Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
slider – Touring Talkies https://touringtalkies.co Thu, 18 Apr 2024 08:36:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png slider – Touring Talkies https://touringtalkies.co 32 32 இத கேட்டா பிடிக்காது, கேட்க கேட்க தான் பிடிக்கும்! விசில் போடு பற்றி மதன் கார்க்கி… https://touringtalkies.co/%e0%ae%87%e0%ae%a4-%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%87%e0%ae%9f/ Thu, 18 Apr 2024 08:36:55 +0000 https://touringtalkies.co/?p=41075 விஜய்யின் பிரமாண்டமான படமாக வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் ‘தி கோட்’ திரைப்படம் வரும் செப்டம்பர் ஐந்தாம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ் புத்தாண்டை முன்னிட்டு யுவன் சங்கர் ராஜா இசையில் விஜய் பாடிய விசில் போடு பாடல் வெளியாகியது. தி கோட் விசில் போடு பாடலில் மதன் கார்க்கி வரிகளில் நடிகர் விஜய்யின் அரசியல் வருகையை குறிக்கும் விதமாகவும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி ஸ்டைல் […]

The post இத கேட்டா பிடிக்காது, கேட்க கேட்க தான் பிடிக்கும்! விசில் போடு பற்றி மதன் கார்க்கி… appeared first on Touring Talkies.

]]>
விஜய்யின் பிரமாண்டமான படமாக வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் ‘தி கோட்’ திரைப்படம் வரும் செப்டம்பர் ஐந்தாம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ் புத்தாண்டை முன்னிட்டு யுவன் சங்கர் ராஜா இசையில் விஜய் பாடிய விசில் போடு பாடல் வெளியாகியது.

தி கோட் விசில் போடு பாடலில் மதன் கார்க்கி வரிகளில் நடிகர் விஜய்யின் அரசியல் வருகையை குறிக்கும் விதமாகவும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி ஸ்டைல் பாடலாகவும் உருவாகியுள்ள இந்த பாடல் கலவையான விமர்சனங்களையே சந்தித்து வருகிறது எனலாம்.

இந்த பாடலின் வரிகளை எழுதிய மதன் கார்க்கி இப்பாடல் தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், இப்பாடல் அனைத்து தரப்பினரையும் ஈர்க்க கூடிய பாடலாக தான் உருவாக்கப்பட்டது.எப்படி கூகுள் கூகுள், செல்ஃபி புள்ள போன்ற பாடல்கள் எல்லாம் ஆரம்பத்தில் விமர்சிக்கப்பட்டு பின்னர் ரசிக்கப்பட்டதோ அதே போல தான் இந்த விசில் போடு பாடலும் ரசிகர்களை நிச்சயம் வெகுவாக இனி கவரும் என்று கூறியுள்ளார்.

இதுமட்டுமின்றி, இப்பாடலில் அஜித், சிம்பு, கார்த்தி மற்றும் சூர்யா ஆகியோர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்த படங்களின் ரெஃபரஸ்ன்களும் இடம்பெற்று கவனத்தை பெற்றுள்ளன.‌

The post இத கேட்டா பிடிக்காது, கேட்க கேட்க தான் பிடிக்கும்! விசில் போடு பற்றி மதன் கார்க்கி… appeared first on Touring Talkies.

]]>
“மாமன்னன் படமே எனது கடைசி படம்” – அமைச்சர் உதயநிதி அறிவிப்பு https://touringtalkies.co/mamannan-film-is-my-last-film-minister-udayanidhis-announcement/ Wed, 14 Dec 2022 11:04:32 +0000 https://touringtalkies.co/?p=28587 நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின், “மாமன்னன்’ படமே எனது கடைசி படம். இனிமேல் நான் படங்களில் நடிக்க மாட்டேன். கமல் படத்திலிருந்து விலகிவிட்டேன்” என்று அறிவித்துள்ளார். நடிகரும், தயாரிப்பாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வும், முதல்வர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி இன்றைய சுப முகூர்த்த நாளில் நல்ல நேரமான காலை 9:30 மணிக்கு தமிழக அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சி கவர்னர் மாளிகையில் உள்ள […]

The post “மாமன்னன் படமே எனது கடைசி படம்” – அமைச்சர் உதயநிதி அறிவிப்பு appeared first on Touring Talkies.

]]>
நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின், “மாமன்னன் படமே எனது கடைசி படம். இனிமேல் நான் படங்களில் நடிக்க மாட்டேன். கமல் படத்திலிருந்து விலகிவிட்டேன்” என்று அறிவித்துள்ளார்.

