Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
politics – Touring Talkies https://touringtalkies.co Tue, 22 Aug 2023 13:22:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png politics – Touring Talkies https://touringtalkies.co 32 32 “அரசியலை ஒதுக்கினார் கமல்!”: திருப்பூர் சுப்ரமணியம்  மகிழ்ச்சி! https://touringtalkies.co/happy-that-kamal-is-away-from-politics-tirupur-subramaniam/ Tue, 22 Aug 2023 03:20:22 +0000 https://touringtalkies.co/?p=35521 திரைப்பட தயாரிப்பாளர் – விநியோகஸ்தர் – திரையரங்க உரிமையாளர் என பன்முகம் கொண்ட திருப்பூர் சுப்ரமணியம், டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்து உள்ளார். அதில் அவர், “தற்போது லியோ படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். அதன் பிறகு மூன்று ஆண்டுகள் படத்தில் நடிக்க மாட்டார்.. அரசியலில் கவனம் செலுத்துவார் என்று யூகமாக செய்திகள்  வருகின்றன. ஆனால் வெங்கட் பிரபு படத்துக்குப் பிறகு ஒரு […]

The post “அரசியலை ஒதுக்கினார் கமல்!”: திருப்பூர் சுப்ரமணியம்  மகிழ்ச்சி! appeared first on Touring Talkies.

]]>
திரைப்பட தயாரிப்பாளர் – விநியோகஸ்தர் – திரையரங்க உரிமையாளர் என பன்முகம் கொண்ட திருப்பூர் சுப்ரமணியம், டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்து உள்ளார்.

அதில் அவர், “தற்போது லியோ படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். அதன் பிறகு மூன்று ஆண்டுகள் படத்தில் நடிக்க மாட்டார்.. அரசியலில் கவனம் செலுத்துவார் என்று யூகமாக செய்திகள்  வருகின்றன. ஆனால் வெங்கட் பிரபு படத்துக்குப் பிறகு ஒரு படத்தில் கமிட் ஆகி உள்ளார்.

தவிர அதன் பிறகும்கூட, அவர் தொடர்ந்து படத்தில் நடிக்க வேண்டும். பத்து வருடங்கள் கழித்து அரசியலுக்கு வரலாம்.

கமல் கூட அரசியலில் தீவிரமாக இருந்தபோது திரைப்படங்களில் நடிக்கவில்லை.

விஜய் தொடரந்து நடிக்கணும்.. கமல்சாரே அரசியலில் தீவிரமா இருந்தபோது படங்களில் நடிக்கவில்லை. அரசியலைவிட்டு  விலகி நிற்கும்போதுதான் திரையுலகில் கவனம் செலுத்தினார். இப்போ அரசியலில்  கான்சர்டேட் பண்ணாம தொழிலில் ஈடுபடுகிறார்.

அது போல விஜயும் தொடர்ந்து நடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அதுதான் ரசிகர்களுக்கு மட்டுமல்ல.. திரையுலக தொழிலுக்கும் நல்லது” என்று தெரிவித்தார் திருப்பூர் சுப்ரமணியம்.

இதுபோன்ற சுவாரஸ்யமான பேட்டிளை காண, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

 

The post “அரசியலை ஒதுக்கினார் கமல்!”: திருப்பூர் சுப்ரமணியம்  மகிழ்ச்சி! appeared first on Touring Talkies.

]]>
ரஜினி, விஜயை மறைமுகமாக விமர்சித்த சத்யராஜ்?! https://touringtalkies.co/satyaraj-indirectly-criticized-rajini-vijay-all-the-party-starts-is-vote-politics-sathyaraj/ Sun, 20 Aug 2023 23:09:40 +0000 https://touringtalkies.co/?p=35492 ஜூலியன் & ஜெரோமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜோமோன் பிலிப் மற்றும் ஜீனா ஜோமோன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அங்காரகன்’. இப்படத்தின் கதாநாயகனாக ஸ்ரீபதி நடித்துள்ளார். மேலும் இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளதுடன், கிரியேட்டிவ் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார் ஸ்ரீபதி. ஒரு டெரர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் சத்யராஜ் இந்தப்படத்தின் மூலம் மீண்டும் தனது வில்லன் அவதாரத்திற்கு திரும்பியுள்ளார். மலையாள நடிகை நியா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் அங்காடித்தெரு மகேஷ், ரெய்னா காரத், ரோஷன், அப்புக்குட்டி, தியா, […]

The post ரஜினி, விஜயை மறைமுகமாக விமர்சித்த சத்யராஜ்?! appeared first on Touring Talkies.

