Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Sivaji – Touring Talkies https://touringtalkies.co Sat, 19 Aug 2023 14:12:40 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Sivaji – Touring Talkies https://touringtalkies.co 32 32 நடிகர் திலகம் சிவாஜியே வியந்த நடிகர் யார் தெரியுமா? https://touringtalkies.co/do-you-know-who-is-the-actor-who-surprised-nadikar-thilakam-sivaji/ Sat, 19 Aug 2023 04:10:06 +0000 https://touringtalkies.co/?p=35437 எந்தவொரு நடிகராக இருந்தாலும், அவருக்கு முன்பே நடித்துக்கொண்டிருந்த ஏதாவது ஒரு நடிகரின் பாதிப்பு இருக்கும். வெளிப்படையாக இல்லாவிட்டாலும் இன்ஸ்பிரேசன் இருக்கவே செய்யும். நடிப்புக்கு இலக்கணம் என்றால் அது நடிகர் திலகம் சிவாஜிதான்.  அவருக்கு யாருடைய இன்ஸ்பிரேசன் இருந்தது என்பதை அறிய நடிகர் சத்யராஜூக்கு ஆசை ஏற்பட்டது. இருவரும் இணைந்து நடித்த ஒரு படத்தின் படப்பிடிப்பு இடைவேளை.. மெல்ல சத்யராஜ், இந்த விசயத்தை கேட்டார். அவரைப் பார்த்த சிவாஜி, “ ஏண்டா.. நான் யாரைப்பார்த்து காப்பி அடிக்கிறேன்னு தெரியணுமா..”   […]

The post நடிகர் திலகம் சிவாஜியே வியந்த நடிகர் யார் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
எந்தவொரு நடிகராக இருந்தாலும், அவருக்கு முன்பே நடித்துக்கொண்டிருந்த ஏதாவது ஒரு நடிகரின் பாதிப்பு இருக்கும். வெளிப்படையாக இல்லாவிட்டாலும் இன்ஸ்பிரேசன் இருக்கவே செய்யும்.

நடிப்புக்கு இலக்கணம் என்றால் அது நடிகர் திலகம் சிவாஜிதான்.  அவருக்கு யாருடைய இன்ஸ்பிரேசன் இருந்தது என்பதை அறிய நடிகர் சத்யராஜூக்கு ஆசை ஏற்பட்டது.

இருவரும் இணைந்து நடித்த ஒரு படத்தின் படப்பிடிப்பு இடைவேளை..

மெல்ல சத்யராஜ், இந்த விசயத்தை கேட்டார்.

அவரைப் பார்த்த சிவாஜி, “ ஏண்டா.. நான் யாரைப்பார்த்து காப்பி அடிக்கிறேன்னு தெரியணுமா..”   என்று கேட்க.. சத்யராஜ் பதறிப்போய், “அய்யோ.. அப்படி இல்ல.. சும்மா தெரிஞ்சிக்கணும்னு..” என்று இழுத்திருக்கிறார்.

பிறகு சிவாஜி, “நான் எந்த ஹாலிவுட் நடிகனையும் காப்பி அடிக்கலை. எனக்கு மிகவும் பிடித்த நடிகர்னா அது  எம்.ஆர்.ராதாதான். உங்களுக்கெல்லாம் சினிமாவில இரட்டைக் குரல்ல பேசுற எம்.ஆர்.ராதாவைத்தான் தெரியும். நாடகத்தில அவர் ரேஞ்சே வேற. அப்படி ஒரு நடிப்பு. அவரை அணுஅணுவா ரசிச்சிருக்கேன்” என்றார் சிவாஜி.

இது போன்ற சுவாரஸ்யமான சினிமா சம்பவங்களை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

https://www.youtube.com/watch?v=_TG0Ev5KxKU

 

 

The post நடிகர் திலகம் சிவாஜியே வியந்த நடிகர் யார் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
சிவாஜிக்கு அவர் நடித்த கதாபாத்திரத்தில் மிகவும் பிடித்தது! https://touringtalkies.co/the-most-favourite-character-in-sivaji-movie-that-like-sivaji-too/ Sat, 22 Jul 2023 23:45:09 +0000 https://touringtalkies.co/?p=34618 எண்ணற்ற வேடங்களில் நடித்து மக்களை கவர்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவர் நடித்ததில் அவருக்கு மிகப் பிடித்த கேரக்டர் எது? ஒரு பேட்டியில் அவர், “முதல் கதாபாத்திரம் கப்பலோட்டிய தமிழன் நடித்த வ.உ.சி.பிள்ளை கதாபாத்திரம், இந்தப் படத்தை பார்த்த வ.உ.சியின் மகன் வந்து என் அப்பாவையே என் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள் என்று சொன்னது தான் மிகப்பெரிய விருதை கொடுத்ததை போல உணர்வை ஏற்படுத்தியது. அதற்கு அடுத்தப் படியாக சம்பூரண ராமாயணம் […]

The post சிவாஜிக்கு அவர் நடித்த கதாபாத்திரத்தில் மிகவும் பிடித்தது! appeared first on Touring Talkies.

