக்கூட முரளி மிரட்டி வைத்திருக்கிறார். “உங்களைப் பதவியைவிட்டுத் தூக்க அரசு தயாராக இருந்தது. ஆனால் நான்தான் உங்களுக்கு ஆதரவாகப் பேசி உங்களை இருக்க வைத்துள்ளேன். அதனால் நீங்கள் என் பேச்சைத்தான் கேட்க வேண்டும். மற்றைய சங்கங்களின் பேச்சைக் கேட்கக் கூடாது” என்று செல்வமணியை முரளி மிரட்டி வைத்திருப்பதுதான் இதில் ஹைலைட்டான விஷயம்.

இப்படி பெப்சி அமைப்பை மிரட்டித்தான் நடிகர் சிம்பு நடிக்கும் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ படத்தின் ஷூட்டிங்கிற்கு தடை விதிக்க வைத்துள்ளார் முரளி. தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை சிம்பு நிச்சயமாக கொடுத்துவிடுவதாகச் சொல்லியிருக்கிறார். அப்படியிருக்கும்போது எதற்காக அவர் நடிக்கவிருக்கும் படத்தின் ஷூட்டிங்கை நிறுத்த வேண்டும்..? இது அராஜகமானது.

முரளியின் அத்துமீறல்களைப் பற்றி மிக விரைவில் அவரால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒன்று கூடி முதல்வரிடம் நேரில் சென்று புகார் கூறவுள்ளோம்..” என்று அந்த ஆடியோவில் தெரிவித்துள்ளார் விநியோகஸ்தர் சிங்காரவேலன்.

The post “தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி பற்றி முதல்வரிடம் புகார்”-தயாரிப்பாளர் சிங்காரவேலன் அறிவிப்பு appeared first on Touring Talkies.

]]>
‘மாநாடு’ படப்பிடிப்புக்கு திடீர் தடை..! https://touringtalkies.co/fefsi-union-ban-to-maanaadu-movie-shooting/ Sun, 31 Jan 2021 06:17:26 +0000 https://touringtalkies.co/?p=12620 ‘நஷ்ட ஈட்டை கொடுப்பேனா’ என்று சிம்புவும், ‘வாங்காமல் விட்டிருவேனா’ என்று மைக்கேல் ராயப்பனும் விடாக்கொண்டன்; கொடாக்கண்டனாக தங்களுடைய மோதலைக் கை விடாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். இதில் பாதிக்கப்படுவது என்னமோ.. சிம்புவை வைத்து படமெடுக்கும் தயாரிப்பாளர்கள்தான். “அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் தனக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு ஈடுகட்டும் பொருட்டு 8.50 கோடி ரூபாயை சிம்பு கொடுக்கத்தான் வேண்டும்” என்று அந்தப் படத்தின் தயாரிப்பாளரான மைக்கேல் ராயப்பன் கிடுக்கிப்பிடி போட்டுக் கொண்டிருக்கிறார். சிம்புவோ நழுவிக் கொண்டேயிருக்கிறார். சமீபத்தில் வெளியான சிம்புவின் […]

The post ‘மாநாடு’ படப்பிடிப்புக்கு திடீர் தடை..! appeared first on Touring Talkies.

]]>
‘நஷ்ட ஈட்டை கொடுப்பேனா’ என்று சிம்புவும், ‘வாங்காமல் விட்டிருவேனா’ என்று மைக்கேல் ராயப்பனும் விடாக்கொண்டன்; கொடாக்கண்டனாக தங்களுடைய மோதலைக் கை விடாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இதில் பாதிக்கப்படுவது என்னமோ.. சிம்புவை வைத்து படமெடுக்கும் தயாரிப்பாளர்கள்தான்.

“அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் தனக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு ஈடுகட்டும் பொருட்டு 8.50 கோடி ரூபாயை சிம்பு கொடுக்கத்தான் வேண்டும்” என்று அந்தப் படத்தின் தயாரிப்பாளரான மைக்கேல் ராயப்பன் கிடுக்கிப்பிடி போட்டுக் கொண்டிருக்கிறார். சிம்புவோ நழுவிக் கொண்டேயிருக்கிறார்.

சமீபத்தில் வெளியான சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் வெளியீ்ட்டீன்போதுகூட இந்தப் பிரச்சினை எழுந்து கடைசியாக விநியோகஸ்தர்கள் தலையிட்டு “இந்தப் படத்தில் எதுவும் வேண்டாம். அடுத்தப் படத்தின் வெளியீட்டுக்கு முன்பாக பேசித் தீர்த்துக் கொள்வோம்…” என்று சொன்னதால் தப்பித்தது அந்தப் படம்.