]]>
ஜூலியன் & ஜெரோமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜோமோன் பிலிப் மற்றும் ஜீனா ஜோமோன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அங்காரகன்’. இப்படத்தின் கதாநாயகனாக ஸ்ரீபதி நடித்துள்ளார். மேலும் இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளதுடன், கிரியேட்டிவ் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார் ஸ்ரீபதி.

ஒரு டெரர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் சத்யராஜ் இந்தப்படத்தின் மூலம் மீண்டும் தனது வில்லன் அவதாரத்திற்கு திரும்பியுள்ளார். மலையாள நடிகை நியா கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் அங்காடித்தெரு மகேஷ், ரெய்னா காரத், ரோஷன், அப்புக்குட்டி, தியா, நேகா ரோஸ், குரு சந்திரன், கேசிபி பிரபாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்

பிரபல பாலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மோகன் டச்சு என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் செப்-8 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று (ஆக-19) மாலை சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நடிகர் சத்யராஜ் பேசும்போது, “எனக்கு தோன்றிய கருத்துக்களை நான் சொல்வேன்.. நடிகராக இருக்க வேண்டுமா, பெரியாரிஸ்ட்டாக இருக்க வேண்டுமா என்றால் பெரியாரிஸ்ட்டாக இருப்பேன்” என்றார்.

மேலும், “மக்களுக்கு சமூக கருத்துக்களை சொல்வதும் அதை சொல்பவர்களுக்கு பின்னால் நிற்பதும்கூட அரசியல் தான். நான் அதைத்தான் செய்து வருகிறேன். நடிகர் பிரகாஷ்ராஜ் துணிச்சலாக தனது கருத்துக்களை சொல்கிறார்.. அது கூட அரசியல் தான். ஒரு பிரபலமான கலைஞன் கோழையாக இருந்தால் கோழையான ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கு நாம் காரணமாகி விடுவோம் . மற்றபடி, கட்சி ஆரம்பிப்பது என்பதெல்லாம் ஓட்டு அரசியல்”  என தனது பேச்சை நிறைவு செய்தார் சத்யராஜ்.

தற்போது இவரது பேச்சு சோசியல் மீடியாவில் பலரும் பகிர்கின்றனர். அதோடு, “தேர்தலில் போட்டியிடப்போவதாக கூறிய ரஜினி, அது போன்று செய்திகளில் அடிபடும் விஜய் ஆகியோரைத்தான் ஓட்டு அரசியல் என மறைமுகமாக விமர்சித்து இருக்கிறார் சத்யராஜ்”என கமெண்ட்டும் செய்து வருகின்றனர்.

 

The post ரஜினி, விஜயை மறைமுகமாக விமர்சித்த சத்யராஜ்?! appeared first on Touring Talkies.

]]>
 “இனி.. தீவிர அரசியல்”: சூசகமாக சொன்ன கமல்!   https://touringtalkies.co/kamal-haasan-thanks-for-64-years-of-cinema-journey-next-lead-to-politics/ Sun, 13 Aug 2023 05:19:26 +0000 https://touringtalkies.co/?p=35258 நடிகர் கமல்ஹாசன் தனது நான்கு வயதில் குழந்தை நட்சத்திரமாக‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான குடியரசு தலைவர் விருதைப் பெற்றார். இந்தப் படம் வெளியாகி 63 வருடங்கள் முடிந்து 64 வது வருடம் தொடங்குகிறது. 6 மொழிகளில் 232 படங்களுக்கு மேல் நடித்துள்ள  கமலுக்கு  திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதற்கு கமல், “64 ஆண்டுகள் ஒருவன் வாழ்க, என்று வாழ்த்தினாலே அது பெரிய ஆசிதான். […]

The post  “இனி.. தீவிர அரசியல்”: சூசகமாக சொன்ன கமல்!   appeared first on Touring Talkies.

]]>
நடிகர் கமல்ஹாசன் தனது நான்கு வயதில் குழந்தை நட்சத்திரமாக‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான குடியரசு தலைவர் விருதைப் பெற்றார். இந்தப் படம் வெளியாகி 63 வருடங்கள் முடிந்து 64 வது வருடம் தொடங்குகிறது.