]]>
எண்ணற்ற வேடங்களில் நடித்து மக்களை கவர்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவர் நடித்ததில் அவருக்கு மிகப் பிடித்த கேரக்டர் எது?

ஒரு பேட்டியில் அவர், “முதல் கதாபாத்திரம் கப்பலோட்டிய தமிழன் நடித்த வ.உ.சி.பிள்ளை கதாபாத்திரம், இந்தப் படத்தை பார்த்த வ.உ.சியின் மகன் வந்து என் அப்பாவையே என் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள் என்று சொன்னது தான் மிகப்பெரிய விருதை கொடுத்ததை போல உணர்வை ஏற்படுத்தியது.

அதற்கு அடுத்தப் படியாக சம்பூரண ராமாயணம் படத்தில் நடித்த பரதன் கதாபாத்திரம். அந்தப் படத்தை பார்த்து ராஜாஜியே நேரிடையாக பாராட்டினார். இதற்கு அடுத்து  அப்பர் கதாபாத்திரம் மற்றும் பாசமலர் படத்தில் ஏற்று நடித்த அண்ணன் கதாபாத்திரம்” என்று சொல்லி இருக்கிறார் சிவாஜி.

இதை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன், டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் தெரிவித்தார்.

The post சிவாஜிக்கு அவர் நடித்த கதாபாத்திரத்தில் மிகவும் பிடித்தது! appeared first on Touring Talkies.

]]>
எம்.ஜி.ஆர். பற்றி இப்படிச் சொன்னாரா சிவாஜி ? https://touringtalkies.co/sivaji-comment-about-actor-mgr-acting/ Sun, 16 Jul 2023 00:05:01 +0000 https://touringtalkies.co/?p=34407 பொதுவாக எல்லோரும் ‘எம்.ஜி.ஆரை விட சிவாஜியே சிறந்த நடிகர்’ என்பர். பல மேடைகளில் சிவாஜியே சிறந்த நடிகர் என எம்.ஜி.ஆரே பேசியிருக்கிறார். சிவாஜியை எங்கே பார்த்தாலும் கட்டியணைத்து தனது அன்பை வெளிப்படுத்துவார். அதேநேரம் எம்.ஜி.ஆரின் நடிப்பை பற்றி சிவாஜியின் மனதில் என்ன இருந்தது என்பதை தெரிந்து கொள்வோம். சென்னை கமலா தியேட்டரின் அதிபர் சிதம்பரம் சிவாஜியுடன் நெருங்கி பழகியவர். ஒருமுறை அவர் சிவாஜியிடம் ‘எம்.ஜி.ஆரின் நடிப்பு பற்றி உங்களின் கருத்து என்ன?’ என கேட்டாரம். மனதுக்குள் எப்படியும் […]

The post எம்.ஜி.ஆர். பற்றி இப்படிச் சொன்னாரா சிவாஜி ? appeared first on Touring Talkies.

]]>
பொதுவாக எல்லோரும் ‘எம்.ஜி.ஆரை விட சிவாஜியே சிறந்த நடிகர்’ என்பர். பல மேடைகளில் சிவாஜியே சிறந்த நடிகர் என எம்.ஜி.ஆரே பேசியிருக்கிறார். சிவாஜியை எங்கே பார்த்தாலும் கட்டியணைத்து தனது அன்பை வெளிப்படுத்துவார். அதேநேரம் எம்.ஜி.ஆரின் நடிப்பை பற்றி சிவாஜியின் மனதில் என்ன இருந்தது என்பதை தெரிந்து கொள்வோம்.