இதோ இப்போது ‘மாநாடு’ படத்துக்கு குடைச்சலைத் துவக்கிவிட்டார் மைக்கேல் ராயப்பன்.

‘மாநாடு’ படத்தின் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு வரும் 6-ம் தேதி நடக்கவிருக்கிறது. இதற்காக படப்பிடிப்புத் தளங்கள் அமைக்கப்பட்டு வரும் நிலையில், ‘இந்தப் படப்பிடிப்பு நடத்தக் கூடாது’ என்று பெப்சி அமைப்பு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறதாம்.

‘பெப்சி’ அமைப்புக்கு இந்த நோட்டீஸை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள்தான் பார்வர்டு செய்திருக்கிறார்கள். ‘தங்களுடைய சங்க உறுப்பினரின் கடனுக்கு வழி சொல்லாமல் ‘மாநாடு’ படத்தின் ஷூட்டிங் நடத்தப்படக் கூடாது’ என்பது அவர்களது கருத்து.

‘மாநாடு’ படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் பொறுப்பில் உள்ளார் என்பதால் அந்தச் சங்கத்தினர் இதற்காக சுரேஷுக்கு பக்க பலமாக களமிறங்கியிருக்கிறார்கள்.

வரும் 3-ம் தேதியன்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு மூவி மேக்கர்ஸ் சங்கம் என்று மூன்று தரப்பு சங்கத்தினரும் அமர்ந்து இதற்கான பேச்சுவார்த்தையை நடத்தப் போகிறார்களாம்.

கடைசியாக பேசும்போது சிம்பு “நஷ்ட ஈடாக பணம் தருகிறேன்…” என்றுதான் சொல்லியிருக்கிறார். ஆனால், எவ்வளவு என்பதை மட்டும் சொல்லவில்லையாம். “அந்தத் தொகை எவ்வளவு என்பதை முடிவு செய்து, அவரிடத்தில் இருந்து பாதிக்கப்பட்ட தயாரிப்பாளருக்கு வாங்கிக் கொடுப்போம்…” என்று நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் சொல்லியிருக்கிறார்கள்.

இதில் கொசுறாக.. நடிகர் சிம்புவின் சார்பில் நடிகர் சங்கத்தின் பிரதிநிதியாக அந்தச் சங்கத்தின் முன்னாள் தலைவரான சரத்குமாரை இந்தப் பஞ்சாயத்தில் கலந்து கொள்ள வருமாறு உஷா ராஜேந்தர் அழைத்திருக்கிறாராம். சரத்குமாரும் இதில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபடியும் முதல்ல இருந்தா…?????????

இதுக்கு ஒரு எண்ட் கார்டு யாராச்சும் போட்டு விடுங்கப்பா..!!!

The post ‘மாநாடு’ படப்பிடிப்புக்கு திடீர் தடை..! appeared first on Touring Talkies.

]]>
“மாஸ்டர்’ படத்திற்காக ‘ஈஸ்வரன்’ வெளியாவதைத் தடுக்கிறார்கள்” – டி.ராஜேந்தர் ஆவேசம்..! https://touringtalkies.co/t-rajendar-interview-about-aaa-movie-crisis/ Tue, 12 Jan 2021 15:13:11 +0000 https://touringtalkies.co/?p=12082 “ஈஸ்வரன் படத்தை வெளியிடக் கூடாது…” என்று கியூப் நிறுவனத்திற்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகம், கடிதம் கொடுத்தமைக்கு நடிகர் சிம்புவின் தந்தையும், இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். ‘ஈஸ்வரன்’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தன்று வெளியாகவிருக்கும் சூழலில் சிம்பு முன்பு நடித்திருந்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்திற்காக நஷ்ட ஈட்டுத் தொகையை சிம்பு கொடுக்க வேண்டியிருப்பதால், ‘ஈஸ்வரனை’ வெளியிடக் கூடாது என்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் கியூப் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. […]

The post “மாஸ்டர்’ படத்திற்காக ‘ஈஸ்வரன்’ வெளியாவதைத் தடுக்கிறார்கள்” – டி.ராஜேந்தர் ஆவேசம்..! appeared first on Touring Talkies.