6 மொழிகளில் 232 படங்களுக்கு மேல் நடித்துள்ள  கமலுக்கு  திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு கமல், “64 ஆண்டுகள் ஒருவன் வாழ்க, என்று வாழ்த்தினாலே அது பெரிய ஆசிதான். அது என் உடலுக்கான வாழ்த்தாக இல்லாமல் என் கலை வாழ்வுக்கான ஆசியாக இருப்பது என்னைவிட திறமையாளர்கள் பலருக்கும் கிட்டா வரம். வாழ்த்தும் அனைவருக்கும் என் சிரம் தாழ்த்தி பணிவுடன் நன்றி. எஞ்சி உள நாட்கள் என் மக்களுக்காக.…” என்று தெரிவித்துள்ளார்.

“எஞ்சி உள்ள நாட்கள், என் மக்களுக்காக!” என்று அவர் கூறியிருப்பது, அரசியலில் தீவிரமாக ஈடுபட உள்ளதை குறிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

The post  “இனி.. தீவிர அரசியல்”: சூசகமாக சொன்ன கமல்!   appeared first on Touring Talkies.

]]>
நோ அரசியல்.. இனிமே நடிப்புதான்!:நமீதா வெளியிட்ட ஹாட் போட்டோஸ்! https://touringtalkies.co/no-politics-now-acting-hot-photos-released-by-namita/ Tue, 01 Aug 2023 05:23:57 +0000 https://touringtalkies.co/?p=34918 கவர்ச்சி ஹீரோயினாக வலம் வந்த நமீதா, கடந்த  2017-ல் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க, அவர்களை வளர்ப்பதில் கவனம் செலுத்தினார். திரையுலகை விட்டு ஒதுங்கினார். அதே நேரம், தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் இருந்தபோது அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். பாஜக நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேறவர், கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது பாஜக வேட்பாளர்களுக்காக தமிழகம் முழுவதும் பிரச்சாரமும் செய்தார். நடிகை நமீதா கட்சிப்பணிகளில் […]

The post நோ அரசியல்.. இனிமே நடிப்புதான்!:நமீதா வெளியிட்ட ஹாட் போட்டோஸ்! appeared first on Touring Talkies.

]]>
கவர்ச்சி ஹீரோயினாக வலம் வந்த நமீதா, கடந்த  2017-ல் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க, அவர்களை வளர்ப்பதில் கவனம் செலுத்தினார். திரையுலகை விட்டு ஒதுங்கினார்.

அதே நேரம், தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் இருந்தபோது அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். பாஜக நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேறவர், கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது பாஜக வேட்பாளர்களுக்காக தமிழகம் முழுவதும் பிரச்சாரமும் செய்தார். நடிகை நமீதா கட்சிப்பணிகளில் காட்டிய சுறுசுறுப்பு காரணமாக அவருக்கு தமிழக பாஜக செயற்குழு உறுப்பினர் பொறுப்பும் வழங்கப்பட்டது.

இந்த சூழலில்தான், கவர்ச்சி உடையில் போடோஷூட் நடத்திய வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ வைரலாகி உள்ளது. மீண்டும் சினிமாவில் நடிப்பதற்காகவே தன்னை புகைப்படம் எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து ஒரு வீடியோ பேட்டியில் பேசிய பத்திரிகையாளர் ராமதாஸ், “கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்காக பிரச்சாரம் செய்த நமீதாவை, அதன் பிறகு பாஜக நிகழ்ச்சிகளில் காணமுடிவில்லை.  தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம், 5 மாநில சட்டமன்றத் தேர்தல் பரப்புரை உட்பட பாஜக நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்கவில்லை.

டிஜிட்டலில் சொந்த தயாரிப்பில் சில நிகழ்ச்சிகளை தயாரிக்க தொடங்கினார்.  அது தொடர்பான பணிகளில் கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில்தான் தனது கவர்ச்சி படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு உள்ளார். அதாவது இனி அரசியல் இல்லை.. சினிமாதான் என்று தனது எண்ணத்தை இந்த கவர்ச்சிப் படங்கள் மூலம் வெளிப்படுத்தி உள்ளார்” என்றார்.

The post நோ அரசியல்.. இனிமே நடிப்புதான்!:நமீதா வெளியிட்ட ஹாட் போட்டோஸ்! appeared first on Touring Talkies.