நடிகரும், தயாரிப்பாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வும், முதல்வர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி இன்றைய சுப முகூர்த்த நாளில் நல்ல நேரமான காலை 9:30 மணிக்கு தமிழக அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சி கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் இன்று காலை நடைபெற்றது. உதயநிதிக்கு கவர்னர் ரவி பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, ‛‛தமிழ்நாட்டை விளையாட்டின் தலைநகராக மாற்றுவதே எனது லட்சியம். என் மீது வரும் விமர்சனங்களுக்கு ஆக்கபூர்வமான என்னுடைய செயல்களால் மட்டுமே பதில் சொல்லுவேன். தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் நான் நடித்துள்ள மாமன்னன்’ படமே எனது கடைசி திரைப்படம். இனி படங்களில் நடிக்க மாட்டேன். கமல் ஸார் தயாரிப்பில் நான் நடிப்பதாக இருந்த படத்திலிருந்து விலகிவிட்டேன். அவரிடமும் அதை தெரிவித்துவிட்டேன். அவரும் ஏற்றுக் கொண்டார்…” என்றார் உதயநிதி.

The post “மாமன்னன் படமே எனது கடைசி படம்” – அமைச்சர் உதயநிதி அறிவிப்பு appeared first on Touring Talkies.

]]>
கமல்ஹாசன் வெளியிட்ட ‘தேவர் மகன்’ பட கிளைமாக்ஸ் ரகசியம்..! https://touringtalkies.co/kamal-haasan-released-devar-magan-movie-climax-secret/ Wed, 14 Dec 2022 10:08:36 +0000 https://touringtalkies.co/?p=28578 கமல்ஹாசன் தயாரித்து நடித்திருந்த ‘தேவர் மகன்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மிகக் கொடூரமாக இருந்ததாகக்கூறி சென்சார் போர்டு அனுமதி தர மறுத்துவிட்டது. இதனால் கமல்ஹாசன் வேறொரு கிளைமாக்ஸ் காட்சியை எடுக்க வேண்டி வந்தது..! இந்நிலையில் சமீபத்தில் கமல் அளித்த பேட்டியில், ‘தேவர் மகன்’ படத்தில் சென்சார் செய்யப்பட்ட க்ளைமேக்ஸ் குறித்து பேசியுள்ளார்.  “தேவர் மகன்’ படத்தில் சென்சாரினால் வெட்டப்பட்ட அந்த க்ளைமேக்ஸ் காட்சி மிகச் சிறந்ததாக இருந்தது. ஒரு டெக்னிசியனாக அந்த காட்சியை பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக […]

The post கமல்ஹாசன் வெளியிட்ட ‘தேவர் மகன்’ பட கிளைமாக்ஸ் ரகசியம்..! appeared first on Touring Talkies.

]]>
கமல்ஹாசன் தயாரித்து நடித்திருந்த ‘தேவர் மகன்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மிகக் கொடூரமாக இருந்ததாகக்கூறி சென்சார் போர்டு அனுமதி தர மறுத்துவிட்டது. இதனால் கமல்ஹாசன் வேறொரு கிளைமாக்ஸ் காட்சியை எடுக்க வேண்டி வந்தது..!

இந்நிலையில் சமீபத்தில் கமல் அளித்த பேட்டியில், ‘தேவர் மகன்’ படத்தில் சென்சார் செய்யப்பட்ட க்ளைமேக்ஸ் குறித்து பேசியுள்ளார். 

தேவர் மகன்’ படத்தில் சென்சாரினால் வெட்டப்பட்ட அந்த க்ளைமேக்ஸ் காட்சி மிகச் சிறந்ததாக இருந்தது. ஒரு டெக்னிசியனாக அந்த காட்சியை பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அந்த காட்சியில் எனக்கும், நாசருக்கும் சண்டை நடக்கும போது நாசரின் தலை வெட்டப்பட்டு துண்டாக உருண்டு ஓடும்.

அப்போது நான் அதன் பின்னால் ஓடி சென்று அழுவேன். “இப்போது உனக்கு சந்தோஷமா.. உன்ன மாதிரியே என்னையும் கிரிமினலாக்கிட்டியே..?” என்று அழுது கொண்டிருக்கும்போது நாசரின் தலை மட்டும் வாயில் எச்சி வடிய எதோ கூறுவது போல் இருக்கும். அந்த தலையில் இருந்து ரத்தம் வடிய மெதுவாக அந்த கண்கள் மூடும் காட்சி புல்லரித்துவிட்டது” என்று கமல் கூறினார்.

தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

The post கமல்ஹாசன் வெளியிட்ட ‘தேவர் மகன்’ பட கிளைமாக்ஸ் ரகசியம்..! appeared first on Touring Talkies.

]]>
“அமீர்-இமான் அண்ணாச்சி கூட்டணி இனிமேல் பேசப்படும்” – சுரேஷ் காமாட்சியின் கணிப்பு https://touringtalkies.co/the-aamir-iman-annachi-alliance-will-be-talked-about-from-now-on-suresh-kamatshis-prediction/ Wed, 14 Dec 2022 09:53:50 +0000 https://touringtalkies.co/?p=28575 மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. ‘மாநாடு’ என்கிற மிகப் பெரிய வெற்றிப் படத்தை கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் நிறுவனம் மூலம் இந்தப் படத்தை வெளியிடுகிறார். படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது, “இந்தப் படத்தின் டைட்டில் எனது […]

The post “அமீர்-இமான் அண்ணாச்சி கூட்டணி இனிமேல் பேசப்படும்” – சுரேஷ் காமாட்சியின் கணிப்பு appeared first on Touring Talkies.