சென்னை கமலா தியேட்டரின் அதிபர் சிதம்பரம் சிவாஜியுடன் நெருங்கி பழகியவர். ஒருமுறை அவர் சிவாஜியிடம் ‘எம்.ஜி.ஆரின் நடிப்பு பற்றி உங்களின் கருத்து என்ன?’ என கேட்டாரம். மனதுக்குள் எப்படியும் எம்.ஜி.ஆரின் நடிப்பை சிவாஜி மட்டமாகத்தான் பேசுவார் என சிதம்பரம் நினைத்தாராம். ஆனால், சிவாஜி சொன்னது வேறு எம்.ஜி.ஆர் தனக்கென ஒரு பாணியை வைத்திருக்கிறார். நான் எனக்கென ஒரு பாணியை வைத்திருக்கிறேன். அவரின் படங்களில் அவர் ஊருக்காக உழைப்பார். என்னுடைய படங்கள் குடும்ப படங்கள். அவருடையை பாணி படங்களில் எம்.ஜி.ஆர் மிகச்சிறந்த நடிகர். அந்த பாணி கதைகளில் அவர் பெரிய நடிகர்’ என எம்.ஜி.ஆரை பாராட்டினாராம்.

போட்டி நடிகர்களாக இருந்தாலும் எம்.ஜி.ஆர் – சிவாஜி இருவரும் ஒருவரை ஒருவர் மதித்தும், புரிந்தும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post எம்.ஜி.ஆர். பற்றி இப்படிச் சொன்னாரா சிவாஜி ? appeared first on Touring Talkies.

]]>
நடிக்க பயந்து காய்ச்சலில் படுத்த சிவாஜி! https://touringtalkies.co/sivaji-was-so-excited-and-got-fever-about-that-character/ Tue, 11 Jul 2023 06:56:43 +0000 https://touringtalkies.co/?p=34247 மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் பற்றிய சுவாரஸ்யமாக நினைவு ஒன்று. பிரபல பழம்பெரும் இயக்குனரான ஏ சி திரிலோகசந்தரின் ஒரு படத்தில் சிவாஜி நடித்துக் கொண்டிருக்கும் போது ஏவிஎம் சரவணன் அந்த படப்பிடிப்பிற்குள் வந்தாராம். அப்போது சிவாஜி உடல்நிலை சரியில்லாததை போல ஏவிஎம் சரவணன் உணர்ந்திருக்கிறார். நேராக சிவாஜி இடமே சென்று ஏதேனும் உடம்பு சரியில்லையா என கேட்டாராம். அதற்கு சிவாஜி என் உடல் அனலாக கொதிக்கிறது. காய்ச்சலில் அவதிப்பட்டு கொண்டிருக்கிறேன் என கூற அதற்கு சரவணன் […]

The post நடிக்க பயந்து காய்ச்சலில் படுத்த சிவாஜி! appeared first on Touring Talkies.

]]>
மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் பற்றிய சுவாரஸ்யமாக நினைவு ஒன்று.

பிரபல பழம்பெரும் இயக்குனரான ஏ சி திரிலோகசந்தரின் ஒரு படத்தில் சிவாஜி நடித்துக் கொண்டிருக்கும் போது ஏவிஎம் சரவணன் அந்த படப்பிடிப்பிற்குள் வந்தாராம். அப்போது சிவாஜி உடல்நிலை சரியில்லாததை போல ஏவிஎம் சரவணன் உணர்ந்திருக்கிறார். நேராக சிவாஜி இடமே சென்று ஏதேனும் உடம்பு சரியில்லையா என கேட்டாராம்.

அதற்கு சிவாஜி என் உடல் அனலாக கொதிக்கிறது. காய்ச்சலில் அவதிப்பட்டு கொண்டிருக்கிறேன் என கூற அதற்கு சரவணன் ஓய்வு எடுக்க வேண்டியதுதானே எனக் கூறி இருக்கிறார். அதற்கு சிவாஜி என் காய்ச்சலுக்கு காரணமே நாளை ஒரு நாடகத்தில் நான் ஏற்று நடிக்க இருக்கும் கதாபாத்திரத்தை எண்ணி தான் எனக் கூறினாராம். அது ஒரு ஐயர் வேடம் என்றும் அதை நினைத்து தான் எனக்கு காய்ச்சலை வந்து விட்டது என்றும் கூறினாராம்.

அதற்கு சரவணன் ஐயர் வேடம் தானே? பாஷையை மாற்றி பேசினால் போதும். அதை நினைத்து ஏன் இந்த அளவுக்கு அவதிப்படுகிறீர்கள் என கேட்டாராம். அதற்கு சிவாஜி “பாஷையை மட்டும் மாற்றிப் பேசினால் போதுமா? உடல் அசைவுகளையும் அதற்கேற்றார் போல மாற்ற வேண்டும் அல்லவா? அது மட்டுமில்லாமல் அது சாதாரண அய்யர் வேடம் இல்லை. பிரஸ்டீஜ் பத்மநாபன் என்ற ஒரு மிகப்பெரிய கதாபாத்திரம் அது. அதனால் தான் அதை நினைத்து எனக்கு காய்ச்சலே வந்து விட்டது” எனக் கூறியிருக்கிறார்.அந்த நாடகம் வியட்நாம் வீடு என்ற நாடகமாம்.