]]>
அரசியல்: ரஜினி பாணியில் அதிரவைத்த விஷால்! https://touringtalkies.co/politics-vishal-rocked-in-rajini-style/ Tue, 25 Jul 2023 04:31:51 +0000 https://touringtalkies.co/?p=34717 ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடித்து வரும் ‘மார்க் ஆண்டனி’ படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் மார்க் ஆண்டனி படக்குழுவினர் செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மாணவர்களை சந்தித்து கலந்துரையாடினர். அப்போது ஒரு மாணவர், ‘நீங்கள் விஜய்யின் தீவிர ரசிகர். அவருடன் இணைந்து அரசியலுக்கு வருவீர்களா?’ என்று கேள்வி கேட்டார். இதற்கு விஷால், ‘இது கடவுளால்தான் நிர்ணயிக்கப்பட வேண்டிய விஷயம்’ என பதில் அளித்தார்.  விஷாலின் இந்த பதில் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது. […]

The post அரசியல்: ரஜினி பாணியில் அதிரவைத்த விஷால்! appeared first on Touring Talkies.

]]>
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடித்து வரும் ‘மார்க் ஆண்டனி’ படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் மார்க் ஆண்டனி படக்குழுவினர் செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மாணவர்களை சந்தித்து கலந்துரையாடினர்.

அப்போது ஒரு மாணவர், ‘நீங்கள் விஜய்யின் தீவிர ரசிகர். அவருடன் இணைந்து அரசியலுக்கு வருவீர்களா?’ என்று கேள்வி கேட்டார்.

இதற்கு விஷால், ‘இது கடவுளால்தான் நிர்ணயிக்கப்பட வேண்டிய விஷயம்’ என பதில் அளித்தார்.  விஷாலின் இந்த பதில் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.

‘அட.. ரஜினி பாணியிலேயே இவரும் பதில் சொல்கிறாரே’ என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும், “ஆர்.கே. நகர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார் விசால். அப்போது தேர்தல் குளறுபடி குறித்து புகார் அளிக்க இந்திய தேர்தல் ஆணையத்துக்குச் செல்லாமல், தமிழ்நாடு தேர்தல் ஆணைத்துக்குச் சென்றார். இது நகைப்புக்கு இடமானது. இந்த நிலையில் இப்போதும் அரசியல் பேசுகிறாரே” என்று நெட்டிசன்கல் கலாய்த்து வருகிறார்கள்.

The post அரசியல்: ரஜினி பாணியில் அதிரவைத்த விஷால்! appeared first on Touring Talkies.

]]>
அரசியலுக்கு வருவேனா..!: நதியா பதில் https://touringtalkies.co/will-you-join-politics-nadias-answer/ Sat, 22 Jul 2023 06:34:54 +0000 https://touringtalkies.co/?p=34597 கோவையில் எல்.ஜி.எம் படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு நதியா பதில் அளித்தார். “மணிப்பூர் சம்பவம்  மனதை கலங்க வைக்கிறது.  இதே நிகழ்வு நமக்கும் நடந்தால் எப்படி இருக்கும் என்று யோசிக்க வேண்டும்.  அரசியலுக்கு வர வாய்ப்பு இல்லை ஆனால், அரசியல் சார்ந்த படங்களில் நடிப்பேன் என்றார்.

The post அரசியலுக்கு வருவேனா..!: நதியா பதில் appeared first on Touring Talkies.

]]>
கோவையில் எல்.ஜி.எம் படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு நதியா பதில் அளித்தார்.

“மணிப்பூர் சம்பவம்  மனதை கலங்க வைக்கிறது.  இதே நிகழ்வு நமக்கும் நடந்தால் எப்படி இருக்கும் என்று யோசிக்க வேண்டும்.  அரசியலுக்கு வர வாய்ப்பு இல்லை ஆனால், அரசியல் சார்ந்த படங்களில் நடிப்பேன் என்றார்.

The post அரசியலுக்கு வருவேனா..!: நதியா பதில் appeared first on Touring Talkies.