]]>
மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’.

‘மாநாடு’ என்கிற மிகப் பெரிய வெற்றிப் படத்தை கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் நிறுவனம் மூலம் இந்தப் படத்தை வெளியிடுகிறார்.

படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த விழாவில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது, “இந்தப் படத்தின் டைட்டில் எனது மனதுக்கு நெருக்கமான, அதேசமயம் இப்போது இருக்கும் சூழலில் தேவையான ஒரு தலைப்பும்கூட. என் படங்களைகூட நான் வெளி நிறுவனங்களிடம் கொடுத்துதான் வெளியிட்டு வருகிறேன். ஆனால் அமீர் மீது கொண்ட மதிப்பால்  இந்தப் படத்தை நான் வெளியிடுவது என முடிவு செய்தேன். அவருடன் தொடர்ந்து பயணிக்க விரும்புகிறேன். இது ஒரு தொடக்கம்தான். அரசியலையும், அமீரையும் தவிர்க்கவே முடியாது. சத்யராஜ், கவுண்டமணி போல இந்த படத்திற்கு பிறகு அமீர், இமான் அண்ணாச்சி என ஒரு காமெடி கூட்டணி உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை..” என்று கூறினார்.

The post “அமீர்-இமான் அண்ணாச்சி கூட்டணி இனிமேல் பேசப்படும்” – சுரேஷ் காமாட்சியின் கணிப்பு appeared first on Touring Talkies.

]]>
“பான் இண்டியாவுக்கென படம் எடுப்பது பைத்தியக்காரத்தனம்” – இயக்குநர் அமீர் அதிரடி பேச்சு https://touringtalkies.co/making-a-pan-india-film-is-madness-director-aamir-action-talk/ Wed, 14 Dec 2022 09:48:10 +0000 https://touringtalkies.co/?p=28570 மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. ‘மாநாடு’ என்கிற மிகப் பெரிய வெற்றிப் படத்தை கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் நிறுவனம் மூலம் இந்தப் படத்தை வெளியிடுகிறார். படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் நாயகனான இயக்குநர் அமீர் பேசும்போது, “இந்தப் படத்தை பார்ப்பவர்கள் […]

The post “பான் இண்டியாவுக்கென படம் எடுப்பது பைத்தியக்காரத்தனம்” – இயக்குநர் அமீர் அதிரடி பேச்சு appeared first on Touring Talkies.

]]>
மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’.

‘மாநாடு’ என்கிற மிகப் பெரிய வெற்றிப் படத்தை கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் நிறுவனம் மூலம் இந்தப் படத்தை வெளியிடுகிறார்.

படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த விழாவில் படத்தின் நாயகனான இயக்குநர் அமீர் பேசும்போது,இந்தப் படத்தை பார்ப்பவர்கள் என் மீதுள்ள தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு படமாக மட்டும் பாருங்கள்.  இந்த படம் மொழியை பற்றி பேசும் படமே தவிர மொழிப் பிரச்சினையை பற்றியது அல்ல.

சமீப காலமாக இந்தி திணிப்பு, வட மாநில மக்களின் வருகை என தமிழ் மொழிக்கு எதிரான அநீதிகள் நடப்பதால் இந்த தலைப்பு தற்போது அவசியமாகிறது. நேரடி அரசியலுக்கு வரும் தகுதியை நான் இன்னும் வளர்த்து கொள்ளவில்லை. அதே சமயம் அரசியல் பேசிக்கிட்டேதான் இருக்கணும்.

நான் எப்போதும் கதையின் நாயகனாகத்தான் இருப்பேன். சினிமா என்பது இயக்குநரின் மீடியம். நாயகர்களால்தான் சினிமா என்கிற பிம்பத்தை நான் உடைக்க விரும்புகிறேன். அதேசமயம் ஒரு ரசிகனாக நடிகர்களை கொண்டாடுவோம்.

‘பான் இந்தியா’ கலாச்சாரம் இப்போது வருவதற்கு முன்பே மணிரத்னத்தின் ‘ரோஜா’, ‘பம்பாய்’ ஆகிய படங்கள் அதை சாதித்து காட்டிவிட்டன. இந்தியில் இருந்தும் ‘ஷோலே’, ‘ஹம் ஆப் கே’  போன்ற படங்கள் எல்லாம் இங்கே ஒரு வருடம் ஓடின. ‘கிழக்கு சீமையிலே’, ‘பருத்தி வீரன்’, ‘சுப்பிரமணியபுரம்’ படங்கள் எல்லாம் அந்தந்த மாநிலத்திற்கு ஏற்ற படம். அதனால் பான் இந்தியாவுக்கு என ஒரு படம் எடுப்போம் என்பதே ஒரு பைத்தியக்காரத்தனம்தான்…” என்றார்.

The post “பான் இண்டியாவுக்கென படம் எடுப்பது பைத்தியக்காரத்தனம்” – இயக்குநர் அமீர் அதிரடி பேச்சு appeared first on Touring Talkies.