இந்த தகவலை பத்திரிகையாளரும், தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் கூறி உள்ளார்.

The post நடிக்க பயந்து காய்ச்சலில் படுத்த சிவாஜி! appeared first on Touring Talkies.

]]>
அட..  சிவாஜி நடித்த இத்தனை படங்கள் வெளியாக வில்லையா? https://touringtalkies.co/actor-sivaji-unreleased-movies-list/ Wed, 05 Jul 2023 03:07:43 +0000 https://touringtalkies.co/?p=34070 ஒருபக்கம் நடிப்புக்கு இலக்கணமாக திகழ்ந்த சிவாஜி கணேசன், இன்னொரு பக்கம் வசூல் நாயகனாகவும் திகழ்ந்தார். எண்ணற்ற ஹிட் படங்களை கொடுத்தார். அதே நேரம், 1952 முதல் 1999 வரை ,அதாவது கருப்பு வெள்ளை முதல் கலர் சினிமா வரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். ஆனால், அவரை வைத்து துவங்கப்பட்ட சில திரைப்படங்கள் அறிவிப்போடு நின்று விடும், சில படங்கள் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்து அதன்பின் நின்று விடும். இதோ அந்த பட்டியல்.. பாக்ய சக்கரம், […]

The post அட..  சிவாஜி நடித்த இத்தனை படங்கள் வெளியாக வில்லையா? appeared first on Touring Talkies.

]]>
ஒருபக்கம் நடிப்புக்கு இலக்கணமாக திகழ்ந்த சிவாஜி கணேசன், இன்னொரு பக்கம் வசூல் நாயகனாகவும் திகழ்ந்தார். எண்ணற்ற ஹிட் படங்களை கொடுத்தார்.

அதே நேரம், 1952 முதல் 1999 வரை ,அதாவது கருப்பு வெள்ளை முதல் கலர் சினிமா வரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.

ஆனால், அவரை வைத்து துவங்கப்பட்ட சில திரைப்படங்கள் அறிவிப்போடு நின்று விடும், சில படங்கள் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்து அதன்பின் நின்று விடும்.

இதோ அந்த பட்டியல்..

பாக்ய சக்கரம்,
பூம்புகார்,
புலித்தேவன்,
ஜன பூமி,
வானவில்,

பட்டதாரி,
சுவிகாரம்,
நடமாடும் தெய்வம்,
ஞாயிறும் திங்களும்,
பெண்பாவம் பொல்லாது,
அன்புள்ள அத்தான்,
ஒருபிடி மண்,
ஒருநாள் ராஜா,
ஜெயித்துக் காட்டுகிறேன்,
அன்னை பூமி,
பூப்போல் மனசு,
ஆதி பகவன்,
மக்கள் அன்பன்,
அன்பு மகன்
– ஆகிய படங்கள் நின்று போன படங்களாகும்.

The post அட..  சிவாஜி நடித்த இத்தனை படங்கள் வெளியாக வில்லையா? appeared first on Touring Talkies.

]]>
வாய்ப்பை மறுத்த இயக்குநர்.. மீண்டும் அரவணைத்த சிவாஜி! https://touringtalkies.co/the-director-who-refused-the-opportunity-sivaji-embraced-again/ Wed, 10 May 2023 02:11:23 +0000 https://touringtalkies.co/?p=32337 திரிசூலம். 1978 இல் கன்னடத்தில் ராஜ்குமாரின் சங்கர் குரு படம் வெளியாகி பெரிய அளவில் ஹிட் ஆனது.  வி.சோமசேகர் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். இதனை தமிழில் ரீமேக் செய்ய சிவாஜி ஆசைப்பட்டார். அதன்படி படத்தின் உரிமை வாங்கப்பட்டது. சிவாஜியை வைத்து தொடர்ச்சியாக படம் இயக்கி வந்த பி.மாதவன் படத்தை இயக்குவது எனவும் முடிவானது. அந்த நேரம் சொந்தப்பட வேலைகள் காரணமாக, படத்தை இயக்க முடியாது என முன்பணத்தைத் திருப்பித் தந்தார் மாதவன். அடுத்து  கே.வியனுக்கு அந்த வாய்ப்பு […]

The post வாய்ப்பை மறுத்த இயக்குநர்.. மீண்டும் அரவணைத்த சிவாஜி! appeared first on Touring Talkies.