]]>
அரசியலில் விஜய் தோல்வி அடைவார்: கே.ராஜன் கருத்து https://touringtalkies.co/k-rajan-says-vijay-will-failin-politics/ Tue, 18 Jul 2023 05:23:41 +0000 https://touringtalkies.co/?p=34469 நடிகர் விஜய் அரசியலில் நுழையப் போகிறார் என்று பரபரப்பாக பேசப்படும் நிலையில், ‘அவர் அரசியலுக்கு வந்தால் படுதோல்வி அடைவார்’ என தயாரிப்பாளர் கே ராஜன் கூறியுள்ளார். இது குறித்து அவர் அளஇத்துள்ள பேட்டியில், “234 தொகுதிகளில் இருந்தும் மாணவர்களை அழைத்தது பாராட்டியதும், இரவு பாடசாலை அமைப்பதும் நல்ல விசயம். ஆனால் காமராஜர் பிறந்தநாளில் அதைத் தொடங்குவது அரசியல். தவிர, கருணாநிதி, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்.க்கு தனித்த குணநலன்கள் உண்டு. அவர்கள் எத்தனை ஏவுகணைகளையும் தாங்குவார்கள். ஆனால் விஜய் அப்படி […]

The post அரசியலில் விஜய் தோல்வி அடைவார்: கே.ராஜன் கருத்து appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விஜய் அரசியலில் நுழையப் போகிறார் என்று பரபரப்பாக பேசப்படும் நிலையில், ‘அவர் அரசியலுக்கு வந்தால் படுதோல்வி அடைவார்’ என தயாரிப்பாளர் கே ராஜன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் அளஇத்துள்ள பேட்டியில், “234 தொகுதிகளில் இருந்தும் மாணவர்களை அழைத்தது பாராட்டியதும், இரவு பாடசாலை அமைப்பதும் நல்ல விசயம். ஆனால் காமராஜர் பிறந்தநாளில் அதைத் தொடங்குவது அரசியல்.

தவிர, கருணாநிதி, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்.க்கு தனித்த குணநலன்கள் உண்டு. அவர்கள் எத்தனை ஏவுகணைகளையும் தாங்குவார்கள். ஆனால் விஜய் அப்படி அல்ல.
அவர் தனது தந்தையுடன் முரண்படுகிறார். அவரின் தந்தை விஜய்யை அரசியலுக்கு கொண்டுவர தீவிர முயற்சிகள் எடுத்தார்.

தற்போது புஸ்ஸி ஆனந்த் பின்னால் விஜய் செல்கிறார். முழு நேர அரசியலுக்கு வந்தால் விஜய் படுதோல்வி அடைவார்” என்றார் கே.ராஜன்.

.

The post அரசியலில் விஜய் தோல்வி அடைவார்: கே.ராஜன் கருத்து appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விஷாலும் அரசியலுக்கு வருகிறார்? https://touringtalkies.co/vishal-decide-to-organized-education-programme-like-vijay-politics/ Sun, 02 Jul 2023 01:08:30 +0000 https://touringtalkies.co/?p=33991 நடிகர் விஷால், கடந்த சில வருடங்களாக தேவி அறக்கட்டளை மூலம் ஏழை, எளிய மாணவ, மாணவிகளின் மேற்படிப்புக்கு வருடம் தோறும் உதவி செய்து வருகிறார். அவர் உதவியால் சுமார் 300 பேர், கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் விஜய் நடத்தியது போல, உதவி பெறும் மாணவிகளையும் அவரது பெற்றோர்களையும் அழைத்து வந்து விழா நடத்த நடிகர் விஷால் திட்டமிட்டுள்ளார். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அந்த விழாவில் விஷாலும் பரபரப்பாகப் பேச இருப்பதாகக் கூறுகின்றனர். ஏற்கெனவே விஷால், […]

The post நடிகர் விஷாலும் அரசியலுக்கு வருகிறார்? appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விஷால், கடந்த சில வருடங்களாக தேவி அறக்கட்டளை மூலம் ஏழை, எளிய மாணவ, மாணவிகளின் மேற்படிப்புக்கு வருடம் தோறும் உதவி செய்து வருகிறார். அவர் உதவியால் சுமார் 300 பேர், கல்லூரியில் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் விஜய் நடத்தியது போல, உதவி பெறும் மாணவிகளையும் அவரது பெற்றோர்களையும் அழைத்து வந்து விழா நடத்த நடிகர் விஷால் திட்டமிட்டுள்ளார். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அந்த விழாவில் விஷாலும் பரபரப்பாகப் பேச இருப்பதாகக் கூறுகின்றனர்.

ஏற்கெனவே விஷால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

The post நடிகர் விஷாலும் அரசியலுக்கு வருகிறார்? appeared first on Touring Talkies.