]]>
“அமீருக்கு செட் பிராப்பர்ட்டி நான்தான்” – நடிகர் இமான் அண்ணாச்சியின் கிண்டல் பேச்சு https://touringtalkies.co/i-am-the-set-property-for-aamir-actor-iman-annachis-sarcastic-speech/ Wed, 14 Dec 2022 09:04:29 +0000 https://touringtalkies.co/?p=28566 இயக்குநர் அமீருடன் ஒரு செட் பிராப்பர்டியை போலவே படம் முழுவதும் வந்திருப்பதாகக் கூறினார் நடிகர் இமான் அண்ணாச்சி. மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. ‘மாநாடு’ என்கிற மிகப் பெரிய வெற்றிப் படத்தை கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் நிறுவனம் மூலம் இந்தப் படத்தை வெளியிடுகிறார். படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னை சாலிகிராமம் […]

The post “அமீருக்கு செட் பிராப்பர்ட்டி நான்தான்” – நடிகர் இமான் அண்ணாச்சியின் கிண்டல் பேச்சு appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் அமீருடன் ஒரு செட் பிராப்பர்டியை போலவே படம் முழுவதும் வந்திருப்பதாகக் கூறினார் நடிகர் இமான் அண்ணாச்சி.

மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’.

‘மாநாடு’ என்கிற மிகப் பெரிய வெற்றிப் படத்தை கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் நிறுவனம் மூலம் இந்தப் படத்தை வெளியிடுகிறார்.

படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகர் இமான் அண்ணாச்சி பேசும்போது, “ஒரு செட் பிராப்பர்ட்டி மாதிரி படப்பிடிப்பின்போது இயக்குநர் அமீருடன் கூடவே பயணிக்கும்விதமாக எனது கதாபாத்திரம் அமைந்துள்ளது. குறிப்பாக இந்த படத்தில் ஒரு சண்டைக் காட்சியை மூன்று நாட்கள் படமாக்கியபோது அமீர் ஒரு பேருந்துக்குள் வசமாக சிக்கிக் கொண்டுபட்ட அவஸ்தைகள், அந்த சமயத்தில் அவருடன் நடைபெற்ற நகைச்சுவை நிகழ்வுகள் எல்லாமே இனிமையானவை. ‘யோகி’ படத்திற்கு பிறகு இந்த ‘உயிர் தமிழுக்கு’ திரைப்படம் அமீருக்கு உலக அளவில் மிகப் பெரிய இடத்தை பெற்றுத் தரும்” என்று கூறினார்.

The post “அமீருக்கு செட் பிராப்பர்ட்டி நான்தான்” – நடிகர் இமான் அண்ணாச்சியின் கிண்டல் பேச்சு appeared first on Touring Talkies.

]]>
“நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தில் ஆனந்த்ராஜ்தான் ஹீரோ” – பரபரப்பை கிளப்பிய அமீர் பட இயக்குநர் https://touringtalkies.co/anandraj-is-the-hero-in-nai-shekhar-returns-director-aadham-bavas-speech/ Wed, 14 Dec 2022 08:54:06 +0000 https://touringtalkies.co/?p=28560 மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. ‘மாநாடு’ என்கிற மிகப் பெரிய வெற்றிப் படத்தை கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் நிறுவனம் மூலம் இந்தப் படத்தை வெளியிடுகிறார். இந்தப் படத்தில் கதையின் நாயகனாக அமீர், கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன், இவர்களுடன் ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு தேவராஜ் […]

The post “நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தில் ஆனந்த்ராஜ்தான் ஹீரோ” – பரபரப்பை கிளப்பிய அமீர் பட இயக்குநர் appeared first on Touring Talkies.

]]>
மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’.

மாநாடு’ என்கிற மிகப் பெரிய வெற்றிப் படத்தை கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் நிறுவனம் மூலம் இந்தப் படத்தை வெளியிடுகிறார்.

இந்தப் படத்தில் கதையின் நாயகனாக அமீர், கதாநாயகியாக சாந்தினி ்ரீதரன், இவர்களுடன் ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய, அசோக் சார்லஸ் படத் தொகுப்பை மேற்கொண்டுள்ளார். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இந்த படத்திற்கு இசையமைத்திருப்பதன் மூலம் வெற்றிகரமாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் வித்யாசாகர்.

பாடல்களை பா.விஜய் எழுத, அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் வசனங்களை பாலமுரளி வர்மன் மற்றும் அஜயன்பாலா இருவரும் இணைந்து எழுதியுள்ளனர்.

படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆதம்பாவா பேசும்போது, “வெளி கம்பெனி படமொன்றில் அமீர் நடிப்பது இதுவே முதல் தடவை. பெரும்பாலும் அவரை கதையின் நாயகன் என்று சொல்கிறார்கள். அவர் கதையின் நாயகன் அல்ல. கதாநாயகன்தான்.