]]>
திரிசூலம். 1978 இல் கன்னடத்தில் ராஜ்குமாரின் சங்கர் குரு படம் வெளியாகி பெரிய அளவில் ஹிட் ஆனது.  வி.சோமசேகர் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். இதனை தமிழில் ரீமேக் செய்ய சிவாஜி ஆசைப்பட்டார். அதன்படி படத்தின் உரிமை வாங்கப்பட்டது. சிவாஜியை வைத்து தொடர்ச்சியாக படம் இயக்கி வந்த பி.மாதவன் படத்தை இயக்குவது எனவும் முடிவானது. அந்த நேரம் சொந்தப்பட வேலைகள் காரணமாக, படத்தை இயக்க முடியாது என முன்பணத்தைத் திருப்பித் தந்தார் மாதவன்.

அடுத்து  கே.வியனுக்கு அந்த வாய்ப்பு சென்றது. அவரது இயக்கத்தில் சிவாஜியுடன் கே.ஆர்.விஜயா, ரீனா, நம்பியார், மேஜர் சுந்தர்ராஜன், ஜெய் கணேஷ், புஷ்பலதா, எஸ்.மஞ்சுளா உள்ளிட்டோர் நடித்தனர்.

உலகம் சுற்றும் வாலிபனுக்கு இசையமைத்த அதே எம்.எஸ்.வி.தான் இசை. அட்டாசமான நான்குப் பாடல்கள்.

1979 ஜனவரி 27 படம் வெளியாகி தமிழகமெங்கும் மகத்தான வரவேற்பைப் பெற்றது. தமிழ்நாடு, பாண்டிச்சேரியில் 11 திரையரங்குகளில் வெள்ளி விழா ஓடியது. அதற்கு முன் எத்தனையோ படங்கள் வெள்ளிவிழா கண்டிருந்தாலும் 9 ஊர்களில் 11 திரையரங்குகளில் அதுவரை எந்தப் படமும் வெள்ளிவிழா ஓடியதில்லை.

திரிசூலம் வாய்ப்பை மறுத்த இயக்குநர் மாதவன் அதன் பிறகு உருவாக்கிய படங்கள் எதுவும் வெற்றிபெறவில்லை.

தனது படத்தை இயக்க மறுத்தவர் என அவரை புறந்தள்ளாமல், அவர் இயக்கிய ஹிட்லர் உமாநாத் படத்தில் சிவாஜி நடித்தார்.  அதுதான் அவர் நட்புக்கு காட்டிய மரியாதை.

The post வாய்ப்பை மறுத்த இயக்குநர்.. மீண்டும் அரவணைத்த சிவாஜி! appeared first on Touring Talkies.

]]>
நாகேஷ் காட்சியை காப்பாற்றி சிவாஜி! https://touringtalkies.co/a-hero-over-took-sivajis-acting-in-a-single-take-nagesh/ Wed, 19 Apr 2023 03:26:19 +0000 https://touringtalkies.co/?p=31689 நடிகர் திலகம் சிவாஜியின் நடிப்பைப் பற்றி சொல்லத்தேவையில். ஆனால் இருவரும் நடித்த ஒரு காட்சியில் அவரையே ஓவர் டேக் செய்து விட்டார் ஒரு நடிகர். அவர், நகேஷ். ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில் சிவாஜி கணேசன் மற்றும் சாவித்திரி நடித்த திருவிளையாடல், 1965 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் சிவாஜி கணேசன் சிவபெருமானாகவும், சாவித்திரி பார்வதி ஆகவும் நடித்திருப்பார். சிவனின் திருவிளையாடல் என்று ஆறு பகுதிகளை கொண்டதாக இந்த படம் இருக்கும். இதில் ஒரு பகுதியில் […]

The post நாகேஷ் காட்சியை காப்பாற்றி சிவாஜி! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் திலகம் சிவாஜியின் நடிப்பைப் பற்றி சொல்லத்தேவையில். ஆனால் இருவரும் நடித்த ஒரு காட்சியில் அவரையே ஓவர் டேக் செய்து விட்டார் ஒரு நடிகர். அவர், நகேஷ்.

ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில் சிவாஜி கணேசன் மற்றும் சாவித்திரி நடித்த திருவிளையாடல், 1965 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் சிவாஜி கணேசன் சிவபெருமானாகவும், சாவித்திரி பார்வதி ஆகவும் நடித்திருப்பார். சிவனின் திருவிளையாடல் என்று ஆறு பகுதிகளை கொண்டதாக இந்த படம் இருக்கும்.