]]>
“ஈஸ்வரன் படத்தை வெளியிடக் கூடாது…” என்று கியூப் நிறுவனத்திற்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகம், கடிதம் கொடுத்தமைக்கு நடிகர் சிம்புவின் தந்தையும், இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

‘ஈஸ்வரன்’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தன்று வெளியாகவிருக்கும் சூழலில் சிம்பு முன்பு நடித்திருந்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்திற்காக நஷ்ட ஈட்டுத் தொகையை சிம்பு கொடுக்க வேண்டியிருப்பதால், ‘ஈஸ்வரனை’ வெளியிடக் கூடாது என்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் கியூப் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த நோட்டீஸ் பற்றியும், இந்த நஷ்ட ஈட்டு விவகாரங்கள் பற்றியும் சிம்புவின் சார்பிலும், ‘ஈஸ்வரன்’ படக் குழு சார்பிலும் நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கமளித்தார்.

அவர் பேசும்போது. “அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ பட வெளியிட்டீன்போது சிம்பு தன்னுடைய சம்பளத்திலேயே மூன்றரை கோடியை விட்டுக் கொடுத்ததினால்தான் அந்தப் படமே வெளியானது.

ஒரு படம் வெளியாகி அந்தப் படம் தோல்வியடைந்தால் அதற்கு படத்தில் நடித்த ஹீரோ எப்படி பொறுப்பாவார்..? அந்தப் படத்தின் விநியோக முறை என்ன..? எத்தனை தியேட்டர்களில் வெளியிட்டார்கள்..? யார், யாருக்கு எவ்வளவு தொகையைப் பிரித்துக் கொண்டார்கள்…? இதையெல்லாம் எந்த ஹீரோ கேட்டுக் கொண்டிருப்பார்..? அது அந்தத் தயாரிப்பாளரின் பொறுப்பு.. வேலை..

ஆனால், அந்தப் படத்தின் தோல்விக்கு மிக முக்கியக் காரணம் சிம்புதான் என்று சொல்லி எல்லாப் பழியையும் தூக்கி சிம்பு மீது போட்டுவிட்டார்கள். அப்போதைய தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான விஷாலும், கதிரேசனும் சேர்ந்து “சிம்பு இனிமேல் எந்தப் படத்தில் நடித்தாலும் அந்தப் படம் வெளியாவதற்கு முன்பாக இரண்டே முக்கால் கோடியை நஷ்ட ஈடாக மைக்கேல் ராயப்பனுக்கு வழங்க வேண்டும்” என்று ஒருதலைப்பட்சமாக கட்டப் பஞ்சாயத்து செய்து சொன்னார்கள். அப்போது என்னிடமோ, சிம்புவிடமோ அவர்கள் கருத்தே கேட்கவில்லை. இப்படி ஒரு அநியாயம் இந்தியாவில் எந்த ஒரு சினிமா துறையிலாவது நடந்திருக்குமா..?

இவர்களின் இந்த கட்டப் பஞ்சாயத்துத் தீர்ப்பை எதிர்த்து மைக்கேல் ராயப்பன் மீதும், அப்போதைய தயாரிப்பாளர் சங்கத் தலைவரான விஷால் மீதும், கதிரேசன் மீதும் நாங்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளோம். அந்த வழக்கு இப்போதுவரையிலும் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில்.. கோர்ட்டில் ஒரு வழக்கு இருக்கும்போது அதை கண்டு கொள்ளாமல் அந்த வழக்குடன் தொடர்புடைய விஷயத்திற்காக இப்படியொரு நோட்டீஸை தயாரிப்பாளர் சங்கம் கியூபுக்கு எப்படி அனுப்பலாம்..? இது சட்டப்படி பார்த்தால் நீதிமன்ற அவமதிப்பாகும்..!

அவர்கள் சிம்புவையும், என்னையும் மட்டும் குறி வைக்க என்ன காரணம்.. நான் சென்ற தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிட்டதுதான் இதற்கெல்லாம் ஒரே காரணம்.

நான் அனைத்தையும் கேள்வி கேட்பேன். விஷால் சங்கப் பணத்தை சுத்தமாக சூறையாடிவிட்டுப் போய்விட்டார். இதை நான் தட்டிக் கேட்டேன். அதனால் என் மீது கோபம்.

இப்போது தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் முறைகேடுகளை செய்துதான் பொறுப்புக்கு வந்தார்கள். கள்ள ஓட்டு போட்டார்கள். இதை எதிர்த்தும் நான் நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளேன். இதெல்லாம் சேர்ந்துதான் என் மீது அவர்களுக்கு கோபம் அதிகமாகி, என் மகனின் படத்தை வெளியிட விடாமல் தடுக்கிறார்கள்.