இந்த படத்தை தயாரித்து இந்த நிலைக்கு கொண்டு வர நிறைய காலதாமதம் ஆனது உண்மைதான். அதேசமயம் இந்த படம் உருவாகும்வரை என்னை அவர் நம்பினார். அவரை நான் நம்பினேன். இந்தப் படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிடுவதன் மூலம் இன்னும் பெரிய அளவிற்கு இந்தப் படம் பேசப்படும்.

இந்தப் படத்தில் ஆக்ஷன், காமெடி என அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் இருக்கின்றன. இந்த படத்தில் நடிகர் ஆனந்தராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தில்கூட ஹீரோ ஆனந்தராஜ்தான். அந்த அளவுக்கு சிறப்பாக நடித்துள்ளார். இந்தப் படத்திலும் அவரது கதாபாத்திரம் பேசப்படும்…” என்று கூறினார்.

The post “நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தில் ஆனந்த்ராஜ்தான் ஹீரோ” – பரபரப்பை கிளப்பிய அமீர் பட இயக்குநர் appeared first on Touring Talkies.

]]>
“தேங்க்யூ டியர்” – பிரபாஸூக்கு நன்றி சொன்ன ராஜமெளலி https://touringtalkies.co/thank-you-dear-rajamouli-thanks-to-prabhas/ Wed, 14 Dec 2022 08:10:21 +0000 https://touringtalkies.co/?p=28555 இந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் பிரபாஸ். இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியுடன்  இணைந்து பிரபாஸ் கொடுத்த ‘பாகுபலி’ திரைப்படம் இந்திய திரையுலகில் புதிய சரித்திரம் படைத்தது.  பிரபாஸின்  நட்சத்திர அந்தஸ்து வானாளவு உயர்ந்தது. படத்திற்கு அவர் பெரும்பலமாக அமைந்தார். இந்த திரைப்படத்தின் மூலம் திரையில் ஒரு பிரம்மாண்டத்தை காட்டிய இந்த நடிகர் – இயக்குநர் கூட்டணி நட்புறவில்  படத்தை தாண்டியும் அவ்வப்போது ரசிகர்களை தொடர்ந்து ஆச்சர்யப்படுத்தி வருகின்றனர். அதில் லேட்டஸ்ட்டாக  நடிகர் பிரபாஸ், இயக்குனர் ராஜமௌலியை […]

The post “தேங்க்யூ டியர்” – பிரபாஸூக்கு நன்றி சொன்ன ராஜமெளலி appeared first on Touring Talkies.

]]>
இந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் பிரபாஸ். இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியுடன்  இணைந்து பிரபாஸ் கொடுத்த ‘பாகுபலி’ திரைப்படம் இந்திய திரையுலகில் புதிய சரித்திரம் படைத்தது.  பிரபாஸின்  நட்சத்திர அந்தஸ்து வானாளவு உயர்ந்தது. படத்திற்கு அவர் பெரும்பலமாக அமைந்தார்.

இந்த திரைப்படத்தின் மூலம் திரையில் ஒரு பிரம்மாண்டத்தை காட்டிய இந்த நடிகர் – இயக்குநர் கூட்டணி நட்புறவில்  படத்தை தாண்டியும் அவ்வப்போது ரசிகர்களை தொடர்ந்து ஆச்சர்யப்படுத்தி வருகின்றனர். அதில் லேட்டஸ்ட்டாக  நடிகர் பிரபாஸ், இயக்குனர் ராஜமௌலியை வாழ்த்திய இந்த சம்பவமும் இணைந்துள்ளது.

சமீபத்தில் பாகுபலி இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி, நியூயார்க் பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதையும், LA பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் விருதுகளையும் வென்றார். இதற்காக மெகா ஸ்டார் பிரபாஸ் அவரை வாழ்த்தி இணையத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

“@ssrajamouli  அவர்கள் இந்த உலகையே வெல்லப் போகிறார். சிறந்த இயக்குநருக்கான நியூயார்க் பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதை வென்றதற்கும், சிறந்த இயக்குநருக்கான LA பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் விருதுகளை (ரன்னர் அப்) பெற்றதற்கும் அவருக்கு வாழ்த்துகள்.

சிறந்த இசையமைப்பாளருக்கான LA ஃபிலிம்ஸ் விமர்சகர்கள் விருதுகளைப் பெற்றதற்காக புகழ் பெற்ற இசையமைப்பாளர் கீரவாணி அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.” என பதிவிட்டுள்ளார்.

இந்த மனமார்ந்த  வாழ்த்துகளை பார்த்த எஸ்.எஸ்.ராஜமௌலி அதற்கு “தேங்க்யூ டார்லிங். என்னுடைய சர்வதேச அங்கீகாரத்தை நானே நம்பாத போது நீங்கள் நம்பினீர்கள்…” என்று பதிலளித்துள்ளார்.

ஆர்மேக்ஸ் ஊடக அறிக்கையின்படி, ரசிகர்களால்  மிகவும் விரும்பப்பட்ட டாப் 10 ஹிந்தி திரையரங்க படங்களில் இடம் பெற்ற இரண்டு பழமையான திரைப்படங்களின் வரிசையில் பிரபாஸின் ‘பாகுபலியும்’ ஒன்றாகும். மேலும்,  நடிகர் பிரபாஸ் – இயக்குநர் ராஜமௌலி நட்புறவு எப்போதுமே ரசிகர்களால்  கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இந்த கூட்டணியும் அந்த உறவை மதித்து ஒருவரை ஒருவர் பாராட்டி வருகின்றனர்.