இதில் ஒரு பகுதியில் தருமி என்னும் கதாபாத்திரத்தில் நாகேஷ் நடித்திருப்பார். அந்த நாட்டின் மன்னனால் கவிதை போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டு அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பொன்னும் பொருளும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கும். ஏழைப் புலவனாக இருக்கும் தருமி சிவன் கோவிலில் சென்று இதுபற்றி சொல்லி புலம்புவார். அப்போது சிவனான சிவாஜி கணேசன் நேரடியாக தோன்றுவார்.

இவர்கள் இருவரும் நடிக்கும் இந்த காட்சியில் நாகேஷ் தன்னுடைய நடிப்பில் பட்டையை கிளப்பி இருப்பார். ரொம்ப சீரியஸ் ஆக நிற்கும் சிவாஜி அவர் எதிரே புலம்பி தவிக்கும் நாகேஷ். இன்று வரை இந்த காட்சியை பார்க்கும் பொழுது அதில் சிவாஜி கணேசன் இருக்கிறார் என்பதே பார்ப்பவர்களுக்கு மறந்து விடும். நாகேஷ் விட்டு கண்கள் அசையாத அளவுக்கு அவர் நடித்திருப்பார்.

இந்தக் காட்சி படமாக்கப்பட்ட பிறகு அதைப் பார்த்த இயக்குனருக்கு கொஞ்சம் பயம் வந்து விட்டதாம். நடிகர் திலகத்தை நாகேஷ் நடிப்பில் ஓவர் டேக் செய்து விட்டார் என்பதை புரிந்து கொண்ட இயக்குனர் நாகராஜன் இதைப்பற்றி சிவாஜி கணேசனிடம் சொல்லியிருக்கிறார். மேலும் இந்த காட்சியை நீக்கிவிடலாம் என்று கூட பரிந்துரை செய்திருக்கிறார். ஆனால் சிவாஜி ரசிகர்கள் ரசிக்க வேண்டியது நடிப்பைத்தானே தவிர ஹீரோவை இல்லை என்று கூறி அந்த காட்சியை வைக்க சொன்னாராம்.

The post நாகேஷ் காட்சியை காப்பாற்றி சிவாஜி! appeared first on Touring Talkies.

]]>
முதல் மரியாதை: டைட்டில் ரகசியம்!  https://touringtalkies.co/mudhal-mariyadhai-title-secret/ Tue, 28 Mar 2023 13:42:35 +0000 https://touringtalkies.co/?p=31064 பாரதிராஜா இயக்கத்தில் சிவாஜி கணேசன், ராதா, வடிவுக்கரசி, சத்யராஜ், ஜனகராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் 1985 ஆம் ஆண்டு வெளியான படம் ‘முதல் மரியாதை’. இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று கிட்டத்தட்ட 200 நாட்கள் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியது. மேலும் 33வது தேசிய விருது விழாவில் சிறந்த தமிழ் படத்திற்காக பாரதிராஜாவும் சிறந்த பாடல் வரிகளுக்காக வைரமுத்துவும் விருது வாங்கினர். இந்த நிலையில் 38 ஆண்டுகள் கழித்து இப்படம் டிஜிட்டல் முறையில் ரீ-மாஸ்டர் செய்யப்பட்டு தற்போது […]

The post முதல் மரியாதை: டைட்டில் ரகசியம்!  appeared first on Touring Talkies.

]]>
பாரதிராஜா இயக்கத்தில் சிவாஜி கணேசன், ராதா, வடிவுக்கரசி, சத்யராஜ், ஜனகராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் 1985 ஆம் ஆண்டு வெளியான படம் ‘முதல் மரியாதை’. இளையராஜா இசையமைத்திருந்தார்.

இப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று கிட்டத்தட்ட 200 நாட்கள் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியது. மேலும் 33வது தேசிய விருது விழாவில் சிறந்த தமிழ் படத்திற்காக பாரதிராஜாவும் சிறந்த பாடல் வரிகளுக்காக வைரமுத்துவும் விருது வாங்கினர்.