மேலும், ‘மாஸ்டர்’ படம் பெரிய பட்ஜெட் படம் என்பதாலேயே ஒரு தியேட்டர் காம்ப்ளெக்ஸ் இருந்தால் அந்த காம்ப்ளெக்ஸில் இருக்கும் அனைத்து தியேட்டர்களிலும் ‘மாஸ்டர்’ படத்தை மட்டுமே வெளியிட வேண்டும் என்று அராஜகம் செய்கிறார்கள்.

ஏன் என் மகன் நடிக்கும் படம் வெளியாகக் கூடாதா..? ஜெயிக்கக் கூடாதா..? அவர்களுடைய நோக்கம் எப்படியாவது என் மகன் நடித்திருக்கும் ‘ஈஸ்வரன்’ படம் வெளியாகவே கூடாது என்பதுதான். இதையெல்லாம் தாண்டி.. எப்பாடுபட்டாவது ‘ஈஸ்வரன்’ தியேட்டருக்கு வந்தே தீரும்..” என்று உறுதியாகச் சொன்னார் டி.ராஜேந்தர்.

The post “மாஸ்டர்’ படத்திற்காக ‘ஈஸ்வரன்’ வெளியாவதைத் தடுக்கிறார்கள்” – டி.ராஜேந்தர் ஆவேசம்..! appeared first on Touring Talkies.

]]>
‘ஈஸ்வரனு’க்கு வந்த அடுத்தப் பிரச்சினை – படத்தை வெளியிட தயாரிப்பாளர் கவுன்சில் எதிர்ப்பு https://touringtalkies.co/tamil-film-producers-council-oppose-to-release-of-eeswaran-movie/ Mon, 11 Jan 2021 19:00:40 +0000 https://touringtalkies.co/?p=12052 வரும் பொங்கல் தினத்தன்று வெளியாகவுள்ள ‘ஈஸ்வரன்’ படத்திற்கு அடுத்தப் பிரச்சினையும் துவங்கியுள்ளது. ஏற்கெனவே “ஓடிடியில் வெளியிடுகிறோம்…” என்ற தயாரிப்பாளரின் அறிவிப்பையடுத்து ஈஸ்வரனுக்கு தமிழகம் முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை நீக்கும் முயற்சியில் தற்போது தயாரிப்பாளர் ஈடுபட்டுள்ளார். இந்த நேரத்தில் இன்னொரு பிரச்சினையும் ‘ஈஸ்வரனுக்கு’ எதிராக வெடித்துள்ளது. அது தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கொடுத்துள்ள புகார்தான். தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனின் தயாரிப்பில், சிம்புவின் நடிப்பில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற திரைப்படம் […]

The post ‘ஈஸ்வரனு’க்கு வந்த அடுத்தப் பிரச்சினை – படத்தை வெளியிட தயாரிப்பாளர் கவுன்சில் எதிர்ப்பு appeared first on Touring Talkies.

]]>
வரும் பொங்கல் தினத்தன்று வெளியாகவுள்ள ‘ஈஸ்வரன்’ படத்திற்கு அடுத்தப் பிரச்சினையும் துவங்கியுள்ளது.

ஏற்கெனவே “ஓடிடியில் வெளியிடுகிறோம்…” என்ற தயாரிப்பாளரின் அறிவிப்பையடுத்து ஈஸ்வரனுக்கு தமிழகம் முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை நீக்கும் முயற்சியில் தற்போது தயாரிப்பாளர் ஈடுபட்டுள்ளார்.

இந்த நேரத்தில் இன்னொரு பிரச்சினையும் ‘ஈஸ்வரனுக்கு’ எதிராக வெடித்துள்ளது. அது தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கொடுத்துள்ள புகார்தான்.

தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனின் தயாரிப்பில், சிம்புவின் நடிப்பில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற திரைப்படம் 2017-ம் ஆண்டு வெளியானது.

இந்தத் திரைப்படத்திற்கு படத்தின் நாயகனான சிம்பு சரிவர ஒத்துழைப்பு கொடுக்காததால் படத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் சிம்புவிடம் இருந்து உரிய நஷ்ட ஈட்டினை பெற்றுத் தரும்படி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்திருந்தார் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்.