The post “தேங்க்யூ டியர்” – பிரபாஸூக்கு நன்றி சொன்ன ராஜமெளலி appeared first on Touring Talkies.

]]>
“ரமணா-நந்தா மாதிரி தயாரிப்பாளர் கிடைத்தால் 8-வது மாடியில் இருந்தே குதிக்கலாம்” – விஷால் பேச்சு https://touringtalkies.co/if-you-get-a-producer-like-ramana-nanda-you-can-jump-from-the-8th-floor-vishal-speech/ Mon, 12 Dec 2022 19:25:38 +0000 https://touringtalkies.co/?p=28546 விஷால், சுனைனா நடிப்பில், ராணா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் நடிகர்கள் ரமணா, நந்தா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘லத்தி’. வரும் 22-ம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இப்படத்தை ஆர்.வினோத் குமார் இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். நான்கு மொழிகளில் தயாராகியிருக்கும் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை பிளாஸோ தியேட்டரில் நடைபெற்றது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்த ‘லத்தி’ படத்தின் டிரெயிலரை வெளியிட்டார். இந்த விழாவில் நடிகர் விஷால் பேச வரும்போது, ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து […]

The post “ரமணா-நந்தா மாதிரி தயாரிப்பாளர் கிடைத்தால் 8-வது மாடியில் இருந்தே குதிக்கலாம்” – விஷால் பேச்சு appeared first on Touring Talkies.

]]>
விஷால், சுனைனா நடிப்பில், ராணா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் நடிகர்கள் ரமணா, நந்தா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் லத்தி’.

வரும் 22-ம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இப்படத்தை ஆர்.வினோத் குமார் இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

நான்கு மொழிகளில் தயாராகியிருக்கும் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை பிளாஸோ தியேட்டரில் நடைபெற்றது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்த ‘லத்தி’ படத்தின் டிரெயிலரை வெளியிட்டார்.

இந்த விழாவில் நடிகர் விஷால் பேச வரும்போது, ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து “புரட்சி தளபதி வாழ்க” என்றார்கள். அப்போது குறுக்கிட்ட நடிகர் விஷால், “இது வேண்டாம்.. நான் தளபதியும் அல்ல; புரட்சி தளபதியும் அல்ல. என் பெயர் விஷால் அவ்வளவுதான்..” என்று சொல்லிவிட்டு தன் பேச்சை ஆரம்பித்தார்.

“இந்த லத்தி’ திரைப்படம் நான்கு மொழிகளில் வரும் டிசம்பர் 22-ம் தேதி வெளியாகிறது. முதலில் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது வழக்கமாக நடக்கும் விஷயம்தான்.

சால்வையும், மலர்க்கொத்தும் சிறிது நேரம் மட்டும் முக்கியத்துவம் அளிக்கும் வீண் விரய செலவு. அந்த பணத்தில் இரண்டு குழுந்தைகளின் படிப்பு செலவிற்கு கொடுப்பது வழக்கம். இன்றும் அதைத்தான் செய்திருக்கிறேன்.

லோகேஷ் கனகராஜ் விஜயை இயக்குவதைக் கண்டு பொறாமையாக இருக்கிறது. நானும் விரைவில் விஜயிடம் கதை சொல்லி இயக்குவேன்.

இந்தப் படத்தின் இயக்குநரான வினோத் என்னிடம் கதை சொல்லி எட்டு நாட்களில் சம்மதம் வாங்கிவிட்டார். முதலில், என்னிடம் கதையைச் சொல்லும்போது “நீங்கள் 8 வயது பையனுக்கு அப்பா..” என்றார். கதையைக் கேட்டு முடித்ததும் நான் என்ன உணர்ந்தேனோ அதை பார்ப்பவர்களும் உணர்வார்கள் என்று நம்புகிறேன்.

இப்படத்தில் இரண்டு பேர் பேசப்படுவார்கள். ஒருவர் யுவன் சங்கர் ராஜா. இரண்டாவது பீட்டர் ஹெய்ன் மாஸ்டர். பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் கேட்ட விஷயங்களை செய்து தர முடியுமா? என்று சந்தேகப்பட்ட விஷயங்களை சுலபமாக செய்து கொடுத்த கலை இயக்குர் கணேஷுக்கு முக்கியமாக நன்றி கூற வேண்டும்.

படப்பிடிப்பில் நான் வேண்டுமென்றே அடிவாங்கவில்லை. சரியாக கட்டி முடிக்காத கட்டிடத்தில் நடக்கக் கூடிய சண்டைக் காட்சிகள். 80 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அடிப்படுவதை தவிர்க்க முடியவில்லை. பீட்டர் ஹெயினின் பணியைக் கண்டு வியந்தேன்.