இந்த நிலையில் 38 ஆண்டுகள் கழித்து இப்படம் டிஜிட்டல் முறையில் ரீ-மாஸ்டர் செய்யப்பட்டு தற்போது தமிழ்நாட்டில் உள்ள 67 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இதனை முன்னிட்டு திரையரங்கிற்கு சென்ற பாரதிராஜா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், “இப்படத்திற்கு முதல் மரியாதை என தலைப்பு வைக்கப்பட்டது என பலருக்கு சந்தேகம். என் வாழ்க்கையில் சரஸ்வதி, லட்சுமி, முருகன் என யார் யாரையோ கும்பிட்டுள்ளேன். எங்க அப்பா, அம்மாவுக்கும் மரியாதை கொடுத்துள்ளேன். ஆனால் திரையுலகில் நுழைந்து என்னை வாழ வைத்த தெய்வம் சிவாஜி அவருக்கு நன்றி சொல்லும் விதமாக அதை செய்தேன்” என்றார்.

The post முதல் மரியாதை: டைட்டில் ரகசியம்!  appeared first on Touring Talkies.

]]>
சலிப்புடன் சிவாஜி நடித்த பாடல் காட்சி! எம்.ஜி.ஆருக்கு மிகப் பிடித்த பாடல்!  https://touringtalkies.co/actor-mgr-listen-to-sivaji-song-and-appreciate-it/ Sat, 18 Mar 2023 17:06:35 +0000 https://touringtalkies.co/?p=30745 கே.சங்கர் இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 1964ம் ஆண்டு வெளியான திரைப்படம் “ஆண்டவன் கட்டளை” . விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருப்பார். இந்த திரைப்படத்தில் சிவாஜியை வைத்து முருகனின் அறுபடை வீடுகளில் வைத்து ஒரு பாடல் காட்சியை எடுக்கப் போவதாக சொல்ல, சிவாஜியோ ‘ஒரு பாடலுக்கு இத்தனை இடங்களில் வைத்து எடுக்க வேண்டுமா?’ என்று சலிப்புடன் கேட்க, ‘இந்த பாடல் காட்சி உங்களுக்குப் பெரிய அளவு […]

The post சலிப்புடன் சிவாஜி நடித்த பாடல் காட்சி! எம்.ஜி.ஆருக்கு மிகப் பிடித்த பாடல்!  appeared first on Touring Talkies.

]]>
கே.சங்கர் இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 1964ம் ஆண்டு வெளியான திரைப்படம் “ஆண்டவன் கட்டளை” . விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருப்பார்.

இந்த திரைப்படத்தில் சிவாஜியை வைத்து முருகனின் அறுபடை வீடுகளில் வைத்து ஒரு பாடல் காட்சியை எடுக்கப் போவதாக சொல்ல, சிவாஜியோ ‘ஒரு பாடலுக்கு இத்தனை இடங்களில் வைத்து எடுக்க வேண்டுமா?’ என்று சலிப்புடன் கேட்க, ‘இந்த பாடல் காட்சி உங்களுக்குப் பெரிய அளவு பெயர் தேடித்தரும், அதனால் நீங்கள் சிரமப்பட்டுதான் ஆகவேண்டும் இது முருகனின் கட்டளை’ என்று சங்கர் கூறியுள்ளார். சிவாஜி எழுந்து நின்று கைகட்டி ‘ சித்தம் முருகா உன் சித்தம் முருகா’ என்றாராம்.

நடிகர் திலகத்தின் நடிப்பில் இந்த பாடல் மிகச் சிறப்பாக அமைந்தது. அந்த பாடல் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த பாடல் பற்றி சங்கரிடம் பேசிய எம்.ஜி.ஆர் கண்ணதாசன் எழுத்திலும், விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையிலும், தம்பி சிவாஜியின் அற்புத நடிப்பிலும் அந்த பாடலில் ஒரு தெய்வ அம்சம் தெரிகிறது. அது மட்டுமல்லாமல் எனக்குக் கோபம் வரும் போதெல்லாம் இந்த பாட்டை கேட்டால் மனம் சாந்தமாகிறது என்று எம்.ஜி.ஆர் கூறினாராம்.

சிவாஜி நடித்த எத்தனையோ படங்களைப் பற்றி எம்.ஜி.ஆர் சிலாகித்து பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

The post சலிப்புடன் சிவாஜி நடித்த பாடல் காட்சி! எம்.ஜி.ஆருக்கு மிகப் பிடித்த பாடல்!  appeared first on Touring Talkies.