இந்தப் புகாரை விசாரித்த தயாரிப்பாளர்கள் சங்கம் உரிய நஷ்ட ஈட்டினை வழங்கும்படி சிம்புவைக் கேட்டுக் கொண்டது. ஆனால், சிம்பு இதற்கு மறுக்கவே வெளியில் சொல்லாமல் சிம்புவுக்கு ரெட் கார்டு போட்டது தயாரிப்பாளர் கவுன்சில். ஆனால், அதையும் மீறி சிம்பு மணிரத்னத்தின் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்தார் என்பது வேறு விஷயம்.

இப்போது இதே விவகாரத்தை மீண்டும் தயாரிப்பாளர் கவுன்சிலுக்குக் கொண்டு வந்திருக்கிறார் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன். இது தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு வரும்படி தற்போதைய தயாரிப்பாளர் கவுன்சில் சிம்புவுக்கும், அவரது தந்தையான டி.ராஜேந்தருக்கும் அழைப்பு கொடுத்தும், இருவரும் செல்லவில்லை. அதோடு இதைப் பற்றி இருவருமே கண்டு கொள்ளவில்லை.

இதனால் கோபமான தயாரிப்பாளர் கவுன்சில் “எங்கள் அனுமதியில்லாமல் ‘ஈஸ்வரன்’ படத்தை வெளியிடக் கூடாது…” என்று கியூப் நிறுவனத்திற்கு இப்போது கடிதம் எழுதி எச்சரித்துள்ளதாம். இதனால் ‘ஈஸ்வரன்’ படத்தை வெளியிட கியூப் நிறுவனம் தயங்கி நிற்கிறதாம்.

இந்தத் தகவலை வெளியிட்டிருக்கும் மற்றொரு தயாரிப்பாளரான ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், “தயாரிப்பாளர் கவுன்சில் எழுதிய கடிதம் ஒரு தயாரிப்பாளரை சாகடிப்பதற்குச் சமம். இது முற்றிலும் தவறானது” என்று கண்டித்துள்ளார்.

‘ஈஸ்வரன்’ படம் வெளியாக நாளையும், நாளை மறுநாளும் அவகாசம் இருப்பதால் அதற்குள்ளாக இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம்..!

The post ‘ஈஸ்வரனு’க்கு வந்த அடுத்தப் பிரச்சினை – படத்தை வெளியிட தயாரிப்பாளர் கவுன்சில் எதிர்ப்பு appeared first on Touring Talkies.

]]>
“டி.ராஜேந்தர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்…” – தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு https://touringtalkies.co/tfpc-dec-7-working-committee-meeting-news/ Tue, 08 Dec 2020 06:05:39 +0000 https://touringtalkies.co/?p=10809 சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முதல் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் ஹைலைட்டாக “சங்கத் தேர்தலில் பணம் விளையாடியிருக்கிறது. மோசடியாக ஆட்களை வைத்து வாக்களிக்க வைத்திருக்கிறார்கள்…” என்றெல்லாம் புகார் கூறிய டி.ராஜேந்தர் அணியினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்… தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அளித்திருக்கும் புகாரின் கீழ் நடிகர் சிம்புவை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காணப்படும் என்றும் தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார்கள். […]

The post “டி.ராஜேந்தர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்…” – தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு appeared first on Touring Talkies.

]]>
சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முதல் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் ஹைலைட்டாக “சங்கத் தேர்தலில் பணம் விளையாடியிருக்கிறது. மோசடியாக ஆட்களை வைத்து வாக்களிக்க வைத்திருக்கிறார்கள்…” என்றெல்லாம் புகார் கூறிய டி.ராஜேந்தர் அணியினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்…

தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அளித்திருக்கும் புகாரின் கீழ் நடிகர் சிம்புவை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காணப்படும் என்றும் தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார்கள்.

மேலும்,

வி.பி.எஃப். கட்டணத்தை எங்களது சங்க உறுப்பினர்கள் இனிமேல் கட்டவே மாட்டார்கள்.

நாளைக்குள் இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வை கியூப் நிறுவனம் சொல்லாவிட்டால் கியூப் நிறுவனத்தின் முன்பாக தயாரிப்பாளர்கள் சங்கம் போராட்டம் நடத்தும்.

ஆன்லைன் டிக்கெட் வசதியுள்ள தியேட்டர்களில் மட்டுமே நாங்கள் படத்தை வெளியிடுவோம்.

தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கான கட்டணம் பாதிக்குப் பாதியாக 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்படுகிறது.