45 வயதில், 32 படங்களில் சண்டைக் காட்சிகளில் நடிப்பது சாதாரண விஷயம். ஆனால், ராகவ் 100 அடி உயரத்தில் கம்பியில் பிடித்து தொங்க வேண்டும். 4-வது மாடியில் இருந்து நெட்டில் இருவரும் குதித்தோம். முன்பே ராகவ்விடம் நிறைய சண்டைக் காட்சிகள் இருக்கு என்று அவனுடைய அம்மா, அப்பாவிடம் சொல்லக் கூடாது என்று சொல்லியிருந்தேன். ஆனால், நிஜமாகவே சொல்கிறேன்.. எந்தக் குழந்தையாலும் அவனை மாதிரி நடித்திருக்கவே முடியாது. அவனுக்கும், அவனுடைய பெற்றோருக்கும் நன்றி.

ஒரு தயாரிப்பாளர் இறங்கி வேலை செய்தால் அதைவிட சௌகரியான விஷயம் நடிகருக்கு அமையாது. அப்படி ஒரு தயாரிப்பாளர்களாக ரமணாவும், நந்தாவும் எனக்குக் கிடைத்தார்கள். ஒரு படத்திற்கு இந்தளவிற்குத்தான் பட்ஜெட் என்று ஒதுக்கப்படும். ஆனால், இந்த விஷயங்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று செலவை அதிகப்படுத்த வேண்டும் என்று தயாரிப்பாளர்களே கூறியது மகிழ்ச்சியாக இருந்தது. இப்படியொரு தயாரிப்பாளர்கள் இருந்தால், 4-வது மாடின்னு இல்லை.. 8-வது மாடியில் இருந்தும்கூட குதிக்கலாம்.

நான் சாதாரணமாகவே திருட்டு வீடியோ இருந்தால் இறங்கி கேள்வி கேட்பேன். இப்போது லத்தி வேறு கையில் இருக்கிறது. ஆகையால், அனைவரும் திரையரங்கிற்கு வந்து படத்தை பாருங்கள்…” என்றார்.

The post “ரமணா-நந்தா மாதிரி தயாரிப்பாளர் கிடைத்தால் 8-வது மாடியில் இருந்தே குதிக்கலாம்” – விஷால் பேச்சு appeared first on Touring Talkies.

]]>
அஜய் கிருஷ்ணா-ஸ்மிருதி வெங்கட் நடித்திருக்கும் ‘ரகட் பாய் காதல்’ இசை ஆல்பம் https://touringtalkies.co/rugget-boy-kaathal-music-album-news/ Mon, 12 Dec 2022 19:01:37 +0000 https://touringtalkies.co/?p=28483 ‘ரகட் பாய் காதல்’ என்கிற பெயரில் ஒரு கிராமத்து மியூசிக் ஆல்பம் உருவாகியுள்ளது. இந்த ஆல்பத்தை ஸ்டார் மியூசிக் நிறுவனம் உலகமெங்கும் வெளியிட்டுள்ளது. ஒரு திரைப்படக் கதைக்கான முன்னோட்டமாக இந்த இசை ஆல்பம் உருவாகி இருக்கிறது. மூவி மெக்கானிக் நிறுவனம் இந்த ஆல்பத்தைத் தயாரித்துள்ளது. இதில் கதாநாயகனாக நடித்துத் தயாரித்துள்ளவர் அஜய் கிருஷ்ணா. இவர் ‘நாடோடிகள்’, ‘நிமிர்ந்து நில்’, ‘போராளி’, ‘தரணி’, ‘அனுக்கிரகன்’, ‘கடப்புறா கலைக் குழு’ போன்ற படங்களில் நடித்துள்ளார். ‘கட்டம் போட்ட சட்டை’ என்கிற படத்தையும் […]

The post அஜய் கிருஷ்ணா-ஸ்மிருதி வெங்கட் நடித்திருக்கும் ‘ரகட் பாய் காதல்’ இசை ஆல்பம் appeared first on Touring Talkies.

]]>
‘ரகட் பாய் காதல்’ என்கிற பெயரில் ஒரு கிராமத்து மியூசிக் ஆல்பம் உருவாகியுள்ளது. இந்த ஆல்பத்தை ஸ்டார் மியூசிக் நிறுவனம் உலகமெங்கும் வெளியிட்டுள்ளது.

ஒரு திரைப்படக் கதைக்கான முன்னோட்டமாக இந்த இசை ஆல்பம் உருவாகி இருக்கிறது. மூவி மெக்கானிக் நிறுவனம் இந்த ஆல்பத்தைத் தயாரித்துள்ளது.

இதில் கதாநாயகனாக நடித்துத் தயாரித்துள்ளவர் அஜய் கிருஷ்ணா. இவர் நாடோடிகள்’, ‘நிமிர்ந்து நில்’, ‘போராளி’, ‘தரணி’, ‘அனுக்கிரகன்’, ‘கடப்புறா கலைக் குழு’ போன்ற படங்களில் நடித்துள்ளார். ‘கட்டம் போட்ட சட்டை’ என்கிற படத்தையும் தயாரித்து வருகிறார்.

இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளவர் ஸ்மிருதி வெங்கட். இவர் ‘மூக்குத்தி அம்மன்’, ‘வானம்’, ‘தீர்ப்புகள் விற்கப்படும்’, ‘மாறன்’, ‘மன்மத லீலை’, ‘தேஜாவு’ போன்ற படங்களில் நடித்திருப்பவர்.

இசை அமைத்திருப்பவர் டி.எம்.உதயகுமார். இவர் ‘பிரண்ட்ஷிப்’, ‘மை டியர் லிசா’ ஆகிய படங்களில் பணிபுரிந்தவர். அது மட்டுமல்ல குழலி’, ‘கார்முகில்’ போன்ற மியூசிக் ஆல்பங்களுக்கு இசையமைத்தவர்.

இந்த ஆல்பத்தில் பின்னணிப் பாடல் பாடி இருக்கும் பாடகி பிரியங்கா, ‘அவன் இவன்’, ‘உறியடி-2’, ‘பலூன்’, ‘நாச்சியார்’ போன்ற படங்களில் பாடியுள்ளார்.

இதில் பின்னணிப் பாடி இருக்கும் பாடகரான ஜித்தின் ராஜ் ‘பொன்னியின் செல்வன்’ மலையாள வடிவத்தில் பாடி இருப்பவர்.

ஆல்பத்தின் பாடலை எழுதியவர் ராஜா குருசாமி. இவர் ஏராளமான கிராமியப் பாடல்களை எழுதியுள்ளவர். ‘விழா’, ‘பிரண்ட்ஷிப்’, ‘ராஜ வம்சம்’, ‘பபூன்’ போன்ற படங்களிலும் பாடல்கள் எழுதியுள்ளவர்.

இந்த ஆல்பத்திற்கு ஒளிப் பதிவு செய்துள்ளவர் அருண்குமார்.ஆர். இவர் ‘அச்சமில்லை அச்சமில்லை’ என்கிற படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர். ஒளிப்பதிவாளர் ராம்ஜியிடம் ‘பருத்தி வீரன்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘மயக்கம் என்ன’ போன்ற படங்களில் பணியாற்றியவர்.

இந்த ஆல்பம் பாடலுக்கு நடனம் அமைத்துள்ளவர் மணி டான்ஸ் ஸ்டுடியோ உரிமையாளரான எம்.மணிகண்டன். இவர் இதில் ஒரு நடன இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். கலை இயக்கம் – கென்னடி, படத் தொகுப்பு – கணேஷ் குமார், டைட்டில் டிசைன்ஸ் – பிரபு மாணிக்கம், நிர்வாகத் தயாரிப்பு – சித்தார்த்தன் பாரதி, பத்திரிகை தொடர்பு – சக்தி சரவணன்.

இந்த இசை ஆல்பத்தை இயக்கியுள்ளவர் ஸ்ரீவித்தகன். இவர் இயக்குநர் சமுத்திரக்கனியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். ‘நாடோடிகள்’, ‘நிமிர்ந்து நில்’, ‘போராளி’, ‘வினோதய சித்தம்’ போன்ற படங்களில் பணிபுரிந்தவர்.

பொதுவாக ஆல்பம் என்றாலே நகரப் பின்னணியில் உருவாவதுண்டு. இது ஒரு கிராமத்துக் காதல் கதை. கிராமியப் பின்னணியில் அழகுற காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஒரு பதின் பருவக் காதலால் புலி ஒன்று எப்படி பூனையாக மாறுகிறது என்பதுதான் இந்த ஆல்பத்தின் கதைக் கரு.

பொறுப்பின்றி கோயில் காளையாக முரட்டுத்தனமாக அடங்காதவனாக வேலையின்றி பொறுப்பின்றித் திரியும் ஒரு கிராமத்து வாலிபன் காதலில் விழுகிறான். கட்டுக்கடங்காத காளையாக இருந்தவனைக் காதல் எப்படிக் கட்டுத்தறிக் காளையாக மாற்றுகிறது என்பதுதான் இந்தப் பாடலின் மையக் கருத்து.

திருவள்ளூர், திருநின்றவூர், பூண்டி அணைக்கட்டு போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

இந்த இசை ஆல்பத்தை நடிகரும், இயக்குநருமான சசிகுமார் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். அதேபோல் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் வெளியிட்டுள்ளார்.

அதன் பிறகு இந்த ஆல்பத்தின் மீதான கவனிப்பும், பரவலின் வீச்சும் அதிகமாகி உள்ளது. ஆயிரக்கணக்கான இசை ரசிகர்கள் இதைப் பார்த்து ரசிக்க ஆரம்பித்துள்ளனர்.

தற்போது இந்த மியூஸிக் ஆல்பம் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கிலும் இடம் பிடித்துள்ளது.  ஸ்டார் மியூசிக்கில் வெளியாகி பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

The post அஜய் கிருஷ்ணா-ஸ்மிருதி வெங்கட் நடித்திருக்கும் ‘ரகட் பாய் காதல்’ இசை ஆல்பம் appeared first on Touring Talkies.

]]>