]]>
அரசியலுக்கு வருகிறாராம் நடிகை கீர்த்தி சுரேஷ்! https://touringtalkies.co/actress-keerthy-suresh-is-coming-to-politics/ Sun, 25 Jun 2023 05:16:53 +0000 https://touringtalkies.co/?p=33766 தெலுங்கு நடிகர் நாக சைதன்யா, கடைசியாக நடித்த ‘தேங்க் யூ’, ‘கஸ்டடி’ படங்கள் தோல்வியைச் சந்தித்தன. இதில் ‘கஸ்டடி’ படம் மூலம் தமிழுக்கும் அவர் வந்தார். தமிழிலும் இந்தப் படம் வரவேற்பைப் பெறவில்லை. இப்போது, சந்து மொண்டேட்டி இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதில் அனுபமா பரமேஸ்வரன் நாயகியாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இப்போது கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கிறார். பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெலுங்கு திரையுலகில் கூறப்படுகிறது. இந்நிலையில், விழா ஒன்றில் கலந்துகொண்ட […]

The post அரசியலுக்கு வருகிறாராம் நடிகை கீர்த்தி சுரேஷ்! appeared first on Touring Talkies.

]]>
தெலுங்கு நடிகர் நாக சைதன்யா, கடைசியாக நடித்த ‘தேங்க் யூ’, ‘கஸ்டடி’ படங்கள் தோல்வியைச் சந்தித்தன. இதில் ‘கஸ்டடி’ படம் மூலம் தமிழுக்கும் அவர் வந்தார். தமிழிலும் இந்தப் படம் வரவேற்பைப் பெறவில்லை.

இப்போது, சந்து மொண்டேட்டி இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதில் அனுபமா பரமேஸ்வரன் நாயகியாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இப்போது கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கிறார். பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெலுங்கு திரையுலகில் கூறப்படுகிறது.

இந்நிலையில், விழா ஒன்றில் கலந்துகொண்ட கீர்த்தி,  தனக்கு அரசியலில் விருப்பம் இருப்பதாக கூறியுள்ளார். விளையாட்டுக்காக சொன்னாரா, உண்மையாக சொன்னாரா; அப்படி வந்தால் கேரளா, தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா… எந்த மாநில அரசியலுக்குள் வருவார்.. அல்லது தேசிய கட்சியில் இணைவாரா.. என்பது தெரியவில்லை.

படத்தை கீதா ஆர்ட்ஸ் தயாரிக்கிறது. ‘கார்த்திகேயா 2’ வரவேற்பைப் பெற்றிருப்பதால், இந்தப் படத்தையும் பான் இந்தியா முறையில் வெளியிட உள்ளனர்.

The post அரசியலுக்கு வருகிறாராம் நடிகை கீர்த்தி சுரேஷ்! appeared first on Touring Talkies.

]]>
அரசியலில் நடிகர்கள் வருவது பற்றி எனக்கு தெரியாது!:  வைரமுத்து https://touringtalkies.co/i-didnt-know-about-actors-entering-politics-vairamuthu/ Sun, 18 Jun 2023 04:21:02 +0000 https://touringtalkies.co/?p=33568 தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கல்வி ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. நிகழ்வில், பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடக்கூடாது என விஜய் பேசினார். இதையடுத்து அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்ற யூகம் வலுப்பெற்று உள்ளது. இந்த நிலையில், இது குறித்து பாடலாசிரியர் வைரமுத்துவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “அரசியலுக்கு நான் வருவேனா, […]

The post அரசியலில் நடிகர்கள் வருவது பற்றி எனக்கு தெரியாது!:  வைரமுத்து appeared first on Touring Talkies.

]]>
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கல்வி ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.

நிகழ்வில், பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடக்கூடாது என விஜய் பேசினார். இதையடுத்து அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்ற யூகம் வலுப்பெற்று உள்ளது.

இந்த நிலையில், இது குறித்து பாடலாசிரியர் வைரமுத்துவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “அரசியலுக்கு நான் வருவேனா, என்று கேட்டால் என்னால் பதில் சொல்ல முடியும். நடிகர்கள் வருவது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. தெரியாமல் சொல்வது சரியாக இருக்காது” என்று கூறினார்

The post அரசியலில் நடிகர்கள் வருவது பற்றி எனக்கு தெரியாது!:  வைரமுத்து appeared first on Touring Talkies.

]]>