பையனூரில் தயாரிப்பாளர்களுக்கென்று குடியிருப்புகள் கட்டித் தர வழிவகை செய்யப்படும்.

வேறு சங்கங்களில் பொறுப்பில் இருப்பவர்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நிர்வாகப் பொறுப்புக்கு வரக் கூடாது என்று சங்க விதிகளில் திருத்தம் செய்யப்படும்.

என்பது உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

The post “டி.ராஜேந்தர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்…” – தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு appeared first on Touring Talkies.

]]>
தயாரிப்பாளர் சங்கத்திற்காக உருவாகும் படத்தில் இணைகிறது சிம்பு-வெங்கட் பிரபு கூட்டணி..! https://touringtalkies.co/simbu-venkat-prabhu-will-joins-for-tfpc-production-movie/ Mon, 30 Nov 2020 09:32:41 +0000 https://touringtalkies.co/?p=10466 நடிகர் சிம்பு சமீப காலங்களில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறார். அதிகமான படங்களுக்கு ஒத்துக் கொள்வது.. கொடுத்த கால்ஷீட்டில் சமர்த்துப் பிள்ளையாய் வந்து நடித்துக் கொடுப்பது என்று தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் செல்லமாய் உருமாறிக் கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் இன்னொரு அதிர்ச்சி கலந்த ஆச்சரியமான ஒரு விஷயத்தையும் செய்திருக்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் அவரது தந்தையான இயக்குநர் டி.ராஜேந்தர் தேர்தல் தோல்வியடைந்தாலும் “தயாரிப்பாளர்கள் சங்கத்திற்காக ஒரு படத்தை உருவாக்கித் தர வேண்டும்” […]

The post தயாரிப்பாளர் சங்கத்திற்காக உருவாகும் படத்தில் இணைகிறது சிம்பு-வெங்கட் பிரபு கூட்டணி..! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் சிம்பு சமீப காலங்களில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறார். அதிகமான படங்களுக்கு ஒத்துக் கொள்வது.. கொடுத்த கால்ஷீட்டில் சமர்த்துப் பிள்ளையாய் வந்து நடித்துக் கொடுப்பது என்று தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் செல்லமாய் உருமாறிக் கொண்டிருக்கிறார்.

இந்த நேரத்தில் இன்னொரு அதிர்ச்சி கலந்த ஆச்சரியமான ஒரு விஷயத்தையும் செய்திருக்கிறார்.

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் அவரது தந்தையான இயக்குநர் டி.ராஜேந்தர் தேர்தல் தோல்வியடைந்தாலும் “தயாரிப்பாளர்கள் சங்கத்திற்காக ஒரு படத்தை உருவாக்கித் தர வேண்டும்” என்று கொள்கையில் இருக்கிறார் டி.ராஜேந்தர்.

அந்தக் கொள்கைக்குத் துணை கொடுக்க தனது மகன் சிம்புவை நாடியிருக்கிறார் டி.ராஜேந்தர். அப்பா பேச்சுக்கு செவி கொடுத்த சிம்பு இதற்கு டபுள் “ஓகே” சொல்லியிருக்கிறாராரம்.

படத்திற்கு ‘மெண்டல்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தையும் இயக்குநர் வெங்கட் பிரபுதான் இயக்கப் போகிறார் என்பது உறுதியாகிவிட்டது.

இந்த ஒரு படத்தின் மூலமாகக் கிடைக்கும் லாபத் தொகை முழுவதும் அப்படியே தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு அளிக்கப்படுமாம். தோராயமாக 10 அல்லது 12 கோடி ரூபாய் இதன் மூலமாக தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நன்கொடையாகத் தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டி.ராஜேந்தரின் இந்த உயரிய எண்ணத்திற்கு சிம்புவின் காட் மதரான உஷா ராஜேந்தரும் ஒப்புதல் அளித்துவிட்டாராம். எனவே, படம் தயாராவது உறுதி. தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பேங்க் பேலன்ஸை டி.ராஜேந்தர் உயத்தப் போவதும் உறுதி.

ஆனால், இதை மனமுவந்து ஏற்றுக் கொள்ளும் மன நிலையில் தற்போது புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் இருக்கிறார்களா என்பதுதான் தெரியவில்லை.

அவர்களும் ‘தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை’ என்று சொன்னால்.. தயாரிப்பாளர்கள் சங்கம் நிச்சயமாக வலு பெறும். கஷ்டப்படும் ஏழை, எளிய தயாரிப்பாளர்கள் நலம் பெறுவார்கள் என்பது உறுதி.