]]>
பணமே இல்லாமல் பட நிறுவனம்.. ஆனால் லட்சங்களை குவித்த படம்! https://touringtalkies.co/a-film-company-without-money-but-a-film-that-accumulated-lakhs/ Mon, 20 Feb 2023 04:40:38 +0000 https://touringtalkies.co/?p=30488 ஒரு காலத்தில் பிரபலமாக விளங்கியது வீனஸ் திரைப்பட நிறுவனம். இயக்குனர் ஸ்ரீதர், கோவிந்தராஜ், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இணைந்து தான் இந்த நிறுவனத்தை துவக்கினர். ஆனால் இந்த நிறுவனத்தை ஆரம்பிக்கும் நேரத்தில் மூவரிடமும் ஒரு பைசா கூட கிடையாது. அப்போது ஸ்ரீதர் தெலுங்கில் இருந்து வரும் படங்களின் தமிழ் ரீமேக்கில் வசனகர்த்தாவாக செயல்ப்பட்டுக் கொண்டிருந்தார். அதன் மூலம் அவர் கையில் 5000 ரூபாய் இருந்தது. மீதமுள்ள பணத்தை மற்ற இருவர் பங்கு கொண்டு அளித்தனர். ‘அமரதீபம்’ என்ற கதையை […]

The post பணமே இல்லாமல் பட நிறுவனம்.. ஆனால் லட்சங்களை குவித்த படம்! appeared first on Touring Talkies.

]]>
ஒரு காலத்தில் பிரபலமாக விளங்கியது வீனஸ் திரைப்பட நிறுவனம். இயக்குனர் ஸ்ரீதர், கோவிந்தராஜ், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இணைந்து தான் இந்த நிறுவனத்தை துவக்கினர்.

ஆனால் இந்த நிறுவனத்தை ஆரம்பிக்கும் நேரத்தில் மூவரிடமும் ஒரு பைசா கூட கிடையாது. அப்போது ஸ்ரீதர் தெலுங்கில் இருந்து வரும் படங்களின் தமிழ் ரீமேக்கில் வசனகர்த்தாவாக செயல்ப்பட்டுக் கொண்டிருந்தார். அதன் மூலம் அவர் கையில் 5000 ரூபாய் இருந்தது. மீதமுள்ள பணத்தை மற்ற இருவர் பங்கு கொண்டு அளித்தனர்.

‘அமரதீபம்’ என்ற கதையை படமாக்க முடிவு செய்தனர். அதற்கு கதைப்படி இரு நாயகிகள் தேவைப்பட பத்மினி, சாவித்ரி ஆகியோரை அணுகினர். அவர்களுக்கு அட்வான்ஸ் கொடுக்கக் கூட பணம் இல்லாமல் எப்படி சந்திப்பது என்று யோசித்தனர்.

ஏற்கெனவே சிவாஜியிடம் நல்ல பழக்கம் இருந்த ஸ்ரீதருக்கு ஒரு யோசனை ஏற்பட்டது. நாயகனாக சிவாஜியை கமிட் செய்ய முடிவெடுத்த அவர், சிவாஜிக்கு கதையைச் சொன்னார். அவருக்கும் பிடித்துவிட்டது. பிறகு, அட்வான்ஸ் கொடுக்க பணம் இல்லை என்பதையும் ஸ்ரீதர் சொன்னார்.

மேலும் நீங்கள் சம்மதித்தால் நாளைக்கே பத்திரிக்கையில் விளம்பரம் கொடுத்து விடுவேன். அதை பார்த்து நிறைய வினியோகஸ்தரர்கள் பணம் கொடுக்க முன்வருவார்கள் என்று சொல்லியிருக்கிறார். அதைக் கேட்ட சிவாஜி பரவாயில்லை, நாளைக்கு விளம்பரம் கொடுத்துவிடு, நான் நடிக்கிறேன் என்றும் சொல்லியிருக்கிறார்.

அதன் பிறகே பத்மினி சாவித்ரியை சந்தித்து சிவாஜி ஓகே சொன்னதையும் தன்னிடம் அட்வான்ஸ் இல்லாததையும் கூறியிருக்கிறார். ஆனால் அதற்கு அவர்கள் இருவரும் பரவாயில்லை, மெதுவாக கொடுத்துக்கலாம் என்று சொல்லி நடிக்க முன்வந்திருக்கின்றனர்.

இதன் மூலம் ஆரம்பமானதே ‘அமரதீபம்’ திரைப்படம். படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.

இந்த சுவாரஸ்ய தகவலை tourint talkies யு டியுப் சேனலில் சித்ரா லட்சுமணன் கூறினார்.

இது போன்ற பல சுவாரஸ்யமான திரைப்பட செய்திகளை அறிய…

The post பணமே இல்லாமல் பட நிறுவனம்.. ஆனால் லட்சங்களை குவித்த படம்! appeared first on Touring Talkies.

]]>