The post தயாரிப்பாளர் சங்கத்திற்காக உருவாகும் படத்தில் இணைகிறது சிம்பு-வெங்கட் பிரபு கூட்டணி..! appeared first on Touring Talkies.

]]>
தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்-முரளி அணியினர் பெரும் வெற்றி..! https://touringtalkies.co/tfpc-election-2020-result/ Mon, 23 Nov 2020 06:11:40 +0000 https://touringtalkies.co/?p=10310 நேற்று நடந்து முடிந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் புதிய தலைவராக ராமசாமி என்னும் முரளி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரபல இயக்குநரான டி.ராஜேந்தர் 169 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தலைவர் தேர்தலில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம் : மொத்தம் பதிவான வாக்குகள்-1050 ராமசாமி @முரளி-557 டி.ராஜேந்தர்-388 தேனப்பன்-88 செல்லாதவை-17 துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் கதிரேசன் 493 வாக்குகளும், ஆர்.கே.சுரேஷ் 419 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர். வாக்குகள் விபரம் […]

The post தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்-முரளி அணியினர் பெரும் வெற்றி..! appeared first on Touring Talkies.

]]>
நேற்று நடந்து முடிந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் புதிய தலைவராக ராமசாமி என்னும் முரளி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரபல இயக்குநரான டி.ராஜேந்தர் 169 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

தலைவர் தேர்தலில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம் :

மொத்தம் பதிவான வாக்குகள்-1050

ராமசாமி @முரளி-557

டி.ராஜேந்தர்-388

தேனப்பன்-88

செல்லாதவை-17

துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் கதிரேசன் 493 வாக்குகளும், ஆர்.கே.சுரேஷ் 419 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.

வாக்குகள் விபரம் :

கதிரேசன் – 493

R.K.சுரேஷ் – 419

P.T.செல்வகுமார் – 305

பாண்டியன் – 277

சிங்காரவேலன் – 193

முருகன் – 110

மதியழகன் – 50

பொருளாளர் பதவிக்கான தேர்தலில் சந்திர பிரகாஷ் ஜெயின் வெற்றி பெற்றுள்ளார்.

வாக்குகள் விபரம் :

சந்திர பிரகாஷ் ஜெயின் – 407

K.ராஜன் — 382

J.S.K சதீஷ்குமார் – 233

கெளரவ செயலாளர் பதவிக்கான தேர்தலில் ராதாகிருஷ்ணனும், மன்னனும் வெற்றி பெற்றுள்ளனர்.

துணைத் தலைவர்களில் ஒருவராக வெற்றி பெற்ற கதிரேசன், சுயேட்சையாக போட்டியிட்டவர்.

கெளரவ செயலாளர்களில் ஒருவராக வெற்றி பெற்ற மன்னன், டி.ராஜேந்தர் அணியில் போட்டியிட்டவர்.

மற்றைய வெற்றியாளர்கள் அனைவரும் முரளி அணியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள்

1) ஆர்.வி.உதயகுமார் – 598

2) அழகன் தமிழ்மணி – 470

3) மனோபாலா – 431

4) கே.பி.பிலிம்ஸ் பாலு – 425

5) மனோஜ்குமார் – 420

6) ஷக்தி சிதம்பரம் – 419

7) செளந்தரபாண்டியன் – 414

8) ஆர்.மாதேஷ் – 397

9) விஜயமுரளி – 396

10) ஏ.எல்.உதயா – 394

11) பைஜா டோம் – 366

12) டேவிட் ராஜ் – 352

13) பாபு கணேஷ் – 343

14) ராஜேஸ்வரி வேந்தன் – 341

15) ஏ.எம்.ரத்னம் – 339

16) அன்பாலயா கே.பிரபாகரன் – 326

17) K.K.ராஜ்சிற்பி – 326

18) வி.பழனிவேல் – 310

19) எஸ்.ராமச்சந்திரன் – 308

20) பிரைமுஸ்தாஸ் – 297

21) வீ.சரவணன் – 283

இவர்களில்,

1. அழகன் தமிழ் மணி (EC-7)
2. K.பாலு (EC-11)
3. G.M.டேவிட் ராஜ் (EC-15)
4. R. மாதேஷ் (EC-32)
5. பழனிவேல் (EC-40)
6. ராஜேஸ்வரி வேந்தன் (EC-53)
7. K.K.ராஜ்சிற்பி (EC-55)
8. S.ராமசந்திரன் (EC-57)
9. S.சௌந்தரபாண்டியன் (EC-74)
10. N.விஜயமுரளி (EC-89)
11. A.L.உதயா (EC-92)
12. R.V.உதயகுமார் (EC-93) – ஆகிய 12 பேர் முரளியின் ‘தயாரிப்பாளரின் நலன் காக்கும் அணி’யைச் சேர்ந்தவர்கள்.

ஒட்டு மொத்தமாகப் பார்க்கப் போனால் முரளி அணியைச் சேர்ந்தவர்களே அதிக அளவில் நிர்வாகத்தைக் கைப்பற்றியுள்ளனர்.

The post தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்-முரளி அணியினர் பெரும் வெற்றி..! appeared first on Touring Talkies.

]]>
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தது..! https://touringtalkies.co/tfpc-election-2020-polling-closed/ Sun, 22 Nov 2020 12:32:38 +0000 https://touringtalkies.co/?p=10301 தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடந்து முடிந்துள்ளது. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது வழக்கம். அதன்படி சென்ற வருடமே தேர்தல் நடந்திருக்க வேண்டும். ஆனால் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகக் கூறி நடிகர் விஷாலின் தலைமையில் இருந்த சங்கத்தின் நிர்வாகக் குழுவை கலைத்த தமிழக அரசு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை தன் கைவசம் எடுத்துக் கொண்டது. அதன் பின்பு கொரோனா தாக்கத்தின் காரணமாக பல […]

The post தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தது..! appeared first on Touring Talkies.

]]>
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடந்து முடிந்துள்ளது.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது வழக்கம். அதன்படி சென்ற வருடமே தேர்தல் நடந்திருக்க வேண்டும். ஆனால் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகக் கூறி நடிகர் விஷாலின் தலைமையில் இருந்த சங்கத்தின் நிர்வாகக் குழுவை கலைத்த தமிழக அரசு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை தன் கைவசம் எடுத்துக் கொண்டது.

அதன் பின்பு கொரோனா தாக்கத்தின் காரணமாக பல மாதங்கள் தள்ளிப் போன தேர்தல் ஒரு வழியாக இன்றைக்குத்தான் நடந்து முடிந்திருக்கிறது.

அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர்.-ஜானகி மகளிர் கலைக் கல்லூரியில் இந்தத் தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணியில் இருந்து மாலை 4 மணிவரையிலும் வாக்குப் பதிவு நடைபெற்றது.

காலையில் வாக்குப் பதிவு துவங்குவதற்கு முன்பாக ஓட்டுப் பெட்டிகளை சீல் வைப்பது தொடர்பாக சுயேட்சை உறுப்பினர்களின் சில கருத்துக்களைச் சொல்ல.. அதை மற்றவர்கள் எதிர்க்க சில நிமிடங்கள் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் சில நிமிடங்கள் தாமதமாக வாக்குப் பதிவு துவங்கியது.

அதன் பின்பு காலை 9 மணியளவில் வாக்குப் பதிவு அரங்கத்தின் வெளியிலேயே ஓட்டளிக்க வரும் அங்கத்தினர்களுக்கு கையில் பணம் கொடுத்து வாக்கு சேகரிப்பதாகச் சொல்லி செளந்தர், பிரவீண் காந்த், ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் உள்ளிட்ட சில உறுப்பினர்கள் ஆதாரத்துடன் குரல் எழுப்பினார்கள்.

இதனால் அந்த இடத்தில் பரபரப்பு நிலவியது. பின்பு அவர்கள் அனைவரும் தேர்தல் அதிகாரியான நீதிபதியிடம் புகார் செய்தனர். ஆனாலும் வாக்குப் பதிவு தொடர்ந்து நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் ரஜினிகாந்த், விஜயகாந்த், தனுஷ், பாரதிராஜா, ஏவி.எம்.சரவணன், எஸ்.பி.பி.சரண் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் வாக்களிக்க வரவில்லை.

வாக்களிக்கத் தகுதியுள்ள மொத்த உறுப்பினர்களான 1304 பேரில் 1050 பேர் மட்டுமே தங்களது வாக்கினை செலுத்தியுள்ளனர்.

பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை காலை 8 மணிக்கு அதே கல்லூரியில் நடைபெறவிருக்கிறது.  நாளை இரவுக்குள் அனைத்து முடிவுகளும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தது..! appeared first on Touring Talkies.

]]>